Saturday, July 28, 2012

மாலைப்பொழுதின் மயக்கத்திலே - சினிமா விமர்சனம்


http://masscinema.in/wp-content/gallery/maalai-pozhudhin-mayakathilaey-movie-wallpapers/maalai-pozhudhin-mayakathilaey-wallpapers-10.jpgஒரு காபி ஷாப்ல யே  மொத்தப்படத்தையும் எடுத்து முடிச்சுடலாம்னு துணிச்சலா ட்ரை பண்ணுனதுக்காகவே  இயக்குநரை பாராட்டலாம்.. ஆனா இன்னும் பெட்டரா பணி இருக்கலாம்னு தோணுது.. 

ஹீரோ ஒரு  சினிமா டைரக்டர்.. காபி ஷாப் போறார்.. அங்கே ஒரு ஐஸ்க்ரீம் பியூட்டியை சந்திக்கிறார்.. கண்டதும் காதல்.. அவர் கிட்டே மொக்கை போடறார்.. 


இன்னொரு செட்.. மேரேஜ் ஆன தம்பதி ( மேரேஜ் ஆனாத்தான் அது தம்பதி?)ஒரு பையன்.. அந்த மேரீடு லேடி பெண்ணியம் பேசி புருஷனை மதிக்காத கேர்க்டர்.. மனஸ்தாபம் 2 பேருக்கும், டைவர்ஸ் பண்ணிக்கப்போறாங்க.. அது சம்பந்தமா பேசி முடிவெடுக்க அங்கே வர்றாங்க.. 

அங்கே ஒரு ரைட்டர் .. லேப் டாப் மட்டும் வெச்சுக்கிட்டு எதும் டைப் பண்ணாம சும்மா ஃபிலிம் காட்டிட்டு இருக்கார். 

 அந்த காபி ஷாப்ல 2 சர்வர்கள், ஒரு ஓனர்.. இவங்களுக்குள்ளே நடக்கற உரையாடல் தான் டோட்டல் ஃபிலிமும்.. 


ஹீரோவாக வரும் ஆரி ஆல்ரெடி ரெட்டைச்சுழியில் நடித்தவர் தான்.. தாடி வைத்த முகம் .. சுமார் தான்.. அங்கங்கே நடிப்பு வருது..  ஜஸ்ட் பாஸ்.. 



http://moviegalleri.net/wp-content/gallery/maalai-pozhuthin-mayakathile-actress-shubha/maalai_pozhuthin_mayakathile_movie_actress_shubha_phutela_stills_4ede6c1.jpg


ஹீரோயின் புதுமுகம் ஜியோ.. 75 மார்க் ஃபிகர்.. மொசைக் தரையில்  மெழுகை ஊற்றி அதில் பாதரசத்தை வழிய விட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஷைனிங்கான ஃபேஸ்.. ஐஸ்க்ரீம் செர்ரி போல் அழகிய உதடுகள்.. என்ன அவர்  பேசும் தமிழ் தான் கலைஞரின் ஈழப்பாசம் போல் ஒட்டாமல் உறுத்துது.. ஆனா பொண்ணுங்களை எந்த தமிழன் உச்சரிப்பை பார்த்து ரசிக்கிறான்?ஃபிகர் நல்லாருந்தா சரி.. 


2 வது ஹீரோ பாலாஜி.. இவரது டிரஸ்சிங்க் சென்ஸ், அடக்கமான நடிப்பு எல்லாம் கன கச்சிதம்.. 

 இவரது மனைவியாக வரும்  தேஜஸ்வனி  ஹீரோயினை விட எந்த விதத்திலும் அழகில் சளைத்தவர் அல்ல.. அவர் ஐஸ்க்ரீம்னா இவர் முலாம்பழம் ஜூஸ் மாதிரி..  இவர் கோபப்படுவது, எடுத்தெறிந்து பேசுவது, கண்ணீரை அடக்கிக்கொள்வது என நடிப்புக்கான ஸ்கோப் அதிகம்.. குட் ஆக்டிங்க்.. இவர் போட்டு வரும் மயில் டிசைன்  ஸ்டெட் அழகு.. புடவை கட்டி இருக்கும் அழகே அழகு.. 


