Showing posts with label kareena kapoor. Show all posts
Showing posts with label kareena kapoor. Show all posts

Wednesday, December 05, 2012

Talaash - சினிமா விமர்சனம்

http://wallpaperpassion.com/upload_puzzle_thumb/27015/talaash-movie-front-back-cover-wallpaper.jpgமடோனா நடித்து அட்டர் ஃபிளாப் ஆன த பாடி ஆஃப் எவிடென்ஸ் படத்தில் இருந்து கொஞ்சம் , இன்னொரு ஹாலிவுட் படத்தில் இருந்து கொஞ்சம் , ஒரு ஒரிஜினல் டிராக் என 3 கதைகளை ஒரு படம் ஆக்கி இருக்கிறார்கள்.மும்பையில் இது செம ஓப்பனிங்க் , வசூல் கொட்டுதாம், ஆனா படம் ஸ்லோ..


ஓப்பனிங்க்ல ஒரு கார் வேகமாக நிலை தடுமாறி வந்து கடல்ல விழுது. காருக்குள்ளே ஒரு ஆள் செத்துக்கிடக்கார்.இன்வெஸ்டிகேஷன் நடக்குது, ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். இது ஒரு டிராக் இதுதான் மடோனா பட கதை உல்டா .


 இன்னொரு டிராக் , ஹீரோவுக்கு ஒரு ஃபிளாஸ் பேக். அவரோட பையன் ஒரு விபத்துல ஏரில தண்ணீர்ல மூழ்கி இறந்துடறான். அதுக்கு தான் தான் காரணம்னு ஒரு குற்ற உணர்ச்சி ஹீரோவுக்கு , அடிக்கடி அதை நினைச்சுப்பார்த்து உருகுதே மருகுதே ஒரே நினைப்பாலே அப்டினு அல்லாடறார். இது வேற ஒரு ஹாலிவுட் படத்துல இருந்து எடுத்த டிராக் ..3 வது டிராக் இந்த இன்வெஸ்டிகேஷனுக்கு உதவி செய்யும் கில்மா லேடி , அவருக்கும் , இவருக்கும் ஒரு மானசீகக்காதல். சம்சாரத்துக்கு சந்தேகம் , ஊடல் , சமாளிஃபிகேஷன்  என ஒரு டைப்பா போகுது. படத்துல க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு 


ஹீரோ அமீர்கானுக்கு போலீஸ் கேரக்டர் நல்லாப்பொருந்தி இருக்கு. ஆனா அவர் இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் மாதிரியோ , குருதிப்புனல் கமல் மாதிரியோ , மூன்று முகம் ரஜினி மாதிரியோ கம்பீரமா , ஸ்டைலிஷா பண்ண வாய்ப்பு இருந்தும் அண்டர் ப்ளே ஆக்ட் பண்ணி இருக்கார். ஏன்னு தெரியலை.. அவார்டு வாங்க ஐடியாவோ  என்னவோ.. அவர் தீவிர ரசிகர்க:ளுக்கு மட்டுமே பிடிக்கும்.. ஹீரோயின் ராணி முகர்ஜி . ஹீரோவுக்கு மனைவியா வர்றார். மேக்கப் அதிகம் இல்லாத முகம்.. பல காட்சிகளில் அமைதியாகவும் , சில காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் நடிச்சிருக்கார்.. 


