Showing posts with label அனுபவம்.நகைச்சுவை. Show all posts
Showing posts with label அனுபவம்.நகைச்சுவை. Show all posts

Tuesday, March 01, 2011

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள் -3ம் கலக்கல் ரகம்

http://tv.burrp.com/images/s/t/6/t66b2mgg_1093_1_150.jpg
கலைஞர் + கலைஞர் டி வி நிர்வாகம் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச உருப்படியான ஒரே நல்ல காரியம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிதான்.27.2. 2011 அன்னைக்கு வானம் மேகமூட்டமா இருந்தது.. என்னடான்னு பார்த்தா பிரதாப் போத்தன் எல்லாரையும் ஊக்குவிக்கும்படியா பேசுனாரு.வழக்கமா “பப்ளிக்கா மட்டம் தட்டும் இவர் பாராட்டுனது ஆச்சரியம். ஆனா பாராட்டறப்பக்கூட அவர் ஏன் சிடு சிடுன்னு இருந்தாரோ தெரியல.. பாவம் அவரோட குடும்பம்...

1. எதையும் தாண்டி புனிதமானது. - அருண்ராஜ்

ரன் லோலா ரன், தமிழில் 12 B  ஆகிய படங்களில் வந்த  KNOT  தான்.ஒரு செகண்ட் லேட்டா கிளம்பி இருந்தா மனிதனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை அலசும் படம்.

7 நிமிடங்களில் இந்த கதையை இவ்வளவு அழகான திரைக்கதை ஆக்க யாராலயாவது முடியுமா?ன்னு பிரமிப்பா இருக்கு.ஒரு லவ் ஜோடி.. ஆக்சிடண்ட்ல மாட்டி பொண்ணோட உயிர் போயிடுது... ஹாஸ்பிடல்ல அந்த பையனைப்பார்த்து இன்னொரு பொண்ணு லவ் பண்றா...

இன்னொரு டிராக்ல அந்த ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா....அதே பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

ஆக்சிடெண்ட் நடந்திருந்தா அவனை லவ் பண்ற பொண்ணு நீ இல்லாம நான் இல்லைங்கறா.. அதே ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா அந்த பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

காதல் என்பது சந்திப்புகளில் வருவது..., நிகழ்வுகள் என்பது தற்செயலானதா? விதிப்படியா? போன்ற பிரமாதமான அலசல்களோட காட்சிப்படுத்தும் திறமை இந்த குறும்பட இயக்குநருக்கு கிடைச்சிருக்கு.
http://2.bp.blogspot.com/_7oDMkPZLPfQ/SWbVEnKLd3I/AAAAAAAAPYY/FvX9Y3RBzXc/s400/keerthi-sneha.jpg
இந்தப்படத்தில் கண்ட (கேட்ட) வசனங்கள்

1. THERE IS NO PAST IN LOVE  ( காதல்ல ,முடிஞ்சு போன காதல்னு எதுவுமே கிடையாது)

2. லவ்வுல ரெண்டே வகை தான்.1. நாம லவ் பண்றது நிஜம். 2. கடைசி வரை லவ்வே பண்ணாம இருக்கறது..

3.காதல்ங்கறது  நாம யார் கூட வாழ ஆசைப்படறோம்கறதுல இல்ல...நாம யார் இல்லாம வாழ முடியாதுன்னு நினைக்கறோமோ.. அது தான்.

இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு, எடிட்டிங்க் எல்லாம் பக்கா.. இதுல 2 ஹீரோயின். நானும் பல படங்கள்லயும் ,குறும்படங்கள்லயும் பார்த்துட்டேன்.முதல் ஹீரோயினை விட 2வது ஹீரோயின் அழகா ,ஃபிகரா இருக்காங்க.. ஆனா அவங்களுக்கான காட்சிகள் கம்மி ..இது ஏன்? ( ஒரு ஆதங்கத்துல கேக்குறேன்.. ஹி ஹி )
http://vannitube.com/wp-content/uploads//2010/10/2029.jpg
கே பாலச்சந்தர் சொன்ன கமெண்ட் - காலம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது,, காதலையும் கூட .

ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேரும் காமெடி பண்ணுனாங்க.. படம் பிரமாதமான KNOT. இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாம் அப்படின்னு ஒரு கருத்து சொன்னாங்க...ஒரு வேளை ஹீரோவை ஹீரோயின் டச் பண்ணாம விட்டதை சொல்றாங்களோ என்னவோ.. இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுத்திருக்கனும்.ம்ஹூம்... தர்லை.சாகித்ய அகாடமி விருதுல இருந்து எம் பி பதவி வரை சர்ச்சையில் தான் ஓடும்போல.

