Friday, February 04, 2011

எட்டுப்பட்டியும் எள்ளி நகையாடிய ராசா - காமெடி கும்மி

http://www.tamilcnn.com/images/stories/tamilcnn/january2011/india/anchalii.gif 
.1. ஊழல் வழக்குல கைதான தலைவரை எல்லோரும் பாராட்டறாங்களே..?

கைதாகி  24 மணி நேரம் ஆகியும்  அவருக்கு இன்னும் நெஞ்சு வலி வர்லையே..

---------------------------------------

2.கூட இருந்தே குழி பறிக்கறவங்க நம்ம கட்சில ஜாஸ்தினு எப்படி சொல்றீங்க தலைவரே,..?


பின்னே என்னய்யா..?நான் கைதானதும் எல்லாருக்கும் ஸ்வீட் குடுத்து  நம்ம கட்சி ஆளூங்களே கொண்டாடுனா...?

--------------------------------------------------

3 தலைவரோட அலம்பலுக்கு ஒரு அளவே இல்லைன்னு எப்படி சொல்றே,,?

என்னை கைது செய்தது இயற்கைக்கே பொறுக்கலை..அதனாலதான் என்னை அரெஸ்ட் பண்ணுன அதே நாள் ஜப்பான்ல எரிமலை வெடிச்சுதுன்னாரே..?

----------------------------------------

4.தலைவர் எப்பவும் தன்னையும்,தன் குடும்பத்தையும் ஏழையாவே நினைச்சுக்கறார்..

எப்படி சொல்றே..?

இறுதி மூச்சு உள்ளவரை ஏழை மக்களுக்காக பாடுபடுவேன்னாரே...

--------------------------------------------------------------------------------


5.தலைவரே.. நீங்க கைது ஆனதா பேப்பர்ல நியூஸ் பார்த்தேன்,பதட்டமே இல்லாம இருக்கீங்களே..?

விடப்பா.. நாளைக்கே நான் ஜாமீன்ல வந்ததா நியூஸ் வரும் பாரு..

--------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/neetu-chandra-17a.jpg

6. தலைவரு இப்படி எல்லாம் பெருமை அடிச்சுக்கக்கூடாது...

ஏன்?


சின்ன வயசுல இருந்தே நான் ஊழல் பண்ண ஆரம்பிச்சுட்டேன் அப்படிங்கறாரே?

------------------------------------------------------------

7.கபாலிக்கு லொள்ளு ஜாஸ்தி ஆகிடுச்சு..

ஏன்?

நான் ஒரு தலீத் அப்படிங்கறதாலதான் என்னை லாக்கப்ல போட்டீங்க அப்படின்னு கேட்டு  பிரச்சனையை திசை திருப்பறானே...

-------------------------------------------

8.பாட்டுப்போட்டிக்கு வந்தவன் ரஜினி ரசிகன் போல ...

எப்படி  சொல்றே..?

ஸாரி.. நான் வாய்ஸ் தர மாட்டேன்கறானே..

-----------------------------------------------------


9.தலைவரே. உங்க லட்சியம் என்ன?

எல்லாரும் இந்த 1 3/4  லட்சம் கோடி ஊழலையே பெரிசா பேசறாங்க..அதை பிரேக் பண்ற மாதிரி ஊழல் பண்ணனும்.,

---------------------------------------------

10. நடிகை - முதல்லயே சொல்லிடறேன்.. எனக்கு ழ சரியா வராது...

டைரக்டர் - முதல்லயே வராதுன்னா கடைசில வருமா?


----------------------------


டிஸ்கி 1 -  இன்னைக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகுது. தூங்கா நகரம் பட அஞ்சலி ஸ்டில் தான் முதல்ல இருக்கறது.. யுத்தம் செய் பட நீது சந்திரா ஸ்டில்தான் 2வது..இஷா கோபிகர் நடிச்ச சீன் படமான மின்சாரக்காதலி  பட ஸ்டில் ரொம்ப ஓவரா இருந்ததால போடல. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு ஓபி அடிக்க வாய்ப்பு கிடைச்சா மூணுல ஏதாவது ஒரு படம் பார்த்து விமர்சனம் போடலாம்னு ஒரு ஐடியா..


டிஸ்கி 2 -  கடைசியா போட்ட நடிகை ஜோக்குக்கும் ,நீது சந்திராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

26 comments:

எல் கே said...

ஜோக்ஸ் சூப்பர்

Philosophy Prabhakaran said...

இதுக்கு எட்டுப்பட்டி "ராசா" தலைப்பே பொருத்தமா இருந்திருக்கும்... எதுக்காக பக்கம் பக்கமா தலைப்பு வைக்கிறீங்க... try to be short and sweet...

Philosophy Prabhakaran said...

// இன்னைக்கு ஆஃபீஸ்க்கு ஓபி அடிக்க வாய்ப்பு கிடைச்சா மூணுல ஏதாவது ஒரு படம் பார்த்து விமர்சனம் போடலாம்னு ஒரு ஐடியா.. //

இன்னைக்கு உங்க மேனேஜர் உங்களுக்கு ரிவீட் அடிக்கனும்னு எங்க கொலதெய்வம் பாடிகாட் முனீஸ்வரனை வேண்டிக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

// இன்னைக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகுது. தூங்கா நகரம் பட அஞ்சலி ஸ்டில் தான் முதல்ல இருக்கறது.. யுத்தம் செய் பட நீது சந்திரா ஸ்டில்தான் 2வது..இஷா கோபிகர் நடிச்ச சீன் படமான மின்சாரக்காதலி பட ஸ்டில் ரொம்ப ஓவரா இருந்ததால போடல. //

ஏன் அந்த படத்துல எல்லாம் ஆம்பளைங்களே நடிக்கலையா...