 கில்மா லேடியாக கிட்டத்தட்ட ராணி முகர்ஜியை ஓவர் டேக்கும் விதம் கலக்கி இருப்பவர் கரீனா கபூர் . டிக்கெட்டாக வருகிறார். இவரது கொஞ்சல் பேச்சும் , மோகப்பார்வையும் அருமை.. ( இதைக்கூடப்பாராட்டலைன்னா எதைத்தான் பாராட்டுவது ? )


http://www.talaash2012movie.in/wp-content/uploads/2012/02/Talaash-7.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்1. ஒரு படத்தில் இருந்து உருவினால் கண்டு பிடிச்சு கழுவிக்கழுவி ஊத்திடுவாங்க என்பதால்  2 ஹாலிவுட் படங்களில் இருந்து உருவி அந்த இரண்டுடன் ஒரிஜினல் கதையை சேர்த்து 3 டிராக்கையும் ராஜேஷ் குமாரின் நாவல் போல் சாமார்த்திய,மாக இணைத்தது


2.  ராணி முகர்ஜியை குடும்பப்பாங்காகவும் , கரீனாவை கில்மா லேடியாகவும் கேரக்டர் அமைத்து ஏரியாவை ஒதுக்கி பேலன்ஸ் செய்தது3. அமீர்கானின் சொந்தபப்டம் என்பதற்காக அவருக்கு தேவையற்ற பில்டப் காட்சிகள் ஏதும் வைக்காததுhttp://latestupdates.in/bollywood/wp-content/uploads/2012/11/Hona-Hai-Kya-song-lyrics-talash-movie-poster-hd-wallpapers-download-free.jpg  மனம் கவர்ந்த வசனங்கள்1. கில்மா லேடி - உங்களைப்பார்த்தா ஆறுதல் தேவைப்படும் ஆள் மாதிரி தோணுது 


 ஹீரோ -  ஐ ஆம் எ போலீஸ் இன்ஸ்பெக்டர் கி லே - ஏன்? போலீஸ்க்கு உணர்ச்சிகள் இருக்கக்கூடாதா? 2. வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏமாற்றங்கள் , தோல்விகள் , இழப்புகள் தாங்க முடியாதவை , ஆனா நாம வாழ்ந்துதான் ஆகனும் , எல்லாத்தையும் சகிச்சுக்கனும். மனப்பக்குவம் வேணும்http://media.glamsham.com/download/wallpaper/movies/images/t/talaash-the-answer-lies-within-03-12x9.jpg இயக்குநரிடம் சில கேள்விகள்1. இந்தப்பட ஹீரோ கேரக்டருக்கும் , பிரபுதேவாவின் ரியல் லைஃப் கேரக்டருக்கும் பொதுவா ஒரு கேள்வி கேட்கறேன். உங்க வாழ்க்கைல உங்க குழந்தை இறந்த சோகம் தாங்காம இருந்தப்ப ஏற்பட்ட ஆறுதல் தான்  புது லேடியுடன் ஆன பழக்கம்னு ஆர்கியூ பண்றீங்களே.. இதே டய்லாக்கை உங்க வாழ்க்கைத்துணைவி சொன்னா ஏத்துக்குவீங்களா? அதே சோகம் தானே அவங்களுக்கும் ? என்னங்க.. நம்ம குழந்தை இறந்த  துக்கம் தாளலை.. அந்த சோகத்தைப்பகிர வீட்டுதோட்டக்காரன் தோள் கிடைச்சுது சாஞ்சுக்கிட்டேன், சாரின்னா எத்துக்குவீங்களா? உங்களுக்கு ஒரு நியாயம் உங்க மனைவ்விக்கு ஒரு நியாயமா?2. ஒரு சீன்ல வீட்டு  ஹால் ல ஒரு சிம் கார்டு கீழே கிடக்கு . காலை சாய்ச்சு சாய்ச்சு நடக்கும் ஒரு மாற்றுத்திறனாளி ( வில்லன் ) அப்படியே அந்த சிம்மை கடந்து போகையில் போகிற போக்கில் சிம்மை கால் விரலில் மெட்டி சென்று விடுகிறான். இது சாத்திய்மே இல்லை.. ஒருவர் சிம் கார்டின் மீது நின்றுகொண்டே 2 நிமிடங்களில் அப்படி செய்ய முடியுமே தவிர ஆன் த வே நடக்கும்போதே எடுக்கவே முடியாது..அதுவும் 2 பேர் அவரை பார்த்துக்கொண்டிருக்கும்போது , பிராக்டிகலாக நானே ட்ரை பண்ணிட்டேன் 3. அதே போல் அப்படி வெளீயே போன ஆள் அப்பவே ஒளிஞ்சிருந்து தம்பதிகள் என்ன பேசிக்கறாங்கன்னு கதவு இடுக்கில் ஒளிஞ்சிருந்து பார்க்க்றான். இதுக்கும் வாய்ப்பே இல்லை.. அப்போதான் அவன் போறான்.. தம்பதிகள் கவனிக்காம அப்படி கொஞ்சிட்டு இருப்பாங்களா? 4. சென்னை, பெங்களூர் , மும்பை போன்ற சிட்டிகளில் அபார்ட்மெண்ட்களில் யார் காலிங்க் பெல் அடிச்சாலும் யாரு>? என கேட்டு கன்ஃபர்,ம் பண்ணிட்டுதான் கதவை திறப்பாங்க. ஆனா இந்தப்படத்துல யார் காலிங்க் பெல் அடிச்சாலும் அதிமுக கட்சி தலைமை மாதிரி டக் டக்னு கதவு திறந்துக்குது. என்னமோ நாஞ்சில் சம்பத்தோ , கேப்டனோ கட்சில சேர வந்ததை வரவேற்பது போல் காட்றாங்க, முடியல


