Showing posts with label telugu film review. Show all posts
Showing posts with label telugu film review. Show all posts

Tuesday, January 22, 2013

Seethamma Vaakitlo Sirimalle Chettu - சினிமா விமர்சனம்

http://www.123cinejosh.com/wp-content/uploads/2012/11/Seethamma-Vaakitlo-Sirimalle-Chettu-Release-Wallpapers-123cinejosh.jpgஅண்ணன் , தம்பி 2 பேரு , அம்மா , அப்பா உள்ள ஃபேமிலி .அண்ணனுக்கு முறைப்பொண்ணு வீட்லயே இருக்கு . ஃபேமிலிக்கு ஆகாத தூரத்து ச்சொந்தம் வீட்ல தம்பிக்கு ஒரு பொண்ணு மாட்டுது. தம்பியோட லவ் அண்ணனுக்கு பிடிக்கலை. இதனால அண்ணன் தம்பிக்குள்ளே நிகழும் போராட்டங்கள் தான் கதை . ஆல்ரெடி நாம வானத்தைப்போல , ஆனந்தம் , நட்புக்காக மாதிரி பல படங்கள்ல பார்த்த கதை தான். ஆந்திராவுக்கு ஒரு வேளை புதுசா இருக்கும்.


ஆந்திரா சூப்பர் ஸ்டார்கள் வெங்கடேஷ் , மகேஷ் 2 பேரும் தான் அண்ணன் , தம்பி .  படம் பூரா வில்லன்களோட ஃபைட் போடாம அமைதியா இருந்ததுக்கே அவார்டு தரலாம். வேலை இல்லாத வெட்டாஃபீசாய் , முன் கோபி யாய் வரும் வெங்கடேஷ்க்கு செம ஈசியான வேலை . அப்பப்ப தளபதி ரஜினி மாதிரி முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலே போதும் , மிச்சத்தை இயக்குநர் சமாளிச்சுக்கறார். அவர் அடிக்கடி சட்டைக்காலரை பின்னால தூக்கி விட்டுக்கறதுதான் ஸ்டைலா? நம்ம ஊர்ல ரஜினி 25 வருஷத்துக்கு முன்னாலயே அதை பண்ணிட்டாரு .


மகேஷ் இளமைத்துள்ளலான கேரக்டர் . வழியில் தென்படும் ஃபிகர்களை வலியனாப்போய் வம்பிழுக்கும் விதம் ஆஹா! கோபுர வாசலிலே படத்தில் கார்த்திக் பண்ணாததா?  ஆனாலும் ஜாலியா இருக்கு. அவர் அடிக்கடி டக் இன்  பண்ணிய சர்ட்டை எடுத்து வெளியே விடுவது ஸ்டைலா? , சகிக்கலை.  15 ரீல் படத்துல  27 டைம்  அப்படி பண்றார்.. உஷ் அப்பா . அவர் அடிக்கடி ஈ அப்டி காட்டுவது ஆரண்ய காண்டத்துல ஜாக்கி ஷெராப் ஆல்ரெடி செஞ்சாச்சி . புதுசா  அவர் பண்ணுனது ஒண்ணும் இல்லை .

 http://www.webparx.com/movies/wp-content/nggallery/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie-webparx-2.jpg
ஹீரோயின் 2 பேர்ல முதல் அறிமுகம் ஆவது  அனுதினமும் அணு அணுவாக ரசிக்கச்சொல்லும் அங்காடித்தெரு அஞ்சலி. கொழுக் மொழுக் கன்னம் , சிரிக்கும் கண்கள் , அழைக்கும் உதடுகள் என அவர் வரும் காட்சி எல்லாம் ஈர்ப்பு. இந்திய சினிமாக்களிலேயே கிளாமரான ஹீரோயின் அறிமுகம் ஆகும்போது அடிக்கும்  டார்க் கலரான சிவப்பு , வயலெட் , மயில் கழுத்து , ராமர் க்ரீன் ஜாக்கெட் எல்லாம் போடாமல் மிக எளிமையான  சம்பங்கி கலரில் ( லைட் காக்கி கலர் )  ஜாக்கெட் போட்டு அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே ஈர்த்து விடுகிறார். 


அடுத்தடுத்த காட்சிகளில்  அவர் டார்க் கலர் டிரஸ்ஸில் கலக்குகிறார். எல்லா காட்சிகளும் சேலைகள் தான். செம செம . எஜமான் படத்தில் வருவது போல் ஹீரோவுக்கு அடிக்கடி துண்டு  எடுத்துக்கொடுத்து தூண்டும் வேலை . ஒரு டூயட்டும் உண்டு 


அடுத்த ஹீரோயின் சந்தனச்சிலையா? என திகைக்க வைக்கும் சமந்தா. கிண் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போக வேண்டி வந்தது எல்லாம் இயற்கையின் திரு விளையாடல் . பாட்டியாலா சுடிதார் ,  லெக்கின்ஸ் , பாராசூட் மாடல் பைஜாமா என அவர் வகை வகையாய் உடை அணிந்து வருகையில் தியேட்டர் பெண்கள் எல்லாம் நோட் பண்ணிக்கறாங்க . செத்தாண்டா அவங்கவங்க புருஷங்க . 

அஞ்சலியை விட இவர் அதிக காட்சிகளில் வர்றார். ஓப்பனிங்க் சாங்க் , ஒரு டூயட் என இவருக்கு 2 பாட்டு .கலர் ஃபுல் கலக்கல்ஸ். 


பிரகாஷ் ராஜ் இருவர் பட கெட்டப் , காஞ்சிவரம் பட  பாடி லேங்குவேஜ் என அடக்கி வாசிக்கிறார்.

 http://publichubs.com/blogimages/hub/784-2-anjali-saree-stills-at-malabar-gold-showroom.jpg இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. சந்தனச்சிலை சமந்தா ஒவ்வொரு டைம் ஃபோன் பண்ணும்போதும் ஹீரோ ஃபோனை   ஓடும் மிக்சி ஜார் அருகே  ஃபோனை வைப்பது , ஊதும் நாதஸ்வரம் முன் வைப்பது என ஜாலி கலாட்டாக்கள் 


2. அஞ்சலிக்கான ஜாக்கெட் டிசைன் அற்புதம் , முழு முதுகும் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட பெரிய பள்ளத்தாக்கு  பேக் யு நெக் ஜாக்கெட். கேமரா எப்பவும் அஞ்சலி முதுகுலதான் லேண்ட் ஆகுது . ஹூம், முதுகா அது? பத்தமடை பாய் மாதிரி 3. மேரேஜ் ஃபங்க்‌ஷனில் ஹீரோவைக்கண்ட  சம்ந்தா வெளிப்படுத்தும் ஷாக் சர்ப்பரைஸ் ரீ ஆக்‌ஷன்  சோ க்யூட்


 http://web2look.com/wp-content/gallery/samantha-hot1/samantha-hot-6.jpg4. ஹீரோவை விட சமந்தா மிக குள்ளம் என்பதால் அவருக்கு  ஒரு அடி உயரத்துக்கு  ஹை ஹீல்ஸ் போட்டு சமாளிப்பதும் , வெங்கடேஷ் விட அஞ்சலி ஹைட் என்பதால் அவரை எப்போதும் வெறுங்காலுடன் நடக்க விடுவதும் , வெங்கடேஷ் ஹை ஹீல்ஸ் ஷூ அணிவதும் ( நம்ம ஊர் சூர்யா மாதிரி ) பேலன்ஸ்டு சீன்ஸ் 5. தூரத்துடுக்கு பாட்டப்ப அஞ்சலி  தன்னோட இடுப்பை ஒரு வெட்டு வெட்டுவாரே .. செம கிக். கோடானு கோடி  பாட்டப்ப அந்த லேடி இடுப்பை ஒரு சுத்து சுத்துமே அந்த கிக்குக்கு சமம் 6. படத்தில் வாய்ப்பு இருந்தும் சண்டைக்காட்சிகள் வைக்காதது , திரைக்கதையில் இரு காதல் ஜோடிகளின் ரொமாண்டிக் காட்சிகளை ஒன் பை ஒன் மாத்தி மாத்தி காட்டி பேலன்ஸ் பண்ணது 7 . கல்யாண கலாட்டா காட்சிகள் அழகு + பிரம்மாண்டம்

http://moviegalleri.net/wp-content/gallery/samantha-ruth-prabhu-latest-hot-images/hot_samantha_latest_stills_pics_3143.jpg
 இயக்குநரிடம் சில கேள்விகள்
1. வசதியான குடும்பத்தில் இருக்கும் ஒரு நியூலி மேரீடு கப்பிள் ரயில்ல அன் ரிசர்வ்டுல ட்ராவல் பண்ணுவாங்களா? ஏ சி கோச் ல வராட்டியும் அட்லீஸ்ட் ரிசர்வ்டு செகண்ட் கிளாஸ்ல தானே வருவாங்க.. 


