Monday, January 31, 2011

மீனவ நண்பன்


தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.

எங்கள் இனங்கள் பிணங்களாய்

மிதக்கின்றன..

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை..

ஆனால்

எங்கள் உரிமைகளுக்கு ஒரு கோடியாவது காண்பியுங்கள்..

கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு

இதயத்தில் இடம் கொடுத்தது போதும்..

எங்கள் உயிர் உடலில் தங்க

ஒரு இடம் கொடுங்கள்..

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி

வீசுகிறீர்கள்...

எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்..

எம் ஜி ஆர் படத்தில் நடித்தே மீனவ நண்பன் ஆனார்...

நீங்கள் அரசியல் மேடையில் நடித்து

மீனவ எதிரி ஆகி விடாதீர்..

கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........

43 comments:

sathishsangkavi.blogspot.com said...

Good post...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

jusu wait boss!

எல் கே said...

அந்த ஆள் கேட்ட கேக்கறதும் ஒன்னும் கேக்காம விடறதும் ஒண்ணு

thanks cp

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை,

நாம் இணைந்தால் சகோதரர்களை காக்க முடியும்...

THOPPITHOPPI said...

அண்ணே வரிகள் அருமை

சக்தி கல்வி மையம் said...

தங்களது மேலான கருத்துக்கும்,உணர்வுகளுக்கும் மிக்க நன்றி நண்பரே..

சக்தி கல்வி மையம் said...

இந்த பதிவு பலரையும் சென்றடைய ஓட்டு போடவும்....
அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்..

மாணவன் said...

உங்களது பங்களிப்புக்கு நன்றி அண்ணே

அனைவரும் குரல்கொடுப்போம்.. தொடர்ந்து போராடுவோம்.......

settaikkaran said...

//நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை..//

எப்புடீ? நீங்களும் நானும் நெற்றி வியர்வை நிலத்தில் விழ சம்பாதித்து, அதில் 35% வரிகட்டுவோம். அதைத் திருடுவது அவர்களின் அடிப்படை உரிமையா?

settaikkaran said...

//எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்.//

இது நெத்தியடி!
இதற்குக் கூட உத்தரவாதம் அளிக்க முடியாதவனுங்க, ஒழிஞ்சு போகட்டுமே! இல்லாட்டி நாம ஒழிக்கணும் தல!

karthikkumar said...

தொடர்ந்து போராடுவோம்

settaikkaran said...

//கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........//

கிழிச்சானுங்க! தில்லியிலே போயி தொகுதிப்பங்கீடு பேசிட்டிருக்காங்க! நமக்கு நாம் தான் பாதுகாப்பு! வர்ற தேர்தல்லே இவங்களைத் தொடைச்செடுத்து சுத்தம் பண்ணிறணும் தல! இல்லாட்டி தமிழ்நாடு காலி!

எல் கே said...

@சேட்டை
ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க விடக் கூடாது

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

@சேட்டை
ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க விடக் கூடாது


கரெக்ட் மரண அடி வாங்க வைக்கனும்

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........//

கிழிச்சானுங்க! தில்லியிலே போயி தொகுதிப்பங்கீடு பேசிட்டிருக்காங்க! நமக்கு நாம் தான் பாதுகாப்பு! வர்ற தேர்தல்லே இவங்களைத் தொடைச்செடுத்து சுத்தம் பண்ணிறணும் தல! இல்லாட்டி தமிழ்நாடு காலி!


கரெக்ட்.. அவன் அவன் செத்துட்டு இருக்கான். இவங்களுக்கு தொகுதி பங்கீடு முக்கியமா போச்சு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாஸ்! சூப்பர் கவிதை போட்டு இருக்கீங்க! ' அவிங்க அவிங்களுக்கு அவங்களோட பாஷைல " சொன்னாத்தான் உறைக்கும்பாங்க! அதே மாதிரி "


//தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.//

ன்னு சொல்லி நெத்தியடி குடுத்திருக்கீங்க! சூப்பர்!

அஞ்சா சிங்கம் said...

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே..............//////////////////////

அப்படியே மிதந்து இலங்கைக்கு போய்ட சொல்லுங்க......................

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

MANO நாஞ்சில் மனோ said...

இவனுக திருந்த மாட்டாங்க பாஸ்....................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லோரும் அப்பிடியே ட்விட்டர்ல் போயி இதே போல் கருத்துக்களை பதிவு செய்யுங்க, #tnfisherman ஐ கமெண்ட்டோட பேஸ்ட் பண்ணுங்க, நம் குரல் உலகெங்கும் ஒலிக்க ஒரு அரிய வாய்ப்பு..........!

