Saturday, February 26, 2011

ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்


http://mp3.tubeindia.net/wp-content/plugins/wp-o-matic/cache/ff066_Aaraan-Tamil-Movie-2011-ACD.jpg

கோடம்பாக்கத்துல அடிக்கடி ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கனும்னு ஒரு குரல் அடிக்கடி கேட்டுட்டே இருக்கும், அல்லது ஒலிச்சுட்டே இருக்கும் (2ம் ஒண்ணுதானோ?)அது இந்தப்படத்தோட டைரக்டருக்கு அப்படியே உள் மனசுல பதிஞ்சுடுச்சு போல.. அப்படியே ஆங்கிலப்படமாட்டமே எடுத்திருக்காரு.....

அதாவது படமாக்கம், கதை ,திரைக்கதை போன்றவற்றில் அப்படி என அர்த்தம் இல்ல. மொத்தப்படமே 90 நிமிஷம்தான்.( அதுக்கே முடியல)

அறிமுக நாயகன் அஜய் நம்ம தன்மானச்சிங்கம் டி ராஜேந்தருக்கு தம்பி மாதிரி இருக்காரு. பாக்கவே சகிக்கலை.இதுல கலரிங்க் ஹேர் வேற. கலரிங்க் ஹேரோட அவர் நடந்து வர்றப்ப புதுமைப்பித்தன்  ஆர்.பார்த்திபன் மாதிரியே இருக்காரு.(உவ்வே..)

தமிழ் சினிமாவில் காமெடிக்காட்சிகள் குறைந்து வருகின்றன  என சமீபகாலமாக குற்றம் சொல்லுபவர்கள் இந்தப்படத்தில் ஹீரோ போடும் ஃபைட் சீன்களையும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களையும் பார்த்தால் போதும். வயிறு குலுங்க சிரிக்கலாம். செம காமெடி நைனா...
http://www.cinemaexpress.com/Images/article/2010/10/24/ban.jpg
ஹீரோயின் புது முகமாம்....இதை நாங்க நம்பனுமாம். சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கு போல.... பார்ட்டி பேரு சோனியா பட்.ஃபிகர் பார்க்கற ஆசையே விட்டுப்போயிடும் போல.

எனக்கு ஹீரோ - ஹீரோயின் ரெண்டு பேரும் சொதப்பலா அமைஞ்சது கூட வருத்தம் இல்ல, படம் டப்பாவா போனது கூட ஓக்கே.. இந்த புரொடியூசரை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.எந்த நம்பிக்கைல பணம் போட்டாரு.?இதையும் நம்பி எப்படி படம் எடுத்தாரு? எப்படி தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு?

சரி படத்தோட கதை என்ன?ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர்.. ( இவ்வளவு கேவலமான போலீஸ் ஆஃபீசரை நான் என் லைஃப்லயே பார்த்ததில்லை.). அவரை ஒரு பொண்ணு விரட்டி விரட்டி லவ் பண்ணுது.(அந்த பொண்ணே வறட்டி மாதிரிதான் இருக்கு ) ஹீரோ வற டீ மாதிரி இருக்கார். நல்ல ஜோடி பொருத்தம்.

அந்த ஊர் தாதா அண்ணாச்சி.ஹீரோயின் கிட்டே சொல்றாரு. உன் ஆளை நாங்க போட்டுத்தள்ளாம இருக்கனும்னா நீ அவனை லவ் பண்ற மாதிரி நடிச்சு உன் வலைல விழுந்த பிறகு விலகி வந்துடனும்.அவன் ஆற்றாமையில வெந்துடுவான். அதான் எனக்கு வேணும்.

http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_47328913212.jpg
லவ் பண்ணுற மாதிரி நடிக்கற ஹீரோயின் நிஜமாவே லவ் பண்ண ஆரம்பிச்சுடறா..ஒரு கட்டத்துல ( ஏன் சதுரத்துல இல்லையா?) எதிர்பாராத விதமா ஹீரோயினை வில்லன் கொன்னுடறாரு.அப்புறம் ஹீரோ பைத்தியம் மாதிரி வேஷம் போட்டு ( வேஷம் போடாமையே அவரு அப்படித்தான் இருக்காரு.) வில்லனை கொன்னுடறாரு. மொத்தத்துல படம் பார்க்கற ஆடியன்சை கொன்னெடுத்துடறாங்க...

