Tuesday, July 31, 2012

முந்தானை முடிச்சு - சினிமா விமர்சனம்

http://tvshowz.in/uploads/posts/mundhanai-mudichu.jpg

 தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்களில் ஒன்று, ஏ வி எம் மின் உயர்ந்த பட்ச வசூல் கொட்டிய படம்,  இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் கே பாக்யராஜின் மாஸ்டர் பீஸ் படம், எம் ஜி ஆரால் கலை உலக வாரிசு என கே பி யை அறிவிக்க வைத்த படம், முருங்கைக்காயை தாவர வயாக்ரா என உணர வைத்த படம் என பல அம்சங்கள் கொண்ட படம் முந்தானை முடிச்சு..

கதையோட ஒன் லைன் ரொம்ப சிம்ப்பிள் - ரெண்டாந்தாரமா வாக்கப்படற மனைவி மொத தாரத்துக்குழந்தையை சித்தியா கொடுமைப்படுத்தாம தன் குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டா நல்லாருக்கும்  அவ்ளவ் தான்.. ஆனா அதுக்கான திரைக்கதை தான் கே பி யின்  மாஜிக் மந்திரம்

கிராமத்து நாட்டாமை பொண்ணு தான் ஹீரோயின்.. அவர் 3 சின்னப்பசங்களோட  அதிக்கலம் பண்ணிட்டு இருக்காரு.. ஐ மீன் ஜாலி விளையாடு , கலாட்டா.. அந்த ஊருக்கு புதுசா வாத்தியாரு வர்றார்.. அவர் தான் ஹீரோ.. கைக்குழந்தையோட  வர்றார்..

ஆரம்பத்துல அவரை கலாட்டா பண்ணுன ஹீரோயின் அவர் ஒரு விடோயர்னு தெர்ஞ்சதும் லவ்வறார்.. ஆனா ஹீரோவுக்கு சித்தி கொடுமை பற்றி பயம் இருப்பதால் அதுக்கு ஓக்கே சொல்லலை.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3guSskKsOLjpIxdSo4yFFMyfWGqFMEWC9GSo-hkhADy0q6f8Z7TbpmX8PQ-kMfWqEX3-k9qygNWTe8zLK6l9DyvvDiehNWzU7uPV3voNhBpG2IQnak0oHLydgKktQ3kyFb61AeIiVZYjb/s400/Mundhanai-Mudichu.jpg


ஹீரோயின் ஹீரோ தன்னை கெடுத்துட்டதா பொய்ப்புகார் கொடுத்து கட்டாயத்தாலி வாங்கிக்கறார்.. மேரேஜ் ஆனாலும் நோ கில்மான்னு ஹீரோ உறுதியா இருக்கார்.. அவர் மனசை ஹீரோயின் எப்படி மாத்தி தாம்பத்ய வாழ்க்கை வாழறார் என்பதே கதை..

படத்துல முதல் ஹீரோ திரைக்கதை தான்..  சரியா 20 நிமிஷத்துக்கு ஒரு டர்னிங்க் பாயிண்ட்.. சுவராஸ்யமான சம்பவங்கள்னு படம் போர் அடிக்காம போகுது..


கே பாக்யராஜ் கிட்டே 2 பிளஸ் பாயிண்ட் 1. தன்னை முட்டாளா, அப்பாவியா சித்தரிச்சுக்கிட்டே அதுல புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவது.. 2. பெண்கள் ரசிக்கும் வண்ணம் இலை மறை காய் மறைவாக கிளு கிளு சமாச்சாரங்களை சாமார்த்தியமாகப்புகுத்துவது


முதியோர் கல்வித்திட்டத்தில் தீபா ஆ சொல்லித்தரும் காட்சியில் இவரது டச்.. அபாரம்.. தாலாட்டு பாடவா? என கேட்டு ஊர்வசி பாடும் விரகதாப வாய்ஸில் - ஆரிராரிரோ ஆராரோ எனும்போது இவர் காட்டும் முக பாவனைகள் , ரீ ஆக்‌ஷன் கல கல கலக்கல்.. 


பாடல் காட்சிகளில் இவர் எக்சசைஸ் பண்ணுவது கூட அனைவரையும் ரசிக்க வைக்கிறது. 


 ஊர்வசி - குறும்புத்தன நடிப்பிலும் சரி, செண்ட்டிமெண்ட் காட்சியிலும் சரி.. கலக்கி எடுத்துட்டார்.. ஆனா இவருக்கு ஹீரோ மேல காதல் வந்த மாதிரி காட்சிகள் சரியா, முறையா வைக்கப்படலைன்னு தோணுது. ஏதோ ஒரு பரிதாபத்தில் விரும்பற மாதிரி இருக்கு.. 



