Saturday, January 08, 2011

தத்துவம் மச்சினி தத்துவம் 17 3/4 +

http://narumugai.com/wp-content/uploads/2010/10/Namitha1-300x300.jpg
1. யாராலும் திருடி படிக்க முடியாத ரகசிய புத்தகம் - கனவு


2. அமைதியை விட வலிமையான சத்தம் உலகில் இல்லை.
உன் அமைதியை ஒருவன் புரிந்து கொண்டால் உன் வார்த்தைகளை
அவன் தவறாக ஒரு போதும் புரிந்து கொள்ளமாட்டான்.


3. கணிணிக்குள் வாழ்க்கையை தேடுகிறோம்,கடைசியில்
உழவனின் உழைப்பைத்தின்று வாழ்கிறோம்.


4.நாம வாழனும்னா எத்தனை பொண்ணுங்களை வேணாலும் சைட்
அடிக்கலாம்,ஆனா சாகனும்னா ஒரே ஒரு பொண்ணை மட்டும்
லவ் பண்ணுனா போதும்.லைஃப் க்ளோஸ்.


5. உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி ,உங்கள் ஆதரவு இல்லாம நாங்க
போன வருஷ டார்கெட்டை அச்சீவ் பண்ணி இருக்க முடியாது..உங்கள்
ஆதரவை இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கிறோம்-
இப்படிக்கு டாஸ்மாக் மேனேஜர்.6. என்னடா?ரொம்ப குறைஞ்ச மார்க் வாங்கி இருக்கே?

அப்பா, உங்களுக்கே தெரியும்.. விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப்போச்சு.
எதையும் அதிகமா வாங்க முடியல..

நீதி - நம்ம மேல இருக்கற தப்பை மறைக்க 1008 வழி இருக்கு.7. ஒரு நாள் ஒரு கிளிக்கு மேரேஜ் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதான்.

நீதி 1 - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நீதி 2 - நாங்களும் ரெண்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கோம்.


8.  படிச்சிருக்கொம். அப்படின்னு டைப் பண்ணும்போதுதான் ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. அது ஏன் பொண்ணுங்க எல்லாரும் திட்டறப்ப, : ஏய் ,மிஸ்டர்,பார்த்தா படிச்சவானாட்டம் இருக்கே.. இப்படி இண்டீசண்ட்டா நடந்துக்கறியே?”அப்படின்னு திட்டறாங்க?

#டவுட் 1 - அப்படி என்ன இண்டீசண்ட் புரொபோசல் இவன் பண்ணி இருப்பான்?
#டவுட் 2. - படிக்காத பையன் கிண்டல் பண்ணுனா எப்படி திட்டுவாங்க?9. ஒரு பொண்ணு இறந்துட்டா..அவளோட ஆவி மேல் லோகம் போச்சு,
அவளோட இதயம் இன்னும் துடிச்சுக்கிட்டே இருக்கறதைப்பார்த்து கடவுள்
ஆச்சரியப்பட்டாரு.”இது எப்படி சாத்தியம்?”னு அந்த ஃபிகர் கிட்டே கேட்டாரு.
அதுக்கு அந்த ஃபிகர் சொல்லுச்சு.”நான் இறந்தாலும் என் காதலன் என் இதடத்துக்குள் இன்னும் உயிரோடதான் வாழ்கிறான்,”
உடனே கடவுள் அந்த ஃபிகரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு.. ஏன்?
ஓவர் ஆக்டிங்க் பண்ணுனதுக்காகவும்,ஆ ராசாவை விட அதிகம பொய்
பேசுனதுக்கும்.

10. இன்கம்டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட் எல்லா பொது இடங்களிலும்
மறைமுக காமிரா செட் பண்ணி வெச்சிருக்காங்க.. அதனால யாரும்
வெங்காயமோ ,தக்காளியோ வாங்காதீங்க..


டிஸ்கி 1 - இதெல்லாம் நான் குங்குமம் பத்திரிக்கைக்கு அனுப்பி.....

வராத மேட்டர்ஸ்(ஆல் ரிஜக்ட்டட்).