http://mimg.sulekha.com/hindi/talaash/stills/talaash-cinema-035.jpg


 5.ஏற்காடு , கிஷ்கிந்தா , போன்ற தமிழ்நாட்டு நீர் நிலைகளில் போட்டிங்க் போறப்ப சேஃப்டி பெல்ட் அல்லது மிதவை சாதனங்களை இடுப்புல கட்டி விடுவாங்க. மும்பை தமிழ் நாட்டை விட பின் தங்கிய கிராமமா?6. ஹீரோ ஆஃபீஸ் டென்ஷன்ல கண்ணை மூடி படுத்திருக்காரு . ஹீரோயின் அதாவது ஹீரோவின் மனைவி அவர் பக்கத்துல உக்காந்திருக்காங்க. பசங்க
 ஏரிக்கரைக்கு ஓடும்போது ஹீரோ கவனிக்கலை , ஓக்கே ஹீரோயின்? பொதுவா ஒரு அம்மாவுக்கு கண்கள் , புலன்கள் எல்லாம் குழந்தையை சுத்தித்தானே இருக்கும்? இருக்கனும? அந்த விபத்துக்காட்சி படமாக்கப்பட்ட விதம் சரி இல்லை7. போலீஸ் ஆஃபீசர்னா கெத்து வேணும் , ஹீரோ வித்தியாசமா பண்றதா  நினைச்சுட்டு எல்லா சீனிலும் கையை கட்டிக்கிட்டு  அடக்கமா வர்றார்? அவர் என்ன ஏ வி எம் சரவனனா? கல்யாண மாலை நடராஜனா? ஏன் பம்மனும்?


8. ஹீரோ கில்மா லேடியோட ஹோட்டல் ரூம் போகலாம்னு திட்டம் போட்டுட்டாரு , திடீர் முடிவல்ல . அப்புறம் ஏன் யூனிஃபார்மல போகனும்? எதிர்கள் யாராவது பார்த்து மாட்டி விட்டுட மாட்டாங்களா பொதுவா போலீஸ் ஆஃபீசர்ங்க தப்பு பண்றப்போ  சிவில் டிரஸ்ல தான் இருப்பாங்க.. இப்படி பட்ட வர்த்தமா யூனிஃபார்ம்ல இருக்க மாட்டாங்க..


