Monday, February 28, 2011

ஈரோடு தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்கள்

http://www.baiwan.org/images/new%20school%20building.jpg 
ஈரோடு ஜி ஹெச் அருகில் சவீதா பஸ் ஸ்டாப் அருகே உள்ள கலைமகள் கல்வி நிலையம் நீண்ட வருடங்களாக நல்ல பெயர் வாங்கி வந்த ஸ்கூல்.பத்தாவது ரிசல்ட் வந்தாலே 100% கன்ஃபர்ம் தான்.இப்படி எல்லா இடங்களிலும்,எல்லா மாணவிகளிடமும் நல்ல பெயர் வாங்கி வந்த அந்த ஸ்கூலுக்கு 2 வருடங்களுக்கு முன் சோதனைக்காலம் ஆரம்பித்தது.

அதாவது இன்ஸ்பெக்‌ஷன் வந்த ஆஃபீசர்ஸ் கலைமகள் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் விதிகளின் படி கட்டப்படவில்லை,விதிமுறைகளை மீறி உள்ளது எனவே லைசென்ஸ் ரத்து செய்யப்பட போகின்றது  என ஒரு குண்டைத்தூக்கிப்போட்டனர்.

6வது வகுப்பு முதல் 12 வது வகுப்பு வரை உள்ள கலைமகள் ஹையர் செகண்டரி ஸ்கூல் எந்த பிரச்சனையும் இல்லை.  எல் கே ஜி ,1 வது முதல் 5 வது வரை செயல்படும் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மாடியில வகுப்பு உள்ளது என காரணம் சொன்னார்கள். பாத்ரூம் வசதியும் கிடையாது என்றார்கள்.

நிர்வாகம் என்னென்னவோ செய்து பார்த்தது ,நடக்கவில்லை. விபரம் அறிந்த பெற்றோர்கள் சிலர் டி சி வாங்கி வேறு ஸ்கூலில் மாணவிகளை சேர்த்து விட்டார்கள்.

ஆனால் இப்போதும் அந்த ஸ்கூல் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே தான் நடந்து வருகிறது.மாடியில் இயங்குகிறது.பாத்ரூம் வசதிகள் முறையாக இல்லை.இடையில் என்ன நடந்தது? எப்படி கவனிக்கப்பட்டார்கள் ?எவ்வளவு பணம் கை மாறியது என்று தெரிய வில்லை.

ஒரு வகுப்பில் 55 முதல் 65 மாணவிகள் இந்த மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படிக்கிறார்கள். சராசரியாக 40 மாணவிகளை மட்டுமே ஒரு டீச்சரால் நிர்வகிக்க முடியும் என டீச்சரே சொல்கிறார். ( எனது பெரியம்மா பெண் அங்கே டீச்சர்)

அதே போல் மாமரத்துப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியைகளுக்கு 3 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை.காரணம் சமீபத்தில் தனியார் பள்ளிகள் ஃபீஸ் வசூலிப்பதில் வந்த தடை. அவர்கள் சவுகரியத்துக்கு வசூல் பண்ண முடியாது என்றும் அரசு நிர்ணயித்த அளவே வசூல் பண்ண வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் நிர்வாகம் பழையபடியே வசூல் செய்தது. பெற்றோர்கள் எதிர்த்தனர், சிலர் தர மறுத்தனர். அப்படித்தராத ,ஃபீஸ் கட்டாத குழந்தைகள் தனியே அமர வைத்து சரியாக பாடம் சொல்லித்தராமல் தனிமைப்படுத்துகிறார்கள்.இது மனவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நிர்வாகம் உணர வேண்டும்.

மேலும் டீச்சர்களுக்கு சம்பளம் தராததால் அவர்கள் ஏனோ தானோ என பாடம் நடத்துகிறார்கள்.வேண்டா வெறுப்பாக செய்ய இது ஆஃபீஸ் உத்தியோகம் அல்ல.

