Thursday, January 20, 2011

வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்கறாங்கப்பா

 http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/events/kw/2008/nov/lankanatrocitiesstarsfastinprotest/lankanatrocitiesstarsfastinprotest_050.jpg
1. தமிழக நிதியமைச்சர் அன்பழகன்: அரசின் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறும் பயனாளிகளுக்கு முதல் நாள் பட்டா வழங்கப்படும்; அடுத்த நாள் வீடு வழங்கப்படும்; அதற்கு அடுத்த நாள் பயனாளிகள் குத்துவிளக்கு ஏற்றலாம்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - நீங்க ரொம்ப கிரேட்டுங்கண்ணா.. ஆட்சி போகப்போறது தெரிஞ்சும் இன்னும் நல்லது பண்றீங்களே..?அது ஏன் உதவித்தொகை வழங்கறதை மட்டும் தவணை முறைல பண்றீங்க? ஊழல் பணம்,லஞ்சப்பணம் இவைகளை மட்டும் சிங்கிள் பேமெண்ட்டா வாங்கிக்கறீங்க..?

2. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்: சென்னை நகரில் குற்ற கண்காணிப்பிற்காக 15 கோடி ரூபாய் செலவில், 1,000 கேமராக்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டில் நடந்த குற்ற சம்பவங்களில் 77 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அதெல்லாம் சரிதான். அந்த 1000 கேமராக்கள் வழங்கப்பட்டதுல ஏதும் ஊழல் இல்லையே..? க்ரைம் 77% கண்டுபிடிச்சதெல்லாம் ஓக்கே தான்.. எத்தனை கேஸ்ல தண்டனை வாங்கித்தரப்பட்டதுன்னு பாருங்க முதல்ல..


3. தமிழக காங்., எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி, பதட்டத்துடன் பேசுகிறார். சிலர் பெண்ணை வைத்துக் கொண்டு மாப்பிள்ளை தேடுவர்; சிலர் மாப்பிள்ளையை வைத்துக் கொண்டு பெண் தேடுவர்; ஆனால், இவர்கள், கல்யாண மண்டபத்தை வைத்துக் கொண்டு மணமக்களைத் தேடும் நிலையில் உள்ளனர்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக்  -நாங்க கூடத்தான் அரசியல்ல நல்லவங்களைத்தேடிட்டு இருக்கோம்.. கிடைக்க மாட்டேங்குதே..தேனை எடுக்கறவன் புறங்கையை நக்கறதைக்கூட மன்னிச்சிடலாம்..ஆனா மொத்த தேன் கூட்டையும் ஆட்டையப்போட்டுடறானுங்களே...

4.தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை, "சாட்டிலைட் சிட்டி'யாக மாற்றும் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - சாட்டி “லைட்”  ங்கறதால லைட்டாதான் ஊழல் நடக்கும்னு யாரும் நம்பிடாதீங்க.. ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்னு நினைக்கறேன்.


 http://www.voicetamil.com/wp-content/uploads/2009/07/kanimoli-karunanidhii.jpg
5. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: "வீட்டை கட்டிப் பார்; கல்யாணத்தை பண்ணிப் பார்' என்று சொல்வர். கல்யாணம் செய்ய 25 ஆயிரமும், வீடு கட்ட 75 ஆயிரம் ரூபாயும் இந்த அரசு தான் கொடுக்கிறது. சும்மா கொடுத்த மாட்டை, பல்லைப் பிடிச்சு பார்க்கக் கூடாது.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இந்தாளுக்கு லொள்ளைப்பாரு.. எகத்தாளத்தை பாரு.. என்னமோ கஷ்டப்பட்டு கூலி வேலை செஞ்சு வந்த சொந்தப்பணத்துல அள்ளிக்குடுக்கற மாதிரி உதார் விடறதை..நீங்க செய்யற தப்பை மறைக்க அரசாங்கப்பணத்துல அதாவது மக்கள் வரிப்பணத்துலருந்து எடுத்து தர்றீங்க.. அதுல எத்தனை ஊழலோ ..அடுத்த ஆட்சி வந்தா தானே தெரியும்?

6. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: கூட்டுறவு கடன் தள்ளுபடியால், பொள்ளாச்சி அ.தி.மு.க., எம்.பி., சுகுமார், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் தள்ளுபடி பெற்றுள்ளார். உடுமலை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகவேல் ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவி மனோன்மணி ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும் கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இப்போ என்ன சொல்ல வர்றீங்க ?அம்மாகட்சி ஆளுங்களை விலை குடுத்து வாங்க ஆரம்பிச்சாச்சுன்னு சொல்றீங்களா?இல்ல.. மறைமுகமா அந்த கட்சி ஆளுங்களுக்கு அழைப்பு விடறீங்களா?


7. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பள்ளிகளில், சினிமா பாடல்களுக்கு, குழந்தைகளை நடனம் ஆடச் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல், நம் வீர விளையாட்டுகள் மறைந்து, இப்போது தெருவெல்லாம், கிரிக்கெட் விளையாடுகின்றனர். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. எனவே, கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். இதற்காக, மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - பரவால்லைய்யா .. காமெடி பீஸா இருந்தாலும் அப்பப்ப நல்ல வார்த்தை எல்லாம் சொல்றீங்கோ...அது இருக்கட்டும்.. கோபாலபுரத்துக்கும் , போயஸ் தோட்டத்துக்கும் மாறி மாறி நடைப்பயணம் போறீங்களாமே.. அது எதுக்கு?


8.முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேச்சு: ஒருவருக்கு பதவி கொடுக்க முடியவில்லை என்ற கோபத்தில், சட்ட மேலவையை எம்.ஜி.ஆர்., கலைத்தார். யாருக்கோ பதவி கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில், சட்ட மேலவையை கருணாநிதி மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்.நாங்கள் வரும் தேர்தலில் தனியா நின்று எங்கள் பலத்தை நிரூபிப்போம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - எலக்‌ஷன் டைம்ல 20 ஷீட் வேணும், 30 ஷீட் வேணும்னு லோ லோ-னு அலைவீங்க.. இப்போ சோலோ
வா நிக்கறதைப்பத்தி பேச ஆரம்பிச்சீட்டீங்களே.. தேவலை காங்கிரஸ் காரங்க உப்பு போட்டு சோறு சாப்பிட ஆரம்பிச்சீட்டீங்களா?9.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: தமிழக மீனவர்களின் உயிர், மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரையாகி விட்டது. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு. "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால் தான் பிரச்னை ஏற்படுகிறது' என, பிரதமரும், உள்துறை அமைச்சரும், இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது, பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதும், அனுதாபம் தெரிவிப்பதும், ஊரை ஏமாற்றும் கபட நாடகம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - வந்துட்டாருய்யா கவர்னரு.. யாரு இப்போ ஊரை ஏமாத்தலை..?அரசியல்வாதிங்கன்னாலே ஊரை அடிச்சு உலையில போடறவங்கன்னுதானே அர்த்தம்..?எரியற கொள்ளில எது நல்ல கொள்ளின்னு பார்த்தா ஒரு பயலும் தேறலையே..?

10 . .தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியினரும், கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பா.ஜ.,வை பொறுத்தவரை, தி.மு.க., மற்றும் காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில், பா.ஜ., பலத்தைக் காட்ட வேண்டிய தருணம். தனித்து போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - சிங்கம் சிங்கிளாதான் நிக்கும்கற பஞ்ச் டயலாக் எல்லாம் இங்கே எடுபடாது.. அசிங்கபட்டு போயிடுவீங்க.ஆனானப்பட்ட அம்மாவே தனியா நிக்க பயப்படறாங்க.. உங்களுக்கென்ன? 