2. அஞ்சலிக்கு மட்டும் இண்ட்ரோ சாங்க் இல்லை, ஆனா சமந்தாவுக்கு இருக்கு. இது எந்த வகைல நியாயம்? ஒரு கண்ணுல வெண்ணெய் , இன்னொரு கண்ல தொண்ணையா? 3. படத்துல ஏகப்பட்ட கேரக்டர்ஸ். கலைஞர் குடும்பம் மாதிரி , எல்லா கேரக்டரும் அறிமுகம் ஆகி கதைக்கு செட் ஆகும்போதே ஒரு மணி நேரம் ஆகிடுது http://3.bp.blogspot.com/-eyt9AWTFe1U/TfVBJajZ5KI/AAAAAAAAAkc/Q_hhW0jMvLQ/s1600/anjali-hot-stills.jpg4.  ஒரு சீனில் வேலை வெட்டி இல்லாத வெங்கடேஷ்  இன்ஸ்பெக்டரை கோபத்தில் பளார் என அடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர். அவர் ஆன்னு பார்த்துட்டு இருக்காரு . அவர் ஒண்ணும் ரவுடி கிடையாதே  நிஜ வாழ்வில் பப்ளிக்கில் ஒரு போலீஸ் ஆஃபீசரை ஒரு வெத்து வேட்டு பப்ளிக் பிளேஸ்ல அடிச்சா என்ன ஆகும்? 5. கதைப்படி ஆன்மீக வாதியாக வரும் பிரகாஷ் ராஜ் ஒரு சீனில் கூட நெற்றியில் திருநீறோ , குங்குமமோ வைக்கலை, ஆனா கோயில் பிரசாதத்தை ஒணத்தியா சாப்பிடறார், கோயில்ல இருக்கார் . 6. கல்யாண வேலைகளில் வீடே பரபரப்பாக இயங்குகையில் எல்லாரும் வெறும் காலுடன் இருக்க, ஹீரோ மகேஷ் மட்டும் ரன்னிங்க் கேன்வாஷ் ஷூ உடன் அலைகிறார்

 http://3.bp.blogspot.com/-dsh0dNbLQHw/T-v84KipXUI/AAAAAAAAPVw/A1fFlDSL0yE/s1600/Anjali-Latest-New-Unseen-Photo-Shoot-+(1).jpg7. அதே போல் மேரேஜ் ஃபங்க்‌ஷனில் குப்பம்மா, குருவம்மா , முனியம்மா எல்லாம் பட்டு சேலையில் மினுக்கிட்டு வரும்போது அஞ்சலி சாதா சேலையில் உலா வர்றாரே?  க்ளைமாக்ஸ்ல அவருக்கு மேரேஜ் ஆகும் காட்சியில் தான் சில்க் சேலை . ஒய்? 
8. படம் போட்டதில் இருந்து அஞ்சலி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஏதாவது ஒரு சமையல் எடுபுடி வேலை  செஞ்சுட்டே இருக்காரே? அவர் என்ன வேலைக்காரியா? 9. இண்ட்டர்வியூவில் எல்லா தேர்விலும் பாஸ் ஆன ஹீரோவிடம் அதிகாரிகள் “ உங்க சிரிப்பில் உயிர் இல்லை. அது இயல்பா இல்லை , நல்லா சிரிங்க அப்போதான் வேலை” என்பதும் மனதில் சோகத்துடன் இருக்கும் ஹீரோ மனம் விட்டு சிரிக்க முடியாமல் செயற்கையாய் சிரிப்பதும் அதனால் வேலை கிடைக்காமல் போவதெல்லாம் ஓவரோ ஓவர் . எந்த இண்ட்டர்வ்யூல சிரிப்பை வெச்சு ஜாப் தர்றாங்க? 10 . ஒரு காட்சியில் கல்யாணப்பெண் வெள்ளைப்பட்டுப்புடவை அணிந்து வர்றார். கேரளாப்பெண்கள் தான் அப்படி வருவாங்க . நம்ம ஆட்கள் எல்லாம் முகூர்த்தப்புடவை மேக்சிமம் ரத்தச்சிவப்பு , மெரூன் , பிரவுன் , வயலெட் , பச்சை கலர் தான் . சத்தியமா வெ:ள்ளை நாட் அலோடு11. கிட்டத்தட்ட வில்லனாக வரும் உறவினர் ரமேஷ் ராவுக்கும் பிரகாஷ்ராஜுக்குமிடையே பொறாமை ஏற்படக் காரணம் என்ன?ன்னு கடைசி வரை சொல்லவே இல்லை  12. அந்த மின் விபத்து , வில்லனை காப்பாற்றுவது  , அவர் மனம் மாறுவது படு செயற்கை


13. சமந்தா வை பல படங்கள்ல கவனிச்சுட்டுதான் இருக்கேன், அவர் அழகா இருக்கும் புருவத்தை பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணி அப்புறம் அது மேல  ஐ ப்ரோ பென்சிலால டார்க்கா  வரைஞ்சு அலங்கோலம் பண்ணிக்கறார். கார்த்திகாக்குத்தான் வேற வழி இல்லை , வரைஞ்சுக்கறார், உங்களுக்கு என்ன? அஞ்சலி இந்த விஷயத்துல குட்http://2.bp.blogspot.com/_jY5_mBUcDxg/TGFHP9djQUI/AAAAAAAAMXA/aqhVh-XMg90/s1600/Samantha+Hot+Bikini+stills+(8).jpgசி.பி கமெண்ட் -  ஃபேமிலியோட பார்க்கற மாதிரிதான் இருக்கு . 2 ஹீரோயின் ரசிகர்கள் பார்க்கலாம், மற்றபடி புதுசா கதைல ஒண்ணும் லேது . டைட்டிலுக்கான அர்த்தம் சீதையின் வீட்டின் முற்றத்தில் மல்லி செடி.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்

Wednesday, January 02, 2013

ORANGE ( 2010 )- சினிமா விமர்சனம்

http://4.bp.blogspot.com/_6Vr9b9OoZno/TO4ulI5IJkI/AAAAAAAAFLA/Qjv6-rFkkYU/s1600/orange_movie_desktop_new_wallpapers_02.jpgகோடம்பாக்க குலவழக்கப்படி ஹீரோயின் ஒரு அரைக்கேனம். எப்போ பாரு கேனம் மாதிரி பல்லைகாட்டிட்டே இருக்கும். ஹீரோ லவ் பிரபோஸ் பண்ணதும் 2 வது ரீலிலேயே ஓக்கே சொல்லுது. 2ம் ஊரைச்சுத்துதுங்க . ஒரு டைம் எதேச்சையா பேச்சு வாக்குல “ என்னை லைஃப் லாங்க் இதே மாதிரி லவ் பண்ணுவியா?ன்னு கேட்டதும்  ஹீரோ “ அதை எல்லாம் உறுதியா சொல்ல முடியாது , இப்போதைகு லவ் பண்றேன்னு குண்டைத்தூக்கிப்போடறார் ஹீரோ . ஹீரொயின் செம காண்ட் ஆகி பிரிகிறார்.


ஹீரோ விடலை, பின்னாலயே சுத்தறார். யாரோட காதலும் நிரந்தரமானது இல்லைன்னு வாதாடறார். 12 ரீல் தியேட்டர்ல இருக்கறவங்க எல்லாம் செம காண்ட் ஆன பின் ஹீரோ தன் ஃபிளாஸ்பேக்கை ஓப்பன் பண்றார். ஆல்ரெடி அண்ணன்  ஒரு ஃபிகரை லவ் பண்ணி இருக்காரு. அது சும்மா டார்ச்சர் பண்ணிட்டே இருந்திருக்கு. கழட்டி விடுட்டார். அந்த பாதிப்புல தான் இப்படி எல்லாம் பேக்கு மாதிரி உளறிட்டு இருக்கார்.

 ஹீரோயின் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் கதை .


http://1.bp.blogspot.com/_eewr1b1LpYA/TMzvvIEBdzI/AAAAAAAAKSg/xwjfVubtTOk/s1600/orange_movie_latest_stills_pics_wallpapers_03.jpgஹீரோ ராம் சரண் . நம்ம ஊர் கார்த்திக் மாதிரி . இளமைத்துடிப்பான நடிப்பு . லைட்டான தாடியில் அக்னி நட்சத்திரம் கார்த்திக் கெட்டப்பில் வர்றார். இளமையான ஃபிளாஸ்பேக் கதையில் மீசை எடுத்து நந்தவனத்தேரு கார்த்திக் மாதிரி சகிக்கலை . எப்போ பாரு பொண்ணு  பின்னாலயே சுத்திட்டு இருப்பது செம கடுப்படிக்குது


ஹீரோயின் ஜெனிலியா டிசவ்சா , எனும் ஹரிணி . இவர் உருப்படியா நடிச்ச படங்கள் அல்லது நல்ல கேரக்டர் அமைஞ்ச படங்கள் சந்தோஷ் சுப்ரமணியம் , உருமி . இவர்  கண்ணில் படும் ஆள்களிடம் எல்லாம் வழிவதும்  உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் உலக அழகி ஆனதும் அவங்க செயற்கையா அழுவாங்களே அந்த மாதிரி படு செயற்கையாக அபரிதமான ஆச்சரியத்தை வெளிப்”படுத்துவதும்” சத்தியமா முடியல


ஃபிளாஸ்பேக்ல இன்னொரு பேக்கு வருது . குதிரை முகம் . சுமார் ரகம் , நடிப்பு ஓக்கே(Shahzahn Padamsee)காமெடிக்கு பிரம்மானந்தம்  ஓர:ளவு கை கொடுக்கிறார்http://chakpak.com/sites/default/files/styles/photoessay/public/_DSC1828.jpgஇயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. படத்தில் 7 நிமிடங்கள் மட்டுமே வரும் கெஸ்ட் ரோல் கேரக்டர் பிரகாஷ் ராஜ் ஃபோட்டோவை மெயின் வில்லன் மாதிரி போஸ்டரில் போட்டு  பில்டப் கொடுத்த சாமார்த்தியம்


2. தெலுங்கு பட போஸ்டர்களை லவ் சப்ஜெக்ட் மாதிரி ஆந்திராவில் ஒட்டி , தமிழ்நாட்டில் ஆக்‌ஷன் படம் மாதிரி  போஸ்டர் டிசைன் அமைத்து மார்க்கெட்டிங்க் செய்த  லாவகம்


