Thursday, December 06, 2012

Krishnam Vande Jagadgurum - சினிமா விமர்சனம்

http://www.businessoftollywood.com/wp-content/uploads/2012/10/Krishnam-Vande-Jagadgurum-1.jpgநயன் தாரா தெலுங்குப்படத்துல  நடிச்சிருக்கார், சரி ஸ்ரீ ராம ராஜ்யத்துல காட்ட முடியாத பல திறமைகளை இதுலயாவது காட்டுவார்னு நினைச்சுப்போனா இனிமே தெலுங்கு குப்பை மசாலாப்படத்துக்கு வருவியா? வருவியா? என பிரம்பால் அடித்து துரத்துகிறார் , படு குப்பையான , அரதப்பழசான பாடாவதிக்கதை .

ஹீரோவோட தாத்தா எம் ஆர் ராதா, சோ  மாதிரி ஒரு நாடகக்கலைஞர்  .தன் பேரனை நடிக்க வெச்சு ஒரு நாடகம் போடுவதுதான் அவரோட கடைசி ஆசை.. ஆனா பாருங்க ஹீரோவுக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை.நாடகத்துல எல்லாம் நடிச்சுட்டு இருந்தா சோத்துக்கு சிங்கி அடிக்கனும்கறார். சோகத்துல  தாத்தா அவுட். அவரோட கடைசி ஆசை அவரோட அஸ்தியை  துங்கபத்ரா நதிலதான் கரைக்கனுமாம். 


 ஹீரோ டூ இன் ஒன் வேலையா அஸ்தியையும் அங்கே கரைச்சு அந்த நாடகத்தையும் அரங்கேற்றம் பண்ணனும்னு முடிவு பண்றார்.அங்கே 2 கேனத்தனமான வில்லன்கள் . 1008 விஜய் , விஷால் படங்கள்ல பார்த்து சலித்த மோதல்கள் . ஹீரோவுக்கும் , வில்லனுக்கும் ஆல்ரெடி குடும்பப்பகைன்னு காட்டிக்க ஒரு கேவலமான ஃபிளாஸ்பேக்.சொல்ல மறந்துட்டனே , ஹீரோயின் மீடியாவுல கேமராவுமன் கம் ரிப்போர்ட்டர். ஆம்பளைங்களையே பார்க்காத ஆள் மாதிரி ஹீரோவைப்பார்த்ததும் பல் இளிக்குது.


ஹீரோ எப்படி அந்த கிறுக்கு ஹீரோயினை க்ரெக்ட் பண்றார்? மூளையே இல்லாத 2 வில்லன்களையும் எப்படி அதகளம் பண்றார் என்பதை படு கேவலமான திரைக்கதை மூலம் சொல்லி பாடாப்படுத்தி இருக்கார் இயக்குநர் . 


ஹீரோ ராணா. ஆள் அர்னால்டு மாதிரி ஜிம் பாடியாத்தான் இருக்கார். ஆனா அவர் முகம் பாறாங்கல்லு மாதிரி இருக்கு. ஒரு உணர்ச்சியும் வர மாட்டேங்குது. வில்லன்களைப்பார்த்து பஞ்ச் டயலாக் பேசும்போதும் , ஹீரோயினைப்பார்த்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கும்போதும் ஒரே மாதிரி முக பாவம் . சத்தியமா இங்கே தேற முடியாது,. ஆனா ஆந்திராவில் வருங்காலத்துல சூப்பர் ஸ்டார் ஆகிடலாம். ஹீரோயின் நயன் தாரா .ஐயா படத்துல கும்முன்னு கேரளா கொழாப்புட்டு மாதிரி இருந்தவர் இதுல 10 நாளா பட்டினி இருந்த பெருந்துறை ஈமுக்கோழி மாதிரி படு கேவலமா ஒல்லியா காய்ச்சல் வந்த  காயலான் கடை தட்டு முட்டுச்சாமான் மாதிரி இருக்கார். ( இந்த லட்சணத்துல ஒரு கோடி சம்பளமாம். பேராசை , ஆனா அதைக்கொடுக்கவும் ஆளுங்க இருக்காங்களே? ) 


 காமெடிக்கு பிரம்மானந்தம். ஆனா ஒரு சீன்ல கூட சிரிப்பு வர்லை. எரிச்சல் தான் வருது. அட்லீஸ்ட் காமெடி டிராக் எழுதக்கூடவா ஆள் இல்லை? வெரி பேடு .

 இசை மணிசர்மா . பின்னணி இசையில் பாஸ் மார்க். பாடல்களில் சிங்கிள் டிஜிட் மார்க் .