மேனேஜர், சர்வர்கள் 2 பேர் நகைச்சுவைக்கு கட்டியம் கூறுகிறார்கள்.. ஆனா என்ன ஒரு மைனஸ்னா இது சாமான்ய ரசிகனுக்கு மொக்கை படமாகத்தான் காட்டும்.. ரொம்ப ஸ்லோ


படத்தோட வசனகர்த்தா காலண்டர் தத்ஸ் நிறையா சுட்டுட்டார்.. அது போக மணிமேகலைப்பிரசுரத்தின்  “தம்பதிகள் இனிமையாக வாழ 200 யோசனைகள்” புக்கில் இருந்து பல கோட்ஸ் அள்ளி விட்டிருக்காங்க. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXUZvQWm6P3ZgkdsiHptTd6xvR_geEhnR7k-nE7wYvOJd9FnRMNxlpjo7LaPcYXubxWtz-v-f17R_IumCaSSNINycxFUNfX3H3_o_zUTaR3ViLReEC6RpO6c8n2T5OmB-MMedePRJ8xy8/s400/Maalai_Pozhudhin_mayakathilaey_25.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. நள தமயந்தி படத்தில் இருந்து கொஞ்சம், பாக்தாத் கஃபே என்ற 1987-ல் ரிலீஸ் ஆன இத்தாலிப்படத்தில் இருந்து கொஞ்சம் சுட்டதே தெரியாமல் படம் எடுத்தது.. 


2. ஹீரோயின்ஸ் செலக்‌ஷன், பக்கா..  ரெண்டு பேரும் கண்ணுக்குள்ளே  நிக்கறாங்க.. ( சேர் குடுத்து உக்கார வைக்கனும்)


3. வசனங்கள் பல இடங்களில் மொக்கை என்றாலும் ஆங்காங்கே ஷார்ப்.. 


4. மாமூல் மசலாத்தனங்கள், பஞ்ச் டயலாக்,ஃபைட் எல்லாம் இல்லாமல் டீசண்ட்டாக படம் கொடுக்க முயற்சித்தது.. 



http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/sep/maalai-pozhuthin-mayakathile/maalai-pozhuthin-mayakathile_059.jpg




இயக்குநருக்கு திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. படத்துல ஏன் தேவை இல்லாம  பாடல் காட்சிகள் வந்துட்டே இருக்கு? அதுவும் அந்த ஓப்பனிங்க் சாங்க் தாராளமா கட் பண்ணிடலாம்.. கண் வலிக்குது.. லைட்டிங்க் ஓவர்


2. ஹீரோயினுக்கு பிறந்த நாள் கொண்டாடும் சீன் ரொம்ப நீளம். ஆர்ட் ஃபிலிம் மாதிரி இருக்கு.. அதை டிரிம் பண்ணனும்



3. ஹோட்டல், காபி ஷாப், டாஸ்மாக் இங்கே எல்லாம் கஸ்டமர்ஸ் டெயிலி வித விதமா வருவாங்க.. ஒவ்வொருவரும் ஒரு மூடுல வருவாங்க.. ஒரு நாள்ல ஒரு கஸ்டமர் சொல்ற அல்ப காரணத்துக்காக பல ஆண்டுகள் வேலை செய்யற ஆளை டிஸ்மிஸ் பண்ணுவாங்களா? இத்தனைக்கும் ஒரு சின்ன மேட்டர்.. கஸ்டமர் க்ரீன் டீ கேட்கறாங்க, ஆனா சர்வர் லெமன் டீ கொண்டு போய்ட்டார். இதெல்லாம் ஒரு பிரச்சனையா?( ஆனா உண்மையில் அந்த லேடி ;லெமன் டீ தான் கேட்டு இருப்பாங்க.. மாத்தி சொல்வாங்க )



4. ஹீரோயின் அக்கா  ஃபாரீன் லேடி.. செல் ஃபோன் பேசிட்டே கார் டிரைவ் பண்ற மாதிரி சீன் எதுக்கு? அப்படியே வெச்சாலும் புகை பிடிக்கும் காட்சி வரும்போது வார்னிங்க் வாசகம் வர்ற மாதிரி ஸ்க்ரீன்ல வார்னிங்க் ஸ்லோகன் போடலாமே?

