Thursday, January 20, 2011

தேரடி வீதியில் தேவதை வந்தால்.....

http://3.bp.blogspot.com/_LdJ4AcaGkZ8/TE0cFsJh05I/AAAAAAAADxc/9omH_fh9Z0w/s1600/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D.jpg

தைப்பூசத்திருவிழா ஸ்டார்ட் ஆகிடுச்சு. இனி ஒரு வாரத்துக்கு மஜாதான். எங்க ஊரோட மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு லட்சம்தான் இருக்கும். ஆனா இந்த விழாவுக்கு 4 லட்சம் மக்கள் கூடிடுவாங்க. இந்ததேர்த்திருவிழா பற்றி சொல்றதுக்கு முன்னே எங்க ஊர்ப்பெருமையை பற்றி 4 லைன் தம்பட்டம் அடிச்சுக்கறேன்.


தமிழ்நாட்லயே அதிக அளவில் பெட்சீட்  தயார் ஆவது இங்கேதான்.சென்குமார்,சென்கோப்டெக்ஸ்,சென்டெக்ஸ் உட்பட இங்கே ஏகப்பட்ட தறிப்பட்டறை இருக்கு. நெசவாளிகள் குடும்பம் அதிகம் உள்ள ஊர். எங்கப்பாவும் ஒரு நெசவாளிதான்.ஜக்காடு பெட்ஷீட் நெசவு நெய்வாரு.. நின்னுக்கிட்டே ஒரே ஒரு மிதியை அழுத்திக்கிட்டே இருக்கனும்..

மாட்டு வண்டி மலை ஏறுன கதை 20 வருஷத்துக்கு முன்னே ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. சென்னிமலைல 1350 படிகள். சாதாரண வேகத்துல ஏறுனா 28 நிமிஷம் ஆகும், அதே இறங்க 7 நிமிஷம் தான் ஆகும்.நல்லா கொழு கொழுன்னு வளர்க்கப்பட்ட 2 காளைகள் மாட்டு வண்டியில் பூட்டப்பட்டு மலை ஏறுச்சு. அதை 8 லட்சம் ஜனங்க பார்த்தாங்க.அதுக்கப்புறம்தான் எங்க ஊர் ஃபேமஸ் ஆச்சு.

மலை மேல ஒரு சுரங்கப்பாதை இருக்கு. அது மன்னர் காலத்துல கட்டப்பட்டது. பழநி வரை போகுமாம். எல்லாம் சொல்ல கேள்விதான்.யாருக்கு அதை டெஸ்ட் பண்ண தைரியம் இருக்கு.?

இந்த 7 நாள்ல ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.தினமும் ஆர்க்கெஸ்ட்ரா,நாடகம்,கரகாட்டம்,தப்பாட்டம்,ஒயிலாட்டம்,மயிலாட்டம், சினிமா ( திரை கட்டி படம் போடறது) னு  ஒரே கலக்கல்தான்.தெப்பத்தேர் அன்னைக்கு வாண வேடிக்கை நடக்கும் பாருங்க.. 5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள்..வெடிகள் ஒரு மைதானத்துல வெடிப்பாங்க.. ( எல்லாம் கோயில் காசுதான்) நாம எந்தக்காலத்துல காசு குடுத்து வெடி வெடிச்சிருக்கோம்?

இன்னைக்கு காலைல 6 மணிக்கு தேர் வடம் பிடிச்சாங்க.. மக்களோட ஆரவாரத்தோட தேர் இழுக்கறதைப்பார்க்க கண் கோடி வேணும்.மனிதன் தனியா இருக்கும்போது ஒரு மாதிரியும், கூட்டமா இருக்கும்போது வேற மாதிரியும் நடந்துக்குவான். நல்லா நோட் பண்ணி பாருங்க..அமைதியா இருக்கற பசங்க எல்லாம் இந்த விழாவுல ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.

ஈஸ்வரன் கோவிலை சுற்றி நால்ரோடு இருக்கு .அந்த நாலு வீதிலயும் தேர் சுற்றி வரும்.ஒவ்வொரு டர்ன்லயும் தேர் திரும்ப படாத பாடுபடும். தேர்சக்கரத்தை கண்ட்ரோல் பண்ண ஒரு மரக்கட்டை வெச்சிருப்பாங்க.. அதை முட்டுக்குடுத்துதான் திருப்புவாங்க..சில சமயம் தேர் வர்ற வேகம் பார்த்தா நம்ம மீது விழுந்துடுமோன்னு பயமா இருக்கும். ஆனா விழாது.