மழையே மழையே மார்கழி மழையே பாட்டு வரிகள் நல்லாருக்கு. பாடல் படமாக்கப்பட்ட விதம் படு திராபை.அப்ப்புறம் மின்னல் சூரியனா?ன்னு ஒரு பாட்டு படு கேவலம்.அதற்கான சிச்சுவேஷன் காக்கிச்சட்டை பட்டுக்கன்னம் பாட்டுக்கான அதே இடம்.

படத்துல வர்ற எல்லா நடிகர்களுமே ஏதோ நாடக நடிகர்கள் மாதிரி வந்து வசனத்தை ஒப்பிக்கறாங்க... 

படு கேவலமான இந்த படத்துலயும் வந்த சில நல்ல வசனங்கள்

1.  உனக்கு எது நல்லதுன்னு நினைச்சு அதை மட்டும் செய்டா..

சரி சரி.. நாயர் கடைல டீ சொல்லு 4 பேருக்கும்.நாயருக்கு நல்லது.


2.கைதி - ஏட்டய்யா.. உங்க முகத்தையும்,லாக்கப் சுவரையும் பார்த்து பார்த்து போர் அடிச்சிடுச்சு.ஏதாவது டி வி இருந்தா போடுங்க...

யோவ்.. அதெல்லாம் பெரிய தப்பு பண்ற அரசியல் வாதிகளுக்கு... நீ சின்னத்தப்பு தானே பண்ணி இருக்கே..?

அப்போ ரிலீஸ் பண்ணி விடுங்க.. போய் பெரிய தப்பு பண்ணிட்டு வர்றோம்.

3. டேய்.. என்னை என்ன பைத்தியம்னு நினைச்சீங்களா?

ம்ஹூம், எந்தப்பைத்தியம் தன்னை ஒரு பைத்தியம்னு ஒத்துண்டிருக்கு.?

http://farm6.static.flickr.com/5007/5370031823_10e7d7cac7_o.jpg
4. ஹீரோ - ஐ லவ் யூ

ஹீரோயின் - வாட்?

ஹீரோ - ம் நான் உன்னை காதலிக்கிறேன்..

ஹீரோயின் - ஓ. தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்றீங்களோ// ( இது காமெடி சீன்.. கை தட்டனும் )

5. வில்லன் - நான் உயிரோட இருக்கறப்பவே எல்லாவித மரியாதையும் எனக்கு கிடைக்கனும்.

6. முதன் முதலாக காதலை வெளீப்படுத்திய பிறகு ஹீரோ - ம் எங்கே போலாம்?

ஹீரோயின் -   ம்.. எங்கே வேணும்னாலும். ( வாழ்க பத்தினி )
(
7. ஹீரோயின் - இந்த டிரஸ்நான் எப்படி இருக்கறேன்? ( எந்த டிரஸ் போட்டாலும் நீ தேற மாட்டே)

ஹீரோ  - சகிக்கல  ( அப்படி இருந்தும் விட மாட்டேங்கறியே..)

8. ஹீரோவின் அம்மா - பெரிய மனுஷங்களை பகைச்சுக்காதேப்பா.. நாம் போற வழில பள்ளம் இருந்தா ஒண்ணூ தாண்டிப்போகனும், அல்லது சுத்திப்போகனும்.. நீ அந்த பள்ளத்துலதான் இறங்கிப்போவேன்னு சொன்னா எப்படி?

9/. ஒரு பொண்ணு லவ் பண்ணாமயே வேணா இருப்பா.. ஆனா லவ் பண்றதா நடிக்கறேன்னு எல்லாம் சொல்ல மாட்டா...

10. வில்லன் - பொண்ணுங்க விஷயத்துல நான் வீக் கிடையாது. அப்படி நான் வீக்கா இருந்தா தலைவன் ஆகி இருக்க முடியாது. ( தமிழ்நாட்ல பெண்கள் விஷயத்துல வீக்கா இருக்கறவங்க தான் பெரிய பெரிய கட்சிப்பதவிகள்ல இருக்காங்க )

இந்தப்படம் ஏ ,பி , சி ஆகிய 3 செண்ட்ட்ர்லயும் தலா 3 நாட்கள் ஓடுனாலே அதிசயம் தான்.

ஆனந்த விகடன், குமுதம் மூச்...........ஸ்டில் கூட போட மாட்டாங்க.....



டிஸ்கி - 2   மார்கழி 16 - அழகிய காதல் சொதப்பல் - சினிமா விமர்சனம்

42 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

ம.தி.சுதா said...

////அவர் நடந்து வர்றப்ப புதுமைப்பித்தன் ஆர்.பார்த்திபன் மாதிரியே இருக்காரு////

நானும் நீங்களும் சேர்ந்து வார மாதிரியா ?