9. க்ளைமாக்ஸ் காட்சி அப்பட்டமான ஆணாதிக்கம். ஹீரோவுக்கு அந்த கில்மா லேடி கிடைக்கலை. சோகமா உக்காந்திருக்காரு . மனைவி வந்து ஆறுதல் படுத்தறாங்க, கோபத்தை , ஊடலை விட்டுட்டு சேர்ந்துக்கறாங்க. ஏய்யா அந்த லேடி கிடைச்சா அவ கூட போய் இருப்பே? நான் நடுத்தெருவுல நிக்கனுமா? அப்டி னு கேள்வி கேட்காம  போய் கட்டிக்கறா.. !


http://www.bollywoodpinup.com/data/media/4/kareena-kapoor-hot-pictures-3.jpg
சி.பி கமெண்ட் - அமீர்கான் ரசிகர்கள் பார்க்கலாம். மற்றபடி புதிய முயற்சி என்று சொல்லி விட முடியாது . படம் செம ஸ்லோ . ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பார்த்தேன்.பட உல்டா தகவல் - 
3rd track is from one Harrison Ford movie. drowned or something!


டிஸ்கி - இந்தப்படத்தின் மூன்று கதைகளில் ஒரு கதையின் மூலம்


மடோனாவின் பாடி ஆஃப் எவிடென்ஸ் விமர்சனம்

http://www.adrasaka.com/2012/10/body-of-evidence-18.htmlhttp://1.bp.blogspot.com/-WagboiykadY/T1H8EGiU4JI/AAAAAAAAC0U/hBw3AYvbSuA/s1600/rani-mukherjee-hot-93d83.jpg


Wednesday, September 26, 2012

Heroine - சினிமா விமர்சனம்

http://www.moviethread.com/wp-content/uploads/movies2012/bollywood-movie-heroine/kareena-kapoor-heroine-movie-wallpaper01.jpgநாட்ல மேரேஜ் ஆகாம 1008 நல்ல ஆண்கள் , அப்பாவிகள் இருந்தாலும் பெரும்பாலான பணக்காரப்பொண்ணுங்க, நடிகைங்க கண்ல மாட்டறது, அல்லது அவங்களா போய் மாட்டிக்கறது ஆல்ரெடி மேரேஜ் ஆன அயோக்கியப்பசங்க கிட்டேதான். நயன் தாரா எப்படி ரம்லத்க்கு துரோகம் பண்ணி பிரபுதேவாவை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி இந்தப்படத்து ஹீரோயின் கரீனாகபூரும்  ஒரு புகழ் பெற்ற சூப்பர் ஸ்டாரை வளைச்சுப்போடறார். அவருக்கு ஆல்ரெடி மனைவி, குழந்தை எல்லாம் இருக்கு. 


 இவருடைய நோக்கம் தான் எப்பவும் மீடியாவில் பேசப்படனும், பர பரப்பான செய்தி நம்மை பற்றி வந்துட்டே இருக்கனும்னுதான். ஒரு தடவை ஷூட்டிங்க் ஸ்பாட்டில் தன் கள்ளக்காதலனின் முதல் மனைவியின் குழந்தையிடம் ஆசையா பேசிட்டு இருக்கும்போது முதல்  மனைவி ஐ மீன் சக்களத்தி வந்து படு கேவலமா  திட்டிடறா?அது சம்பந்தமா செம காண்ட்ல இருக்கும்  கரீனா  தன் காதலன் கிட்டே நியாயம் கேட்கறாரு. கார்ல போய்ட்டு இருக்கும்போது 2 பேருக்கும் வாக்குவாதம் வந்து கமல் ஹாசன் எப்படி வாணி கமலை மாடிப்படிக்கட்டுல இருந்து தள்ளி விட்டாரோ அப்படி காரை நிறுத்தி தள்ளி விட்டுடறார் ( அந்த கால கட்டத்தில் வாணி மாடியில் இருந்து தவறி விழுந்தார் என சொல்லப்பட்டாலும் பின்னாளில் ஸ்டார் டஸ்ட் இதழில் வாணி கமல் ஹாசன் உண்மையை சொன்னார் ) 