தவக்களை மற்றும் சுட்டிப்பசங்களோட அட்டகாசம் அழகு கிராமத்து எள்ளல்கள்.. கோவை சரளா  5 காட்சிகளில் வர்றார். அவரை இன்னும் நல்லா யூஸ் பண்ணி இருக்கலாம்.. 


http://www.tamilhitsmp3.com/img/movie/MundhanaiMudichu.jpg


அட்டகாசமான பாடல்கள்



1. டைட்டில் சாங்க் - வெளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான்.. மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்


2. ஹீரோயின் சாங்க் - நான் புடிக்கும் மாப்பிள்ளை தான், நாடறிஞ்ச மன்மதன் தான். 


3. டூயட் சாங்க் - அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்.. 

4. தீபாவுடனான செம குத்தாட்டப்பாட்டு - வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி.. 

5. விரகதாப குரலில் வரும் தாலாட்டு போலிப்பாட்டு - ஆரிராரிரோ..ஆராரோ.. கண்ணைத்தொறக்கனும்  சாமி.. கையைப் புடிக்கனும் சாமி.. 


6. சோகப்பாட்டு - சின்னஞ்சிறு கிளீயே சித்திரப்பூவிழியே. 

 


படத்தின் சில பெருமைகள் 


1. இளைய ராஜா கே பாக்யராஜ் இணைந்த முதல் படம்

2. ஏ வி எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ் பி முத்துராமன் தான்.. அதை உடைத்து வேற்று ஆளை டைரக்டரா போட்டது இதுதான் முதல்.. 


3. முருங்கைக்காயை மார்க்கெட்டில் டிமாண்ட் ஏற்படுத்திய படம்.  ( ஆனால் கில்மா உணர்வுகளை அது தூண்டுவதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை )


4. மிகக்குறைந்த முதலீட்டில் மிக பிரம்மாண்டமான வசூல் பெற்ற படங்களில் ஏ வி எம்க்கு இதுவும் ஒன்று ( மற்ற 2 1. பாட்டி சொல்லைத்தட்டாதே, 2.  சங்கர் குரு)


5. அறுவடை நாள் ஆர் பி விஸ்வம்,( அசிஸ்டெண்ட் டைரக்டராக, வசனகர்த்தாவாக ), ஊர்வசி, தவக்களை, தீபா, கோவை சரளா  இதில் தான் புகழ் பெற்றார்கள்




http://www.123kerala.com/chithram/unnimeri/deepa19.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. பையனை அப்படியே விட்டுட்டு வர்றீங்க, எப்படி அவன் கிணத்துல இருந்து வெளில வருவான்?


 அவன் பல்லிக்கு பிறந்த பையன்ங்க. எப்படியாவது தொத்திக்கிட்டு வந்துடுவான்



2.  அப்பா, நம்ம சாதி சன மாப்ளை எனக்கு வேணாம். எல்லாரும் சின்ன வீடு வெச்சிருக்கானுங்க.. ஏன். நீயே வாரா வாரம் சனிக்கிழமை சின்னமனூர் போறீயே?


3. பையன் நம்ம பையனா?

 எம் பையன்


4. பையன் சிவப்பா , துறுதுறுப்பா அழகா இருக்கான். 


 அவன் என் பையன்


 அதான் சந்தேகமா கேட்டேன்


5. எங்கப்பாவையா பார்க்க வந்திருக்கீங்க?

 உங்கப்பா யார்னு எல்லாம் எனக்கு தெரியாது, இந்த ஊர் நாட்டாமையை பார்க்க வந்திருக்கேன் ( பஞ்சாயத்து தலைவர்)


 அவர் தான் எங்கப்பா 




6. நல்ல முட்டையை கடைல வாங்க ஒரு வழி இருக்கு.. 3 முட்டையை வரிசையா ஒன்றன் மேல் ஒன்று அடுக்குனா நல்ல முட்டையா இருந்தா  நடுவால இருக்கற முட்டை சுத்தும் ( தலை சுத்துது)


7.  அய்யா சாமி...... ( பிச்சைக்காரனின் குரல்)


என்ன? கத்திரிக்காய் சாம்பாரா?

 ஆமாங்க, முருங்கைக்காய் கூட்டு எல்லாம் இருக்கு 

 ஹூம்



8. ஏங்க.. அந்த வழியா யாராவது பாத்திரத்தோட போறதை பார்த்தீங்களா?

அட போய்யா, நானே  என் பொண்டாட்டியை  காணோம்னு தேடிட்டு இருக்கேன். 