டிஸ்கி 1  - எங்க ஊர்ல (சென்னைமலை)இன்னைக்கு தைப்பூச தேர்த்திரு விழா.. அதனால முதன்முதலா ஒரு ஆன்மீக கட்டுரை ரெடி பண்றேன்.எப்போ எங்கப்பா இறந்தாரோ (7.7 2006) அப்பவே எனக்கு கடவுள் நம்பிக்கை குறைஞ்சிடுச்சு.. இருந்தாலும் இன்னும் நாத்திக வாதி ஆகிடலை.அதனால ஆன்மீகக்கட்டுரை போட்டா தப்பில்லைன்னு தோணுது.. அதுல பக்தியை விட அதிகமா ஊர்ப்பெருமையும்..கோயில் தல வரலாறும் இருக்கும்.கபர்தார்.டிஸ்கி 2 - தியேட்டர்ல நல்ல படம் ஓடுதோ ,குப்பைப்படம் ஓடுதோ தியேட்டர்ல கூட்டம் குறைஞ்சிட்டா படத்தை தூக்கிட்டு புதுப்படம் போடற தியேட்டர் ஓனர் மாதிரி நானும் இப்போவெல்லாம் பிளாக்ல கூட்டம் குறைஞ்சிட்டா புது போஸ்ட் போட்டுடறேன்..ஆன்லைன்ல 10 பேருக்கும் குறைவா இருந்தா தூக்கிடுவேன். அதான் என் அளவுகோல் .

45 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா.... ஹா........ அருமையான கடிகள் இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்! ' லைட்ரா ' ஊழல் அருமை! அதுசரி நான்தான் முதலாவதா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீங்க ரொம்ப கிரேட்டுங்கண்ணா.. ஆட்சி போகப்போறது தெரிஞ்சும் இன்னும் நல்லது பண்றீங்களே..?அது ஏன் உதவித்தொகை வழங்கறதை மட்டும் தவணை முறைல பண்றீங்க? ஊழல் பணம்,லஞ்சப்பணம் இவைகளை மட்டும் சிங்கிள் பேமெண்ட்டா வாங்கிக்கறீங்க..?


குட் கொஸ்டீன்!

Unknown said...

நல்ல அரசியல் கலாய்ப்பு..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கபர்தார் ன்னா என்ன பாஸ்? எந்திரன் ஆடியோ ரிலீசுல ரஜினியும் இந்த வார்த்தைய யூஸ் பண்ணினாரு! அதுக்கு என்ன அர்த்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே அது வேற ஒன்னும் இல்ல. எச்சரிக்கை

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

நல்ல அரசியல் கலாய்ப்பு..

நன்றி பாரதி

Unknown said...

அடுத்தது ஆன்மீக கட்டுரையா? நல்லது, காத்திருக்கிறோம்..

பல்துறை வித்தகராக பதிவுகள் உங்களை அடையாளம் காட்டட்டும்.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger மாத்தி யோசி said...

ஹா.... ஹா........ அருமையான கடிகள் இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்! ' லைட்ரா ' ஊழல் அருமை! அதுசரி நான்தான் முதலாவதா?

அட போங்கண்ணே ,.. பிளாக் உலக பாரம்பரியத்தையே மீறிட்டீங்க..

முத வட எனக்கா>?

மீ த ஃபர்ஸ்ட்..?

இப்படி கேட்டிருக்கனும்.

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

நீங்க லாயரா? கண்டக்டரா? சார்.? #டவுட்

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

அடுத்தது ஆன்மீக கட்டுரையா? நல்லது, காத்திருக்கிறோம்..

பல்துறை வித்தகராக பதிவுகள் உங்களை அடையாளம் காட்டட்டும்.

ஹி ஹி கை வசம் வேற சரக்கும் இல்ல. வெள்ளிக்கிழமை வரை பொழுதை ஓட்டனுமே..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்களோட ஆன்மீக பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! அதுலேயும் அங்கங்க காமெடி கலந்திருக்கணும்! இல்லேன்னா பின்னூட்டம் போடமாட்டேன்! எனக்குத் தெரியும் காமெடி கலக்காம நீங்க எழுத மாட்டீங்க!

Unknown said...

