Showing posts with label K BAGYARAJ. Show all posts
Showing posts with label K BAGYARAJ. Show all posts

Tuesday, July 31, 2012

முந்தானை முடிச்சு - சினிமா விமர்சனம்

http://tvshowz.in/uploads/posts/mundhanai-mudichu.jpg

 தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்களில் ஒன்று, ஏ வி எம் மின் உயர்ந்த பட்ச வசூல் கொட்டிய படம்,  இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் கே பாக்யராஜின் மாஸ்டர் பீஸ் படம், எம் ஜி ஆரால் கலை உலக வாரிசு என கே பி யை அறிவிக்க வைத்த படம், முருங்கைக்காயை தாவர வயாக்ரா என உணர வைத்த படம் என பல அம்சங்கள் கொண்ட படம் முந்தானை முடிச்சு..

கதையோட ஒன் லைன் ரொம்ப சிம்ப்பிள் - ரெண்டாந்தாரமா வாக்கப்படற மனைவி மொத தாரத்துக்குழந்தையை சித்தியா கொடுமைப்படுத்தாம தன் குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டா நல்லாருக்கும்  அவ்ளவ் தான்.. ஆனா அதுக்கான திரைக்கதை தான் கே பி யின்  மாஜிக் மந்திரம்

கிராமத்து நாட்டாமை பொண்ணு தான் ஹீரோயின்.. அவர் 3 சின்னப்பசங்களோட  அதிக்கலம் பண்ணிட்டு இருக்காரு.. ஐ மீன் ஜாலி விளையாடு , கலாட்டா.. அந்த ஊருக்கு புதுசா வாத்தியாரு வர்றார்.. அவர் தான் ஹீரோ.. கைக்குழந்தையோட  வர்றார்..

ஆரம்பத்துல அவரை கலாட்டா பண்ணுன ஹீரோயின் அவர் ஒரு விடோயர்னு தெர்ஞ்சதும் லவ்வறார்.. ஆனா ஹீரோவுக்கு சித்தி கொடுமை பற்றி பயம் இருப்பதால் அதுக்கு ஓக்கே சொல்லலை.. 
http://1.bp.blogspot.com/_jo1xsRVxX7o/SqfCgqnhj3I/AAAAAAAACbc/31MPVPHGrXQ/s400/Mundhanai-Mudichu.jpg


ஹீரோயின் ஹீரோ தன்னை கெடுத்துட்டதா பொய்ப்புகார் கொடுத்து கட்டாயத்தாலி வாங்கிக்கறார்.. மேரேஜ் ஆனாலும் நோ கில்மான்னு ஹீரோ உறுதியா இருக்கார்.. அவர் மனசை ஹீரோயின் எப்படி மாத்தி தாம்பத்ய வாழ்க்கை வாழறார் என்பதே கதை..

படத்துல முதல் ஹீரோ திரைக்கதை தான்..  சரியா 20 நிமிஷத்துக்கு ஒரு டர்னிங்க் பாயிண்ட்.. சுவராஸ்யமான சம்பவங்கள்னு படம் போர் அடிக்காம போகுது..


கே பாக்யராஜ் கிட்டே 2 பிளஸ் பாயிண்ட் 1. தன்னை முட்டாளா, அப்பாவியா சித்தரிச்சுக்கிட்டே அதுல புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவது.. 2. பெண்கள் ரசிக்கும் வண்ணம் இலை மறை காய் மறைவாக கிளு கிளு சமாச்சாரங்களை சாமார்த்தியமாகப்புகுத்துவது


முதியோர் கல்வித்திட்டத்தில் தீபா ஆ சொல்லித்தரும் காட்சியில் இவரது டச்.. அபாரம்.. தாலாட்டு பாடவா? என கேட்டு ஊர்வசி பாடும் விரகதாப வாய்ஸில் - ஆரிராரிரோ ஆராரோ எனும்போது இவர் காட்டும் முக பாவனைகள் , ரீ ஆக்‌ஷன் கல கல கலக்கல்.. 


பாடல் காட்சிகளில் இவர் எக்சசைஸ் பண்ணுவது கூட அனைவரையும் ரசிக்க வைக்கிறது. 


 ஊர்வசி - குறும்புத்தன நடிப்பிலும் சரி, செண்ட்டிமெண்ட் காட்சியிலும் சரி.. கலக்கி எடுத்துட்டார்.. ஆனா இவருக்கு ஹீரோ மேல காதல் வந்த மாதிரி காட்சிகள் சரியா, முறையா வைக்கப்படலைன்னு தோணுது. ஏதோ ஒரு பரிதாபத்தில் விரும்பற மாதிரி இருக்கு.. தவக்களை மற்றும் சுட்டிப்பசங்களோட அட்டகாசம் அழகு கிராமத்து எள்ளல்கள்.. கோவை சரளா  5 காட்சிகளில் வர்றார். அவரை இன்னும் நல்லா யூஸ் பண்ணி இருக்கலாம்.. 


http://www.tamilhitsmp3.com/img/movie/MundhanaiMudichu.jpg


அட்டகாசமான பாடல்கள்1. டைட்டில் சாங்க் - வெளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான்.. மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்


2. ஹீரோயின் சாங்க் - நான் புடிக்கும் மாப்பிள்ளை தான், நாடறிஞ்ச மன்மதன் தான். 