ஸ்கூ;ல் ஃபீஸ் வாங்கி அதில்தான் சம்பளம் என அடம் பிடிக்கும் பள்ளி நிர்வாகி ஒரு கோடீஸ்வரர். பல பிஸ்னெஸ் செய்பவர்.அவர் ஸ்கூலில் பல லாபம் பார்த்த போது  இப்போது செம லாபம் எனவே உங்கள் சம்பளம் முன் கூட்டியே வழங்கப்படுகிறது என்றாரா? இல்லை. அப்படி இருக்க ஃபீஸ் சரியாக வசூல் ஆகலை என்பதை காரணம் காட்டி டீச்சர்களுக்கு சம்பளத்தை நிறுத்துவதால் அவர்கள் மனம் பாடம் நடத்துவதில் ஈடுபடுவதில்லை. அது மாணவிகளைத்தான் பாதிக்கிறது.

அதே போல் ஸ்கூல் மாணவிகளும் சரி, டீச்சர்களும் சரி யூனிஃபார்ம் பள்ளி நிர்வாகம் கொடுப்பதைத்தான் வாங்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள்.இதன் மூலம் பள்ளி நிர்வாகம் அடிக்கும் பணம் ஏராளம்.

நான் முன்னாள் கார்மெண்ட்ஸ் ஓனர் என்ற முறையில் இது பற்றி நன்கு அறிவேன்.உதாரணமாக ஒரு சட்டை தையற்கூலி ரூ 60 என வைத்துக்கொண்டால் பல்க் ஆர்டர் அதாவது ஒரு ஸ்கூல் 2000 பேர் 4000 சர்ட் என்றால் வாங்கப்படும் கூலி ஒரு சர்ட்டுக்கு ரூ 35 மட்டுமே...ஆனால் டீச்சர்களிடமும், மாணவிகளிடமும் ரூ 60 கணக்கு போட்டே வங்கப்படுகிரது. இதே போல் தான் துணிகளும்.

ஸ்கூல் ஃபீஸ் வாங்கியே செம லாபம் பார்க்கும் பள்ளிகள் இது போல் யூனிஃபார்மில் பகல் கொள்ளை அடிப்பது முறையா?இதை யார் தட்டிக்கேட்பது?இதற்கு  என்னதான் தீர்வு?

56 comments:

Unknown said...

mutha vettu hehehehe

Speed Master said...

இதை மக்கள் ஒன்று கூடி எதிர்க்கவேண்டும்

Anonymous said...

நாட்டை திருத்தாம விட மாட்டீங்களா பாஸ்

Anonymous said...

ஈரோடு என்பதை கட் செய்திருக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

>>> Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஈரோடு என்பதை கட் செய்திருக்கலாம்

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் காமெடி மாதிரி ஆகிடும்

செல்வா said...

எனக்கு என்னமோ இதுல தனியார் பள்ளிக்கூடத்த குறை சொல்லுறதக் காட்டிலும் நாம கொஞ்சம் தெளிவா இருந்த போதும்னு தோணுது .. காரணம் என்னனா ஏன் நாம நம்ம பிள்ளைங்களை தனியார் பள்ளில சேர்க்கணும் அப்புறமா அவுங்க அத பண்ணுறாங்க இத பண்ணுறாங்கனு நினைக்கணும் .. அரசுப்பள்ளிகள் இப்ப கொஞ்சம் நல்லாவே மாறிட்டு வருது .. அதுக்குப் போக ஆரம்பிச்ச நல்லதுன்னு தோணுது ..

அப்புறம் அவுங்களே வழிக்கு வந்திடுவாங்க . ஆனா எல்லோருமே தனியார் பள்ளிகூடத்துல படிச்சாதான் நல்லா படிப்பாங்க அப்படின்னு நினைக்கிறது .. அதவிட தனியார் பள்ளிக்கூடத்துல படிக்க வச்சாத்தான் நம்ம பெரிய ஆளுன்னு தெரியும் அப்படிங்கிற நினைப்பு மாரினாவே போதும்னு நினைக்கிறேன் ..