டிஸ்கி 2- நமீதா நம்மை(?!) மச்சான்னு கூப்பிடறப்ப நாம் ஏன் அவங்களை மச்சினின்னு கூப்பிடக்கூடாது? (#டவுட்)

டிஸ்கி 3 - டைட்டில்ல 18 + அப்படின்னு போட்டா தாக்கி பதிவு போடறாங்க.. அதனால இனி 17 3/4 + போடலாம்னு ஒரு ஐடியா,மற்றபடி இதுல ஏ ஜோக்ஸ் எல்லாம் இல்ல.ஒரு முன்னோட்டம்தான்...

45 comments:

Philosophy Prabhakaran said...

இன்னைக்கு வடை எனக்கா...

Philosophy Prabhakaran said...

// நமீதா நம்மை(?!) மச்சான்னு கூப்பிடறப்ப நாம் ஏன் அவங்களை மச்சினின்னு கூப்பிடக்கூடாது? (#டவுட்) //

நீங்க டுவிட்டர்ல இருக்கீங்களா...

Philosophy Prabhakaran said...

// டைட்டில்ல 18 + அப்படின்னு போட்டா தாக்கி பதிவு போடறாங்க.. அதனால இனி 17 3/4 + போடலாம்னு ஒரு ஐடியா,மற்றபடி இதுல ஏ ஜோக்ஸ் எல்லாம் இல்ல.ஒரு முன்னோட்டம்தான்... //

இதெல்லாம் ரொம்ப டூ மச்...

Unknown said...

அசத்தி புட்டீங்க மச்சான் சாரி ஒரு ப்ளோ வந்துடுச்சி ......


நமிதாவ நாம "டச்சினின்னு" கூப்பிடலாம் இனி ஹி ஹி

ம.தி.சுதா said...

//////நாம வாழனும்னா எத்தனை பொண்ணுங்களை வேணாலும் சைட்
அடிக்கலாம்,ஆனா சாகனும்னா ஒரே ஒரு பொண்ணை மட்டும்
லவ் பண்ணுனா போதும்.லைஃப் க்ளோஸ்./////

அப்படியா சீபி சரி இன்னிலே இருந்து கவனத்தில் எடுக்கிறேன்....

ம.தி.சுதா said...

வெங்காயம்.... அப்படி விலை ஏறிடிச்சா...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//ஒரு முன்னோட்டம்தான்.//
தொடருங்கள்

குரங்குபெடல் said...

"இதெல்லாம் நான் குங்குமம் பத்திரிக்கைக்கு அனுப்பி.....

வராத மேட்டர்ஸ்(ஆல் ரிஜக்ட்டட்)."


idhan super comedy

சக்தி கல்வி மையம் said...

அந்த வடை மேட்டர் என்னா தலைவரே.. maximumஎல்லா பதிவர்களும் useபண்றாங்க.. நான் புதிய பதிவர் எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்...
http://sakthistudycentre.blogspot.com/

சேலம் தேவா said...

//இதெல்லாம் நான் குங்குமம் பத்திரிக்கைக்கு அனுப்பி.....//

நல்லாருக்கு..!! வேற ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பியிருக்கலாமே..!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

- நம்ம மேல இருக்கற தப்பை மறைக்க 1008 வழி இருக்கு.
//

இந்த மேலே..கீழேனு சிலேடையா பேசுவத விட்டுப்புட்டு, அம்மணிக்கு, உதவ.. 108-க்கு போன் போடுங்க பிரதர்..

பாவம்..கீழ விழுந்துட்டாங்க(!) போல..

:-)

கவி அழகன் said...

ஜானம் பிறந்ததால் வந்த
டிஸ்கி

அஞ்சா சிங்கம் said...

நீதி - நம்ம மேல இருக்கற தப்பை மறைக்க 1008 வழி இருக்கு..///////////


இதுக்கும் நமீதா படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே ......................

Srini said...