3. டூயட் சாங்க் - அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்.. 

4. தீபாவுடனான செம குத்தாட்டப்பாட்டு - வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி.. 

5. விரகதாப குரலில் வரும் தாலாட்டு போலிப்பாட்டு - ஆரிராரிரோ..ஆராரோ.. கண்ணைத்தொறக்கனும்  சாமி.. கையைப் புடிக்கனும் சாமி.. 


6. சோகப்பாட்டு - சின்னஞ்சிறு கிளீயே சித்திரப்பூவிழியே. 

 


படத்தின் சில பெருமைகள் 


1. இளைய ராஜா கே பாக்யராஜ் இணைந்த முதல் படம்

2. ஏ வி எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ் பி முத்துராமன் தான்.. அதை உடைத்து வேற்று ஆளை டைரக்டரா போட்டது இதுதான் முதல்.. 


3. முருங்கைக்காயை மார்க்கெட்டில் டிமாண்ட் ஏற்படுத்திய படம்.  ( ஆனால் கில்மா உணர்வுகளை அது தூண்டுவதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை )


4. மிகக்குறைந்த முதலீட்டில் மிக பிரம்மாண்டமான வசூல் பெற்ற படங்களில் ஏ வி எம்க்கு இதுவும் ஒன்று ( மற்ற 2 1. பாட்டி சொல்லைத்தட்டாதே, 2.  சங்கர் குரு)


5. அறுவடை நாள் ஆர் பி விஸ்வம்,( அசிஸ்டெண்ட் டைரக்டராக, வசனகர்த்தாவாக ), ஊர்வசி, தவக்களை, தீபா, கோவை சரளா  இதில் தான் புகழ் பெற்றார்கள்
http://www.123kerala.com/chithram/unnimeri/deepa19.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்1. பையனை அப்படியே விட்டுட்டு வர்றீங்க, எப்படி அவன் கிணத்துல இருந்து வெளில வருவான்?


 அவன் பல்லிக்கு பிறந்த பையன்ங்க. எப்படியாவது தொத்திக்கிட்டு வந்துடுவான்2.  அப்பா, நம்ம சாதி சன மாப்ளை எனக்கு வேணாம். எல்லாரும் சின்ன வீடு வெச்சிருக்கானுங்க.. ஏன். நீயே வாரா வாரம் சனிக்கிழமை சின்னமனூர் போறீயே?


3. பையன் நம்ம பையனா?

 எம் பையன்


4. பையன் சிவப்பா , துறுதுறுப்பா அழகா இருக்கான். 


 அவன் என் பையன்


 அதான் சந்தேகமா கேட்டேன்


5. எங்கப்பாவையா பார்க்க வந்திருக்கீங்க?

 உங்கப்பா யார்னு எல்லாம் எனக்கு தெரியாது, இந்த ஊர் நாட்டாமையை பார்க்க வந்திருக்கேன் ( பஞ்சாயத்து தலைவர்)


 அவர் தான் எங்கப்பா 
6. நல்ல முட்டையை கடைல வாங்க ஒரு வழி இருக்கு.. 3 முட்டையை வரிசையா ஒன்றன் மேல் ஒன்று அடுக்குனா நல்ல முட்டையா இருந்தா  நடுவால இருக்கற முட்டை சுத்தும் ( தலை சுத்துது)


7.  அய்யா சாமி...... ( பிச்சைக்காரனின் குரல்)


என்ன? கத்திரிக்காய் சாம்பாரா?

 ஆமாங்க, முருங்கைக்காய் கூட்டு எல்லாம் இருக்கு 

 ஹூம்8. ஏங்க.. அந்த வழியா யாராவது பாத்திரத்தோட போறதை பார்த்தீங்களா?

அட போய்யா, நானே  என் பொண்டாட்டியை  காணோம்னு தேடிட்டு இருக்கேன். 


ஓ! நம்மளை விட  கஷ்டம் உள்ள ஆளுங்க எல்லாம் இருக்காங்க போல . 9.  குழந்தை சாப்பிட்டாச்சா? 


 நல்ல வேளை பால் புட்டியை இங்கே வெச்சிருந்தேன், இல்லை, பசங்க இதையும் ஒரு ஆத்து ஆத்தி இருப்பாங்க 10. என்னய்யா வாத்தி நீ? வணக்கம் சொல்றப்போ ஒரு கையை மட்டும் தூக்கி. என்ன படிப்போ..?


சரிங்க.. இனி அப்படி பண்ணிடறேன்


என்னய்யா வாத்தி நீ? வணக்கம் சொல்றப்போ என்னமோ திருப்பதி ஏழுமலையானை கும்பிடற மாதிரி 2 கையையும் தூக்கி சொல்லிட்டு . சும்மா வாய்ல வணக்கம் சொன்னா போதாதா?


11. ரொம்ப நன்றி.. 