3. ஒளிப்பதிவு , லொக்கேஷன்கள் , பாடல்கள்  முழுக்க இளமைக்கொண்டாட்டம்


4. ஹீரோ ஹீரோயின் எப்படி லவ் பண்றாங்க என ஒளிஞ்சிருந்து பார்க்கும் பிரம்மானந்தத்தை இருவரும் திடீர் என க்ளோசப்பில் பார்த்து அதிர்ந்து அலறுவது  செம காமெடி


5. ஹீரோயினுக்கு அப்பாவாக டம்மி கேரக்டரில் பிரபுவை நடிக்க ஒத்துக்க வைத்ததுhttp://moviegalleri.net/wp-content/gallery/shraddha-das-in-orange-saree/shraddha_das_hot_orange_saree_stills_photos_gallery_5f94b53.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 1. ஹீரோயின்  ஓப்பனிங்க் சீன்ல  3 பசங்களை செலக்ட் பண்ணி 3 பேர் பேரையும் சீட்ல எழுதி குலுக்கி போட்டு அதுல இருந்து ஒருத்தனை செலக்ட் பண்ணி லவ்வப்போறதா சொல்றார். படு கேவலமா இருக்கு. சும்மா கிளாப்ஸ் வாங்கறதுக்காக கண்ட் படி சீன் வைக்கக்கூடாது2. ஹீரோ முதன் முதலா ஹீரோயினை நடு ரோட்ல பார்க்கறார், அடுத்த ஷாட்லயே ஹீரோயினுக்கு ஃபோன் பண்றார், அவர் செல் நெம்பர் இவருக்கு எப்டி கிடைச்சுது?


3. வில்லனோட அடியாள் ஹீரோ கிட்டே “ நீ யார்? “ அப்டினு கேட்கறார் ஒண்ணா ஹீரோ செல்ஃப் இண்ட்ரோ கொடுக்கனும், இல்லை ஃபைட் போடனும், அதை விட்டுட்டு என்னமோ வரைஞ்சு காட்டி இதுதான் என் பேரு அப்டிங்கறார், இந்த கேனகிறுக்கு வில்லன் கோஷ்டிங்க 10 நிமிஷம் வெயிட் பண்ணீ ஆ-ன்னு அதைப்பார்த்துட்டு நிக்குதுங்க4. ஒரு சிட்டி கேர்ள் ஜூவுல , சர்க்கஸ்ல சிங்கத்தை நேர்ல பார்த்திருக்காதா? ஹீரோயின் சிங்கத்தை தன்னோட 28 வது வயசுல முதன் முதலா நேர்ல பார்த்ததும் ஓவரா எக்ஸ்பிரஷன் காட்டி ஓவர் ஆக்டிங்க் பண்றார். அந்த கண்ராவி கூட தேவலை , சிங்கத்தை காடினதுக்கு நன்றிக்கடனா ஹீரோவை லவ்வறார், முடியலை5. ஃபைட் சீன்ஸ் வைக்க 1008 சிச்சுவேஷன்ஸ் இருக்கும்போது ஆகாயத்தில் பாரசூட்ல பறந்துக்கிட்டே ஃபைட் போடும் காட்சி எதுக்கு? இது என்ன ஜேம்ஸ் பாண்ட் படமா?  சாதா லவ் சப்ஜெக்ட்தானே? மோசமான கிராஃபிக்ஸ் வேறhttp://cdn2.supergoodmovies.com/FilesFive/shazahn-padamsee-hot-stills-2f31eabf.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. லவ்ல பிராப்ளம் வந்தா ஓக்கே, லவ்வே பிராப்ளம்னா?2. அந்தப்பொண்ணு எங்கேன்னு கண்டுபிடிக்கனும் வாங்கடா..


 ஹீரோவுக்கு ஃபிரண்ட்னா இந்த மாமா வேலையை செஞ்சே ஆகனுமா?3. இந்த ஒரு தெருவுல இத்தனை ஃபிகர் இருந்தா இந்த ஏரியாவுல எத்தனை ஃபிகர் இருக்கும் ?


4. உங்களுக்கு எப்படி இவ்ளவ் பெரிசா..... ?

 ஜிம்க்குப்போறேன் மிஸ் , ஹி ஹி

 ஹலோ, நான் கேட்டது உங்க கன்னம் எப்படி இப்படி பெருசா உப்பி இருக்குன்னு..5.  சிங்கம் , எறும்பு ஜோக் சொல்லட்டுமா?

 யா

 சிங்கம் கிட்டே எறும்பு கேட்டுச்சாம் உன் உதட்டை என்னால கடிக்க முடியும், என் உதட்டை உன்னால கடிக்க முடியுமா?
6. பிரச்சனைல இருந்து எப்பவும் விலகியே இருக்கனும்7. நீ ஏன் என் பின்னாலயே சுத்தறே?


 லவ் பண்றேன்8. இந்தியாவுல எதை கிறுக்கினாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க
9. ஒரு பொண்ணு நம்ம கிட்டை நிஜமா என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டா “ ஆமா, ஏழேழு ஜென்மத்துக்கும்”னு அள்ளி விடனும்10. லவ்வ்வுன்னா 4 ஃபோன் கால், 10 எஸ் எம் எஸ் ,  2 மொக்கை ஜோக்குங்க போதும்


 என்னால அப்படி முடியாது , உண்மையை சொல்லித்தான் லவ் பண்ண முடியும்


http://www.chitramala.in/photogallery/d/497974-1/Genelia-HOT-at-CNBC-Awards4.jpg11. அந்தப்பொண்ணை விட்டு ஏன் பிரிஞ்சே?


 ரொம்ப நாள் லவ் பண்ணிட்டேன் இல்லையா? அதான்


12. எங் கிட்டே 9 லவ் ஸ்டோரிஸ் இருக்கு , நாலாங்கிளாஸ் படிக்கும்போதே டீச்சரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்


13. அய்யய்யோ, ராமன் கிடைப்பான்னு பார்த்தா கிருஷ்ணன் கிட்டே மாட்டிக்கிட்டமே?


14.  உன் லவ் ஸ்டோரி 9 இருக்கே, அதுல பெஸ்ட் யாரு?

 நோ டவுட், நான் தான்15.ஆறாவது லவ்வரை நீ ஏன் பிரிஞ்சே?

 நாள் முழுக்க ஐ லவ் யூ சொல்லசொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா , முடியாதுன்னுட்டேன்


16. என் லவ் ஸ்டோரியை எத்தனை டைம் சொன்னாலும் எனக்கு போர் அடிக்காது ம்க்கும் , ஒண்ணை வெச்சுக்கிட்டே இந்த அலப்பரையா?  அவன் கிட்டே 9 லவ் ஸ்டோரி இருக்காம்17. டு டே ஹாலி டே

 அடப்பாவி, லவுக்குக்கூட ஹாலி டேவா?


18. அவன் ஐடியா ஓக்கே , ஆனா அவன் ஐடியாலஜி நாட் ஓக்கே


19.  பொண்ணுங்க எப்பவும் மொக்கையாத்தான் யோசிப்பீங்களா?20. நிஜம் என்பது சிங்கம் மாதிரி , அதை சந்திக்க எல்லாரும் பயப்படுவாங்கhttp://1.bp.blogspot.com/-761wUWRHxhw/T-mPevejMpI/AAAAAAAAHns/V0PzIWWpPos/s1600/genelia-dsouza-images-c1b02.jpg


21. நான் 9 பேரை லவ் பண்ணினாலும் ஒரே டைம்ல 2 பேரை லவ் பண்னலையே? என் காதல் நேர்மையானதுதான்22. உன் செல்லுக்கு எஸ் எம் எஸ் வந்திருக்கு

 என் அக்காவா இருக்கும்

 குடு பார்ப்போம்

 ஏன் , என் மேல நம்பிக்கை இல்லையா?
\

அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?
23. லவ் பண்றதுக்கு ஒரு நேரம் இருக்கும்போது பிரியறதுக்கு ஒரு நேரம் இருக்கும்தானே?24.  என் லவ்வை நம்ப்றது என்பது நாம பயணம் செய்யும் கார் ஹெட் லைட்ஸை நம்பி பயணம் செய்வது மாதிரி , ஃபியூச்சர் லவ் ஸ்டோரியை நம்பறது அதாவது காலா காலத்துக்கும் இவன் நம்மை காப்பாத்துவான் , காதலிப்பான் என நம்பிக்கை வைப்பது  எதிர்ல வர்ற கார்களின் ஹெட் லைட் வெளிச்சத்தை நம்ப்பறது மாதிரி25ஆரமப்த்தௌல தம்பதிகள் சேர்ந்து வாழ காதல் காரனம், அப்புறம் குழந்தைகள் காரணம்


26. லைஃப் லாங்க் லவ்ல எனக்கு நம்பிக்கை இல்லை 27. காதலிக்கும் நாட்கள் அதிகமாக அதிகமாக காதல் குறைஞ்சுக்கிட்டே போகும்28. லவ் இல்லாத 2 பேர் சேர்ந்து வாழ்ந்தா அது நரகம்


29. உண்மையான காதலிலும் பொய் கொஞ்சம் கலக்கும்


30 இன்னைக்கு இருக்கற மாதிரியே என்னைக்கும் உன் மேல லவ் இருக்கும்னு நான் இப்போ உன் கிட்டே சொன்னா அதுதான் நான் சொல்லும் முதல் பொய்http://f1.pepst.com/c/90BD09/445554/ssc3/home/059/sandy.fucker/albums/genelia_hot_skirt.jpg_480_480_0_64000_0_1_0.jpg31. வாழ்க்கைல காரனங்கள் , சால்ஜாப்புகள் ,மட்டுமே மிச்சம் இருக்கக்கூடாது