First 3 நல்ல தத்துவத்த சொல்லிட்டு (அத வெகுவா பாராட்டி எழுதனும்னு தோனுன அடுத்த நொடியே..) நாலாவதா ஒரு சப்பை தத்துவத்த உதிர்த்து மூட்-அவுட் பண்ணிட்டீரே ஆசாமி ?.. ஒரு சோக பாட்டுக்கப்புறம் டப்பாங்குத்து பாட்டு கேட்ட மாதிரி இருக்குது... சரியான மசாலா பதிவர்’ப்பா நீங்க..!!

வெங்கட் said...

// நமீதா நம்மை(?!) மச்சான்னு கூப்பிடறப்ப
நாம் ஏன் அவங்களை மச்சினின்னு
கூப்பிடக்கூடாது? (#டவுட்) //

போட்டோவுக்காக டிஸ்கியா..?
இல்ல
டிஸ்கிக்காக போட்டோவா..? # டவுட்டு

எஸ்.கே said...

நிறைய தத்துவம் சூப்பரா இருக்கு!

மங்குனி அமைச்சர் said...

18 + அப்படின்னு போட்டா தாக்கி பதிவு போடறாங்க.. அதனால இனி 17 3/4 + போடலாம்னு ஒரு ஐடியா///

இது நல்லா இருக்கே ......சார் வேணுமின்னா (17 +1 )+ அப்படி போடலாமா ? இல்லை (19 -1 )+ இப்படி போடலாமா ?

மங்குனி அமைச்சர் said...

ஏறிப்போச்சு.
எதையும் அதிகமா வாங்க முடியல..///

இந்த டீலிங் ரொம்ப புடிச்சிருக்கு

Speed Master said...

காக்க கதை சூப்பர்
ஒத்துக்குறோம் நீங்க 2 std படிச்சிறிக்கீங்னு

புலிகுட்டி said...

எத்தனை தடவை திறந்து பார்த்தாலும் மேலே உள்ள படம் தெரியவில்லை ஏன்?.(என்க்கு மட்டும் தானா எல்லோருக்குமா?)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

புலிகுட்டி said...

கணிணிக்குள் வாழ்க்கையை தேடுகிறோம்,கடைசியில்
உழவனின் உழைப்பைத்தின்று வாழ்கிறோம்.// என்ன செய்வது!கடைசியில் உழவன் வாழ வழி இல்லாமல் சாகிறான்.

புலிகுட்டி said...

.நாம வாழனும்னா எத்தனை பொண்ணுங்களை வேணாலும் சைட்
அடிக்கலாம்,ஆனா சாகனும்னா ஒரே ஒரு பொண்ணை மட்டும்
லவ் பண்ணுனா போதும்.லைஃப் க்ளோஸ்.// உண்மை!உண்மை!உண்மை!(நீங்க ஏதும் பாதிக்கப்பட்டிருக்கிங்களா?)

புலிகுட்டி said...

டிஸ்கி 3 - டைட்டில்ல 18 + அப்படின்னு போட்டா தாக்கி பதிவு போடறாங்க.. அதனால இனி 17 3/4 + போடலாம்னு ஒரு ஐடியா,// XVIII+இப்படி போட்டு விட்டால் யாருக்கும் தெரியாது.நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி 3 - டைட்டில்ல 18 + அப்படின்னு போட்டா தாக்கி பதிவு போடறாங்க.. அதனால இனி 17 3/4 + போடலாம்னு ஒரு ஐடியா,மற்றபடி இதுல ஏ ஜோக்ஸ் எல்லாம் இல்ல.ஒரு முன்னோட்டம்தான்...///

ஏன்னா அறிவு. இருயா படிச்சிட்டு வரேன்

karthikkumar said...

SUPER SITHAPPA INTHAMADIRIYUM ELUTHUNGA :)

THOPPITHOPPI said...

சார் ஒவ்வொன்றும் அருமை

டிஸ்கியும் அருமை.

FARHAN said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்

http://qaruppan.blogspot.com/2010/12/2010.html

Anonymous said...

ஆழ்ந்த கருத்துக்கள் அருமையான சிந்தனைகள்

செல்வா said...

//அப்பா, உங்களுக்கே தெரியும்.. விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப்போச்சு.
எதையும் அதிகமா வாங்க முடியல..//

இது செம !

செல்வா said...