சக்தி கல்வி மையம் said...

உள்ளேன் ஐயா...

ரஹீம் கஸ்ஸாலி said...

மதி சுதாவுக்கு சுடுசோறு....எனக்கு வடை

ம.தி.சுதா said...

என்ன சீபிஎஸ் காமடி பரவாயில்லை போல...

ம.தி.சுதா said...

ரஹீம் கஸாலி said...
மதி சுதாவுக்கு சுடுசோறு....எனக்கு வடை

.............

வாங்க அண்ணாத்தை ஒரே இலையிலேயே சாப்பிடுவாம்...

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் சுதா.. நானே நொந்து போய் இருக்கேன்...

சி.பி.செந்தில்குமார் said...

♔ம.தி.சுதா♔ said...

ரஹீம் கஸாலி said...
மதி சுதாவுக்கு சுடுசோறு....எனக்கு வடை

.............

வாங்க அண்ணாத்தை ஒரே இலையிலேயே சாப்பிடுவாம்...

அப்பாடா.. 2 பேரும் எனக்கு அண்னாத்தே.. இப்பவாவது ஒத்துக்கிட்டாங்களே.

நர்மதன் said...

மொக்கை படங்களை பார்க்கும் சி.பி.சார் உங்கள் தியாக உள்ளம் யாருக்கு வரும்... வாழ்க பல்லாண்டு

மொக்கை பட ஆதரவு நாயகன் சி.பி சார் வாழ்க

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படிச்சாச்சி..
ஓட்டு போட்டாச்சி..
கிளம்பியாச்சி..

Speed Master said...

ஓட்டு போட்டு ஓடிற்றேன்


கணிணி நிரல் சி & சி ++ விளக்கம் (C vs C ++)
http://speedsays.blogspot.com/2011/02/c-vs-c.html
பதிவர்களுக்கும் பதியவர்களுக்கும் புரியும் வண்ணம்
கணிணி மொழியில் மிகவும் புகழ்பெற்ற மொழிகள் (எனக்கு நன்கு தெரிந்த மொழிகளில்) சி மற்றும் சி ++ பற்றி சிறிய விளக்கம் கொடுத்துள்ளேன், நிச்சயம் பயன்படும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I LIKE THIS MOVIE

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I LOVE THIS MOVIE

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I ALWAYS ENCOURAGE THIS KIND OF MOVIE.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

BCOZ, ITS A GREAT EXAMPLE FOR HOW A FILM SHOULDN'T BE........ HI......... HI.......HI.......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

OK BYE SENTHIL

Unknown said...

ஆனா சிபி உங்க பாலிசி எனக்கு புடிச்சிருக்கு.........பாருங்க அந்த படத்தோட ஹீரோயின் ஸ்டில்லு கொடுமையா இருக்குன்னு சொல்லி இன்னொரு கும்தலக்கடி ஸ்டில்லு போட்டு தேத்திடீங்க ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க குடுத்த ஐடியா தான்

Unknown said...

இது எப்போ சொல்லவே இல்லை ஹி ஹி!

செங்கோவி said...

அடுத்து அண்ணன் சி.பி, ‘காதல் உதிரும் பருவம்’ பார்த்து தன் கருத்துக்களை முன்வைக்க வேண்டுமென 375 ஃபாலோயர்ஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

என்னை விட 12 வயது மூத்தவரான அண்ணன் செங்கோவி அவர்கள் என்னை அண்ணன் என நக்கலாக அழைத்ததை கண்டித்து எனது பதிவை விட்டு நானே வெளி நடப்பு பண்றேன்

Unknown said...

//வாங்க அண்ணாத்தை ஒரே இலையிலேயே சாப்பிடுவாம்...

அப்பாடா.. 2 பேரும் எனக்கு அண்னாத்தே.. இப்பவாவது ஒத்துக்கிட்டாங்களே.
/
ஹிஹி இம்புட்டு காலமும் இது தெரியாமலா வண்டி ஓட்டிநீங்க?

Unknown said...

//படத்துல வர்ற எல்லா நடிகர்களுமே ஏதோ நாடக நடிகர்கள் மாதிரி வந்து வசனத்தை ஒப்பிக்கறாங்க...

படு கேவலமான இந்த படத்துலயும் ////
அத கூட விடமாட்டீங்க போல?

Unknown said...