 தாங்க்ஸ். நாங்களும் டென் த் வரை படிச்சிருக்கோம்


12. அத்தை.. பழைய மாப்ளையா உரிமையோட என்னை பார்க்க எப்போ வேணாலும் வாங்க, ஆனா புது மாப்ளை ஆக்க ஏதாவது திட்டம் இருந்தா தயவு செஞ்சு இந்தப்பக்கமே வராதீங்க


13.  அக்கா, வாத்தியார் மயக்கமா இருக்கார்.. தண்ணி தெளி


. தண்ணி தெளிச்சா உடனே எந்திரிச்சு போயிடுவார்.. கொஞ்ச நேரம் இருக்கட்டும் அப்படியே. 


14. டேய். நான் எப்படி இருக்கேன்?


 ஹூம்.. எனக்கு வயசு பத்தலையேன்னு வருத்தமா இருக்குக்கா.. 15. பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்ளை. 


16. மகாத்மா காந்தி நம் நாட்டுக்கு..... 


 வாத்யாரய்யா மணீ எவ்ளவ்? மாட்டை சினைக்கு ஓட்டிட்டுபோகனும்.. 

இதுக்குத்தான் ஸ்கூல் பெல்லா?


 சொல்லாட்டிப்போய்ய்யா , என்னமோ இந்தாள்ட்ட  மட்டும் தான்மணி
இருக்கற மாதிரி அலட்டிக்கறீரே?


மகாத்மா காந்தி நம் நாட்டுக்கு..... 


 சுதந்திரம் வாங்கித்தராமலே இருந்திருக்கலாம்


17.  புருஷன் கிழிச்ச கோட்டை தாண்டுனா பொண்டாட்டிக்கு கேடுன்னு ராமாயணத்துல படிச்சிருக்கேன்

 அது ராமர் கிழிச்ச கோடில்லை. லட்சுமணன் கிழிச்ச கோடுங்கோவ்.. 


 ஏதோ ஒண்ணு
இலை மறை காய் மறைவாக சொல்லப்பட்ட கிளு கிளு கில்மா வசனங்கள்
1. வாத்தியாரே, புதுசா வந்திருக்கீங்க. அப்படி என்ன தான் செய்யறீங்கன்னு ஆசையா வந்து பார்த்தா ரொம்பத்தான் சலிச்சுக்கறீங்களே?ஹூக்க்ம்
2.  யோவ், உனக்கு ஏதாவது பண்ணனும் போலவே இருக்குயா. 
 நீ எதுவும்  பண்ண வேணாம்.. இடத்தை காலி பண்ணு போதும்.. 
3.  போம்மா போ.. நாட்டாமை கூப்பிடறார் இல்ல? உள்ளே போ..  ஹூம், போன வருஷம்  நான் தான் நாட்டாமை. 
4.  பொண்ணை பார்க்கறதுன்னா மூஞ்சியை பார்த்து பேசனும். எங்கெங்கோ பார்த்துப்பேசுனா?
5. ஸ்ஸ்ஸ்சார்.. உங்க கிட்டே புது சாக்பீஸ் இருக்கா? எனக்கு வேணும்..
6. கல்யாணம் புதுசா ஆனவரு ஹோட்டல்ல சாப்பிட வந்திருக்காரே?
 பொண்டாட்டியை சமைக்க விட்டா நைட்ல களைப்புல அது தூங்கிடும். அதான்.. வாத்தியாரு விபரமானவருதான்
7. நீ எதுக்காக இங்கே டிரஸ் சேஞ்ச் பண்றே?
 உனக்குத்தான் இதெல்லாம் ஆகாதே, ஏன் வேடிக்கை பார்க்கறே?
8.  ஏய்.. முந்தானையை ஒழுங்கா போடு.. 
 தூக்கத்துல அப்டி இப்டி விலகறதுதான்
9. எப்படி ஆ போடறதுன்னு சொல்லித்தர்றேன்
 ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
 டீச்சர். இன்னொருக்கா?
 ஆமாமா, ஒரு டைம்லயே எல்லாத்தையும் கத்துக்க முடியாது//
10.  டீச்சர், நான் போட்டா கோனையா (க்ராஸ்) வரும்ங்க
 கொஞ்சம் கூட சொந்தமா முயற்சியே பண்ண மாட்டேங்கறீங்களே?
இளைய ராஜாவின் கலக்கல் பின்னணி இசை ( இடைவேளை ட்விஸ்ட் )
இயக்குநரிடம் சில சந்தேகங்கள்
1. ஹீரோயின் ஹீரோவால கெடுக்கப்பட்டதா பஞ்சாயத்துல பொய் பிராது கொடுக்கறா. படத்தோட மெயின் முடிச்சு இது. வெர்ஜினிட்டி டெஸ்ட் பண்ணிட்டா மேட்டர் தெரிஞ்சுடும். கிராமத்துல ஏது அந்த வசதின்னு சொல்லி எஸ் ஆக முடியாது.. ஏன்னா க்ளைமாக்ஸ்ல அதே ஹீரோயின் கன்னி கழியாம கருத்தடை ஆபரேஷன் பண்ணபோறப்ப டாக்டர் அவருக்கு ஆபரேஷன் பண்ணாம மயக்கப்ப்படுத்தி வெச்சிருந்து ஹீரோ கிட்டே ஹீரோயின் இன்னும் கன்னி கழியாதவர்னு சொல்றார்..  
இந்த லாஜிக் மிஸ்டேக்கை சரி பண்ண படத்துல ஒரு கிராமத்து மருத்துவச்சி ஹீரோயின் கிட்டே பணம் வாங்கிட்டு உடந்தையா இருந்த மாதிரி காட்டி இருக்கலாமே?
2. ஹீரோ  மனைவியை இழந்தவர் என்ற செய்தி கேட்டு ஹீரோயின் திடுக்கிடுவது ஓகே.. ஆனா அதுக்கான எக்ஸ்பிரஷன் ஓவர் ரீ ஆக்‌ஷன். 
3. சாமியார்னா அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை காவி டிரஸ் தான். ஏன் மஞ்சள் கலர் டிரஸ் போட்டுட்டு வர்றாரு ஹீரோ இன் கண்ணைத்தொறக்கமுன் சாமி பாட்டுல ..  ( சித்து பிளஸ்டூ ல  இதே ரீமேக்  ரீ மிக்ஸ் சாங்க் ல அந்த தப்பை சரி பண்ணி இருப்பீங்க.. )
4. படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் வலியனா புகுத்தப்பட்டவை.. அவை இல்லாமலேயே விறு விறுப்பு கூட்டி இருக்க முடியும்.. 
1983 இல் இந்தப்படம்  ரிலீஸ் ஆச்சு. 