32. பிரச்சனைக்குத்தீர்வு பிரிந்து செல்வது அல்ல  அன்பு காட்டுவது


33 லவ் பண்றவங்க கிட்டே  லவ் பண்றதா பொய் சொல்றது ரொம்ப தப்பு


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 ( சும்மா ஒரு ஒப்பீடு )

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கேரேட்டிங்க் - 6 / 10


சி.பி கமெண்ட் -
-->தெலுங்குல இது அதிரி புதிரி வெற்றியாம் , முடியல . லவ்வர்ஸ்  மட்டும்தான் படம் பார்க்க முடியும் , நீ எ பொ வ படம் மாதிரி 3 மடங்கு இழுவை   http://www.bollyone.com/wp-content/uploads/2009/08/Genelia-Hot-Actress-8.jpg


Genre: Romance

Type:
Straight


Banner:
Anjana Productions

 
Cast: Ram Charan Tej, Genelia, Shahzahn Padamsee, Brahmanandam, Prabhu, Nagababu, Sanjay Swaroop, Manjula Swaroop, Sanchita Shetty, Madhurima Benarjee, Srinivas Avasarala, Vennela Kishore, Praneeth, Gayatri Rao, Kalpika, Pavitra Lokesh etc

Music: Harris Jayaraj

Cinematography
: Raja Sekhar & Kiran Reddy

Editing: Marthand K Venkatesh

Art: Anand Sai

Dialogues:
Thota Prasad & Surendra Krishna

Story - screenplay - direction
: Bhaskar

Producer: K Nagababu

Release date
: 26 November 2010

Theater watched:erode sangeetha


No.TitleLyricsPerformer(s)
1."O Range"  Benny Dayal
2."Rooba Rooba"  Shail Hada, Chinmayi
3."Nenu Nuvvantu"  Naresh Iyer, Nadeesh
4."Chilipigaa"  Karthik
5."Ola Olalaa Ala"  Surendra KrishnaKarunya, Ranina Reddy
6."Hello Rammante"  Rama Jogayya ShastryVijay Prakash, Devan Ekambaram

Wednesday, December 12, 2012

Mirapakai - சினிமா விமர்சனம்

http://2.bp.blogspot.com/_A3FB1NYQJ9s/TN-JSxAFXHI/AAAAAAAADHE/w-FPICFKzAA/s1600/mirapakai.jpgஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர், சாதா போலீஸ் இல்லை, இண்டெலிஜென்ஸ் செல்லுல ஸ்பெஷல் ஆஃபீசர், அதுவும் டெல்லில..இவருக்கு குடுக்கப்பட பிராஜக்ட் என்னன்னா ஒரு காலேஜ்ல போய் லெக்சரரா சேரனும். ஏன் ? எதுக்குன்னெல்லாம் கேட்கக்கூடாது.புரட்சித்தலைவி ஆட்சி மாதிரி, ஹீரோ ஓ பி எஸ் மாதிரி எந்த கேள்வியும் கேட்காம காலேஜ்ல சேர்றார் .

அங்கே 1789 சக்க ஃபிகர் இருக்கு. ஆனா 60 மார்க் கூட வாங்காத மொக்கை ஃபிகரை காதலிக்கறார். ஏன்னா அவர் தான் ஹீரோயின்.அந்த கேனமும் இவரை லவ்வுது. இந்த லவ் எபிசோடு இடைவேளை வரை ஜாலியா கலாட்டாவா போகுது.


 இடைவேளை எழுத்து போடனுமே? அப்போதான் கதைக்கு வர்றாங்க.. ஃபாரீன்ல ஒரு டான் அதாவது வில்லன் இருக்கான். அவனைப்பிடிப்பது தான் போலீஸோட பிளான். அவனோட பொண்ணு  இந்த காலேஜ்ல படிக்குது .மூக்கைச்சுத்தி காதத்தொடும் கதையா வில்லன் மக்ளை கரெக்ட் பண்ணி வில்லனைப்பிடிக்க கேவலமா மாமா வேலை  பாக்குது போலீஸ் .

 அதாவது ஹீரோ  வில்லனோட பொண்ணை லவ் பண்ற மாதிரி நடிச்சு ( சான்ஸ் கிடைச்சா மேட்டரை முடிச்சுக்கலாம், டிபார்ட்மெண்ட் கண்டுக்காதாம் அடேய் )  வில்லனை அரெஸ்ட் பண்ணனும்.


http://www.ayngaran.com/images/news/1350901551.jpg


இடைவேளை வரை ஹீரோ தனக்காக லவ் பண்றார் ஹீரோயின் நெம்பர் ஒன் கூட, இடைவேளைக்குப்பின் நாட்டுக்காக ( நாசமாப்போச்சு )  நாட்டுக்கட்டை ஒண்ணை அதாவது ஹீரோயின் நெமப்ர் 2 வை லவ் பண்றார். இந்த முக்கேனக்காதல் கதை சாரி முக்கோணக்காதல் கதை  க்ளைமாக்ஸ் வரை போகுது. 


 படம் முடிய 10 நிமிஷம் இருக்கும்போது ஹீரோ வில்லனை சந்திச்சு அரெஸ்ட் பண்ணிடறாரு . ஹய்யோ அய்யோ .. 


ஹீரோ ரவி தேஜா . ஆள் முகம் முத்தலா இருந்தாலும் , ஹேர் ஸ்டைல் கேவலமா இருந்தாலும் , டிரஸ்சிங்க் சென்ஸ் படு கண்றாவியா இருந்தாலும் சுறு சுறுப்பான நடிப்பு , டைமிங்க் பாடி லேங்குவேஜ். ஆனா அவர் முகத்தை அடிக்கடி க்ளோசப்ல காட்டும்போது கலா மாஸ்டரை பார்க்கற மாதிரியே பயமா இருக்கு . 


ஹீரோயின்  ரிச்சா கங்கோபாத்யாய். மயக்கம் என்ன டப்பா பட ஹீரோயின் . தாவணி  , அல்லது சேலை அணிந்து வந்தாலும் ஆல்வேஸ் பாப்பா லோ ஹிப் லோகா தான். சபாஷ் .  2 டூயட்ல  ஃபுல் முதுகையும் காட்டறார். வந்த வேலை முடிஞ்சது 


 அடுத்த ஹீரோயின் தீக்‌ஷா சேத் . ராஜபேட்டைல சீன் காட்டுச்சே , அந்த பாப்பா .நல்லா மொழு மொழுன்னு  பிங்க் கலர் ஐஸ் க்ரீம் மாதிரி முகம். செர்ரிப்பழம் மாதிரி உதடு . ரம்பா மாதிரி தை ( thigh) ஸ்பெஷலிஸ்ட் போல. ஆல்வேஸ் ஷார்ட்ஸ் , டி சர்ட் தான் . செம கிளு கிளுப்பு . பிரகாஷ் ராஜ் , கோட்டா சீனிவாசராவ் வில்லன்கள் , டோட்டல் டைம் இவங்களுக்கு 15 நிமிஷம் தான். 


http://bollygally.files.wordpress.com/2011/08/mirapakai_heroine_richa_gangopadhyay_hot-other1.jpg இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 1. படத்துல  60 மார்க் ஃபிகரா ரிச்சா கங்கோபாத்யாய். , 70 மார்க் ஃப்ஃபிகரா தீக்‌ஷா சேத் 2 பேரை ஒப்பந்தம் பண்ணி முடிஞ்ச வரை அவங்களை திறமையை காட்டு காட்டுன்னு காட்ட வெச்சாலும்  ஒரு 80 மார்க் ஃபிகரான சுப்ரமணிய புரம்  ஸ்ருதியை புக் பண்ணினது. சும்மா கெஸ்ட் ரோல் தான் அப்டினு அவங்க கிட்டே பொய் சொல்லி ஹோம்லி கேர்ளான அந்த பாப்பாவை  லோ கட் டி சர்ட் கொடுத்து ஸ்லோ மோஷன்ல ரயிலைப்பிடிக்க ஓடி வர்ற மாதிரி ஒரு சீன் வெச்சு கேமரா மேன் கூட இயக்குநர் டாப் ஆங்கிள்ல போய் உக்காந்துக்கிட்டு சீன் பார்த்து அதை நமக்கும் காட்டியது .. ஆஹா! 


2. thujee theekkaaththooyee jaanaa sanam ( துஜே தேக்காத்தோயே ஜானா சனம்) சூப்பர் ஹிட் ஹிந்திப்பாட்டை பேக் கிரவுண்ட்ல போட்டு விட்டு ஸ்ருதி ஸ்லோ மோஷன்ல 4 நிமிஷம் ஓடி வர்றார்.  அடடே.. 


3 கதையைப்பத்தி  கவலையே படமா 14 ரீல் படத்துல 12 ரீல் ஹீரோ அந்த 2 ஹீரோயின் பின்னாலயே நாய் மாதிரி அலைய வெச்சு ஜாலியா திரைக்கதை அமைச்சது . ஃப்ரேம் பை ஃப்ரேம் படம் இளமை , ஜாலி , கொண்டாடம் 4. பிரகாஷ் ராஜ் , கோட்டா சீனிவாசராவ் 2 பேர் கிட்டேயும்  கெஸ்ட் ரோல் , 15 நிமிஷம் தான் என்ற உண்மை எல்லாம் சொல்லாம நீங்க தான் அண்ணே மெயின் வில்லன் என கப்சா விட்டு சீட் பண்ணி புக் பண்ணினது 5. காமெடியனை ஹீரோ இன்னொருவரிடம் இவர் ஒரு ஹோமோ என அறிமுகம் செய்ய அது தெரியாமல் காமெடியன் செய்யும் ஒவ்வொரு சேஷ்டைகளும் அதே போல் தற்செயலாக அமைய  கண்ணியமான கலக்கல் காமெடி சீக்வன்ஸ் 


6. காமெடியனை  துரோகம் செய்வது போல் காட்டி பின் எல்லாம் டிராமா என  கொடுக்கும் ட்விஸ்ட் 


http://kasepu.com/wp-content/uploads/2011/01/Richa-Gangopadhyay-Hot-Photos.jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்1. ஊருக்கே ராஜான்னாலும்  வீட்டுக்கு அவன் பிள்ளை தான்.உலகத்துக்கே நான் ராஜா ஆகிட்டேன், ஆனா வீட்டை கவனிக்க முடியல, ஐ மீன் மும்பையை கவனிக்கனும்.