ஓ! நம்மளை விட  கஷ்டம் உள்ள ஆளுங்க எல்லாம் இருக்காங்க போல . 



9.  குழந்தை சாப்பிட்டாச்சா? 


 நல்ல வேளை பால் புட்டியை இங்கே வெச்சிருந்தேன், இல்லை, பசங்க இதையும் ஒரு ஆத்து ஆத்தி இருப்பாங்க 



10. என்னய்யா வாத்தி நீ? வணக்கம் சொல்றப்போ ஒரு கையை மட்டும் தூக்கி. என்ன படிப்போ..?


சரிங்க.. இனி அப்படி பண்ணிடறேன்


என்னய்யா வாத்தி நீ? வணக்கம் சொல்றப்போ என்னமோ திருப்பதி ஏழுமலையானை கும்பிடற மாதிரி 2 கையையும் தூக்கி சொல்லிட்டு . சும்மா வாய்ல வணக்கம் சொன்னா போதாதா?


11. ரொம்ப நன்றி.. 


 தாங்க்ஸ். நாங்களும் டென் த் வரை படிச்சிருக்கோம்


12. அத்தை.. பழைய மாப்ளையா உரிமையோட என்னை பார்க்க எப்போ வேணாலும் வாங்க, ஆனா புது மாப்ளை ஆக்க ஏதாவது திட்டம் இருந்தா தயவு செஞ்சு இந்தப்பக்கமே வராதீங்க


13.  அக்கா, வாத்தியார் மயக்கமா இருக்கார்.. தண்ணி தெளி


. தண்ணி தெளிச்சா உடனே எந்திரிச்சு போயிடுவார்.. கொஞ்ச நேரம் இருக்கட்டும் அப்படியே. 


14. டேய். நான் எப்படி இருக்கேன்?


 ஹூம்.. எனக்கு வயசு பத்தலையேன்னு வருத்தமா இருக்குக்கா.. 



15. பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்ளை. 


16. மகாத்மா காந்தி நம் நாட்டுக்கு..... 


 வாத்யாரய்யா மணீ எவ்ளவ்? மாட்டை சினைக்கு ஓட்டிட்டுபோகனும்.. 

இதுக்குத்தான் ஸ்கூல் பெல்லா?


 சொல்லாட்டிப்போய்ய்யா , என்னமோ இந்தாள்ட்ட  மட்டும் தான்மணி
இருக்கற மாதிரி அலட்டிக்கறீரே?


மகாத்மா காந்தி நம் நாட்டுக்கு..... 


 சுதந்திரம் வாங்கித்தராமலே இருந்திருக்கலாம்


17.  புருஷன் கிழிச்ச கோட்டை தாண்டுனா பொண்டாட்டிக்கு கேடுன்னு ராமாயணத்துல படிச்சிருக்கேன்

 அது ராமர் கிழிச்ச கோடில்லை. லட்சுமணன் கிழிச்ச கோடுங்கோவ்.. 