 இவருக்கு  அதாவது கரீனாவுக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிடுது. பழி வாங்கத்துடிக்கறார்.மார்க்கெட் டல்லா இருந்தப்போ எப்படி லட்சுமிராய் தனக்கு சம்பந்தமே இல்லாத கிரிக்கெட் ஃபீல்டுல இருந்த டாப் ஹீரோ டோனியை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி கரீனாவும் ஒரு கிரிக்கெட் ஸ்டாரை வளைச்சுப்போடறார்.

 http://www.cinmass.com/wp-content/uploads/2012/09/Kareena-hot-stills-in-Heroine-10.jpg
பல காரணங்களால கரீனாவுக்கு மார்க்கெட் டல் ஆகிடுது. சோகமா இருக்கும்போது ஆறுதலா   ஒரு  பெங்காலி நடிகை கூட லெஸ்பியன் உறவு வெச்சுக்கறாங்க.. இது எப்படின்னா ஃபயர் படத்துல படத்தின் கதைக்கு தேவை , முக்கியம்னு தீபா மேத்தா சொல்லி நந்திதா தாஸ் , ஷபனா ஆஷ்மி கூட கோர்த்து விட்ட மாதிரி. ஆனா அப்போ கரீனா போதைல இருந்ததால அதுக்கு ஓக்கே சொல்லிட்ட மாதிரி ஒரு சப்பைக்கட்டு வேற 


மார்க்கெட் இழந்த அல்லது மங்கிய கரீனா தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க ஒரு வங்காள இயக்குநர்ட்ட  ஆர்ட் ஃபிலிம்ல நடிக்க வாய்ப்பு கேட்கறார். அதுக்கு பரிகாரமா அல்லது பிரதிபலனா அவர் கூட படுக்கறார். 


 புகழ் வெறி, புகழ் போதையால என்ன எல்லாம் பிரச்சனை வருது, அதுக்கு என்ன தீர்வு என்பதுதான் மிச்ச சொச்ச கதை.. 


 படத்தின் மெயின் ஹீரோ   ஹீரோயின்  கரீனாகபூர்-ன் நடிப்புத்தான். பட்டாசு.படத்தில் நடிக்கும் அனைவரையும் சர்வசாதாரணமாக டாமினேட் செய்கிறார். காதல் , கோபம் , குரோதம், ஏமாற்றம் , கில்மா, சோகம், கண்ணீர் என எல்லா உணர்வுகளையும் முகத்தில் காட்டுகிறார். கிளாமரை தன் தேகத்தில் காட்டு காட்டு என காட்டுகிறார்.. இந்த கிளாமர் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா?  போடுங்கம்மா ஓட்டு கரீனாகபூர் சின்னத்தை பார்த்து அப்டினு பிரச்சாரம் ஒண்ணுதான் பண்ணலை..


 ரகுவரன் கணக்கா கரீனா டென்ஷன்ல கத்துவது, கோபத்தில் எல்லாத்தையும் போட்டு உடைப்பது , போதைல இருப்பது என நவரச நடிப்பு.. சூப்பர் ஸ்டாராக வரும் அர்ஜுன் ராம்பால், கிரிக்கெட்டர் ரந்தீப் ஹூடா ஆகியோரின் நடிப்பு  குறை சொல்ல ஏதும் இல்லை.. குட்.  சிறிது நேரமே வரும் பெங்காலி நடிகையின் இயல்பான  குணச்சித்திர நடிப்பு, உறுத்தாத அழகு எல்லாம் ஓக்கே ரகம் .