2. உயிர்  - ராஜேஷ் 

டைட்டிலைப்பார்த்ததும் சாமி டைரக்ட் பண்ணி சங்கீதா அண்ணியா நடிச்ச உயிர் கதைதான் ஞாபகம் வந்தது. நல்ல வேளை. கதை வேற.

ஒரு ஆக்சிடெண்ட் நடக்குது. 4 பேர் மரணத்தின் வாசலில் இருக்காங்க.. அவங்க உடல் ரோட்ல இருக்கு.ஆனா அவங்களோட ஆத்மா வான் லோகத்தில் சென்று விவாதம் செய்யுது.. 4 பேர்ல ஒருத்தருக்கு மட்டும்தான் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கு.
ஒரு வயசான ஆள் நான் விலகிக்கறேன்னு அந்த கால சக்கரத்துல இருந்து குதிச்சிடறார்.அடுத்து ஒரு பணக்காரி மீதி இருக்கற 2 பேரையும் ஜெ கணக்கா விலை பேசறா.. கோபம் வந்த மெக்கானிக் கேரக்டர் அவளைப்பிடிச்சு தள்ளி விட்டுடறார்.மீதி இருக்கற 2 பேர்ல ஒரு கட்டத்துல மெக்கானிக் கீழே விழுந்துடறார். மிச்சம் இருக்கற ஒருத்தர் மட்டும் உயிர் பிழைக்கறார்.

இதை டைரக்ட் பண்ணுன ராஜேஷ்  அடிப்படைல சுஜாதா ரசிகர் போல.. அதே மாதிரி காட்சிப்படுத்துதல்ல பூர்ணம் விஸ்வநாதன் பாணியை கையாண்டிருக்கார்.மனிதனின் மரணத்துக்குப்பிறகு என்ன நடக்குது? விபத்தில் சிக்கும் மனிதர்களில் சிலர் இறந்துடறாங்க.. சிலர் பிழைச்சிக்கறாங்க.அது என்ன சூட்சுமம்?என்பது தான் கதையின் கரு.

வித்தியாசமான சிந்தனைதான்.ஆனா மியூசிக்கல் சேர் ஃபார்முலாவுல 4 உயிர்களும் விண்வெளில வாதாடுவதில் நம்பகத்தன்மை குறைவு.இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.கே பி, ஹாய் மதன், பிரதாப் 3 பேரும் இந்த படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தாங்க.
http://lh3.ggpht.com/_xDJKOay4yj4/SEIR-O0wAyI/AAAAAAAAACQ/tHcEJv83Ldg/madhan.jpg
ஆனா என்னைப்பொறுத்தவரைக்கும் ஒரு படம் பரிசு வாங்க 

1. வித்தியாசமான சிந்தனை 2. மனித மனங்களுக்கு ஒரு படிப்பினை 3. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமை 4.காட்சிப்படுத்துவதில் புத்திசாலித்தனம்

இந்த நான்கும் முக்கியம்னு நினைக்கறேன்.முதல் பாயிண்ட்டும், 4வது பாயிண்ட்டும் உயிர் படத்துல இருந்துது.ஆனா 4 பாயிண்ட்ஸூமே எதையும் தாண்டி புனிதமானது. படத்துல இருந்துது.

3.மறுபடியும் - கார்த்திக் பாலாஜி

சுபா எழுதுன மாலைமதி நாவலான பொன் ஜிதா வின் மையக்கருவை சுட்டு எடுத்த படம்.ஒரு சயிண்ட்டிஸ்ட் ஆராய்ச்சில செத்துப்போன மனிதனை உயிர்ப்பிக்கும் மருந்தை கண்டுபிடிக்கறாரு. ஆக்சிடெண்ட்டில் இறந்து போன ஒரு ஆளை உயிர் கொடுத்து எழுப்பி (!!??) விடறாரு.. செத்துப்போன ஆள் உயிரோட வர்றதைப்பார்த்த அவனது காதலி,குடும்பம் எல்லாருமே பயந்து ஓடறாங்க...அவன் மறுபடி ஒரு ஆக்சிடெண்ட்ல மாட்டி மறுபடியும் செத்துடறான். இப்படி செத்து செத்து விளையாடற காமெடி வேணாம்னு டாக்டர் அந்த ஆராய்ச்சியையே கை விட்டுடறாரு...