 ஏதோ ஒண்ணு




இலை மறை காய் மறைவாக சொல்லப்பட்ட கிளு கிளு கில்மா வசனங்கள்
1. வாத்தியாரே, புதுசா வந்திருக்கீங்க. அப்படி என்ன தான் செய்யறீங்கன்னு ஆசையா வந்து பார்த்தா ரொம்பத்தான் சலிச்சுக்கறீங்களே?ஹூக்க்ம்
2.  யோவ், உனக்கு ஏதாவது பண்ணனும் போலவே இருக்குயா. 
 நீ எதுவும்  பண்ண வேணாம்.. இடத்தை காலி பண்ணு போதும்.. 
3.  போம்மா போ.. நாட்டாமை கூப்பிடறார் இல்ல? உள்ளே போ..  ஹூம், போன வருஷம்  நான் தான் நாட்டாமை. 
4.  பொண்ணை பார்க்கறதுன்னா மூஞ்சியை பார்த்து பேசனும். எங்கெங்கோ பார்த்துப்பேசுனா?
5. ஸ்ஸ்ஸ்சார்.. உங்க கிட்டே புது சாக்பீஸ் இருக்கா? எனக்கு வேணும்..
6. கல்யாணம் புதுசா ஆனவரு ஹோட்டல்ல சாப்பிட வந்திருக்காரே?
 பொண்டாட்டியை சமைக்க விட்டா நைட்ல களைப்புல அது தூங்கிடும். அதான்.. வாத்தியாரு விபரமானவருதான்
7. நீ எதுக்காக இங்கே டிரஸ் சேஞ்ச் பண்றே?
 உனக்குத்தான் இதெல்லாம் ஆகாதே, ஏன் வேடிக்கை பார்க்கறே?
8.  ஏய்.. முந்தானையை ஒழுங்கா போடு.. 
 தூக்கத்துல அப்டி இப்டி விலகறதுதான்
9. எப்படி ஆ போடறதுன்னு சொல்லித்தர்றேன்
 ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
 டீச்சர். இன்னொருக்கா?
 ஆமாமா, ஒரு டைம்லயே எல்லாத்தையும் கத்துக்க முடியாது//
10.  டீச்சர், நான் போட்டா கோனையா (க்ராஸ்) வரும்ங்க
 கொஞ்சம் கூட சொந்தமா முயற்சியே பண்ண மாட்டேங்கறீங்களே?
இளைய ராஜாவின் கலக்கல் பின்னணி இசை ( இடைவேளை ட்விஸ்ட் )
இயக்குநரிடம் சில சந்தேகங்கள்
1. ஹீரோயின் ஹீரோவால கெடுக்கப்பட்டதா பஞ்சாயத்துல பொய் பிராது கொடுக்கறா. படத்தோட மெயின் முடிச்சு இது. வெர்ஜினிட்டி டெஸ்ட் பண்ணிட்டா மேட்டர் தெரிஞ்சுடும். கிராமத்துல ஏது அந்த வசதின்னு சொல்லி எஸ் ஆக முடியாது.. ஏன்னா க்ளைமாக்ஸ்ல அதே ஹீரோயின் கன்னி கழியாம கருத்தடை ஆபரேஷன் பண்ணபோறப்ப டாக்டர் அவருக்கு ஆபரேஷன் பண்ணாம மயக்கப்ப்படுத்தி வெச்சிருந்து ஹீரோ கிட்டே ஹீரோயின் இன்னும் கன்னி கழியாதவர்னு சொல்றார்..  
இந்த லாஜிக் மிஸ்டேக்கை சரி பண்ண படத்துல ஒரு கிராமத்து மருத்துவச்சி ஹீரோயின் கிட்டே பணம் வாங்கிட்டு உடந்தையா இருந்த மாதிரி காட்டி இருக்கலாமே?
2. ஹீரோ  மனைவியை இழந்தவர் என்ற செய்தி கேட்டு ஹீரோயின் திடுக்கிடுவது ஓகே.. ஆனா அதுக்கான எக்ஸ்பிரஷன் ஓவர் ரீ ஆக்‌ஷன். 
3. சாமியார்னா அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை காவி டிரஸ் தான். ஏன் மஞ்சள் கலர் டிரஸ் போட்டுட்டு வர்றாரு ஹீரோ இன் கண்ணைத்தொறக்கமுன் சாமி பாட்டுல ..  ( சித்து பிளஸ்டூ ல  இதே ரீமேக்  ரீ மிக்ஸ் சாங்க் ல அந்த தப்பை சரி பண்ணி இருப்பீங்க.. )
4. படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் வலியனா புகுத்தப்பட்டவை.. அவை இல்லாமலேயே விறு விறுப்பு கூட்டி இருக்க முடியும்.. 
1983 இல் இந்தப்படம்  ரிலீஸ் ஆச்சு. 

8 comments:

விக்னேஸ்வரி சுரேஷ் said...

இப்பவும் பாக்யராஜை திரைக்கதையில் அடித்துக்கொள்ள ஆளேயில்லை.. ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமாக்குவது நல்ல திரைக்கதை தான்..அந்த வித்தை அவருக்கு கைவந்த கலை.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

உங்க காலத்துப் படத்த விமர்சனம் பண்ணிட்டீங்க.. எங்கள மாதிரி யூத்துகளுக்காக ஜிஸ்ம் 2.. பில்லா 2 பார்வதி ஓமனக்குட்டன், சன்னி லியோன் வகையறாக்களையும் கொஞ்சம் விமரிசனம் பண்ணுங்க

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அருமையான விமரிசனம்...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அடுத்து தில்லானா மோகனாம்பாளா?

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

really baghyaraj is a great in screen play ..

Menaga Sathia said...

பழைய படத்துக்கும் விமர்சனமா?? நல்லாயிருக்கு...அப்படத்தின் பாடல்கள் பிடிக்கும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, ஞாயித்து கெழம கலைனர் டிவிய பாத்துப்புட்டு கிளு கிளப்பா விமர்சனம் எழ்தியிருக்கார்....

ஆமாண்ணே, இயக்குனரிடம் சில கேள்விகள் கேட்டு இருக்கிங்களே, பதில் வந்தா ஒரு பதிவா போடுங்கன்னே....

”தளிர் சுரேஷ்” said...

நான் ரசித்து பார்த்த பாக்கியராஜ் படங்களுள் ஒன்று இது! அருமையான விமர்சனம்!