தேர் நிலை சேர்ந்ததும் மக்கள் வெண்ணெய், உப்பு,மிளகு, எலுமிச்சை இதை எல்லாம் வீசுவாங்க... எதுக்கு வீசறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாம் ஒரு ஐதீகம்தான்.

பக்தி, கடவுள் நம்பிக்கை இதை எல்லாம் தாண்டி இந்த விழாவுல நான் பாக்கறது மக்கள் உற்சாகமா, ஒற்றுமையா,சந்தோஷமா, சொந்தக்காரங்களோட சிரிச்சி பேசி மகிழ்வதைத்தான்.வெளி ஊர் ஆட்களும் ,உள்ளூர் ஆட்களும் கூடி மகிழ்வதை பார்க்கவே சந்தோஷமா இருக்கும்.

விழாவோட இறுதி நாள்ல சத்தாவரம் நடக்கும். அதாவது தெய்வ  தரிசனம்.இரவு 7 மணில இருந்து மறு நாள் காலை 8 மணி வரை கூட்டம் பின்னி எடுக்கும். 4 வீதிகள்லயும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கூடி தேர்க்கடையை சுத்தீட்டே இருப்பாங்க.எவனும் எதையும் வாங்க மாட்டான். சும்மா பாவ்லா காண்பிப்பாங்க.
http://staff.science.nus.edu.sg/~sivasothi/blog/images/20070206-jeff_ooi-thaipusam.jpg
கூட்டத்துல ஃபிகருங்களை இடிக்கறது,ஆண்ட்டிகளை உரசறதுன்னு நம்மாளுங்க பண்ற லோலாயம் இருக்கே.. அட அட.. இதுக்குன்னே 80 கி மீ நடைப்பயணமா வர்ற ஆளுங்களும் உண்டு.

அதனால உள்ளூர் பெண்கள் யாரும் அன்னைக்கு நைட் வெளில வர மாட்டாங்க..உள்ளூர் ஆண்கள் .. நைசா அவங்களை தூங்க வெச்சுட்டு மிட் நைட்ல கிளம்பிடுவாங்க.. ராத்திரி ரவுண்ட்ஸ் அப்பை ஜூனியர் விகடன் நிருபரை விட பிரமாதமா பண்ணுவாங்க..

தேர்க்கடைகள் ஏராளமா இருக்கும்.இதுல அவனவன் லவ்வர், கேர்ள் ஃபிரண்ட்ஸ் (கவனிக்க - பன்மை)க்கெல்லாம் ஜிமிக்கி,வளையல்,தோடு அது இதுன்னு ஏதாவது வாங்கிகுடுப்பாங்க.

பலூன் சுடறது..,ரிங்க் வீசி சோப்,பிஸ்கட் பாக்கெட் ஜெயிக்கறது,ராட்டன் தூரினு ஊரே களேபரமா இருக்கும்.முன்ன பின்ன பாக்காத ஃபிகரை கணக்கு பண்றவங்க இங்கே அதிகம்.ஸ்கூல்ல படிக்கறப்ப மேத்சே போட மாட்டான்.. ஆனா ஃபிகரை மேத்தமேட்டிக்ஸ் பண்றதில பி ஹெச் டி பண்ணி இருப்பான்.
http://www.noexpectations.com.au/images/thaipusam-0206-00234-display.jpg
கரும்பு ,பொரி கடலை,பட்டாணி சுண்டல் இந்த 7 நாள்ல செமயா சேல்ஸ் ஆகும்.வேல் குத்தறது, அலகு குத்தறது.. அரோகரா அரோகரா போடறதுன்னு ஒரே களேபர பூமியா காட்சி அளிக்கும். ( அலகு குத்தறதை  கண்ல பாக்க முடியாது).