ஒரு நல்ல கதை மோசமான திரைக்கதையால் எப்படி நாசமாப்போகும்ங்கறதுக்கு நல்ல உதாரணம் இந்தப்படம்.

கே பி யின் கமெண்ட் - BIRTH IS BEAUTIFUL THING & ALSO DEATH IS BEAUTIFUL THING

இன்னோரு சந்தோஷமான மாற்றம்,இந்தப்படத்து டைரக்டரை மதன் தனியா கூப்பிட்டு சில பர்சனல் அட்வைஸ் பண்ணுனாரு...நிறைகளை உரத்து சொல், குறைகளை மெதுவாக ,தனியாக சொல் என்ற பாலிஸி போல.. குட்.
( நாம் பதிவுலகில் கமெண்ட் போடறப்ப பாசிட்டிவ் கமெண்ட்டை பப்ளிக்கா போட்டுட்டு குறை இருந்தா தனி மெயில்ல சொல்ற மாதிரி..) சிலர் இருக்கங்க மைனஸ் பாயிண்ட்டை கமெண்ட்டா போட்டுட்டு பாராட்டை மெயில் பண்ணுவாங்க..
கலைஞர் டி வில விமர்சனப்போட்டியும் இருக்கு.அடுத்த வாரத்து;ல இருந்து அனுப்பறவங்க அனுப்பலாம். ஞாயிறு காலை 10.30 ட்டூ 11.30.முகவரி

J V MEDIA
194,G3,GOLDEN NEST,3RD MAIN ROAD,SRI SAI NAGAR,VIRUKAMPAAKKAM,CHENNAI -92

டிஸ்கி -1 : இதே பதிவை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடாதீங்க.. நான் ஏற்கனவே அனுப்பிட்டேன் நேத்தே..பரிசு ரூ 8000 மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனம்.

டிஸ்கி 2 : இந்த 3 படங்களை இயக்கிய இயக்குநர்கள் அல்லது அவர்கள் நண்பர்கள் படம் சம்பந்தப்பட்ட ஸ்டில்ஸ்,அல்லது டைரக்டர் ஸ்டில் அனுப்புனா இதே பதிவை எடிட் பண்ணி அட்டாச் பண்ணிடறேன்...Saturday, January 08, 2011

தத்துவம் மச்சினி தத்துவம் 17 3/4 +

http://narumugai.com/wp-content/uploads/2010/10/Namitha1-300x300.jpg
1. யாராலும் திருடி படிக்க முடியாத ரகசிய புத்தகம் - கனவு


2. அமைதியை விட வலிமையான சத்தம் உலகில் இல்லை.
உன் அமைதியை ஒருவன் புரிந்து கொண்டால் உன் வார்த்தைகளை
அவன் தவறாக ஒரு போதும் புரிந்து கொள்ளமாட்டான்.


3. கணிணிக்குள் வாழ்க்கையை தேடுகிறோம்,கடைசியில்
உழவனின் உழைப்பைத்தின்று வாழ்கிறோம்.


4.நாம வாழனும்னா எத்தனை பொண்ணுங்களை வேணாலும் சைட்
அடிக்கலாம்,ஆனா சாகனும்னா ஒரே ஒரு பொண்ணை மட்டும்
லவ் பண்ணுனா போதும்.லைஃப் க்ளோஸ்.


5. உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி ,உங்கள் ஆதரவு இல்லாம நாங்க
போன வருஷ டார்கெட்டை அச்சீவ் பண்ணி இருக்க முடியாது..உங்கள்
ஆதரவை இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கிறோம்-
இப்படிக்கு டாஸ்மாக் மேனேஜர்.6. என்னடா?ரொம்ப குறைஞ்ச மார்க் வாங்கி இருக்கே?

அப்பா, உங்களுக்கே தெரியும்.. விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப்போச்சு.
எதையும் அதிகமா வாங்க முடியல..

நீதி - நம்ம மேல இருக்கற தப்பை மறைக்க 1008 வழி இருக்கு.7. ஒரு நாள் ஒரு கிளிக்கு மேரேஜ் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதான்.

நீதி 1 - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நீதி 2 - நாங்களும் ரெண்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கோம்.


8.  படிச்சிருக்கொம். அப்படின்னு டைப் பண்ணும்போதுதான் ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. அது ஏன் பொண்ணுங்க எல்லாரும் திட்டறப்ப, : ஏய் ,மிஸ்டர்,பார்த்தா படிச்சவானாட்டம் இருக்கே.. இப்படி இண்டீசண்ட்டா நடந்துக்கறியே?”அப்படின்னு திட்டறாங்க?