Monday, October 31, 2011

நாளைய இயக்குநர் - விமர்சனம்

Indian Peafowl 
 

Bird Photography


கலைஞர் டி வி ல ரொம்ப நாளைக்கப்புறமா கீர்த்தி கொஞ்சம் டீசண்ட்டான நைட் கவுனோட ,ஓரளவுக்கு சுமாரான  ஹேர் ஸ்டைலோட  வந்து ஜட்ஜூங்க கிட்டே ஒரு உருப்படியான கேள்வி கேட்டாங்க.. 


“சார்.. அந்தக்காலப்படங்களுக்கும், இந்தக்கால படங்களுக்கும் என்ன வித்தியாசம்?”

“ டெக்னிக்கலா ரொம்ப முன்னேறி இருக்காங்க... கதை சொல்லும் விதத்துல ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்காங்க.. உலக சினிமா எல்லாம் பார்த்து பழக்கப்பட்டதால மக்கள் ரசனை உயர்ந்து இருக்கு..  க்ளிஷே காட்சிகள் எல்லாம் வேணாம்.. சீக்கிரம் மேட்டர்க்கு வா, இழுக்காதேங்கறாங்க..”

இப்போ கீழே வருவதில் ஹெட்டிங்க்ல முதல்ல இருப்பது இயக்குநர் பெயர், அடுத்து வருவது பட டைட்டில்


1. இளங்கோ - பேயாவது , பிசாசாவது

ஒரு பார்க்ல 2 ஃபிரண்ட்ஸ் உக்காந்து பேசிட்டு இருக்காங்க.. சப்ஜெக்ட் பேய் பற்றி.. ஒருத்தன் பேய் இருக்குங்கறான், இன்னொருத்தன் இல்லைங்கறான்.. அப்புறம் 2 பேரும் ரூமுக்கு போறாங்க.. நைட் தூங்கறப்ப  ஒருத்தன் பேய் பிடிச்ச மாதிரி ஆக்ட் பண்றான்.. இன்னொருத்தனுக்கு பயம் வந்துடுது... விழிப்பு தட்டிடுது.. பாத்ரூம் போறான்.. திரும்ப வரும்போது  இன்னொரு ஃபிரண்ட் பேய் மாதிரி மாஸ்க் போட்டு பே என பயமுறுத்துறான்.. ஹார்ட் அட்டாக்ல ஆள் அவுட்..

கொஞ்ச நாள் கழிச்சு  இறந்த நண்பன் ஃபோட்டோவை ரூம்ல மாட்டி படுத்திருக்கான்.. அந்த இன்னொரு ஃபிரண்ட்.. இந்த டைம் இவன் அதே மாதிரி பாத்ரூம் போறான்.. செத்துப்போன ஃபிரண்ட் மாஸ்க் மாட்டி அதே போல் இவனை பயமுறுத்த இவனும் மேல் லோகம் போறான்.. 

இப்போ 2 பேரும் பேயாக மாறி  பேய் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம்னு ஜோக் அடிக்கறாங்க..


இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1. பேய் தன் செல்ஃபோன் ரிங்க் டோனாக  காக்க காக்க கனகவேல் காக்க என்ற சுப்ரபாத பாட்டை வெச்சிருக்கு.. அதெப்பிடி?வேற ரிங்க் டோன் சிக்கலை? சாமியும் பேயும் ஒண்ணாகிடுச்சா?

2. மாஸ்க் மாட்டிக்கிட்டு பயமுறுத்துவது முதல் டைம் ஓக்கே, செகண்ட் டைம் வேற ஆங்கிள்ல சொல்லி இருக்கலாம்.. 

3. திகில் எஃபக்ட் நல்லா ஒர்க் ஆகிட்டு வர்றப்ப அந்த க்ளைமாக்ஸ் கடி ஜோக் எதுக்கு? அது சீரியஸ் படத்தை காமெடி ஆக்கிடுச்சு..