2.  சீனியர் யாரு? நான் தானே? என்னை விட்டுட்டு ஏன் எல்லாரும் அவனையே புகழ்றீங்க? 


 சீனியாரிட்டி வேற , சின்சியாரிட்டி வேற 3. டேய், செக்கிங்க் தானே உன் வேலை? எதுக்கு மசாஜ் பண்ணி விடறே? 4. போயம்ஸ், போயட்ட்ரி 2 ல எது நடத்தட்டும்? 


 2ம் 1 தான் , சுத்தம் 5. கலர் ஃபுல் டெம்பிள்னா என்ன? இது தெரியாதா? கலர்ங்க எல்லாம் சாமி கும்பிட கோயிலுக்கு வந்தா அந்த கோயில் தான் கலர் ஃபுல் டெம்ப்பிள் 6. பொண்ணுங்க நம்ம கிட்டே விழுந்தா வெட்டியா இருக்கும் நம்ம லைஃப் ஸ்வீட்டா மாறிடும் 7. புதுசுன்னா ஃபிரஸ் பீசா? 

 யா யா ரிப்பன் கூட இன்னும் கட் பண்ணலை  


8. இவ்ளவ் பிரமாதமா இங்க்லீஷ் பேசறீங்க , ஆனா ஏன் பியூனாவே இருக்கீங்க? 

 இங்க்லீஷ்ல மடும் தான் நான் ஃபர்ஸ்ட் , மத்த சப்க்ஜெக்ட்ல ஃபெயில்  ஹி ஹி 
9. வில்லன் ஆள் எப்படின்னா மெடிட்டேஷன் பண்ண்றவங்களைக்கூட இரிட்டேஷன் பண்ண வெச்சுடுவார். 10.  ஹிந்தி ஹமாரா ராஷ்ட்ர பாஷா 


 யூ மீன் பாட்சா? 


 யோவ், அது ரஜினி படம் , நான் சொல்றது தேசிய மொழி 


http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/deeksha40/deeksha-seth-hot-pics-at-ukup-success-meet-41-9.jpg11.  புருஷன் செத்துட்டானேன்னு பொண்டாட்டி கண்ணீர் விட்டுட்டு இருந்தாளாம், கடலூர் போலாமா?ன்னு கள்ளக்காதலன் கேட்டானாம் 
12. ஹீரோயின் செல் ஃபோனை  ஜாக்கேட்டுக்குள் ஒளிச்சு வைப்பதை பார்த்த காமெடியன்  அவளையே பார்க்க அவங்கப்பா 

 என்னடா லுக்கு? 

 அவ ஜாக்க்கெட்க்குள்ளே பெருசா என்னமோ இருக்கு, பார்க்கனும்னு ட்ரை பண்றேன், முடியல 

 பளார் 13. டீச்சர் - ஸ்டூடண்ட்னா ஃபிஷ் & வாட்டர் மாதிரி இணைஞ்சு இருக்கனும், ஃபிஷர் மேன்  & ஃபிஷ் மாதிரி இருக்கக்கூடாது 


14.  மரியாதையா சொல்றேன், நல்லா கேட்டுக்கோ... தயவு செஞ்சு என்னை லவ் பண்ணிடு , உன் கால்ல விழுந்து கேட்டுக்கறேன் 


15.  ஏய், என்ன இருந்தாலும் நீ கொஞ்சம் குறைச்சுக்கனும்


 எதை? 


 ம், உன் அழகை ( நல்ல வேளை ) . இவ்ளவ் அழகா இருந்தா பசங்க எல்லாம் என்ன தான் பண்ணுவாங்க ?16. என்னடா ஆச்சு உனக்கு, மறுபடியும் அவளையே வெறிச்சுப்பார்க்கறே? 


 அவ ஜாக்கேட்ல சாலிட்டா என்னமோ இருக்கு 

 மறுபடியும் பளார் 17.  இந்த அரசியல்வாதிங்க எல்லாம் எப்படித்தான் 2 வெச்சு மெயிண்டெயின் பண்றாங்களோ? 


18.  க்ளாஸ் ரூம்ல செல் ஃபோனை சைலண்ட் மோடுல வைக்கனும்னு எத்தனை டைம் சொல்றது? 


 சார், அடிப்பது உங்க ஃபோன்  கி கி 


http://gallery.southdreamz.com/cache/actress/deeksha-seth/masala-portfolio/telugu-actress-deeksha-seth-hot-photos-46_720_southdreamz.jpgஇயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோயின்  2 வருஷமா லவ் பண்றா, அப்போ எல்லாம் பெற்றோர் கிட்டே சொல்லலை, அவங்களுக்கும் தெரியலை. ஒரு கட்டத்துல மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஒரு நாள் நைட் 8 மணிக்கு ஹீரோயின் சொல்றா,  9 மணிக்கு ஹீரோவைப்பார்த்து பேசறாங்க,அடுத்த நாள் காலைல 7 மணிக்கு மேரேஜ். என்ன கொடுமை சார் இது? 2.  மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி 10 மணி நேரத்துல பத்திரிக்கை எல்லாம் அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுத்துட்டாங்களா? மண்டபத்துல அத்தனை பேர் வந்திருக்காங்க? 


3.  வில்லனுக்கு தன்  மகளோட லவ்வர் போலீஸ் ஆஃபீசர்னு தெரிஞ்சுடுது. அப்பவே அவரைப்போட்டுத்தள்ளினா மேட்டர் ஓவர். அதை விட்டுட்டு உன்னை நேர்ல பார்க்கனும்னு தான் வர வைச்சேன் அப்டினு லூஸ் மாதிரி ஒரு டயலாக் . மும்பை டூ பாங்காங்க் ஹெலிகாப்டர் செலவு தண்டம் தானே?4. வில்லன் தன் மகளிடம் ஓப்பனிங்க்லயே “ ஏம்மா அந்த தெள்ளவேரி  டிராமா போடறான், நோ லவ், அவன் ஒரு போலீஸ் ஆஃபீசர்னு சொன்னா மேட்டர் ஓவர் . அதை விட்டுட்டு  லவ் பண்றதை எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்களா? 


5. வில்லன் க்ளைமாக்ஸ்ல ஹீரோவை நேர்ல சந்திச்சதும் ஷூட் பண்ணா மேட்டர் ஓவர், அதை விட்டுட்டு  ஹீரோ கிட்டே ராமாயணம்  பேசிட்டு இருக்காரு 10 நிமிஷம் , யார் உள்ளாள் வேலை பார்த்தாங்க, போலீஸ்ல யார் இன்ஃபார்ம் குடுத்தாங்க.. இதை எல்லாம் ஒப்பிச்சுட்டு இருக்காரு உங்களைக்கேட்டாங்களா முருகேஷா? 


6, வில்லனோட பையன் அதாவது ஹீரோயினோட அண்ணன் ஹீரோவைப்பார்த்து   கதை பேசிட்டு இருக்காரு. பாங்காங்க் ல இருந்து வந்தவர்  அப்பவே போட்டுத்தள்ளி இருந்தா மேட்டர் ஓவர்7. ஹீரோயின் நெம்பர் 1 முன்னால , கண் முன்னால ஹீரோ ஹீரோயின் நெம்பர் 2 வை கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கறார். அநதக்கேனம்  “ போய்யா நீயும் ஆச்சு , உன் லவும் ஆச்சுன்னு கிளம்பாம “ என்னங்க , இங்கே என்ன நடக்குது ?” அப்டினு டவுட் கேட்கறா. ஹீரோவும் “ நான் யோக்கியன் தான், அவ தான் என்னை கட்டிப்பிடிச்சா, கிஸ் அடிச்சா “ அப்டினு பிளேட்டை திருப்பிப்போடறார். இந்த பாப்பாவும் கெக்கே  பிக்கேன்னு சிரிக்குது. அய்யொ  ராமா , என்னை ஏன் இந்த கழிசடைப்படத்தை எல்லாம் பார்க்க வைக்கறே?  ( கவுண்டமணி வாய்சில் படிக்க )

http://3.bp.blogspot.com/_YJ88JZw5GMA/TQJ_X_4buLI/AAAAAAAACaI/oLEeNAetixk/s1600/mirapa_2.jpg8.   ஓப்பனிங்க் ஷாட்ல இண்ட்டலிஜென்ஸ் ஆஃபீஸ் ல மீட்டிங்க். எல்லா போலீஸ் ஆஃபீசர்சும் யூனிஃபார்ம்ல பக்காவா ஆஜர். ஆனா எல்லாத்துக்கும் ஹெட் ஆஃப் த டிப்பார்ட்மெண்ட் மடும் சிவில் டிரஸ்ல . அதைக்கூட சகிச்சுக்கலாம், ரன்னிங்க் ஷூ போட்டிருக்காரு. தலைவன் ஒழுங்கா இருந்தாத்தானே தொண்டன் ஒழுங்கா இருப்பான்? ஹையர் ஆஃபீசர் கண்ணியமா யூனிஃபார்ம்ல வர வேணாமா? ( ஒரு வேளை அவர் படத்தோட புரொடியூசரோ? )9. வில்லன் பாங்காங்க்ல இருக்கார், தன் மகள் அவர் கூடவே இருந்தா பாதுகாப்பு இல்லைங்கறார் அது ஓக்கே , கொஞ்சம் தள்ளி சிங்கப்பூர்ல  குடி வெச்சிருக்கலாம், ஏன் பேக்கு மாதிரி  இந்தியாவுல மும்பைல  குடி வைக்கனும்?