#டவுட் 1 - அப்படி என்ன இண்டீசண்ட் புரொபோசல் இவன் பண்ணி இருப்பான்?
#டவுட் 2. - படிக்காத பையன் கிண்டல் பண்ணுனா எப்படி திட்டுவாங்க?9. ஒரு பொண்ணு இறந்துட்டா..அவளோட ஆவி மேல் லோகம் போச்சு,
அவளோட இதயம் இன்னும் துடிச்சுக்கிட்டே இருக்கறதைப்பார்த்து கடவுள்
ஆச்சரியப்பட்டாரு.”இது எப்படி சாத்தியம்?”னு அந்த ஃபிகர் கிட்டே கேட்டாரு.
அதுக்கு அந்த ஃபிகர் சொல்லுச்சு.”நான் இறந்தாலும் என் காதலன் என் இதடத்துக்குள் இன்னும் உயிரோடதான் வாழ்கிறான்,”
உடனே கடவுள் அந்த ஃபிகரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு.. ஏன்?
ஓவர் ஆக்டிங்க் பண்ணுனதுக்காகவும்,ஆ ராசாவை விட அதிகம பொய்
பேசுனதுக்கும்.

10. இன்கம்டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட் எல்லா பொது இடங்களிலும்
மறைமுக காமிரா செட் பண்ணி வெச்சிருக்காங்க.. அதனால யாரும்
வெங்காயமோ ,தக்காளியோ வாங்காதீங்க..


டிஸ்கி 1 - இதெல்லாம் நான் குங்குமம் பத்திரிக்கைக்கு அனுப்பி.....

வராத மேட்டர்ஸ்(ஆல் ரிஜக்ட்டட்).

டிஸ்கி 2- நமீதா நம்மை(?!) மச்சான்னு கூப்பிடறப்ப நாம் ஏன் அவங்களை மச்சினின்னு கூப்பிடக்கூடாது? (#டவுட்)

டிஸ்கி 3 - டைட்டில்ல 18 + அப்படின்னு போட்டா தாக்கி பதிவு போடறாங்க.. அதனால இனி 17 3/4 + போடலாம்னு ஒரு ஐடியா,மற்றபடி இதுல ஏ ஜோக்ஸ் எல்லாம் இல்ல.ஒரு முன்னோட்டம்தான்...

Friday, December 31, 2010

2010 -ன் டாப் 10 பதிவர்கள் (புதிய தலைமுறை)

08070.jpg (321×357)
இந்த ஆண்டில் பதிவுலகில் யார் யார் எல்லாம் என் மனதைக்கவர்ந்தார்கள் என்ற தனிப்பட்ட லிஸ்ட் இது.ஏற்கனவே டாப்பில் இருக்கும் பதிவர்கள் மன்னிக்க.

1. பன்னிக்குட்டி ராம்சாமி - பொதுவாக நகைச்சுவையாக எழுதுபவர்கள் எல்லோர் மனதையும் கவர்கிறார்கள்.அந்த வகையில் தான் எழுதும் பதிவுகளில் மட்டுமல்லாமல் கமெண்ட்களில் கூட காமெடியை அள்ளித்தெளித்து கலக்கும் இவர்தான் என்னைப்பொறுத்தவரை நெம்பர் ஒன்.வலைச்சரம் ஆசிரியராகப்பொறுப்பேற்றதும் இவரது பன்முகத்திறமை வெளிப்பட்டது,தனது வாசிப்புத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தி புதிய பதிவர்களை அட்டகாசமாய் அறிமுகப்படுத்தி ஏகோபித்த ஆதரவைப்பெற்றார்,கமெண்ட்ஸ் வாங்குவதில் நாமெல்லாம் 10 ,   20 என்று தாளம் போடும் நேரத்தில் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் பெற்று அதிலும் சாதனை புரிந்தார்.டயலாக் டெலிவரியில் கவுண்டமணியின் அவதாரமாக அனைவர் மனதிலும் நின்றவர்.தமிழ்மணம் டாப் 20 லிஸ்ட் வர ஆரம்பித்த பிறகு அதுவரை வாரம் ஒரு பதிவு போடும் பழக்கம் உள்ள பலரும் தினசரி  ஒரு பதிவு போட்ட போதும் தனது வழக்கப்படி வாரம் 3 பதிவு  என தொடர்பவர்.இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்..