5. ஹீரோயினின் அக்காவை லவ் பண்றவர் முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆள் முன்னால அது பற்றி டிஸ்கஸ் பண்ணுவாரா? அவரை தனியா கூட்டிட்டு போய்த்தானே டிஸ்கஸ் பண்ணுவாங்க ?



http://static.ibnlive.in.com/pix/slideshow/02-2012/first-look-tamil/maalaipoluthinmayakathilae9.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  உன் கிட்டே திறமை இருக்கா? இல்லையா? என யாருக்கும் அக்கறை இருக்காது


2. கடைசி வரை நம்ம கூட யாரும் வர மாட்டாங்க, கல்வி மட்டும் தான் கூட வரும். 



3. புரிஞ்சுடுச்சு சார்.. உங்களை புரிஞ்சுக்கவே முடியாதுங்கறது புரிஞ்சிடுச்சு.. 


4. ஃபாரீன் ஹோட்டல் மாதிரி நீங்க ஏன் நியூ ஐட்டம்ஸ் ட்ரை பண்ணக்கூடாது?


 ஃபாரீன் ரைட்டர்ஸ் மாதிரி நீங்க ஏன் புது கதை எழுதக்கூடாது?


5. டேய்.. சாம்பல் சாப்பிடனும் போல இருக்கு

 தம் அடிச்சுட்டு இருக்கேன்,.. வந்தா சிகரெட் சாம்பல் தர்றேன்


 அடேய்.. புளிப்பா ஏதாவது சாப்பிடனும் போல இருக்கு


ஹோட்டலுக்கு வா, காபி சாப்பிடலாம்



நான் அம்மா ஆகப்போறேன்

அதுக்கு ஏன் என்னை இழுக்கறே?

 உனக்கு பையன் பிடிக்குமா? பொண்ணு பிடிக்குமா? 

 எனக்கு எப்பவும் பொண்ணுதான்  பிடிக்கும்..


6. நேத்து கூட ப்ரியா ஃபோன் பண்ணுனா.. அவ கர்ப்பத்துக்கு நான் தான் காரணமாம்.. அப்புறம் அவங்கம்மா ஃபோன் பண்ணாங்க.. அவங்களும் கர்ப்பமாம்.. அதுக்கும் நான் தான் காரணமாம்./ நான் தான் உங்க எல்லாருக்கும் இளிச்சவாயனா? 


7. ஏண்டா இப்படி பிரெக்ம்னென்சி வரை மாட்னே?


ஹி ஹி 


 கேப் போடலை?

 போட்டேனே? அப்படியும் மிஸ் ஆகிடுச்சு

 ஒவ்வொரு டைமும் போடனும்



8.  மழை, இளையராஜா இசை, ஐஸ்க்ரீம், எதிர்ல அழகான பொண்ணு இதை விட லைஃப்ல ஒருத்தனுக்கு என்ன வேணும்?


9. ஏசியை இன்க்ரீஸ் பண்ணிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு.. அவனுக்கு எதுவும் வேலை செய்யாது


10. என் தமிழ் கொஞ்சம் அப்டி இப்டித்தான் இருக்கும்.. 

 அப்போ நீங்க இங்க்லீஷ்ல பேசலாமே?


யார் கிட்டே? ( உங்களுக்குத்தான் தெரியாதே?)

 ஒரிஜினல்

http://4.bp.blogspot.com/-14Wd5B8mQZQ/TkKSUmmZiNI/AAAAAAAAIJ4/9qVTgkWn17c/s1600/9115_honeymooners-bagdad-cafe2.jpg


11.  அவங்க சண்டை போட்டா பிராப்ளம் இல்லை, சண்டை போடலைன்னாத்தான் பிராப்ளம்.. 



12.  உனக்கு கோபமே வராதா? 