10. ஒரு போலீஸ் ஆஃபீசரா இருந்தும் ஹீரோ ஏன் டி ஆர் மாதிரி , பரட்டைத்தலையோட அலையறாரு? போலீஸ் கட்டிங்க் பண்ண முடியலைன்னா அட்லீஸ்ட் ஒழுக்கமா தலை கூட சீவ மாட்டாரா?


11. டி வி , நியூஸ் பேப்பர்ல எல்லாம் ஹீரோ ஃபோட்டோ வந்திருக்கு, ஆனா ஹீரோ கன்னத்துல ஒரு மரு கூட வைக்காம காலேஜ் லெக்சரரா மாறு வேஷத்துல ( !!!!) போறார். ஹிந்தி மாஸ்டராம் ஹய்யோ அய்யோ , எந்த காலேஜ்ல ஹிந்தி பிராத்மிக் எல்லாம் சொல்லித்தர்றாங்க? ஸ்கூல்ல தான் அந்த சிலபஸ் வரும்12. ஒரு சீன்ல ஹீரோயின்  சுடிதார் டிரஸ்  எடுக்கறார். விடிஞ்சா மேரேஜ். அதுக்குள்ளே எப்படி தைக்க? அப்டிங்கறார். சுடிதார் ரெடிமேடு . துப்ப்பட்டாவை ஓரம் அடிக்கறது  ஒரு மேட்டரா?13. ஒரு சீன்ல ஹீரோவை போலீஸ் கல்கத்தா வரச்சொல்லுது. ஹீரோ மும்பைல இருந்து ஃப்ளைட் பிடிச்சு அங்கே போறார். அவர் கிட்டே ஹிரோயின் 2  ஃபோட்டோவை குடுத்து இந்தப்பொண்ணைத்தான் நீ லவ் பண்ணனும்கறார். உடனே ஓக்கே சொல்லி ஹீரோ கிள்ம்பறார். ஏய்யா  இதை ஜஸ்ட் மெயில்லயே முடிச்சிருக்கலாமே? எதுக்கு டிராவலிங்க்?14. ஸாரி ஐ ஆம் ஸாரின்னு செம டப்பாங்குத்து பாட்டு அது  வாடி வாடி க்யூட் பொண்டாட்டி பாட்டோட அப்பட்டமான தழுவல்15. ஹீரோ ஒரு சீன்ல ஹெல்மேட் போட்டு வில்லன் அடியாளுங்களை உதைக்கறார். அப்புறம் அதை கழட்டி முகத்தை காட்டறார், இந்த ஈர வெங்காயத்தை முதல்லயே பண்ணி இருக்கலாமே? டூப் முகம் தெரியக்கூடாதுன்னா?

http://appmaza.com/Assets/Images/Kollywood/Kollywood-CelebPics/Deeksha-Seth-Mirapakaya-Stills-Mirapakaya-Deeksha-Seth-Photos.jpg


சி.பி கமெண்ட் - படம் செம ஜாலியா டைம் பாசிங்கா போகுது. லாஜிக் பார்க்காம பார்த்தா ஓக்கே. கிளாமருக்கு கிளாமர். டைம் பாஸ்க்கு டைம் பாஸ். ஈரோடு  அன்னபூரணியில் படம் பார்த்தேன்விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43 ( விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கேhttp://movie-stills.in/wp-content/uploads/2012/08/Deeksha-Seth-Hot-Stills-In-Nippu-Telugu-Movie-Stills-No-watermark-8.jpg


Thursday, December 06, 2012

Krishnam Vande Jagadgurum - சினிமா விமர்சனம்

http://www.businessoftollywood.com/wp-content/uploads/2012/10/Krishnam-Vande-Jagadgurum-1.jpgநயன் தாரா தெலுங்குப்படத்துல  நடிச்சிருக்கார், சரி ஸ்ரீ ராம ராஜ்யத்துல காட்ட முடியாத பல திறமைகளை இதுலயாவது காட்டுவார்னு நினைச்சுப்போனா இனிமே தெலுங்கு குப்பை மசாலாப்படத்துக்கு வருவியா? வருவியா? என பிரம்பால் அடித்து துரத்துகிறார் , படு குப்பையான , அரதப்பழசான பாடாவதிக்கதை .

ஹீரோவோட தாத்தா எம் ஆர் ராதா, சோ  மாதிரி ஒரு நாடகக்கலைஞர்  .தன் பேரனை நடிக்க வெச்சு ஒரு நாடகம் போடுவதுதான் அவரோட கடைசி ஆசை.. ஆனா பாருங்க ஹீரோவுக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை.நாடகத்துல எல்லாம் நடிச்சுட்டு இருந்தா சோத்துக்கு சிங்கி அடிக்கனும்கறார். சோகத்துல  தாத்தா அவுட். அவரோட கடைசி ஆசை அவரோட அஸ்தியை  துங்கபத்ரா நதிலதான் கரைக்கனுமாம். 


 ஹீரோ டூ இன் ஒன் வேலையா அஸ்தியையும் அங்கே கரைச்சு அந்த நாடகத்தையும் அரங்கேற்றம் பண்ணனும்னு முடிவு பண்றார்.அங்கே 2 கேனத்தனமான வில்லன்கள் . 1008 விஜய் , விஷால் படங்கள்ல பார்த்து சலித்த மோதல்கள் . ஹீரோவுக்கும் , வில்லனுக்கும் ஆல்ரெடி குடும்பப்பகைன்னு காட்டிக்க ஒரு கேவலமான ஃபிளாஸ்பேக்.சொல்ல மறந்துட்டனே , ஹீரோயின் மீடியாவுல கேமராவுமன் கம் ரிப்போர்ட்டர். ஆம்பளைங்களையே பார்க்காத ஆள் மாதிரி ஹீரோவைப்பார்த்ததும் பல் இளிக்குது.


ஹீரோ எப்படி அந்த கிறுக்கு ஹீரோயினை க்ரெக்ட் பண்றார்? மூளையே இல்லாத 2 வில்லன்களையும் எப்படி அதகளம் பண்றார் என்பதை படு கேவலமான திரைக்கதை மூலம் சொல்லி பாடாப்படுத்தி இருக்கார் இயக்குநர் . 


ஹீரோ ராணா. ஆள் அர்னால்டு மாதிரி ஜிம் பாடியாத்தான் இருக்கார். ஆனா அவர் முகம் பாறாங்கல்லு மாதிரி இருக்கு. ஒரு உணர்ச்சியும் வர மாட்டேங்குது. வில்லன்களைப்பார்த்து பஞ்ச் டயலாக் பேசும்போதும் , ஹீரோயினைப்பார்த்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கும்போதும் ஒரே மாதிரி முக பாவம் . சத்தியமா இங்கே தேற முடியாது,. ஆனா ஆந்திராவில் வருங்காலத்துல சூப்பர் ஸ்டார் ஆகிடலாம். ஹீரோயின் நயன் தாரா .ஐயா படத்துல கும்முன்னு கேரளா கொழாப்புட்டு மாதிரி இருந்தவர் இதுல 10 நாளா பட்டினி இருந்த பெருந்துறை ஈமுக்கோழி மாதிரி படு கேவலமா ஒல்லியா காய்ச்சல் வந்த  காயலான் கடை தட்டு முட்டுச்சாமான் மாதிரி இருக்கார். ( இந்த லட்சணத்துல ஒரு கோடி சம்பளமாம். பேராசை , ஆனா அதைக்கொடுக்கவும் ஆளுங்க இருக்காங்களே? ) 


 காமெடிக்கு பிரம்மானந்தம். ஆனா ஒரு சீன்ல கூட சிரிப்பு வர்லை. எரிச்சல் தான் வருது. அட்லீஸ்ட் காமெடி டிராக் எழுதக்கூடவா ஆள் இல்லை? வெரி பேடு .

 இசை மணிசர்மா . பின்னணி இசையில் பாஸ் மார்க். பாடல்களில் சிங்கிள் டிஜிட் மார்க் .


http://www.cafeandhra.com/webpreviews/iX96tDo21z.jpg இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. போஸ்டர் டிசைன் சூப்பர் . மழையில் நனைந்து ஹீரோயின் சிரிப்பது போல் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பது பார்ப்பவர்க்கு அது ஏதோ காதல் சப்ஜெக்ட் படம் என்றோ , கில்மாப்படம் என்றோ நினைக்க வைக்கும். தியேட்டரில் ஓப்பனிங்க் கிடைக்க நல்ல யுக்தி 2. ஸ்டார் வேல்யூவுக்காக வெங்கடேஷை ஒரு குத்தாட்டத்தில் நடிக்க சாரி நடனமாட வைத்தது . இதுல என்ன காமெடின்னா  மகனை  விட அப்பா இளமையாத்தெரியறார். 3. கிளாம்ருக்கு நயன் தாரா , காமெடிக்கு பிரம்மானந்தா என புக் பண்ணியது http://www.andhrareporter.com/images/gallery/Krishnam-Vande-Jagadgurum/Krishnam-Vande-Jagadgurum-12.jpgஇயக்குநரிடம் சில கேள்விகள்1. நயன் தாரா ஒரு வீடியோ கேமரா எடுத்துக்கிட்டு வில்லன் பிளேஸ்ல என்னமோ டூர் ஸ்பாட் வந்த மாதிரி அசால்ட்டா வீடியோ எடுத்துட்டு இருக்கார். அந்த தடியன்க எல்லாம் தேமேன்னு வேலை செஞ்சுட்டு இருக்காங்க. ஏன் ? 