2. கே ஆர் பி செந்தில் - குமுதத்தில் வரும் பயோடேட்டா போல் இவரும் பயோடேட்டாவில் கலக்குபவர்.சமூக விழிப்புணர்வு கட்டுரையிலும் சரி ,கவிதையிலும்  சரி இவரது டச் உண்டு.அலாஸ்கா ரேங்க்கில் செம ஸ்பீடாக முன்னேறி வருகிறார்.எல்லோரிட்மும் நட்பு பாராட்டும் நல்ல மனிதர்.

3. சேட்டைக்காரன் - யார் மனதையும் புண்படுத்தாமல் காமெடி பண்ணுவது ரொம்ப கஷ்டம்,அந்த கஷ்டமான வேலையை ஈசியாக செய்து வருபவர்.பெரும் பாலும் குடிகாரர்களை மையமாக வைத்து நக்கலாக பதிவு போடுபவர்,அரசியல் நையாண்டியில் தேசியப்பார்வையும் உண்டு.எழுத்தில் ஆபாசம் துளி கூட கலக்காமல் கண்ணியமாக எழுதுபவர்.இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு.

4. பட்டாபட்டி - சென்னை பஷையில் இவரது திட்டுக்களைக்கேட்கவே ஒரு கூட்டம் உண்டு.இவரது பதிவுகள் செம காமெடி.குறிப்பாக காங்கிரஸை போட்டு தாக்குவார்.யாரைப்பற்றியும் ,எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்.தனது மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை கலக்கலாக எழுதுபவர்.

5.வந்தேமாதரம் சசி - பதிவுலகில் டெக்னிக்கலான மேட்டர்ஸை பதிவு போட்டே புகழ் பெற்றவர்.அலாஸ்கா ரேங்க்கில் முன்னணியில் இருப்பவர்.சினிமா விமர்சனம்,ஜனரஞ்சக பதிவுகள் போட்டு முன்னேறும் பதிவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர்.பதிவர்களுக்கு டெக்னிக்கலான சந்தேகம் எது வந்தாலும் தீர்த்து வைப்பவர்.

6. ம தி சுதா -  இலங்கைப்பதிவர்.இவரது பல கட்டுரைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. அவ்வப்போது ஜனரஞ்சகமாகவும் எழுதுவார்.டாஸ்போர்டு ஓப்பன் பண்ணி எப்போதும் ஆன்லைனில் இருப்பார்.சுடு சோறு எனக்கே வார்த்தை பிரபலம்.

7.கோமாளி செல்வா - மொக்கைப்பதிவுகள் போட்டே சக்கையாக முன்னேறுபவர்.வட எனக்கே வாசகம் பிரபலம்.வடைவங்கி என இவருக்கு இவரே பட்டம் குடுத்துக்கிட்டார் (யாரையும் எதற்கும் எதிர்பார்க்கக்கூடாதாம்).இவரது வயது ரொம்பக்குறைவாக இருந்தாலும் நிறைவான பதிவுகள் கலக்கல்.

8.மங்குனி அமைச்சர் - இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.இவரது எழுத்துக்களில் காமெடி தெறிக்கும்.சென்னைப்பதிவரான இவர் மற்றவர்களுடன் பழகுவதில் சகஜமானவர் என்ற நல்ல பெயர் பதிவுலகில் உண்டு.

9 . சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் பதிவர்.இவர் வாங்கி வந்த வரம் அப்படி.ஆஃபீஸ் டைம்லயே அனைத்து பதிவுகளையும் டைப் செய்து,கமெண்ட்டும் போடும் ஒரே பதிவர்.மற்றவர்களை கலாய்ப்பதில் மன்னர்.யார் எந்த பதிவு போட்டாலும் அதில் போய் இந்த ஜோக் ஏற்கனவே 4 வருஷத்துகு முன்பே நான் எழுதிட்டேன் என காமெடி பண்ணுவார்.இவர் பணி புரியும் ஆஃபீஸ் இன்னும் இழுத்து மூடாமல் இருப்பது ஆச்சரியம்.

10 - நல்ல நேரம் சதீஷ் - டைட்டில் வைப்பதில் மன்னன்.எனக்கு பதிவுலக குரு.அரசியல் நையாண்டி,சட்டயர் காமெடி எழுத்துக்கள் இவரது பலம்.இவரது அலாஸ்கா ரேங்க் முன்னேற்றம் அபார வேகம்.சூப்பர் ஹிட் போஸ்ட் போட்டால் சர்வ சாதாரணமாக 3000 ஹிட்ஸ் அடிப்பவர்.ரஜினி ரசிகர் ,ஜோதிடர்

டிஸ்கி - 2011 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்