சக்தி கல்வி மையம் said...

அவங்ககூட ரேட் பேசுனது படியலயா..

சி.பி.செந்தில்குமார் said...

selva!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

அவங்ககூட ரேட் பேசுனது படியலயா..

கண்டுபிடீக்கனும்

ம.தி.சுதா said...

இதைத் தான் வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்களோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

செல்வா said...

// சி.பி.செந்தில்குமார் said...
selva!!!!!//

என்ன ஆசுசு ?

ம.தி.சுதா said...

இங்கு பெரு்பான்மையானவருக்கு அரச பாடசாலைகளே சிறந்த கல்வியை வழங்குகிறது.. ஒரு ஏழை மாணவன் கூட பெரிய பணக்காரருடன் கல்வியில் போட்டியிடலாம்...

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

அவங்ககூட ரேட் பேசுனது படியலயா..

கண்டுபிடீக்கனும்
----

CBIஐ கூப்பிடலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>கோமாளி செல்வா said...

// சி.பி.செந்தில்குமார் said...
selva!!!!!//

என்ன ஆசுசு ?


ungka உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு சீரியஸ் பதில் + தீர்வினை எதிர்பார்க்கல. சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

சி பி ஐ = சி பி

ஹி ஹி

வைகை said...

.நல்ல முயற்சி.. சங்கை தொடர்ந்து ஊதுங்கள்!

பாட்டு ரசிகன் said...

கண்டிப்பாக ஆரம்பத்திவே தடுக்க வேண்டிய விஷயம்..

நல்ல பதிவு..

Unknown said...

உண்மைதான். பல தனியார் பள்ளிகளின் முன்புற தோற்றம் மட்டுமே பளபளப்பாக இருக்கின்றன. நல்ல பதிவு. கல்வி பற்றிய பதிவுகளை உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். வாய்ப்புக்கிடைக்கும் போது எழுதுங்கள்..

Unknown said...

//ஈரோடு என்பதை கட் செய்திருக்கலாம்//

ஈரோடு மட்டுமல்ல தமிழகமெங்கும் இது தான் நடக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு லேபிளுக்கு காரணம் அதற்கு மட்டுமே என்னிடம் ஆதாரம் இருக்கு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP Vaalka.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP..... Why don't you try to become a politician?

bandhu said...

// ( எனது பெரியம்மா பெண் அங்கே டீச்சர்)//
இது போன்ற விவரங்களை தவிருங்கள். அவர் இதனால் பாதிக்கப்படலாம். you have all the rights to knock this comments off for the same reason.

சி.பி.செந்தில்குமார் said...

bandhu said...

// ( எனது பெரியம்மா பெண் அங்கே டீச்சர்)//
இது போன்ற விவரங்களை தவிருங்கள். அவர் இதனால் பாதிக்கப்படலாம். you have all the rights to knock this comments off

பள்ளிக்குள் நடப்பது உனக்கு எப்படி தெரியும் என்ற கேள்விகளைத்தவிர்க்க....

இருந்தாலும் உங்கள் ஆலோசனைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஓட்ட வட நாராயணன் said...

CP..... Why don't you try to become a politician?

யோவ்.. என்னா ஒரு வில்லத்தனம்?

VELU.G said...

மாமரத்துபாளையம் பள்ளியால் பாதிக்கப்பட்ட பெற்றோரில் நானும் ஒருவன்

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ஈரோடா?

வெங்கட் said...

சி.பி. புதுசா கட்சி ஆரம்பிக்க போறாராம்.
( அவரே எனக்கு போன் பண்ணி சொன்னாரு.)

Unknown said...

//அரசுப்பள்ளிகள் இப்ப கொஞ்சம் நல்லாவே மாறிட்டு வருது .. //


ஆனாலும் களை எடுக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது,.

Unknown said...

//சி.பி. புதுசா கட்சி ஆரம்பிக்க போறாராம்.
( அவரே எனக்கு போன் பண்ணி சொன்னாரு.)//

நல்லா கிளப்புறாங்கையா பீதிய..