Philosophy Prabhakaran said...

நீத்து சந்திராவின் மஞ்சள் புடவை ஸ்டில் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

பிரபாவுக்கு நல்ல எண்ணம்

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

ஜோக்ஸ் சூப்பர்

நன்றி பெரியப்பா

சி.பி.செந்தில்குமார் said...

Philosophy Prabhakaran said...

இதுக்கு எட்டுப்பட்டி "ராசா" தலைப்பே பொருத்தமா இருந்திருக்கும்... எதுக்காக பக்கம் பக்கமா தலைப்பு வைக்கிறீங்க... try to be short and sweet...

ம் ம் கரெக்ட்தான்.. சரி விடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

Philosophy Prabhakaran said...

// இன்னைக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகுது. தூங்கா நகரம் பட அஞ்சலி ஸ்டில் தான் முதல்ல இருக்கறது.. யுத்தம் செய் பட நீது சந்திரா ஸ்டில்தான் 2வது..இஷா கோபிகர் நடிச்ச சீன் படமான மின்சாரக்காதலி பட ஸ்டில் ரொம்ப ஓவரா இருந்ததால போடல. //

ஏன் அந்த படத்துல எல்லாம் ஆம்பளைங்களே நடிக்கலையா...

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Philosophy Prabhakaran said...

நீத்து சந்திராவின் மஞ்சள் புடவை ஸ்டில் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்...

February 4, 2011 7:23 AM

அதை எனக்கு ஈ மெயில் பண்ணவும்.

சிவகுமாரன் said...

எத்தனைப் பட்டி எள்ளி நகையாடினா என்ன.? எங்களுக்குத் தெரியும்ல எப்படி வெளியே வர்றது. , எங்கே யாரை எப்படி எதால அடிச்சா . எலெக்சன்ல ஜெயிக்கிலாம்னு .... போங்க சார். போய் படத்தப் பார்த்துட்டு விமர்சனம் பண்ற வேலையைப் பாருங்க.

Srini said...

" சிரிப்புகள் நன்றாக உள்ளன. அனைத்தும் படித்து சிரித்து மகிழ்ந்தேன். உஙகளுக்கு என் பாரர்ட்டுகள் அண்ணா வாழ்க வளமுடன் “

இப்படிக்கு....,
பஷீதாபானு
ஃபாத்திமா
மெஹ்ருன்னிஷா
இந்து
சாய்மா அஹ்மத்
---------------------------------
“ இவங்கள்லாம் 3,4 ம் வகுப்பு படிக்கிற ஸ்ட்ரீட் ரெளடீஸ்.. நான் கமெண்ட் போடறத பாத்துட்டு அவங்களுக்கும் போடசொன்னாங்க.. உங்களோட இன்னிக்கு ஜோக்ஸ் அவங்களுக்கு புரியலையாம் அதனால புடிக்கலையாம் ...ஹிஹி

Srini said...

" நடிகைக்கு “ ழ “ வர்றதா முக்கியம் ? “
---------------------
ஐயோ சினிமா விமர்சனம் போடப்போறீங்களாளாளாளாளா..????

Unknown said...

stills சூப்பர்

sathishsangkavi.blogspot.com said...

:))

Arun Prasath said...

ஹி ஹி.... கலக்குங்க தல

Speed Master said...

ம்ம் மூனு படத்தையிம் பாருங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

hi hi sema comedy! vated! write in Thamil later!

MANO நாஞ்சில் மனோ said...

//கைதாகி 24 மணி நேரம் ஆகியும் அவருக்கு இன்னும் நெஞ்சு வலி வர்லையே..///

ஹா ஹா ஹா ஹா ஹா இதுதான் டாப்பே...........

Sivakumar said...

மூன்றாவது ஜோக் செம ரவுசு, அண்ணே!

செல்வா said...

//கைதாகி 24 மணி நேரம் ஆகியும் அவருக்கு இன்னும் நெஞ்சு வலி வர்லையே..
//

அடபாவமே , இப்படியெல்லாம் வேற சோக்கு எழுதாரீங்களா ?

செல்வா said...

//என்னை கைது செய்தது இயற்கைக்கே பொறுக்கலை..அதனாலதான் என்னை அரெஸ்ட் பண்ணுன அதே நாள் ஜப்பான்ல எரிமலை வெடிச்சுதுன்னாரே..?/

ஹி ஹி ஹி .. ரொம்ப நல்ல தலைவரோ ?

செல்வா said...

//சின்ன வயசுல இருந்தே நான் ஊழல் பண்ண ஆரம்பிச்சுட்டேன் அப்படிங்கறாரே?
//

இதுதான் தொட்டில் பழக்கமா ?

செல்வா said...

எனக்கு ஒன்பதாவது சோக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////4.தலைவர் எப்பவும் தன்னையும்,தன் குடும்பத்தையும் ஏழையாவே நினைச்சுக்கறார்..


எப்படி சொல்றே..?


இறுதி மூச்சு உள்ளவரை ஏழை மக்களுக்காக பாடுபடுவேன்னாரே...//////////

அல்டிமேட் சிபி...............

பொன் மாலை பொழுது said...

சி.பி .இந்த பொம்பள புள்ளைங்க படம் போடும் வியாதி உங்களுக்கும் வந்தாச்சா?
இங்க வர்றது எல்லாம் அறாத்துகளா இருக்கு. கவனமா இருக்கனும். என்ன??
நானா??/ நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ளயப்பா.