கோபம் வந்தா மட்டும் இந்த உலகத்துல எல்லாம் மாறிடப்போகுதா?



13. ஒரு தடவைக்கு பல தடவை ஒரு ஆள் ஃபோன்ல தாங்க்ஸ் சொல்லிட்டு இருந்தா அது கண்டிப்பா பர்த் டே விஷ்ஷாத்தான் இருக்கும்

பர்த்டேவா இல்லைன்னாலும் பர்த்டேன்னு ஒத்துக்க வெச்சுடுவீங்க போல 


14.  உங்களுக்கு விருப்பம் இருந்தா வெளில போய் உட்கார்.. விருப்பம் இல்லைனாலும் வெளில போய் உட்கார். சொன்னது புரிஞ்சுதா?


15. அந்த லவ் ஜோடியை பாரு, எவ்ளவ் சந்தோஷமா இருக்காங்க?



 மேரேஜ் ஆன பின் எந்த ஜன்னல் வழியா அதெல்லாம் போகப்போகுதோ? 


16. உங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.. நல்ல வேலை.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. மாலை வந்து பில் செட்டில் பண்ணிக்குங்க.


17.  லாஸ்ட் சான்ஸ்.. 30 நிமிஷம்.. அவளை எப்படியாவது கவர்ந்துடனும்.. என்ன பண்ண்லாம்?


18. சில விஷயங்கள் புரியாம இருந்தாலே நல்லது


19. எவ்ளவ் ஃபாஸ்ட்டா லவ்க்கு அப்ளை பண்றாங்களோ அதை விட ஸ்பீடா  டைவர்ஸ்க்கு அப்ளை  பண்றாங்க . 


20. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கறவங்க எல்லாரும் சார்லி சாப்ளின் கிடையாது.. சீரியஸா எப்பவும் இருக்கறவங்க சயிண்ட்டிஸ்ட்டும் கிடையாது



http://www.movieposter.com/posters/archive/main/57/MPW-28513


21. வாழ்க்கைல லவ் ஒரு தேவை தான்.. 

வாழ்க்கையே ஒரு தேவை தான்



22. சயின்ஸ்ல எல்லாத்துக்கும் ஃபார்முலா இருக்கு, ஆனா ஒருத்தரை ஏன் பிடிச்சிருக்குங்கறதுக்கு ஃபார்முலாவே கிடையாது



23.  ஹாய், என்ன பண்றீங்க?

சும்மாதான் இருக்கேன்.. 

 பார்ட் டைம்? ஃபுல் டைம்?

 ஹி ஹி ஃபுல்டைமும் சும்மாதான் இருக்கேன்


24.  என் கடைக்கு வர்ற ஒவ்வொரு கஸ்டமரையும் எனக்கு பிடிக்கும்.. அவங்க உலகத்துல இருந்து என் உலகத்துக்கு வந்துடற மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்க்.. 


25. ஒரு நொடி சந்தோஷத்துக்காக லைஃப் பூரா  ஃபைட் போடனுமா?


26. மேரேஜ்க்கு முன்னால இவ நம்ம கூட பேச மாட்டாளா?ன்னு இருக்கும், மேரேஜ்க்குப்பிறகு ஹும், பேசபேசத்தான் பிரச்னையே வருது


27. என்னோட  வாழ அவளுக்குப்பிடிக்கலை, ஆனா அவ இல்லாம நான் இல்லை.. 


28. நீங்க உங்க வாழ்க்கைல எப்பவாவது தப்பு பண்ணி இருக்கீங்களா?

 ம், மேரேஜ்  பண்ணி இருக்கேன்.. 


29. எதுக்காக ஓடறோம்? யாருக்காக ஓடறோம்? ஒண்ணும் புரிய்லை



30. நீங்க பண்ற எல்லா தப்புக்கும் தண்டனை உங்களூக்கு நீங்களே குடுத்ததுண்டா? இல்லை, மன்னிச்சுடறீங்க? ஆனா அடுத்தவங்க தப்பு பண்ணா மட்டும் மன்னிக்கறது இல்லை? 1000 முறை தப்பு பண்ணுனா 1000 தடவையும் மன்னிங்க.. 