Bird Photography

2. முருகப்பிரகாஷ் கணேசன் - இடைவெளி

ஒரு லவ் ஜோடி ரூம்ல .. யாரும் பயந்துடாதீங்க. சும்மா பேசிட்டு இருக்காங்க.. அவங்க ஃபிளாஸ்பேக்.. 

ஒரு கார் போய்ட்டிருக்கு.. ஹை டெக் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள் அதுல ட்ராவலிங்க்..  காட் டிரைவர் தான் ஹீரோ.. அவருக்கு ஒரு ஃபோன் வருது.. அம்மா பேசறாங்க, டிரைவரோட அம்மாதான்.. கலைஞர் டி வி ல அம்மா பேசற சீன் எப்படி அலோ பண்ணாங்களோ? 1800 ரூபா அனுப்ப சொல்றாங்க.. அதுக்கு ஹீரோ முயற்சி பண்றேன் கறார்.. 


ஹீரோயின் உடனே அந்த அளவு பணம் கூட உங்க கிட்டே இல்லையா?ன்னு கேட்க ஹீரோ அவரோட சுய புலம்பலை நெஞ்சை டச் பண்ற மாதிரி சொல்றாரு.. ஹீரோயினுக்கு உடனே லவ் வந்துடுது...

பொருளாதார ரீதியா இடைவெளி இருந்தாலும் காதல்க்கு அது தடை அல்ல அப்டினு சொல்ல வர்றாரு இயக்குநர்.. ஆனா........!!!!!!


இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1.   ஹீரோயின் நல்ல ஃபிரஷ் ஃபிகரா போடுங்க.. படத்துல வந்த பாப்பாவுக்கு 34 வயசு முற்றிய முகம்.. யூத் கதைக்கு செட் ஆகலை..

2. இருக்கற 8 நிமிஷத்துல டக்னு கதையை சொல்லுங்க. ஃபிளாஷ் பேக் உத்தி இந்த கதைக்கு தேவை இல்லை.. 

3. ஹைடெக் கேர்ள் அந்த டிரைவரை லவ் பண்றது நம்பற மாதிரி அழுத்தமா சொல்லலை

மனம் தொட்ட வசனம்


1. ஏய்.. நீ சொல்ற கதை எல்லாம் என் கனவுல 100 நாள் படமா ஓடிடுச்சு.. Bird Photography

3. சரவணா - அப்பா

ஃபாரின்ல 4 வருஷங்களா சம்பாதிக்க வேலைக்கு போற அப்பா.. ரிட்டர்ன் வர்றார்.. ஆனா மனைவி கிட்டே சொல்லலை.. திடீர்னு சர்ப்பரைஸ் விசிட்டா வர்றாரு.. ஃபோன் பண்ணி பேசறார்.. மனைவிக்கு செம சந்தோஷம்.. பையனை கூப்பிட்டு பேசச்சொல்றா.. ஆனா பையன் மெஷின் மாதிரி அம்மா சொல்லிக்குடுத்த மாதிரி விட்டேத்தியா பேசறான்.

அவனுக்குள்ள ஏக்கம்.. அப்பா தன் கூட இல்லையேன்னு.. ரோட்ல போற ஒரு அப்பா மகன் ஜோடி அந்நியோன்யமா கொஞ்சிட்டு போறதை ஏக்கமா பார்க்கறான்.. 

. இப்போ அந்தப்பையனோட அப்பா வீட்டு வாசல்ல வந்து நிக்கறாரு.. தன் மகனுக்காக வாங்கி வந்த பொம்மையை எல்லாம் அவன் கிட்டே எடுத்து காட்றாரு.. 

ஆனா அந்தப்பையன் உள்ளே திரும்பி “ அம்மா, பொம்மைக்காரர் வந்திருக்காரு, வாம்மா, பொம்மை வாங்கித்தாம்மா” ந்க்கரான்.. வேதம் புதிதுல  பளார் வாங்குவாரே சத்யராஜ் அந்த எஃபக்ட்.. அப்போத்தான் அவருக்கு புரியுது.. நம்ம பையன் நம்ம முகத்தையே மறந்துட்டான்னு.. இனி எப்பவும் குடும்பத்தை விட்டு பிரியக்கூடாதுன்னு  உணர்ந்து பையனை தோள்ல வெச்சு வாக் போறாரு.. முதல்ல ஏக்கமா பையன் பார்த்தானே ஒரு அப்பா பையன் ஜோடி அவங்களை இஅவ்ங்க கிராஸ் பண்றப்ப இந்தப்பையன் எங்கப்பாவும் வந்துட்டாருன்னு பெருமிதமா ஒரு பார்வை பார்க்கரானே அடடா.... டச்சிங்க்.. 

இந்தப்படம் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

1. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல.. பணம் சம்பாதிக்க நாம் வெளிநாடு சென்றால் குடும்ப பாசம் காணாமல் போகும்.. 

2. மழலைக்கு மகிழ்ச்சி தந்தை தாயின் அருகாமை மட்டும் தான்.. 

3. குடும்பம் இருப்பதற்கும், குடும்பத்துடன் இருப்பதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன..