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

சி.பி. புதுசா கட்சி ஆரம்பிக்க போறாராம்.
( அவரே எனக்கு போன் பண்ணி சொன்னாரு.)


இதை யாரும் நம்ப மாட்டாங்க வெங்கட்.. நாம எந்தக்காலத்துல அவுட் கோயிங்க் கால் பேசி இருக்கோம்?ஒன்லி இன் கம்மிங்க்

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//சி.பி. புதுசா கட்சி ஆரம்பிக்க போறாராம்.
( அவரே எனக்கு போன் பண்ணி சொன்னாரு.)//

நல்லா கிளப்புறாங்கையா பீதிய..


யாரும் பயப்படாதீங்க...அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காது...மக்களை மகிழ்விக்க வேண்டும் ,என்பதும் அவர்கள் சிரித்த முகமாய் இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம். எந்த அரசியல்வாதியால் மக்கள் சிரித்திருக்கிறார்கள்>?

ரஹீம் கஸ்ஸாலி said...

அண்ணாச்சி திடீர்ன்னு சீரியஸ் பதிவுல இறங்கிட்டீங்க போல....

settaikkaran said...

//இடையில் என்ன நடந்தது? எப்படி கவனிக்கப்பட்டார்கள் ?எவ்வளவு பணம் கை மாறியது என்று தெரிய வில்லை.//

மெய்யாலுமே தெரியவில்லையா? என்ன தல, இம்புட்டு வெள்ளந்தியா இருக்கீங்க? :-)

settaikkaran said...

//அதே போல் மாமரத்துப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியைகளுக்கு 3 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை.//

தல, இதில் இன்னொரு சங்கதியும் இருக்கிறது. சி.பி.எஸ்.ஸி. ஆசிரியைகளுக்கென்று ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றாலும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இதை விட மிகக்குறைவான சம்பளமே வழங்குகிறார்கள். அதாவது மெட்ரிக், ஸ்டேட் போர்டு சம்பளத்தைக் காட்டிலும் மிகக்குறைவாக...!

settaikkaran said...

//அப்படித்தராத ,ஃபீஸ் கட்டாத குழந்தைகள் தனியே அமர வைத்து சரியாக பாடம் சொல்லித்தராமல் தனிமைப்படுத்துகிறார்கள்//

சே! இது ரொம்பக் கொடுமை! மனுசங்கதானே...?

settaikkaran said...

//ஸ்கூ;ல் ஃபீஸ் வாங்கி அதில்தான் சம்பளம் என அடம் பிடிக்கும் பள்ளி நிர்வாகி ஒரு கோடீஸ்வரர்.//

ஒவ்வொரு ஊருலேயும் இப்படி இருக்கத்தான் செய்யுறாங்க. ஆனா, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல் பக்கங்களிலே கல்வி நிலையங்கள் பண்ணுற அட்டகாசம் பத்தி நான் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன் தல...!

settaikkaran said...

//ஸ்கூல் ஃபீஸ் வாங்கியே செம லாபம் பார்க்கும் பள்ளிகள் இது போல் யூனிஃபார்மில் பகல் கொள்ளை அடிப்பது முறையா?//

யூனிஃபார்ம் மட்டும் தானா? இன்னும் நிறைய சங்கதி வச்சிருக்காங்க பணம் புடுங்க!

settaikkaran said...

//இதை யார் தட்டிக்கேட்பது?இதற்கு என்னதான் தீர்வு?//

பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் மாநில அளவில் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும். இது துவக்கப்புள்ளி மட்டுமே; நினைத்தால் பணமுதலைகளின் காலரைப் பிடித்து உலுக்க முடியும்.

நல்ல பகிர்வு தல...!

மாணவன் said...

பள்ளிகளில் நடக்கிற அவலங்கள பார்த்தா... ஒன்றும் சொல்வதற்கில்லை

செங்கோவி said...