 ஒரிஜினல் பாக்தாத் கஃபே

http://insidescoopsf.sfgate.com/files/2011/04/bagdad-600x400.jpg


31.  பிரிஞ்சு வாழ்றது வாழ்க்கை இல்லை 


32. நான் இல்லாம அவளால சந்தோசமா இருக்க முடியும்னா அவ இல்லாமலும் நான் சந்தோஷமா இருக்க முடியும்.. 


33. டியர்.. ஃபோனை வை. 

 நீ வை 

 ம்ஹும், நீ தான் முதல்ல வைக்கனும்// 

 நான் வைக்க மாட்டேன்

 நானும் வைக மாட்டேன்.. 

 டேய் 2 பேரும் இதே மொக்கையை 2 மணீ நேரமா போட்டுட்டு இருக்கீங்க.. 



34. ஆண்களை அழ வெச்சுப்பார்க்கறது பொண்ணுங்களுக்கு பிடிக்கும்


35. நமக்கு ஒரு பொண்ணு பிடிச்சிருந்தா அந்த நிமிஷம் தான் உலகின் சந்தோசமான நிமிஷம் . அதை விட சந்தோஷம் எதுவும் இல்லை


\36.  எனக்கு அவங்களை பிடிக்கும்.. அதை அவங்களுக்கு சொல்லனுமா என்ன? அவங்களுக்கா தெரியாதா?


37.  விட்டுட்டு போக 1000 காரணங்கள் இருக்கலாம்.. சேர்ந்து வாழ ஒரு காரணம் கூடவா இல்லை?



38. பொண்ணுங்களை சைட் அடிச்சாத்தான் அவன் பையன். அபடி அடிக்காதேன்னு சொன்னா எப்படி? வேணும்னா திட்டுங்க..


39. சின்னச்சின்ன பார்வைல பெரிய பெரிய  கதை பேசி காதல் வருது.. சின்ன சின்ன வார்த்தைகளால அது சிதையவும் செய்யுது


40. உனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சேன், உனக்குப்பிடிக்காததை பண்ணக்கூடாதுன்னு இப்போதான் தெரியுது.. 


41.  படிப்பை விட்டுட்டு உன்னைப்பற்றியே யோசிச்சுட்டு இருப்போனோன்னு பயமா இருக்கு 


http://moviegalleri.net/wp-content/gallery/maalai-pozhuthin-mayakathile-stills/maalai_pozhuthin_mayakathile_movie_stills_4491.jpg

 
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41


குமுதம் ரேங்க் - ஓக்கே 


 டைம்ஸ் ஆஃப் இண்டியா  -  3 / 5


 டெக்கான் கிரானிக்கல் -  7 /10


 உல்டா ஆஃப்  ஹாலிவுட் தகவல் உதவி  - வவ்வால்



http://moviegalleri.net/wp-content/gallery/maalai-pozhuthin-mayakathile-stills/maalai_pozhuthin_mayakathile_movie_stills_1929.jpg
a


டிஸ்கி 1 -

பொல்லாங்கு - நடுநிசி நாய்கள் 2 - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/07/2_28.html

 


டிஸ்கி - 2 அதுல்குல்கர்னி இன் G A - சுழல் - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_6087.html

 


 


-

5 comments:

கோவை நேரம் said...

உங்க அர்ப்பணிப்பு புல்லரிக்குது..என்ன ஸ்டட் போட்டு வந்து இருக்காங்க அப்படிங்கிறத கூட உன்னிப்பா கவனிச்சு இருக்கீங்க...

கவி அழகன் said...

Sumarana padathukke inthapperiya vimarsanam

Unknown said...

பின்ரிங்க தல...

டக்கால்டி said...

Thala..How r u?

"Ammuvin kolai vazhakku" pada vimarsanatthai ethirparkiren..

”தளிர் சுரேஷ்” said...

படத்து வசனங்கள் நிறைய கொடுத்து போரடிச்சீட்டீங்க! இதுக்கு 41 மார்க் ரொம்ப அதிகமா தோணுது!