இந்தப்படம் சிறந்த படம் விருது வாங்கியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி..
Bird Photography
4. ஆண்டனி - GOD'S MISTAKE 

 ரோட்ல ஒருத்தன் செல் ஃபோன்ல பேசிட்டே நடந்து போறான்..  லாரி வந்து அடிச்சுடுது.. ஆள் ஸ்பாட் அவுட்.. இப்போ அதிசியப்பிறவி படத்துல வர்ற மாதிரி மேல் லோகத்துல கதை.. கடவுளும், கணக்குப்பிள்ளையும் பேசிக்கறா மாதிரி..

மனிதர்கள்க்கு நல்ல பூரண ஆயுளை நான் குடுத்தேன்.. அறிவியல் கண்டு பிடிப்புகள் மூலமா அவன் தான் தன் அழிவைத்தேடிக்கறான், ஆயுளை குறைச்சுக்கறான்..  அப்டின்னு ஒரே அட்வைஸ் மழை.. ஆனா எல்லாமே சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்.. பிரச்சார நெடி இல்லாம இன்னும் சாஃப்டா சொல்லி இருக்கலாம்.. 


அவனுக்கு இன்னொரு சான்ஸ் தர்றாங்க.. . இந்த டைம் லாரிக்காரன் அவனை அடிச்சானா? அவன் தப்பினா? என்பது சஸ்பென்ஸ்..

 மனம்  கவர்ந்த வசனங்கள்

1. அங்கே பாரு, செல் ஃபோன்ல குடும்பம் நடத்திட்டே வர்றான் பாரு.. 

விடுங்க, புதுசா மேரேஜ் ஆனவன்.. மனைவிட்ட பேசிட்டு வர்றான்

2. எல்லோரும் நல்லா வாழனும்னு நான் தலை விதியை எழுதறேன், அனா மனிதர்கள் விதியை மதியால் வெல்வதாக நினைத்து தங்கள் ஆயுளை சீக்கிரம் முடித்துக்கொள்கிறார்கள்.


3.  எல்லாத்துலயும் லிமிட் வெச்சு படைச்ச நான் மனிதனோட அறிவுல மட்டும் லிமிட் வைக்க மறந்துட்டேன்.. அதான் நான் செஞ்ச தப்பு..

ரொம்ப அமெச்சூர்த்தனமான டைரக்‌ஷனா இருந்தாலும் சொல்ல வந்த கருத்து செம. வெல்டன் டைரக்டர்..Monday, September 19, 2011

நாளைய இயக்குநர் - கீர்த்திக்கு நோஸ்கட் விட்ட கே பாக்யராஜ் - விமர்சனம்

நாளைய இயக்குநர் ஆரம்பித்த நாள் முதல் கீர்த்தி செஞ்சுட்டு வர்ற கேலிக்கூத்துக்கள் உலகப்பிரசித்தம்... இயக்குநர்களாக வரும் இளைஞர்களிடம் அதி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து லூஸ்தனமாய் கேள்வி கேட்பது.. பின் வழிவது .. ஆனால் ஹாய் மதனோ, பிரதாப் போத்தனோ செய்யாத ஒரு வேலையை கே பாக்யராஜ் செஞ்சாரு.. அது என்னான்னா.......

1. ஸ்டீபன் - 1 4 3

கீர்த்தி - வாங்க ஸ்டீஃபன்.. உங்க படத்தோட பேரு என்ன?

1 4  3

லவ் சப்ஜெக்ட்டா?

கே பாக்யராஜ் - ஏம்மா , கீர்த்தி அவர் தான் தெளீவா டைட்டில் பேரை சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன லவ் ஸ்டோரியானு ஒரு கேள்வி.. ?

. சாரி. சார்.. தெரியாம கேட்டுட்டேன்.. 

படத்தோட கதை கவிதையா சொல்லப்பட்டிருந்தது./.. 

ஸ்கூல்   ஒரு கிறிஸ்டீன் டீச்சரை இந்து வாத்தியார் காதலிக்கிறார். அதை வெளிப்படுத்தும்போது. சாரி.. எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லி எஸ் ஆகறாங்க.. 

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு பேங்க்ல அவங்க 2 பேரும் மீட் பண்றாங்க. வாத்தியாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அந்த டீச்சர் காரணம் கேட்கறாங்க.. அப்போ கரெக்டா அவருக்கு டோக்கன் நெம்பர் வரிசை வந்துடுது.. நெம்பர் 143 .. எனக்கான அழைப்பு இப்போ வந்துடுச்சுனு சொல்லி அவர் எழறார்.. 

ரொம்ப நீட்டா கதை சொல்லப்பட்டிருக்கு..

1980 கதை நடக்கறதா காட்டுனாலும் பீரியட் ஃபிலிமுக்கான மெனக்கெடல் இருந்துச்சு.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. எனக்கு தெரிஞ்சு 1 4 3 என்பது 1994 தான் புழக்கத்துக்கு வந்தது.. ஆனா கதை நடக்கும் கால கட்டம் 1980...

2. ஹீரோயின் ஸ்டெல்லா கிறிஸ்டியனா இருந்தாலும் இந்து போலவே அழகாக பொட்டு வெச்சு பூ வைத்திருக்கிறார்.. எப்டி? ( அவர் தீவிர மதப்பற்று உள்ளவராக காட்டி விட்டதால் சமாளிஃபிகேஷனுக்கு வழி இல்லை.. )

3. அந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள், மாணவிகள் , டீச்சர் என எல்லோருக்கும்  1 4 3 பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் ஹீரோ வாத்தியாருக்கு மட்டும் தெரியவில்லை.. அவர் என்ன சின்னத்தம்பி பிரபுக்கு சின்னத்தம்பியா?