2. காதல் வர்ற மாதிரி காட்டனும்னா ஹீரோயின் ஹீரோ கண்ணை அல்லது முகத்தைப்பார்க்கனும். ஹீரோயின் ஏன் ஹீரோ ஜிம் பாடியை ஆசையாப்பார்க்கறார்? மலையாள கொரில்லாப்படத்துல பிரமீளா ஹீரோவை ஏக்கமாப்பார்க்கற மாதிரி? அவர் ( கதைல ) முன்னே பின்னே ஆம்பளைங்களையே பார்க்காதவரா? 


3. நாடக்க்காட்சி ஒண்ணு கூட உருப்படியா வர்லை.. அண்ணனுக்குத்தான் நடிப்பு வர்லைங்கறது நல்லா தெரியுதுல்ல? அதுக்கு தக்க படி திரைக்கதையையோ, ஹீரோவோட கேரக்டரையோ மாற்றி இருக்கலாமே? 


4. படத்தோட பின் பாதி அதாவது இடைவேளைக்குப்பிறகு தட்டுத்தடுமாறுது. எப்படி கதையை கொண்டு போறதுன்னு தெரியாம தள்ளாடுது திரைக்கதை 5. பாடல் காட்சிகள் சம்பந்தமில்லாத பிட்டு  அதாவது சீன் இல்லாத பிட்டா வருது . முடியல 6. இந்த பாடி கெமிஸ்ட்ரி பாடி கெமிஸ்ட்ரின்னு சொல்வாங்களே அது மருந்துக்குக்கூட இல்லை 


7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ வில்லனை கொல்ல வர்றார்னு தெரிஞ்சும் வில்லன் ஏன் தேமேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்? ஓட வேண்டியதுதானே? http://www.breezemasti.com/gallery/data/media/51/nayanthara-hot-pics-in-krishnam-vande-jagadgurum-movie-1.jpg

மேக்கப் போட்ட ஈமு இதுதான் மாமு


 மனம் கவர்ந்த வசனங்கள்  ( மோசமானவங்கள்ல நாங்க முக்கியமானவங்க)


1. ஹீரோ - இன்னைக்கு நைட் நீ ஃபிரீயா? 


 ஹீரோயின் - இடியட்


 வாட்? ஃபிரீயா இருந்தா வெளில போலாம்னு கேட்டேன் 

 ( இந்த கேவலமான மொக்கைக்கு ஹீரோயின் கெக்கேபிக்கேன்னு 3 நிமிஷம் இளிக்குது )2.  மீடியான்னா சர்க்கஸ்னும், ரிப்போர்ட்டர்னா கோமாளின்னும் நினைச்சுட்டியா?  சி.பி கமெண்ட் -  எனக்கு என்ன காமெடின்னா இவ்வளவு கேவலமான குப்பையை ஆங்கில வலைத்தளங்கள் 13 , ஆங்கில இதழ்கள் 3 , தெலுங்குப்பத்திரிக்கைகள்  6 எல்லாம் மனசாட்சியே இல்லாம ஆஹா , ஓஹோ , செம படம்  அப்டினு பாராட்டி இருக்கறதுதான் . கவர் கை மாறுச்சா? அல்லது அவங்க டேஸ்ட்டே அவ்ளவ் தானா? அப்டினு தெரியல. இந்தபப்ட்த்தை போன வாரம் வெள்ளிக்கிழமை  ரிலீஸ் அன்னைக்கு  நைட்  ஈரோடு அண்ணா வில் பார்த்தேன் , சனிக்கிழமை காலைல எடுத்துட்டாங்க. வெற்றிகரமா 4 காட்சிகள் ஓடி இருக்கு.. கி கி கி ;-))


டைட்டிலுக்கான விளக்கம் - ரொம்ப முக்கியம் , ஹீரோ நடிக்கும் படு கன்றாவியான அந்த நாடகத்தின் டைட்டில் தான் படம் டைட்டில் http://1.bp.blogspot.com/-Hd6vdM5NWAw/TjqAOUHqGRI/AAAAAAAABYA/jYLO42s66og/s1600/Hot-Actress-Nayanthara03.jpg
ஐயா  ஸ்டில் - எப்படி இருந்த நான் ....

Friday, November 09, 2012

Cameraman Gangatho Rambabu - சினிமா விமர்சனம்

http://2.bp.blogspot.com/-yobBmy9h_L4/UGGHwE_oiXI/AAAAAAAAPQ4/_Co-T7jnySI/s1600/Cameraman-Gangatho-Rambabu-New-Posters-1048.jpgஹீரோ ஒரு மெக்கானிக், ஆனா ஒரு சீன்ல கூட அவர் அந்த வேலையை செய்யவே இல்லை. அநியாயம் எங்கே அஜித்தினாலும் ( நடந்தாலும்) அதை தட்டி கேட்பார்.யாருக்காகவும், எதுக்காகவும் அஞ்சாதவர். ஹீரோயின் டி வி மீடியாவில் கேமராவிமன். ஹீரோவை பார்த்து அவரையும் மீடியாவுல சேர்த்து விட்டுடறார். 


 இப்போ ஹீரோ சேனல் ரிப்போர்ட்டர்.வில்லன் கலைஞர் மாதிரி கெட்டப்ல எதிர்க்கட்சித்தலைவர். அவருக்கு அழகிரி மாதிரி ஒரு பையன் . நல்ல வேளை ஸ்டாலின் மாதிரி இன்னொரு பையனை காட்டலை. இவங்க 2 பேர் பண்ற அநியாயங்களை ஹீரோ சேனல் மூலம் வெட்ட வெளிச்சம் ஆக்கறார். ஒரு நாளுக்கு 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தும் இப்படி நம்ம ஊழலை எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்கறானேன்னு வில்லன் க்ரூப்புக்கு கோபம். இரு தரப்புக்கும் ஏற்படும் மோதலை கிட்டத்தட்ட ஷங்கரின் முதல்வன் போல் பரபரப்பா கொண்டு போக முயற்சி ( அண்டர் லைன் முயற்சி மட்டும் )  பண்ணி இருக்காங்க,.. 


 பவன் கல்யாண்க்கு என்ன நினைப்புன்னா எப்படியாவது அரசியல்ல புகுந்துடனும் , பெரிய ஆள் ஆகிடனும்னு.. அதுக்கு தக்க படி கதை.. இந்த மாதிரி கதை எல்லாம் ரஜினி மாதிரி பவர் ஃபுல் ஹீரோ அல்லது 100 படங்கள் ஹீரோவா நடிச்ச அனுபவம் மிக்க ஆட்கள் பண்ண வேண்டிய கதை.. ஆனாலும் சமாளிக்கறார்.. ஆந்திரா கேப்டனா மாறி ஏ 4 ஷீட்ல பக்கம் பக்கமா வசனம் பேசறார். 2 ஜோடி கூட டூயட், குத்தாட்டம் எல்லாம் போடறார். நம்ம ஊர் அஜித், விஜய் மாதிரி ஃபைட் , டான்ஸ் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தறார். 


 ஹீரோயின் லெமனா அவதாரம் எடுத்திருக்கும் தமனா.எலுமிச்சை கலர் தேகம். ஆனா வாய் தான் என்னமோ மாதிரி இருக்கும், தொட்டு விடத்தூண்டும் இடை அழகி. கேமராமேனுக்கு என்ன கோபமோ இவரை மிக மோசமா காட்டி இருக்காரு. ஹேர் ஸ்டைல் மகா மட்டம். அடிக்கடி க்ளோசப் ல உதட்டை சுளிச்சு வசனம் பேசும்பேது ஓங்கி நாலு அப்பு அப்பலாம் போல உள்ளது . டூயட் காட்சி 2 தவிர வேறு ஒரு சீனில் கூட இவரை பார்த்தால் கிக் வரவில்லை. 

http://1.bp.blogspot.com/-lvh_6ghdp_Q/UDUI0kdyflI/AAAAAAAAAEc/YqlhdoStiV4/s1600/gabriela-bertante-hot-stills-7.jpg
 2 வது ஹீரோயின் Gabriela Bertante. நாசூக்கா இருப்பது எப்படின்னு 365 நாள் டியூசன் வெச்சு சொல்லிக்குடுத்தாலும் கத்துக்க முடியாத விளைஞ்ச கட்டை.. பார்வையே சரி இல்லை.. டைரக்டர் உக்காருன்னா பாப்பா படுத்துக்கும் போல.. ஆண்டவா.. என்னை ஏன் இந்த மாதிரி பொண்ணுங்களை எல்லாம் பார்க்க வைக்கறே?அய்யோ ராமா!!  இவர் போட்டு வரும் லோ லோ லோ வெரி லோ கட் ஜாக்கெட்கள்  பிரம்மாச்சாரிகளை வெறி ஏற்றும்.செம டப்பாங்குத்து பாட்டு இருக்கு இவருக்கு 


வில்லன்  கோட்டா சீனிவாச ராவ். இயக்குநருக்கு செம நக்கல், அச்சு அசல் கலைஞர் மாதிரியே மேக்கப், கெடப், கண்னாடி, ஹேர்ஸ்டைல் எல்லாம். அவர் நீலிக்கண்ணீர் வடிக்கும்போது தமிழ் இனத்தலைவரையே நேரில் பார்த்தது போல் இருக்கு. 