//அறிமுக நாயகன் அஜய் நம்ம தன்மானச்சிங்கம் டி ராஜேந்தருக்கு தம்பி மாதிரி இருக்காரு. பாக்கவே சகிக்கலை.//\
ஐயோ அடுத்த ஆளா??
இன்னுமொரு டி ஆர் நாடு தாங்காதப்பா!

Thirumalai Kandasami said...

பாஸ், படம் குடுத்த அதிர்ச்சியில்,கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டிங்க போல. இந்த படத்தை,எத்தனை பேர் தியேடர்ல பார்த்தாங்க?..

சி.பி.செந்தில்குமார் said...

13 பேர்.. ஹி ஹி

Unknown said...

ஒரு வேல 13 பேரும் சிபி மாதிரியே எவ்ளோ குடுத்தாலும் தாங்குரவங்க போல ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

யாரோ என் பிளாக்கை உளவு பார்க்கறாங்க போல.. எஸ்கேப் ஆகிக்கனும்

Jana said...

யாரோ என் பிளாக்கை உளவு பார்க்கறாங்க போல..

நாமதான் இதை மொதல்லையே உங்ககிட்ட சொன்னோம்ல???

MANO நாஞ்சில் மனோ said...

//அறிமுக நாயகன் அஜய் நம்ம தன்மானச்சிங்கம் டி ராஜேந்தருக்கு தம்பி மாதிரி இருக்காரு.//

இப்பிடி போட்டு வாருரீறேயய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ் சினிமாவில் காமெடிக்காட்சிகள் குறைந்து வருகின்றன என சமீபகாலமாக குற்றம் சொல்லுபவர்கள் இந்தப்படத்தில் ஹீரோ போடும் ஃபைட் சீன்களையும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களையும் பார்த்தால் போதும். வயிறு குலுங்க சிரிக்கலாம். செம காமெடி நைனா...//

கூலி படை ரெடி.....

MANO நாஞ்சில் மனோ said...

//இந்தப்படம் ஏ ,பி , சி ஆகிய 3 செண்ட்ட்ர்லயும் தலா 3 நாட்கள் ஓடுனாலே அதிசயம் தான்.//

நாசமா போவ....

Vignesh said...

erode adayar puthusu pannitanga pola? athai pathi oru pathivu podalamae?

தமிழ்வாசி பிரகாஷ் said...

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் உங்கள் கேள்விகளை கேளுங்கள். பதிலளிக்க காத்திருக்கிறார்.

அன்பு said...

விமர்சனம் படிக்க முடியாமல் சிப்பு சிப்பா வருது......

கோவை நேரம் said...

மொக்கை படத்திற்கும் நீண்ட விமர்சனம் ....எப்படிங்க உங்கள மட்டும் முடியுது.... நீங்க தெய்வம் ....

Philosophy Prabhakaran said...

இந்த ஓலகப்படத்துக்கு ஒலகத்துலையே விமர்சனம் எழுதின ஒரே ஆள் நீங்க தாங்கோ...

உணவு உலகம் said...

//தமிழ் சினிமாவில் காமெடிக்காட்சிகள் குறைந்து வருகின்றன என சமீபகாலமாக குற்றம் சொல்லுபவர்கள் இந்தப்படத்தில் ஹீரோ போடும் ஃபைட் சீன்களையும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களையும் பார்த்தால் போதும்.//
நச்சென்ற விமரிசனம்.

Anonymous said...

//எனக்கு ஹீரோ - ஹீரோயின் ரெண்டு பேரும் சொதப்பலா அமைஞ்சது கூட வருத்தம் இல்ல, படம் டப்பாவா போனது கூட ஓக்கே.. இந்த புரொடியூசரை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.எந்த நம்பிக்கைல பணம் போட்டாரு//

நீங்க மற்றும் உங்க கூட தியேட்டர்ல வீம்புக்குன்னே படம் பார்த்த எல்லாரையும் நம்பித்தான். இந்த மாதிரி படம் பாக்க உங்களுக்கு தொடர்ந்து யாரு பைனான்ஸ் பண்றாங்கன்னு தெரியலியே?

அக்கப்போரு said...

செந்தில் சார் இந்த மாதிரி மரண மொக்கப் படம் எப்பல்லாம் வருதோ அப்பல்லாம் நீங்க பாத்துட்டு வந்து இப்டி விமர்சனம் எழுதுறிங்களே ( எங்கள காப்பாத்த ) அதுக்காக நன்றி சார்.

நிலவு said...

ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

பாண்டியன் said...

என்னது படம் ரிலிஸ் ஆகிடுச்சா?