Shahana Goswami

http://www.moviegupshup.net/data/media/274/shahana848.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்1. ஏன் ஒதுங்கறே? நான் கிஸ் பண்றது உனக்கு பிடிக்கலையா? அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லை.  மேக்கப் கலைஞ்சுடுமேன்னு பார்க்கறேன் ( இவ தாண்டா பத்தினி - நன்றி டாக்டர் ராஜசேகர்)2. ஏதோ இண்டஸ்ட்ரியல் மீட்டிங்க்னு சொன்னீங்க.. அவ பிளாட்டுக்கு போய்ட்டு வந்திருக்கீங்க. அங்கே தான் மீட்டிங்க் நடந்ததா?3. நடிகர்களோட சேர்ந்து சேர்ந்து உனக்கும் நல்லா நடிக்க வருது4. என்ன என்னைப்பார்த்து ஜஸ்ட் ஒரு ஹாய் மட்டும் சொல்றே? என்னைப்பார்த்து உனக்கு சந்தோஷம் இல்லை? 


 ஹாய்! யாdivya dutta
http://www.actresspics.in/wp-content/gallery/divya-dutta/divya-dutta-actress-hot-pics-wallpapers-2.jpg5.  அவர் எந்த மாதிரி பர்ஃபார்மென்சை எதிர்பார்க்கறார்னு சரியாத்தெரியலை..


சரி சரி நான் சொல்லித்தர்றேன்6. ஃபிலிம் ஸ்டர்னா தன்னைத்தவிர யாரைப்பற்றியும் சிந்திக்காத சிந்திக்கத்தெரியாதவர்னு அர்த்தம்


7. சுய கட்டுப்பாடு ஒரு கன்யாஸ்திரிக்கு ரொம்ப முக்கியம். உங்க கோபம், ஆவேசம், எல்லாத்தையும் பார்க்குறப்ப நீங்க அதுக்கு தகுதி இல்லைன்னு ஈசியா சொல்லிடலாம்,. எஸ் யூ ஆர் அன் ஃபிட்  ஃபார் தட் ( மேஜர் சுந்தர்ராஜன்)8. அமெரிக்கா போய் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கப்போறேன்


 பரிவு, அக்கறை மட்டும் தான் இந்த நோயை குணப்படுத்த முடியும்.. 

 lillete dubey
http://3.bp.blogspot.com/_Topd5o_374A/S-AbHg0SN5I/AAAAAAAAAWI/wNpcPAMOyw0/s1600/jiah-khan04.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள் 1. டைட்டில் டிசைன், போஸ்டர் டிசைன் எல்லாம் ஏன் வித்யாபாலன் நடிச்ச டர்ட்டி பிக்சர் மாதிரி இருக்கு? பார்க்கறவங்க அந்த பட கதைன்னு நினைக்க சான்ஸ் அதிகம்..  ஒரு வேளை அதான் நீங்க எதிர்பார்த்ததா? 


2. நடிகையா வர்ற நடிகை ஒரு பாட்டு சீன்ல காமதேனு என சொல்லப்படும் பசுவின் சிலை மேல் அமர்ந்து குத்தாட்டம் ஆடறாங்க. இதுக்கு எப்படி சென்சார் கிடைச்சதுன்னு தெரியலை.. அவங்களை விடுங்க, இந்த சீன் எடுக்கும்போதே இது இந்துக்களை , அவங்க மனசை புண் படுத்தும்னு தெரியாதா? இந்து முன்னணியினர் தகராறு செஞ்சா படத்துக்கு நெகடிவ் பப்ளிசிட்டி கிடைக்கட்டும்னுட்டு வேணும்னே அந்த சீன் எடுத்தீங்களா?3. படத்துல வர்ற எல்லா லேடீஸ் கேர்க்டர்ஸும் தம் அடிக்கறாங்க, சரக்கு அடிக்கறாங்க, அதுவும் கரீனா சீன் பை சீன் ரஜினி மாதிரி ஐ மீன் ஆரம்பக்கட்ட ரஜினி மாதிரி சிகரெட்டோடயே சுத்தறாரு.. எதுக்கு அப்படி ?