ரசிக்க வைத்த காட்சி - தனது காதலை சொன்ன வாத்தியார் டீச்சரிடம் வேணும்னா எங்க  அம்மா அப்பாவை உங்க கிட்ட வந்து பேசச்சொல்றேன்.. என பம்முவது.


கே பி கமெண்ட்  -  எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லிடறதோட முடிச்சிருக்கலாம், எதுக்காக அந்த டீச்சர் தான் கிறிஸ்டியன் .. அவர் ஹிந்துன்னு எக்ஸ்ட்ரா பிரச்சனையை கிளப்பனும்..?மத்தபடி படம் நீட். இசை அழகு.. மாண்டேஜ் ஓக்கே... 


2. பாரதி பாலா - அவள் பெயர் அழகி..

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஃபிகர் அலங்காரம் பண்ணிட்டிருக்கறதை ஸ்டெப் பை ஸ்டெப்பா காட்டறாங்க.. பார்க்கற ஆடியன்ஸ் பாப்பாவுக்கு மேரேஜ் போலன்னு நினைக்க வைக்குது.. ஒரு ஃபிளாஸ்பேக்.. பாப்பா ஒரு காலிப்பையலை லவ் பண்ணுது. வீட்ல முறைப்பையனை கட்டிக்க சொல்றாங்க.. அவளோட லவ்வர் வீட்டை விட்டு ஓடிப்போயிடலாம்.. உன் கிட்டே இருக்கற பணம் , நகை எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்கறான்

இந்த பொண்ணுங்களுக்கு அறிவே இல்லை.. எத்தனை படம் பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கெட்டவன் கிட்டே மாட்டிக்குவாங்க.. நல்ல ஆணை மனம் புண் படற மாதிரி பேசுவாங்க

அவ்வளவுதான். அவன் மேரேஜ் பண்ணி அவளை அந்த மாதிரி இடத்துல வித்துடறான். இதெல்லாமே குறிப்பால் உணர்த்தப்படுது.. இப்போ அவ அலங்காரம் பன்றது மேட்டருக்கு ரெடி ஆக.. ஒரு குரல் கேட்குது.. ஏம்மா பொண்ணு ரெடியா? கஸ்டமர் ரெடி

இந்தப்படத்துல ஹீரோயின் செம ஃபிகர்.. நல்ல அமைதியான நடிப்பு.. அவளோட மாமன்  பையனா வர்றவர் காமெடி நடிப்பில் கலக்கறார்.. பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பாட்டுக்கு அவர் பொண்ணுக்கு வளையல்போட்டு விடுவதும், அதற்கு ஹீரோயின் காட்டும் ரி ஆக்ஷனும் கலக்கல்..

கே பி கமெண்ட் - ஹீரோயின் செலக்ஷன் ஓக்கே.. பிளசண்ட் & இன்னொசண்ட்
பொண்ணுக்கு மாமா பிடிக்கலைன்னு சொல்லத்தேவை இல்லை.. கதையோட நாட் ஹீரோயின் காதலனை பேஸ் பண்ணித்தானே இருக்கு?3.  சஞ்சய் - சத்தியம்

ஒரு போலீஸ் ஜீப்ல 3 கொலைக்குற்றவாளீகளை கூட்டிட்டு போறாங்க.. ஒரு எம் எல் ஏவை கொன்ற கூலிப்படைகள் , யார் ஏவியதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க.. 

ஒரு அடர்ந்த காட்டுப்பகுதில ஜீப் நிக்குது.. 3 பேர்ல ஒருத்தனை இன்ஸ்பெக்டர் தனியா கூட்டிட்டு போறார்... கேமரா அவங்க பின்னால போகலை.. ஜீப்லயே காட்சி நிக்குது.. டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது... 

அவ்ளவ்தான் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்.. இப்போ 2 வது ஆளை கூட்டிட்டு போறார்.. கொஞ்ச நேரத்துல அதே போல் டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது.. இப்பவும் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்...இப்போ 3வது ஆளுக்கு ஈரக்குலை எல்லாம் நடுங்குது.. 

கால்ல விழுந்து கதறிடறான்.. லோக்கல் வி பி ஒருத்தர் தான் கொலை செய்யத்தூண்டுனதா ஒத்துக்கறான்.. இப்போ இறந்ததா நினைக்கப்பட்ட 2 பேரும் உயிரோட வர்றாங்க. இப்போ தான் உண்மை தெரியுது,.. என்கவுண்ட்டர் நடக்கவே இல்லை.. உண்மையை வரவைழைக்க என்கவுண்ட்டர் பயம் மட்டும் ஊட்டப்பட்டிருக்கு.. 

போலீஸ் ஜீப்பில் கைதிகள் கலாய்த்த வசனங்கள்

1. சார்..போர் அடிக்குது பாட்டுப்போடுங்க.. அட்லீஸ்ட் கிரிக்கெட் ஸ்கோராவது போடுங்க கேட்போம்..