 அவர் பையனாக வரும் பிரகாஷ் ராஜ்க்கு அப்படியே அழகிரி பாத்திரம். பட்டாசு. அவர் நடிப்பு பிரமாதம் என்றாலும் நமக்கு வெரைட்டி இல்லாததால் சலிக்கிறது. ஒரே மாதிரி நடிப்பை பல படங்கள்ல காட்டிட்டாரு..


காமெடிக்கு பிரம்மானந்தம். இன்னும் நல்லா வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அதிக காட்சிகள் இல்லை.. வந்த வரை ஓக்கே. 

 நாசர் அமைதியா வந்து போறார். சொல்லிக்கொள்ளும்படி பெரிசா இல்லை..


http://www.tupaki.com//twdata/2012/0912/news/Cameraman-Gangatho-Rambabu-New-Photos-14.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. கரண்ட் பாலிடிக்ஸ் ,மேட்டரை சாமார்த்தியமாக திரைக்கதையில் நுழைத்தது. கலைஞர் , அழகிரி, தெலுங்கானா, மீடியாக்கள் டி ஆர் பி ரேட்டிங்க் ஏற்றிக்கொள்ள செய்யும்  தகிடு தித்தங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்குவது 


2. நடைப்பயணம் செல்லும் பிரகாஷ் ராஜை ஹீரோ மடக்கி கேள்வி கேட்டு தரமசங்கடப்படுத்துவது  ( வை கோ வை தாக்கல்? ) 


3. அபாரமான வசனங்கள்,  அற்புதமான எடிட்டிங், க்ளைமாக்ஸ் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஒர்க்


4.  கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம 2 ஹீரோயினையும் காட்டு காட்டுன்னு காட்ட வெச்சது


5. பிளாக் டிக்கெட் விற் பவர்கள் ஆன் லைன் புக்கிங்க்க்கால் எப்படி பாதிக்கப்படறாங்க? என பிரமானந்தம் விளக்கும் காமெடி காட்சி


http://powerofandhra.com/wp-content/gallery/pawan-kalyan-movie-cameraman-ganga-tho-rambabu-latest-stills/pawan-kalyan-movie-cameraman-ganga-tho-rambabu-latest-stills-2.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. மீடியாவில் ஒர்க் பண்ணும் ஹீரோவுக்கு சி எம்  லேண்ட் லைன்ல ஃபோன் பண்றார். ஏன்? அவர் செல்லுக்கே கூப்பிடலாமே? அட்லீஸ்ட் இண்டர் காம் மூலம் கனெக்‌ஷன் குடுத்திருக்கலாம். என்னமோ கதை 1980ல நடப்பது போல் ஃபோன் வந்திருக்கு என்றதும் ஹீரோ தன் கேபினில் இருந்து 1 பர்லாங் தூரம் ந்டந்து எடிட்டர் ரூம்க்குப்போய் ஃபோன் அட்டெண்ட் பண்றார்


2. ஹீரோ வேல்யூ காட்ட பிரகாஷ் ராஜை தர தர என நடு ரோட்டில் இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் மாதிரி இழுத்துட்டு வர்ற சீன் எல்லாம் ஓவரோ ஓவர், இவர் என்ன போலீஸா? பிரகாஷ் ராஜ் கேரக்டர் ஏன் ஒரு கேல்வி கூட கேட்கலை? தம்பி நீ யாரு?  என்னை இழுக்க? என கேட்டிருக்கனும். அட்லீஸ்ட் பிரகாஷ் ராஜ் டைரக்டர் கிட்டயாவது இது பற்றி ஆட்சேபம் தெரிவிச்சிருக்கனும் 


3. மாசம் 35,000 சம்பளம் வாங்கும் மீடியாவிமன் தமனா அடிக்கடி அழும்போது சகிக்கலை,. அட்லீஸ்ட் அஞ்சு ரூபாய்க்கு கர்ச்சீஃப் கூட வெச்சிருக்க மாட்டாரா? கஷ்டகாலம்டா சாமி 


4. பரத நாட்டிய உடைக்கு மரியாதை செய்யாட்டி பரவாயில்லை. அதை இப்படி கேவலப்படுத்தி இருக்க வேணாம்.  பரத நாட்டிய உடை அணிந்து ஹீரோயின் அண்ட் 17 பேர் குரூப் டேன்சர்ஸ் குத்தாட்டம் ஆடுவது அன்சகிக்கபிள் அட்டகாசம்


5,.ஹீரோ அடிக்கடி மீடியாவில் தன்னை விட ஹையர் ஆஃபீசரை பளார் பளார் என அறைவது ஏன்?காமெடியா? முடியல


6. தன்னை ஊரே வேடிக்கை பார்க்க அடிச்சு இழுத்து வந்த ஹீரோவை பழி வாங்க வில்லன் பிரகாஷ் ராஜ் அடியாளுங்க 65 பேரை அடிக்க விட்டு  16 பேரை வீடியோ ஷூட் எடுக்க வைக்கும் காட்சி செம காமெடி. அது என்ன ப்ளூ ஃபிலிமா? பல கோணங்கள்ல படம் எடுத்து வெட்டி ஒட்ட? 3 பேர் வீட்யோ ஷூட் பண்ணா பத்தாதா? ஏன்னா அந்த 65 பேரும் ஒன் பை ஒன்னாத்தான் ஹீரோ கிட்டே போய் ஃபைட் போடறாங்க .


7. பிரகாஷ் ராஜ் கூட ஃபைட் சீனில் ஹீரோவுக்கு உதடு, கன்னம் எல்லாம் ரத்தக்காயம், ஆனா அடுத்து அவர் டயலாக் பேசும் காட்சியில் ஒரு காயமும் இல்லை. பேசி முடிச்ச பின் உதட்டில் மட்டும் காயம். எடிட்டிங்க் ஃபால்ட்டா? அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லாம் என்னப்பா பண்றீங்க?  


http://www.indiancinemagallery.com/Gallery2/d/910058-1/Tamanna+in+Cameraman+Ganga+Tho+Rambabu+movie+stills+26_09_12+_14_.JPG


8. இடைவேளை வரை கதை ஒழுங்கா போச்சு, இடைவேளைக்குப்பிறகு கதை சம்பந்தம் இல்லாம 2 ஹீரோயின் கிட்டே மாட்டி தவிக்கும் ஆயுத  பூஜை அர்ஜூன் கணக்கா கேவலமா போகுதே ஏன்? 


9. இத்தனை நாளா திருநங்கைகளை நடனக்காட்சிகளில், பாடல் காட்சிகளில் தான் கிண்டல் பண்ணி அவங்க  மனம் புண் படி சினிமா உலகம் ந்டந்தது, இதுல கோரமான ஃபைட் சீன். 45 அரவாணிகள் ஹீரோ கூட ஃபைட் போடுவது கொடூரம், ஆபாசம் , அருவெறுப்பு 10. அந்த அரவாணிகள் ஃபைட் சீன் முடிஞ்சதும் 2 போலீஸ் ஆஃபீசர்ஸ் வர்றாங்க. அதுல ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் லைட் கலர் காக்கி யூனிஃபார்மும், டார்க் கலர் கேப்பும் போட்டிருக்காரு, செம காமெடி 11. பொதுவா அரசியல்வாதிங்க ஒயிட் அண்ட் ஒயிட் தான் போட்டிருப்பாங்க. இதுல பிரகாஷ் ராஜ் மட்டும் பி:ளாக்  அண்ட் பிளாக் போட்டுட்டு அச்சு அசல் தாதா மாதிரி வர்றார். எடுபடலை. டிரஸ்ஸிங்க் சென்ஸ் மகா மட்டம் . அவர் என்ன தி க கட்சி ஆளா? 


12. வில்லியாக மாறும் 2 வது ஹீரோயின் ரிவால்வரில் ஒரே ஒரு முறை ஹீரோவை சுடறார். உடனே புல்லட்ஸ் காலி. மீதி 5 புல்லட்ஸ் காக்கா தூக்கிட்டு போயிடுச்சா? இவர் பிளான் பண்ணித்தானே தாக்க வர்றார்? அதைக்கூட செக் பண்ணி வர மாட்டாரா? 


13. க்ளை8மாக்ஸ்ல பாரதிராஜா  படம் மாதிரி பொது ஜனங்கள் கூடி வில்லனை பழி வாங்கும் காட்சி சி ஜி ஒர்க் என சொல்ல்ப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சீன் கலக்கல் தான். ஆனா அவங்க வர்றப்ப பில்டிங்கே அதிர்றது ரொம்ப ஓவர்.. 


14. பாடல் காட்சிகளில் தூம் தூம் பாட்டில் அச்சு அசல் அந்நியன் பாட்டான ரண்டக்க ரண்டக்க உல்டா பின்னணி இசை 


http://2.bp.blogspot.com/_vyn2ioGAWRs/TU7PK7XqBoI/AAAAAAAAAfI/h0oj3TLv_S8/s1600/Tamanna958.jpg


 சி.பி கமெண்ட்  - தமிழ்ப்படங்கள் அதிகம் பார்க்காத ஜனங்கள், தெலுங்குப்பட ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். மற்றபடி இது அரைச்ச மாவுதான் . மீறிப்போனா சாவு தான் . இந்த மாமூல் மசாலாக்குப்பையை  ஈரோடு அண்னாவில் பார்த்தேன்

http://telugu.way2movies.com/wp-content/uploads/2012/03/Puri-ropes-in-Gabriela-Bertante-for-hot-item-song.jpg