இளங்கோவனுக்கும், பா,ஜா,காவுக்கும் என்னங்கன்னா சம்பந்தம்? மீதி எல்லாம் நல்லா இருக்குங்க தல :-)

சக்தி கல்வி மையம் said...

எப்படியன்னே..இதெல்லாம் ரூம்போட்டு யோசிப்பீங்களா? அருமை,அருமை..

சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க .. வயிறு வலிக்க சிரித்தேன்!!

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html

ரஹீம் கஸ்ஸாலி said...

கவுண்டரின் கவுண்டர் அட்டாக் ஒவ்வொன்றும் சூப்பர் தல....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆமா சார் பதிவுலகுக்குன்னு சில வேட்ஸ் இருக்குல்ல! இப்ப கரெக்டா கேக்குறேன்.....!முத்த வட எனக்கா?( அய்யய்யோ முத'ன்னு டைப் பண்ணும் போது.... அதுபாட்டுக்கு முத்த'னு வருதே? )முத வட எனக்கா?மீ த பர்ஸ்ட்?இப்போ ஓகே வா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>மாத்தி யோசி said...

உங்களோட ஆன்மீக பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! அதுலேயும் அங்கங்க காமெடி கலந்திருக்கணும்! இல்லேன்னா பின்னூட்டம் போடமாட்டேன்! எனக்குத் தெரியும் காமெடி கலக்காம நீங்க எழுத மாட்டீங்க!


hi hi hi நாங்க எல்லாம் சோகக்கவிதைலயே காமெடி கலக்கறவங்களாச்சே.. ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger இரவு வானம் said...

இளங்கோவனுக்கும், பா,ஜா,காவுக்கும் என்னங்கன்னா சம்பந்தம்? மீதி எல்லாம் நல்லா இருக்குங்க தல :-)

ஹி ஹி எங்கேயோ மிஸ் ஆகிடுச்சு..ஏதோ மிஸ்ஸை பார்த்துட்டே டைப் பண்ணி இருப்பேன் ,மன்னிச்சு விட்டுடுங்க..

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

எப்படியன்னே..இதெல்லாம் ரூம்போட்டு யோசிப்பீங்களா? அருமை,அருமை..

சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க .. வயிறு வலிக்க சிரித்தேன்!!

நன்றி.. நீங்க சிரிச்சா போதும்..நாங்க எழுதறதே மக்கள் சிரிக்கத்தானே

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

கவுண்டரின் கவுண்டர் அட்டாக் ஒவ்வொன்றும் சூப்பர் தல....

நன்றி சார். உன்ம்க்க 18 + பதிவு பார்த்தேன் . கலக்கல்னா அது தான், பின்னீட்டீங்களே..

சி.பி.செந்தில்குமார் said...

மாத்தி யோசி said...

ஆமா சார் பதிவுலகுக்குன்னு சில வேட்ஸ் இருக்குல்ல! இப்ப கரெக்டா கேக்குறேன்

முத்த வட எனக்கா?

( அய்யய்யோ முத'ன்னு டைப் பண்ணும் போது.... அதுபாட்டுக்கு முத்த'னு வருதே? )

முத வட எனக்க

மீ த பர்ஸ்ட்

இப்போ ஓகே வா?

ஓகே டிஸ்டிங்க்‌ஷன்ல பாஸ்

raji said...

கவுண்டர் டயலாக் சூப்பர்
வெயிட்டிங் ஃபார் தி ஆன்மிக கட்டுரை

மாணவன் said...

செம்ம கலாய்ப்பு கலக்கல்....

சி.பி.செந்தில்குமார் said...

raji said...

கவுண்டர் டயலாக் சூப்பர்
வெயிட்டிங் ஃபார் தி ஆன்மிக கட்டுரை


நன்றி ராஜி... இன்று இரவு 8 மணிக்கு பதிவு போட்டுடுவேன்

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

செம்ம கலாய்ப்பு கலக்கல்....

நன்றி மாணவா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சங்கவி said...

:))

!!1

Unknown said...