2. என்ன சார்.. மிரட்றீங்களா? 60 வயசு வரை வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்? ஐஸ்வர்யாராய் கூட குடும்பமா நடத்தப்போறேன்? உங்கே சுடுங்க சர்ர்.. இங்கே சுடுங்க.. 

3.  .. இவர் பெரிய ராகவன் பி எஸ்.. கால் பண்றார்... டேய் போடா..... 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. கான்ஸ்டபிளா வர்றவர் அவ்ளவ் லீனா மனோபாலாவுக்கு தம்பி மாதிரி இருக்காரே? கொஞ்சம் பாடி உள்ள ஆளை போட்டிருக்கக்குடாதா?

2. என்கவுண்ட்டர் நாடகத்துல குண்டு சத்தம் மட்டும் தான் கேட்குது.. !! அய்யோ என மனித அலறல் சத்தம் கேட்கலை.. துப்பாக்கி முனைல மிரட்னா அவன் அலறிட்டு போறான்.. இன்னும் எஃபக்டா இருந்திருக்குமே?

கே பி கமெண்ட் - கொலைக்கைதிகளா ஜீப்ல அழைச்சிட்டு போகப்படறவங்க ஒரு பயம் இல்லாம ஜாலியா கமெண்ட்  அடிச்சுட்டே வர்றாங்க.. அது எப்படி?

சுந்தர் சி - நீங்க கீர்த்திட்ட பேசறப்போ ஜெயிச்சுடுவீங்களா?ன்னு கேட்டதுக்கு ம் ட்ரை பண்றோம்.. பார்க்கலாம்னு அசால்ட்டா பதில் சொன்னீங்க.. அது தப்பு நம்மால முடியும்கற கான்ஃபிடண்ட்டோட உழைக்கனும்,, அது லைஃப்லயும் சரி.. சினிமாலயும் சரி.. 


4. ராமானுஜம் - மீண்டும் ஒரு குழந்தை


 ஒரு ஆகாவளி தன்னோட நோயாளி அம்மாவை ஹாஸ்பிடல்ல நைஸா விட்டுட்டு எஸ் ஆகிடறான்..அந்தம்மாவுக்கு மேட்டர் தெரில.. பையன் வருவான் வருவான்னு வெயிட்டிங்க்.. ஹீரோ வந்து என்ன மேட்டர்னு கேட்டா அந்தம்மா இந்த சீட்டை என் பையன் என் கிட்டே கொடுத்து இங்கே விட்டுட்டு போயிருக்கான், வந்துருவான்குது. 

அந்த சீட்ல பையனோட ஃபோன் நெம்பர் எழுதப்பட்டு இந்தம்மா இறந்துட்டா மட்டும் இந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணுங்கன்னு எழுதப்பட்டிருக்கு,,

மேட்டர் தெரிஞ்சதும் அம்மா ஷாக் ஆகிடறாங்க.. என்னை ஏதாவது அநாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுடுங்கனு சொல்றாங்க.. ஹீரோ தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போறார்.. எனக்கு 2 குழந்தைங்க. 3 வதா நீங்களும் இருந்துடுங்க எங்களுக்கு குழந்தையாங்கறார்..

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. 50 லட்சம் பங்களாவில் வசிப்பவர் காரிலோ, பைக்கிலோ வராமல் ஏன் ஆட்டோவில் வர்றார்?


2. அந்தம்மாவை வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவு எடுத்தது ஓக்கே, அதைப்பற்றி ஃபோன்ல அவர் மனைவிக்கு தகவலாகக்கூட ஏன் சொல்லலை?

படத்தில் மனம் தொட்ட வசனங்கள்

1. எத்தனை வேலை இருந்தாலும், பிஸியா இருந்தாலும் பெத்தவங்களை காப்பாத்தறது முக்கியக்கடமை

2. லைஃப்ல எல்லாருமே குழந்தைகளா வர்றோம், அப்புறம் பெற்றோர் ஆகறோம், மீண்டும் குழந்தைகளா ஆகறோம்... குறிப்பிட்ட வயசுக்குப்பிறகு..

கே பி கமெண்ட் - படம் டாக்குமெண்ட்ரி எஃபக்ட் தருது.. ஒரு சாதாரண கம்பவுண்டர் அவ்ளவ் மெச்சூரிட்டியா வசனம் பேசறது நம்பற மாதிரி இல்லை

ஆட்டோ டிராவல் பண்றப்ப லைடிங்க் எஃபக்ட் அழகா கொடுத்திருக்காங்க.. டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட் அந்த வயசான அம்மாவுக்கு நல்லா குரல் குடுத்திருக்காங்க.. 

அம்மாவா நடிச்சவங்க ரொம்ப பழைய நடிகை.. புதிய தலை முறை மட்டும் அல்லது முதிய தலைமுறைக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி ஒரு ஏணியா இருக்கு.. 

மேலே சொன்ன துல முதல் படத்துக்கு சிறந்த படம் அவார்டும், சிறந்த நடிக்கான விருது அவள் பெயர் அழகி ஹீரோயினுக்கும், சிறந்த டெக்னீஷியனுக்கான விருது கடைசிப்படத்துல ஒளிப்பதிவாளருக்கும் கிடைச்சது. 

Living DOLL