4. ஹீரோயின் கரீனா புகழ் பெற்ற ஒரு நடிகை. அவங்க ஒரு சூப்பர் ஸ்டார் கூட கில்மா பண்றப்போ அதை செல் ஃபோன்ல வீடியோ  எடுக்கறாங்க. ஏதாவது ஃபைட் வந்தா நமக்கு ஆப்புன்னு அந்த ஹீரோவுக்கு தெரியாதா?எப்படி அதுக்கு அலோ பண்றார்?5. அந்த கில்மா வீடியோவை மீடியா கிட்டே கொடுப்பேன்னு கரீனா மிரட்டும்போது ஹீரோ ஏன் பம்மறாரு? ஏண்டி ! பொம்பளை உனக்கே அந்த ஏத்தம்னா ஆம்பளை எனக்கு எவ்ளவ் ஏத்தம் இருக்கும்? மானம் போனா உனக்கும்தானே போகும்? நீயும் தானே அந்த வீடியோவில் இருக்கே?ன்னு கேட்கலையே? ஏன்?6. அப்படி மீறிப்போனா இருக்கவே இருக்கு நித்யானந்தா பாணி டயலாக் - இது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், நான் அவன் அல்ல அப்டினு சொல்லிட்டா தீர்ந்தது. ஏன் பயப்படனும்?

 pallavi sharda
http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2011/11/&file=winter-festive-preview-2011_132221587610.jpgஇயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. தமிழ்ல  எப்படி முதல் பாவம்ல அபிலாஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன்ல குஷ்பூ , ஜம்புல அந்த ஆண்ட்டி எப்படி ஹையஸ்ட் கிளாமர் காட்னாங்களோ அதே போல் கரீனா கபூரின் உயர்ந்த பட்ச சீன் படம் இதுதான் என்ர லேபிள் வெச்சுக்கிட பாடு பட்டது 2. படத்துல வர்ற முக்கியமான 4 லேடீஸ்க்கும் கிளாமர் காட்சிகள் வெச்சது 3. படத்தை விறு விறுப்பா முடிஞ்சவரைக்கும் போர் அடிக்காம கொண்டு போனது 

http://2.bp.blogspot.com/_Av4xrD-qSB8/TEB14SuGxCI/AAAAAAAABtU/a1Ic1gt9KZo/s1600/Kareena+Kapoor+navel.jpg

 சி.பி கமெண்ட் -  கரீனா கபூரின் ஆண் ரசிகர்கள் சீனுக்காக பார்க்கலாம். ஆனா வெளில நடிப்புக்காக பார்த்தேன்னு ரீல் விட்டுக்கலாம்.. பெண்கள் பார்க்கத்தேவை இல்லாத தகுதி இல்லாத படம்.. ( ஆனா நான் பார்த்த ஈரோடு  ஸ்ரீநிவாசாவில் படம் பார்க்க வந்தவங்க பாதிப்பேர் லேடீஸ் தான், வாழ்க பெண்ணுரிமை)

டிஸ்கி - இந்தப்படத்துல பல ஆண்கள் நடிச்சிருந்தாலும் பெண்கள் ஸ்டில் தான் போட்டிருக்கேன். 33 % இட ஒதுக்கீட்டுக்கே போராடும் பெண்களுக்கு அட்ராசக்கவுல் மட்டும் எப்போதும் 93 % இடை சாரி இட ஒதுக்கீடு. இதுக்காக பெண்ணியம் காக்கும் கண்ணியம் கொண்ட காரிகன் பட்டம் கொடுத்தா கலைஞர் போல் கூச்சமே இல்லாம அதை வாங்கிக்கத்தயாரா இருக்கேன் .


Director:

Madhur Bhandarkar

Writers:

Madhur Bhandarkar, Niranjan Iyengar

Stars:

Kareena Kapoor, Randeep Hooda and Arjun Rampal