அண்ணமார்,தேவகிரி, பாலமுருகன் அப்படின்னு 3 சினிமா தியேட்டர் இருக்கு.. (அதானே பார்த்தேன்,.. ஆன்மீகக்கட்டுரைல கூட சினிமா மேட்டரை நுழைச்சிடுவியே?)இந்த தரிசனம் அன்னைக்கு விடிய விடிய சினிமா நடக்கும். காட்சி நேரம் காலை 10, 1 , 4 , 7 , 10, 1, 4 , 7  அப்படின்னு 8 ஷோ போட்டுடுவாங்க.செம கலெக்‌ஷன்தான்

ஈரோட்ல இருந்து சென்னிமலை வர டவுன் பஸ் நெம்பர் 11 . டிக்கெட் விலை ரூ 6.   L S S  பஸ்னா ரூ 6.50. விழாக்கால பேருந்துன்னு போர்டு போட்டான்னா ரூ 10 ரவுண்டா வசூல் பண்ணிடுவாங்க..சர்வீஸ் பஸ்ல ரூ 10.  ஈரோடு டூ பழநி வர்ற சக்தி முருகன் பஸ் உட்பட 13 சர்வீஸ் பஸ் இருக்கு.சக்தி முருகன் பஸ்ல மிச்சமான ஃபிகருங்க எல்லாம் வரும். ( அதென்ன மிச்சமான?- நாம ரசித்த அழகு போக மிச்ச அழகே 100% இருக்கும்)

படிக்கறவங்க யார் வேணாலும் வாங்க. நல்ல விருந்தோம்பல் உண்டு.

டிஸ்கி 1 - ஆன்மீக கட்டுரைதான் டைப் அடிச்சேன்.. மறுபடி படிச்சு பாக்கறப்ப சராசரி ரசிகனுக்கு போர் அடிக்கக்கூடிய தகவல்களை..ஸ்தல புராணங்களை எடிட் பண்ணிட்டு பார்த்தா அப்புறம் கட்டுரை இப்படி  அமைஞ்சிடுச்சு.. சாரி...

டிஸ்கி 2 - நாளைக்கு வெள்ளிக்கிழமை. வழக்கமா பக்தர்கள் வெள்ளிக்கிழமைலதான் விரதம் இருப்பாங்க.ஆனா நான் சினிமா பதிவு போட்டு 4 நாள் ஆகுது. அந்த விரதத்தை முடிக்கப்போறேன்.. ஹி ஹி

35 comments:

மாணவன் said...

//Blogger karthikkumar said...

vadai//

இதுக்குமா???ஹிஹி

karthikkumar said...

நெசவாளிகள் குடும்பம் அதிகம் உள்ள ஊர். எங்கப்பாவும் ஒரு நெசவாளிதான்.ஜக்காடு பெட்ஷீட் நெசவு நெய்வாரு.. நின்னுக்கிட்டே ஒரே ஒரு மிதியை அழுத்திக்கிட்டே இருக்கனும்.//
எங்கப்பா கூட தறி நெஞ்சிட்டு இருந்தாரு. இங்கே ஈரலை துண்டுதான் நெசவு அதிகம்...

மாணவன் said...

ஆன்மீக கட்டுரை அருமை அண்ணே

பகிர்வுக்கு நன்றி

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

இந்த 7 நாள்ல ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.தினமும் ஆர்க்கெஸ்ட்ரா,நாடகம்,கரகாட்டம்,தப்பாட்டம்,ஒயிலாட்டம்,மயிலாட்டம், சினிமா ( திரை கட்டி படம் போடறது) னு ஒரே கலக்கல்தான்.தெப்பத்தேர் அன்னைக்கு வாண வேடிக்கை நடக்கும் பாருங்க.///
பல்லகவுண்டன்பாளையம் திருவிழாதான் நான் பார்த்திருக்கேன். இந்த வருஷம் முடியாது. கண்டிப்பா அடுத்த வருஷம் சென்னிமலை திருவிழாவுக்கும் வந்துவிடுகிறேன் சித்தப்பா...

karthikkumar said...

.உள்ளூர் ஆண்கள் .. நைசா அவங்களை தூங்க வெச்சுட்டு மிட் நைட்ல கிளம்பிடுவாங்க.. ராத்திரி ரவுண்ட்ஸ் அப்பை ஜூனியர் விகடன் நிருபரை விட பிரமாதமா பண்ணுவாங்க.///
திருத்தம் ஜூனியர் விகடன் நிருபரை விட பிரமாதமா பண்ணுவேன் அப்டின்னு சொல்லுங்க...:)

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

மாட்டு வண்டியில் பூட்டப்பட்டு மலை ஏறுச்சு. அதை 8 லட்சம் ஜனங்க பார்த்தாங்க.அதுக்கப்புறம்தான் எங்க ஊர் ஃபேமஸ் ஆச்சு.///

இதுவும் ஒரு காரணம்தான். ஆனால் 1995- ம் ஆண்டு திருப்பூர் கார்த்திக்குமார் சென்னிமலைக்கு வருகை புரிந்ததால் அந்த வூர் அதிகம் பேமஸ் ஆனதாக மக்களால் நம்பபடுகிறது...:)

karthikkumar said...