Srini said...

" அப்பாவி மக்களை வஞ்சித்தே வாழ்ந்த அனானப்பட்ட லூயி+ஜார் மன்னனுங்களே காணாம போயிட்டப்ப, இவங்கள்லாம் எம்மாத்திரம் ?
எல்லாத்துக்கும் ஒரு விடிவு வரும்..
திரை கடலோடி ரோமானியனோட, கிரேக்கனோட எல்லாம் ஜெயிச்ச நம்ம தமிழ் இனம் இன்னிக்கு......?
எல்லா பதிவர்களும் இந்த விஷயத்துல ஒண்ணுபட்டு நிக்கிறது பெருமையா இருக்கு...
பெருமை மிகு பதிவர்களே உளமிகு வாழ்த்துக்கள்...!!

வைகை said...

தொடர்ந்து இணைந்திருப்போம்!

சேலம் தேவா said...

கலைஞருக்கு கவிதையிலயே கேள்வி கேட்டிருக்கீங்க..!!நல்ல பதிவு..!!

Unknown said...

அருமை பாஸ்!

raji said...

gud post

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமையான கவிதை வரிகள். உங்களின் பங்களிப்பிற்கு நன்றி அண்ணே....தொடர்ந்து போராடுவோம்....வெற்றி கிடைக்கும் வரை போராட்ட தீயை அணையாமல் காப்போம். வலைப்பதிவர்கள் கரம் கோர்ப்போம். மீனவர்கள் உயிர் காப்போம்

Anonymous said...

pklease link #tnfisherman
www.savetnfisherman.org

”தளிர் சுரேஷ்” said...

சும்மா நச்சுன்னு நறுக்கு தெரிச்சாப்பல இருக்கு நண்பா! வெல்டன்!

Kumar said...

Welldone...

ஹேமா said...

சிபி...ஆரம்பம் அசத்தல்.
கேளுங்க விடாதீங்க !

Vinu said...

தமிழன் தமிழனால்தான் சாகிறான்....... இது தமிழனின் தலைவிதி

Vinu said...

ஆஸ்திரேலியாவில் ஒரு வட இந்திய மாணவர் தாக்கபட்டால் மத்திய அரசு எதிர்க்கிறது ஆனால் பாக்கு நீரிணையில் ஒரு ஏழை தமிழ் மீனவன் சுடப்பட்டால் திரும்பிக் கூட பார்க்கவில்லை......... நாட்டுக்குள் தேச துரோகிகளை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் காட்டில் ஏன் வலை வீசுகீர்கள்

Vinu said...

நான் இலங்கை தமிழன் என்றமுறையில் கூறுகிறேன் இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் ஒரு தமிழின துரோகிகள் இவர்கள்தான் இன்று நாம் தாயகம் இழந்து நிர்க்கதியாகி நிற்கிறோம்

டக்கால்டி said...

Oru patta maratthai kattu maram endru kooriya ungalai kadumaiyaaga kandikkiren.

By the by, patta maratthai izhivaaga pesiyathukku ennai mannika vendugiren

டக்கால்டி said...

Oru patta maratthai kattu maram endru kooriya ungalai kadumaiyaaga kandikkiren.

By the by, patta maratthai izhivaaga pesiyathukku ennai mannika vendugiren

Philosophy Prabhakaran said...

சிபி உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

நீங்கள் ஒரு தி.மு.க அனுதாபி என்றுதான் இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருந்தேன்...

குரங்குபெடல் said...

அடுத்த 5 வருஷமும்
ஆட்டையை போட
டில்லியில் அலையும் பெருசுக்கு
சரியான கும்மாங்குத்து . . .

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனைவரும் குரல்கொடுப்போம்.. தொடர்ந்து போராடுவோம்......

ஸாதிகா said...

கவிதைகளில் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தமைக்கு நன்றி//
நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை// நச்..நச்..

கவிதை பூக்கள் பாலா said...

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை//
எவன் கொடுத்தான் உரிமைய , திருட்டு பய புள்ள ஊருல திருபின பக்கமெல்லாம் அவனுங்க தலையா தான் தெரியுது ,
டாஸ்மார்க் குடுச்சி டர் ஆனது போதும் சோடாவ அடிச்சி நாம தான் எழுப்பனும் , தமிழன் தலையை உயர்த்தி பெஞ்ச் போட்டாவது காட்டுவோம்
http://redhillsonline.blogspot.com/2011/01/blog-post_26.html

http://nankirukkiyavai.blogspot.com/2011/01/blog-post_31.html

கவிதை பூக்கள் பாலா said...
This comment has been removed by the author.
Madurai pandi said...

வரிகள் அருமை