//எனது பெரியம்மா பெண் அங்கே டீச்சர்)// நாங்க உங்களை நம்பறோம் பாஸ்..இந்த டீடெய்ல் வேணாம்..பெற்றோர் ஒன்று கூடிப் போராடுவதே தீர்வு..

தமிழ் 007 said...

தல எதுக்கும் உஷாரா இருங்க.

ஸ்கூல் நடத்துறது பெரிய கோடீஸ்வரன்னு வேற சொல்றீங்க. ஆட்டோ இல்ல சுமோவே வந்தாலும் வரலாம்.

உங்க போட்டோவை வேற தளத்தில போட்டிருக்கீங்க. கூலிப்படையே கூட வரலாம்.

தல! "தல" பத்திரம் தல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி. புதுசா கட்சி ஆரம்பிக்க போறாராம்.
( அவரே எனக்கு SMS பண்ணி சொன்னாரு.)

தமிழ் 007 said...

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"

தமிழ் 007 said...

அப்படி ஏதாவது நடக்க போற மாதிரி தெரிஞ்சா பதிவர்கள் சார்பா போஸ்ட் அடிக்கிறதா இல்ல பேனர் அடிக்கிறதான்னு எந்த பதிவருக்காவது SMS அனுப்பீடுங்க.(ஹிஹி...ஹிஹி)

இப்படிக்கு,

பதிவுலகில் முதலிடத்தை கைப்பற்ற துடிப்போர்கள் சங்கம்.

Unknown said...

ஊதுகிற சங்கை ஊதிடீங்க, ஒலிப்பவர் காதுகளில் ஒலிக்கவேண்டும்

அன்பரசன் said...

//ஆனால் இப்போதும் அந்த ஸ்கூல் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே தான் நடந்து வருகிறது.மாடியில் இயங்குகிறது.பாத்ரூம் வசதிகள் முறையாக இல்லை.இடையில் என்ன நடந்தது? எப்படி கவனிக்கப்பட்டார்கள் ?எவ்வளவு பணம் கை மாறியது என்று தெரிய வில்லை.//

???

Senthil said...

dear,

i have an ambition now.

my comment shd be the first atleast one time!

i am trying hard!!

senthil, doha

Anonymous said...

பல தனியார் பள்ளிகளின் தரம் சில அரசுப் பள்ளிகளின் தரத்தைக் காட்டிலும் மிகவும் மட்டமானது. ஆரம்பத்தில் அரசுப் பள்ளியில் படித்த நன் பின்னர் சென்னைப் புறநகரில் ஒரு தனியார் பள்ளியில் தான் நான் படித்தேன்... எனது தோழன் சாலிக்கிராமத்தில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் படித்தான்... ஆனால் எங்கள் பள்ளியில் 2000 மாணவருக்கு 4 கழிப்பறை மட்டுமே உண்டு, விளையாட்டு மைதானம் இல்லை. 10 வகுப்பு வரை வகுப்பு 50 மாணவர்கள், வியர்வை ஊற்றும் காலங்களில் ஒரு மின்விசிறிக் கூட இல்லை, ஒரு சில ஆசிரியர்களின் திறமையால் தான் நான் படித்தேன். அப்படி ஒரு மட்டமான தனியார் பள்ளி......

அரசுப் பள்ளியில் படித்த எனது நண்பன் நல்ல மதிபெண்கள் பெற்று ஐஐடியில் சேர்ந்தான். நான் ஒரு தனியார் கல்லூரிக்குச் சென்றேன்....

இப்படித்தான் தனியார் பள்ளியின் நிலைகளை ஆராயது நடுத்தர பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்த்துவிட்ட்டு ஒரு எட்டுக் கூட பள்ளிக்கு வராமல் கடமை முடிந்தது என்று போய்விடுவதால், எமது கல்வித்தரம் பாதிக்கின்றது......