மாணவன் said...
//Blogger karthikkumar said...

vadai//

இதுக்குமா???ஹிஹி///

சரி மச்சி நீங்களே வெச்சுக்குங்க.. :)

பரதேசித் தமிழன் said...

நல்லாருக்கு சார்! தைப்பூசத்திற்கே கூட்டிட்டுப் போயிட்டீங்க.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Sennirmalai nagar valam super...

KANA VARO said...

அரோகரா! அரோகரா!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//படிக்கறவங்க யார் வேணாலும் வாங்க. நல்ல விருந்தோம்பல் உண்டு//

Unga kasula ththane?

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//நாம ரசித்த அழகு போக மிச்ச அழகே 100% இருக்கும் / /

Nalla rasanaiyana aluppa..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நன்றாக இருக்கிறது உங்கள் ஆன்மீக கட்டுரை! இடையிடையே நகைச்சுவை தூள் பறக்கிறது. உங்க ஊருக்கு வரவேணும் போல இருக்கிறது! என்ன பண்றது நினைத்தவுடன் இங்கிருந்து வர முடியுமா என்ன? கோடை விடுமுறைக்கு தமிழ்நாட்டுக்கு வந்தால் உங்கள் ஊருக்கு வரலாம் என்று நினைக்கிறேன்!

M.G.ரவிக்குமார்™..., said...

//தேர் நிலை சேர்ந்ததும் மக்கள் வெண்ணெய், உப்பு,மிளகு, எலுமிச்சை இதை எல்லாம் வீசுவாங்க... எதுக்கு வீசறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாம் ஒரு ஐதீகம்தான்//
திருஷ்டி பட்டு விடக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்வது நம் நம்பிக்கை....

raji said...

//தேர் நிலை சேர்ந்ததும் மக்கள் வெண்ணெய், உப்பு,மிளகு, எலுமிச்சை இதை எல்லாம் வீசுவாங்க... எதுக்கு வீசறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாம் ஒரு ஐதீகம்தான்//

நிறைய மக்கள் கூடும் இடங்களில் நோய் தொற்றுகளும் கிருமிகளும் விரைவாக மற்றவர்களை சென்றடைய
அதிகம் வாய்ப்புள்ளது.இதனை தவிர்க்கும் பொருட்டே இம்மாதிரி உப்பு,மிளகு மற்றும் எலுமிச்சை
ஆகியவற்றை இம்மாதிரி திருவிழா கூட்டங்களில் பரவலாக விசுறுவார்கள்.
உப்பு,மிளகு மற்றும் எலுமிச்சை ஆகியவை ஆன்டிசெப்டிக்காக செயல்படுபவை

திருஷ்டிக்காக அல்ல

raji said...

நல்ல திருவிழா பதிவு

raji said...

நல்ல திருவிழா பதிவு

Prabhu said...

தேர் நிலை சேர்ந்ததும் மக்கள் வெண்ணெய், உப்பு,மிளகு, எலுமிச்சை இதை எல்லாம் வீசுவாங்க... எதுக்கு வீசறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாம் ஒரு ஐதீகம்தான்//

மதுரைல அந்த வடத்த பிரிச்சு சின்ன சின்ன கயிறாக்கி வீட்டுக்கு கொண்டு போவ்ங்க.அதுக்கு சண்டை போட்டதெல்லாம் ஞாபகம் வருது.


திருவிழாவெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு தல.

நல்லா திருவிழாவ சந்தோஷமா கொண்டடாடுங்க.

டெல்லி பிரபு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப சுவராசியமா இருக்கு சிபி, நல்லா சந்தோசமா கொண்டாடுங்க....!

Srini said...