http://www.cafeandhra.com/webpreviews/iX96tDo21z.jpg இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. போஸ்டர் டிசைன் சூப்பர் . மழையில் நனைந்து ஹீரோயின் சிரிப்பது போல் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பது பார்ப்பவர்க்கு அது ஏதோ காதல் சப்ஜெக்ட் படம் என்றோ , கில்மாப்படம் என்றோ நினைக்க வைக்கும். தியேட்டரில் ஓப்பனிங்க் கிடைக்க நல்ல யுக்தி 2. ஸ்டார் வேல்யூவுக்காக வெங்கடேஷை ஒரு குத்தாட்டத்தில் நடிக்க சாரி நடனமாட வைத்தது . இதுல என்ன காமெடின்னா  மகனை  விட அப்பா இளமையாத்தெரியறார். 3. கிளாம்ருக்கு நயன் தாரா , காமெடிக்கு பிரம்மானந்தா என புக் பண்ணியது http://www.andhrareporter.com/images/gallery/Krishnam-Vande-Jagadgurum/Krishnam-Vande-Jagadgurum-12.jpgஇயக்குநரிடம் சில கேள்விகள்1. நயன் தாரா ஒரு வீடியோ கேமரா எடுத்துக்கிட்டு வில்லன் பிளேஸ்ல என்னமோ டூர் ஸ்பாட் வந்த மாதிரி அசால்ட்டா வீடியோ எடுத்துட்டு இருக்கார். அந்த தடியன்க எல்லாம் தேமேன்னு வேலை செஞ்சுட்டு இருக்காங்க. ஏன் ? 


2. காதல் வர்ற மாதிரி காட்டனும்னா ஹீரோயின் ஹீரோ கண்ணை அல்லது முகத்தைப்பார்க்கனும். ஹீரோயின் ஏன் ஹீரோ ஜிம் பாடியை ஆசையாப்பார்க்கறார்? மலையாள கொரில்லாப்படத்துல பிரமீளா ஹீரோவை ஏக்கமாப்பார்க்கற மாதிரி? அவர் ( கதைல ) முன்னே பின்னே ஆம்பளைங்களையே பார்க்காதவரா? 


3. நாடக்க்காட்சி ஒண்ணு கூட உருப்படியா வர்லை.. அண்ணனுக்குத்தான் நடிப்பு வர்லைங்கறது நல்லா தெரியுதுல்ல? அதுக்கு தக்க படி திரைக்கதையையோ, ஹீரோவோட கேரக்டரையோ மாற்றி இருக்கலாமே? 


4. படத்தோட பின் பாதி அதாவது இடைவேளைக்குப்பிறகு தட்டுத்தடுமாறுது. எப்படி கதையை கொண்டு போறதுன்னு தெரியாம தள்ளாடுது திரைக்கதை 5. பாடல் காட்சிகள் சம்பந்தமில்லாத பிட்டு  அதாவது சீன் இல்லாத பிட்டா வருது . முடியல 6. இந்த பாடி கெமிஸ்ட்ரி பாடி கெமிஸ்ட்ரின்னு சொல்வாங்களே அது மருந்துக்குக்கூட இல்லை 


7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ வில்லனை கொல்ல வர்றார்னு தெரிஞ்சும் வில்லன் ஏன் தேமேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்? ஓட வேண்டியதுதானே? http://www.breezemasti.com/gallery/data/media/51/nayanthara-hot-pics-in-krishnam-vande-jagadgurum-movie-1.jpg

மேக்கப் போட்ட ஈமு இதுதான் மாமு


 மனம் கவர்ந்த வசனங்கள்  ( மோசமானவங்கள்ல நாங்க முக்கியமானவங்க)


1. ஹீரோ - இன்னைக்கு நைட் நீ ஃபிரீயா? 


 ஹீரோயின் - இடியட்


 வாட்? ஃபிரீயா இருந்தா வெளில போலாம்னு கேட்டேன் 

 ( இந்த கேவலமான மொக்கைக்கு ஹீரோயின் கெக்கேபிக்கேன்னு 3 நிமிஷம் இளிக்குது )2.  மீடியான்னா சர்க்கஸ்னும், ரிப்போர்ட்டர்னா கோமாளின்னும் நினைச்சுட்டியா?  சி.பி கமெண்ட் -  எனக்கு என்ன காமெடின்னா இவ்வளவு கேவலமான குப்பையை ஆங்கில வலைத்தளங்கள் 13 , ஆங்கில இதழ்கள் 3 , தெலுங்குப்பத்திரிக்கைகள்  6 எல்லாம் மனசாட்சியே இல்லாம ஆஹா , ஓஹோ , செம படம்  அப்டினு பாராட்டி இருக்கறதுதான் . கவர் கை மாறுச்சா? அல்லது அவங்க டேஸ்ட்டே அவ்ளவ் தானா? அப்டினு தெரியல. இந்தபப்ட்த்தை போன வாரம் வெள்ளிக்கிழமை  ரிலீஸ் அன்னைக்கு  நைட்  ஈரோடு அண்ணா வில் பார்த்தேன் , சனிக்கிழமை காலைல எடுத்துட்டாங்க. வெற்றிகரமா 4 காட்சிகள் ஓடி இருக்கு.. கி கி கி ;-))


டைட்டிலுக்கான விளக்கம் - ரொம்ப முக்கியம் , ஹீரோ நடிக்கும் படு கன்றாவியான அந்த நாடகத்தின் டைட்டில் தான் படம் டைட்டில் http://1.bp.blogspot.com/-Hd6vdM5NWAw/TjqAOUHqGRI/AAAAAAAABYA/jYLO42s66og/s1600/Hot-Actress-Nayanthara03.jpg
ஐயா  ஸ்டில் - எப்படி இருந்த நான் ....

1 comments:

குரங்குபெடல் said...

" காமெடி எழுதக் கூடவா ஆள் இல்ல "


தம்பி . . .

Good Question


நீ ஹைதரபாத் கிளம்பிடேன்