இப்படி அப்படி கஷ்டப்பட்ட படித்து நான் வெளிநாடு வந்தப் போது கொடுமை. தமிழ்நாட்டில் பெரிய பெரிய பள்ளிகளில் முழுதும் ஆங்கிலம் படித்த மாணவர்கள் பலர் என்னுடம் வெளிநாட்டு வகுப்பறைகளில் ஆங்கிலம் தெரியாது, தெரிந்தாலும் இலக்கண பிழை அதிகம் என்று ESL வகுப்புகளில் முக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் ஆங்கில வாடையே இல்லாது படிக்க வந்த சீன மாணவர்கள் ஆங்கிலத்தில் தவறில்லாமல் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டு சிறபாக விளங்கினர். இந்தியர்கள் பேருக்கு ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டு, தாய்மொழித்தாக்கம் கலந்த ஆங்கிலத்த்தினால் குட்டுப்பட்டனர்.....

Anonymous said...

தாய்மொழியில் படித்த சீனர்களும், இந்திய மாணவர்களும், இயல்பாகவே ஆங்கில மொழியினை இங்கு வந்து பயின்ற போது, இலக்கணப் பிழையில்லாது சிறப்பாய் படித்து முடித்தனர். ஆங்கில வழி என்றப் பெயரில் தமிழும் இல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாய் பல இந்தியர்கள் முக்கி விக்கி திக்கி திரிந்தனர். அவர்களின் ஆங்கிலம் கெட்டக் கேவலமாய் இருந்தது. அப்போது தான் நினைத்தேன் தாய்மொழியில் படிக்க வேண்டும் அப்போது தான் தாய்மொழியினையும் ஆங்கிலத்தையும் பிரித்து சரியாக பேசவும் எழுதவும் முடியும் என்று.... ஆகவே இந்தியாவில் ஆங்கில வழி என்ற பெயரில் வழிப்பறி செய்யும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிட்டு உள்நாட்டிலும் இடமில்லாமல் வெளிநாட்டிலும் கேவலப்பட்டு இருக்காமல் இருக்க வழிவகை செய்யுங்கள்......

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

திருந்த வேண்டியவர்களா திருத்த வேண்டியவர்களா!

a said...

//
சி பி ஐ = சி பி
//
ஏன் இந்த கொல வெறி???

ஸாதிகா said...

இது மிகவும் சகஜம்.எல்லா தனியார் பள்ளிகளிலும் நடபெற்று வருகின்றது.எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில் போன ஆண்டு 20000 டொனேஷனாக வசூலித்தவர்கள் இந்த ஆண்டு 40000 வசூலித்தனர்.இந்த அட்மிஷன் நடந்தது டிசம்பரில்.40000 கொடுப்பதற்கு தயாரக் இருந்த பெற்றோர்கள் பார்த்து தைரியம் வந்து பிப்ரவரி அட்மிஷனில் 70000 ரூபாய் கேட்கின்றனர்.கடைசி நேர அட்மிஷனுக்கு கண்டிப்பாக ஒரு லட்சத்தை தொட்டு விடும்.கொடுப்பவர்கள் தயாராக இருக்கும் வரை வாங்குபவர்களின் ஆசை எல்லை இல்லாமல்த்தான் போகும்.

Unknown said...

sir it s a very good.nalla pathivu. ithu enagu libiyan maggal purachiyai mathiri ethavathu varanum sir. neenga govt school vanthu parunga anga nadagara aniyaya kootha. hm fund enna panranga,pta fund enna panranga, ssa fund enna panranga innum evlovo iruku sir . ithula hms ooda attam pattam innum iruku sir.neenga nice a govt school HM s pathi vicsaringa egapatta thagaval kidikum makkal thirunthanum sir.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான சாட்டையடி பதிவு, இதற்குத் தீர்வு அரசு தான் கொண்டுவர வேண்டும், இன்னும் கட்டுப்பாடுகள் தேவை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ( எனது பெரியம்மா பெண் அங்கே டீச்சர்)/////

தவிர்த்திருக்கலாம்....!