” அட நீங்களும் நம்மூர்ளீங்ளாங்ணா இருந்தீங்கோ? இவத்ததானுங் நாங்கொ இருக்கறம்னு தெரிஞ்சுமும் சொல்லீர்ந்தீங்னா ஒரு எட்டு வந்ட்டு கறியாக்கிகீது போடசொல்லி தின்னுபோட்டு வந்துருப்பொம்லொ ? தேருமுட்டில தொண்டு சுத்றதுக்கு சொல்லீங்ளாண்ணா தர்றோனும் ?

ஹேமா said...

சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க சிபி !

Philosophy Prabhakaran said...

என்ன இது உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு வித்தியாசமான பதிவு... எதிர்பார்க்கவில்லை...

Philosophy Prabhakaran said...

// ஆன்மீக கட்டுரைதான் டைப் அடிச்சேன்.. //

இதெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா... வெளங்கிடும்...

Philosophy Prabhakaran said...

// நான் சினிமா பதிவு போட்டு 4 நாள் ஆகுது. அந்த விரதத்தை முடிக்கப்போறேன்.. //

நல்லா முடிங்க... என்ன பதிவு...?

டக்கால்டி said...

தலைவா நீங்க சென்னிமலையா?

நான் சென்னிமலையில் உள்ள நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியில் தான் நான்கு வருடம் போயிட்டு வந்தேன் (படிச்சேன்னு பொய் சொல்ல மனசு வரல) . அண்ணமார், தேவகிரி, பாலமுருகன் - நாங்கள் இங்கு அடிக்காத லூட்டிகளே இல்லை. கூட்ட நெரிசலில் சைட் அடிக்க கிளம்பிய பழைய நினைவுகளை கிளறிட்டீங்க...

கவி அழகன் said...

கலக்கலான படைப்பு

http://kavikilavan.blogspot.com/

sasibanuu said...

Simple and nice article...
Pls continue...

sasibanuu said...

//raji said...

//தேர் நிலை சேர்ந்ததும் மக்கள் வெண்ணெய், உப்பு,மிளகு, எலுமிச்சை இதை எல்லாம் வீசுவாங்க... எதுக்கு வீசறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாம் ஒரு ஐதீகம்தான்//

நிறைய மக்கள் கூடும் இடங்களில் நோய் தொற்றுகளும் கிருமிகளும் விரைவாக மற்றவர்களை சென்றடைய
அதிகம் வாய்ப்புள்ளது.இதனை தவிர்க்கும் பொருட்டே இம்மாதிரி உப்பு,மிளகு மற்றும் எலுமிச்சை
ஆகியவற்றை இம்மாதிரி திருவிழா கூட்டங்களில் பரவலாக விசுறுவார்கள்.
உப்பு,மிளகு மற்றும் எலுமிச்சை ஆகியவை ஆன்டிசெப்டிக்காக செயல்படுபவை

திருஷ்டிக்காக அல்ல//

அருமையான விளக்கம் ....... நன்றி!!

இம்சைஅரசன் பாபு.. said...

//கூட்டத்துல ஃபிகருங்களை இடிக்கறது,ஆண்ட்டிகளை உரசறதுன்னு நம்மாளுங்க பண்ற லோலாயம் இருக்கே.. அட அட.. இதுக்குன்னே 80 கி மீ நடைப்பயணமா வர்ற ஆளுங்களும் உண்டு.//

அந்த கூட்டத்துல சி.பி யும் ஒரு ஆளு ...

சக்தி கல்வி மையம் said...

ஆன்மீக கட்டுரை அருமை அண்ணே

பகிர்வுக்கு நன்றி..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html#comments

VELU.G said...

நல்ல பதிவு சென்னிமலை திருவிழாவிற்கு வந்ததுமாதிரி இருந்தது

நன்றி சி.பி.செந்தில்குமார்

MANO நாஞ்சில் மனோ said...

//கூட்டத்துல ஃபிகருங்களை இடிக்கறது,ஆண்ட்டிகளை உரசறதுன்னு நம்மாளுங்க பண்ற லோலாயம் இருக்கே.. அட அட.. இதுக்குன்னே 80 கி மீ நடைப்பயணமா வர்ற ஆளுங்களும் உண்டு///

அந்த கூட்டத்துல பன்னிகுட்டியும் இருந்தார் ஆண்டிகளை உரசிய படி....

அஞ்சா சிங்கம் said...

ஆஹா என்ன ஒரு ஆன்மீக கட்டுரை .........

என் ஐயப்பாட்டை தீர்க்கும் ஆழ்ந்த கருத்துக்கள் ..........