/நீதி 1 - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நீதி 2 - நாங்களும் ரெண்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கோம்.
//

அட பாவமே , நான் தான் எல்லாத்துக்கும் நீதி சொல்லுறேன்னா நீங்களுமா ?

MANO நாஞ்சில் மனோ said...

நமீதா என் மச்சினி.......ஹி ஹி ஹி.....

Unknown said...

தல வழக்கம் போலவே கலக்கல் :-)

மாணவன் said...

செம்ம கலக்கல்.......

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதைகள் வழக்கம் போல அருமை... (சத்தியமா படிச்சிட்டு தான் போடுறேன்... நம்புங்க)

வைகை said...

அமைதியை விட வலிமையான சத்தம் உலகில் இல்லை.
உன் அமைதியை ஒருவன் புரிந்து கொண்டால் உன் வார்த்தைகளை
அவன் தவறாக ஒரு போதும் புரிந்து கொள்ளமாட்டான்////////////////


நான் சொல்ல வந்ததும் இதுதான்!!

சிநேகிதன் அக்பர் said...

நல்ல ரசிச்சு படிச்சேன்.

Jayadev Das said...

இதுவரைக்கும் படிக்காத, கேள்விப் படாத ஜோக்ஸ். எல்லாமே நல்லாயிருக்கு, புது ஆங்கிளில் think பண்ணியிருக்கீங்க. Good.
//கணிணிக்குள் வாழ்க்கையை தேடுகிறோம்,கடைசியில் உழவனின் உழைப்பைத்தின்று வாழ்கிறோம்.//
வேதனைக்குரிய விஷயம்.

Jayadev Das said...

//ஒரே ஒரு பொண்ணை மட்டும்
லவ் பண்ணுனா போதும்.லைஃப் க்ளோஸ்.// உண்மையை கண்டுபிடிச்சிருக்கீங்க. அவளையே கல்யாணம் பண்ணினாலும் இந்த உண்மை மாறப் போவதில்லை!!

Jayadev Das said...

//உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி ,உங்கள் ஆதரவு இல்லாம நாங்க
போன வருஷ டார்கெட்டை அச்சீவ் பண்ணி இருக்க முடியாது..உங்கள்
ஆதரவை இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கிறோம்-
இப்படிக்கு டாஸ்மாக் மேனேஜர்.//
ஹா.. ஹா...ஹா.... தமிழ் குடிமகன்கள் இதைச் சிந்திக்க வேண்டும்!!

Jayadev Das said...

//இன்கம்டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட் எல்லா பொது இடங்களிலும்
மறைமுக காமிரா செட் பண்ணி வெச்சிருக்காங்க.. அதனால யாரும்
வெங்காயமோ ,தக்காளியோ வாங்காதீங்க..//

இப்ப ரெண்டு நாளா பேப்பர் பார்த்தால், வெங்காய வியாபாரி வீட்டில் வருமான அதிகாரிகள் சோதனை, வெங்காய கிடங்கு ரெயிட் என்றே செய்திகள் வருகின்றன!!!

Jayadev Das said...

//டிஸ்கி 2- நமீதா நம்மை(?!) மச்சான்னு கூப்பிடறப்ப நாம் ஏன் அவங்களை மச்சினின்னு கூப்பிடக்கூடாது? (#டவுட்)//

இப்போ சினிமாவுல பாத்தா ஒரு கிராமத்து பொண்ணு தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணப் போகும் வாலிபரை [அ] கணவரைத்தான் மச்சான் என்று கூப்பிடுகிறாள். மச்சினி என்றால் மனைவியின் உடன் பிறந்தவள் என்று அர்த்தம். நமிதாவை எப்படி கூப்பிட வேண்டு என்பத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

Jayadev Das said...

கிராமத்தில் தனது கணவரின் சகோதரிகளை மச்சினி என்றழைப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பார்த்தாலும் நமீதாவை மச்சினி என்பது work out ஆகாது போலிருக்கே.

goma said...

நானும் ரிஜெக்டெட் ஜோக்ஸ் நிறைய வச்சிருக்கேன்.....
புத்தகமா போடலாமா?
சூப்பர் ஐடியா:-)))