என்னாவோ போங்க ......சீக்கிரம் வீட்டுக்கு சைக்கிள் வந்தா சரி!

karthikkumar said...

ஊழல் பணம்,லஞ்சப்பணம் இவைகளை மட்டும் சிங்கிள் பேமெண்ட்டா வாங்கிக்கறீங்க..///
சூப்பர்... :)

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

என்னாவோ போங்க ......சீக்கிரம் வீட்டுக்கு சைக்கிள் வந்தா சரி!


என்ன சொல்ல வர்றீங்க? மலையாளப்படம் பாக்கற மாதிரி இருக்கு ஒண்ணும் புரியல..

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ஊழல் பணம்,லஞ்சப்பணம் இவைகளை மட்டும் சிங்கிள் பேமெண்ட்டா வாங்கிக்கறீங்க..///
சூப்பர்... :)

நன்றி கார்த்திக்..சென்னிமலை வர்றீங்களா? தேர் பாக்க

settaikkaran said...

கவுண்டரை அடிக்கடி வரச்சொல்லுங்கோ! :-)
எகத்தாளம் பண்ணுறதுலே அவருக்கு இணை யாரு? சூப்பர்!

ஆமினா said...

அதிரடி தாக்குதலா இருக்கு!!!

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை அருமை....

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

கவுண்டரை அடிக்கடி வரச்சொல்லுங்கோ! :-)
எகத்தாளம் பண்ணுறதுலே அவருக்கு இணை யாரு? சூப்பர்!


நன்றி சேட்டை அண்ணே..வர வெச்சுட்டா போச்சு.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆமினா said...

அதிரடி தாக்குதலா இருக்கு!!!

நாம என்னைக்கு அமைதியா இருந்திருக்கோம்?ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை அருமை..

நன்றி மனோ

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

disky 1 Eppo? Eppo?

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//.. இன்று இரவு 8 மணிக்கு பதிவு போட்டுடுவேன்//

waiting ... officela...

Chitra said...

funny comments!

////இப்போவெல்லாம் பிளாக்ல கூட்டம் குறைஞ்சிட்டா புது போஸ்ட் போட்டுடறேன்..ஆன்லைன்ல 10 பேருக்கும் குறைவா இருந்தா தூக்கிடுவேன். அதான் என் அளவுகோல் .////

....அந்த அளவுக்கா monitor பண்றீங்க? ஓ!

NKS.ஹாஜா மைதீன் said...

கலாயிப்புலையும் கலக்குறிங்க.....சூப்பர்.....

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி கார்த்திக்..சென்னிமலை வர்றீங்களா? தேர் பாக்க///

இப்போ வர முடியாதுங்க பரவாயில்ல இன்னொரு நாள் பாத்துக்கலாம் :)

KANA VARO said...

நானும் இப்போவெல்லாம் பிளாக்ல கூட்டம் குறைஞ்சிட்டா புது போஸ்ட் போட்டுடறேன்..ஆன்லைன்ல 10 பேருக்கும் குறைவா இருந்தா தூக்கிடுவேன்.//

அண்ணே! இருபது நாளில 34 பதிவண்ணே! இந்த மாசம் சதம் (100) போட வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

// ஆன்லைன்ல 10 பேருக்கும் குறைவா இருந்தா தூக்கிடுவேன். அதான் என் அளவுகோல் . //

ஒ... அதான் மேட்டரா...

Philosophy Prabhakaran said...

கனவுகளே தளத்தில் உங்களைப் பத்தி ரொம்ப பெருமையா எழுதியிருக்காங்க :)

பெசொவி said...

///இப்போவெல்லாம் பிளாக்ல கூட்டம் குறைஞ்சிட்டா புது போஸ்ட் போட்டுடறேன்..ஆன்லைன்ல 10 பேருக்கும் குறைவா இருந்தா தூக்கிடுவேன். அதான் என் அளவுகோல்//

நாங்கல்லாம் சரக்கே இல்லாம இருக்கோம், இதுல online விவரம் பார்த்து போஸ்ட் போடறது எங்க?