Sunday, January 02, 2011

ஊர் வம்பு உடம்புக்கு ஆகாது தம்பி...

1. துக்ளக் ஆசிரியர், "சோ' பேட்டி: "ஸ்பெக்ட்ரம்' பிரச்னையில், ஜெயலலிதா அளித்த பேட்டி, திருப்புமுனையாக அமைந்தது. உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு நடந்துள்ள இந்த இமாலய ஊழல் குறித்து, மக்களிடையே மிகுந்த கவலை எழுந்துள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு துறையும் கருணாநிதியின் குடும்ப கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஆட்சி மாற்றமே இந்த முறைகேடுகளுக்கெல்லாம் தீர்வாக அமையும்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -  அடுத்து அம்மா வருவாங்க.. 5 வருஷம் அவங்க ஊழல் பண்ணுவாங்க...ஏன்னா இவங்க 2 பேரும்தானே தமிழ்நாட்டை காண்ட்ராக்ட் எடுத்திருக்காங்க..?

2.அ.தி.மு.க., தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பேச்சு : தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாத கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு மக்கள், தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர். மகன் துணை முதல்வர்; மற்றொருவர் மத்திய அமைச்சர்; மகள் எம்.பி.,; பேரன் மத்திய அமைச்சர் என இது போன்ற குடும்ப அரசியல், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -    இப்பவாவது தமிழகம் எல்லாருக்கும் ஒரு முன்னோடி மாநிலமா திகழுதுன்னு ஒத்துக்கறீங்களா?

 3. புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணி சேர்ந்தது முதல், தி.மு.க.,வினர் கலங்கிப் போய் உள்ளனர்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -   நாட்ல கொசுத்தொல்லை ஜாஸ்தி ஆகிடுச்சு..புண்ணாக்கு விக்கறவன்,குண்டூசி விக்கறவன் எல்லாம் தொழில் அதிபர்னு சொல்லிக்கிட்டு திரியற மாதிரி லெட்டர் பேடு வெச்சவரெல்லாம் கட்சித்தலைவராம்... அண்ணே ..நீங்க என்ன சொன்னீங்க...?


4. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்: தற்போது மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 7,000 தற்காலிக பணியாளர்கள் வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -    எல்லாம் நம்ம கட்சி ஆளுங்கதானான்னு நல்லா செக் பண்ணித்தானே நியமிக்கறீங்க...?


5. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: ஈழப் பிரச்னையில் கருணாநிதி, மக்களை திரட்டிவிடக் கூடாது என்பதற்காக, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பிரச்னையை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. ஊழல் பணத்துக்காக கருணாநிதி, ஈழ மக்களை காவு கொடுத்து விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வோம்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -   அம்மாகிட்டே பர்மிஷன் வாங்கிட்டீங்களா?அப்புறம் உங்களை கூட்டணியை விட்டு துரத்திட போறாங்க...?அப்புறம் நீங்க பேக் டூ பெவிலியன் மாதிரி மறுபடி தானைத்தலைவா...என்னை ஏற்றுக்கொள்ளவா அப்படின்னு பல்டி அடிக்க வேண்டி வரும்...6   தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றன. எனவே, ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க நாங்களும் வலியுறுத்தியுள்ளோம்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -   ஆமாய்யா...நீங்களே கோடி கோடியா சம்பாதிச்சுக்குங்க.. ஏதோ 5 வருஷத்துக்கு ஒரு தபா நாங்க ரூ 2000 சம்பாதிக்கறது உங்க கண்ணை உறுத்துதா?

7.பத்திரிகை செய்தி: தமிழக அளவில், "டாஸ்மாக்' மது விற்பனையில் தர்மபுரி, கோவை, சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளன. இதில், தர்மபுரி மாவட்டமே மது விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -    ஆஹா, மாது விற்பனைன்னா சேலம், மது விற்பனைன்னா தர்மபுரி...நல்ல ஊரு நம்ம ஊரு


8. தமிழக முதல்வர் கருணாநிதி: இன்றைக்கு இலவசத்தை கேலியாக, இழிவாக சிலர் பேசுகின்றனர். பத்திரிகைகள் எல்லாம் கருணாநிதி ஆட்சி என்றாலே இலவசம் தான் என்று எழுதுகின்றன. தமிழகத்தில் ஏழைகள் நடமாடும் வரை, தி.மு.க., அரசு, இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்கும்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -  தலைவரே.. ஒண்ணும் கவலைப்படாதீங்க.. போற போக்கைப்பார்த்தா மக்கள் நடக்கக்கூட சக்தி இல்லாம ஜி ஹெச்ல போய் படுத்துக்கப்போறாங்க...ஏழைகள் நடமாட்டம் குறைஞ்சிடும்...

9. மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா: பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. டில்லி வந்தடையும் வெங்காயத்தை உடனடியாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -    பாகிஸ்தான்காரங்கதான் நமக்கு பங்காளிங்க ஆச்சே,வேற நாடே உங்களுக்கு கிடைக்கலையா?

10. பத்திரிக்கைச்செய்தி - டைவர்ஸுக்கு ஒத்துக்கொண்ட ரம்லத்..செட்டில்மெண்ட் செய்த பிரபுதேவா -நயன் தாரா மகிழ்ச்சி.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -   அம்மணி ,ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க.. அடுத்த செட்ட்டில்மெண்ட் உங்களுக்குத்தான்...உங்களுக்காக ரம்லத்தை கழட்டி விட்ட அண்ணன் நாளைக்கு  வேற ஒரு ஃபிகருக்காக உங்களை கழட்டி விட மாட்டார்னு என்ன நிச்சயம்?

டிஸ்கி  - சிலர் தனி மெயிலில் தொடர்பு கொண்டு டைட்டிலுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?என கேட்கிறார்கள்...அரசியல்வாதிகள் அவங்களுக்கு கிடைச்ச சான்சை பயன்படுத்தி ஆட்டையை போடறாங்க..அதை எல்லாம் நீ கண்டுக்கக்கூடாது...மீறி கண்டுக்கிட்டா உனக்குத்தான் ஏதாவது பிரச்சனை வரும் என என்னைப்பார்த்து நானே சொல்லிக்கொண்டது....ஹி ஹி

16 comments:

Unknown said...

என்னாச்சி புத்தாண்டு ஆரம்பிச்ச உடனே சனி பகவான் கண்ண தெறக்க எதோ பதிவு போட்டிருக்கீங்களோ!?

Anonymous said...

super super super super super super

Anonymous said...

superhit superhit superhitsuperhit superhit superhit superhit

Anonymous said...

fantastic fant astic fantastic fantastic fantastic fantastic

Anonymous said...

superpittu sorry vittu

Anonymous said...

இது போன்ற அரசியல் நையாண்டிகள் உங்களுக்கு நன்றாக வருகிறது..

Anonymous said...

கில்மா படங்களை ஒரிஜினாலிட்டி கெடாமல் கூகிளில் கண்டுபிடித்து வயசு பசங்களை கிளுகிளுக்க வைத்த நீங்கள் அரசியல் பதிவுகளுக்கும் சிறப்பான படங்களை வெளியிட்டுள்ளீர்களே நன்றி அய்யா

Anonymous said...

- டைவர்ஸுக்கு ஒத்துக்கொண்ட ரம்லத்..செட்டில்மெண்ட் செய்த பிரபுதேவா -நயன் தாரா மகிழ்ச்சி.
//
இதுக்குத்தான் இத்தனை அலப்பறையா..ரேட்டை ஏத்தத்தான் போராட்டம் ,கணவனை விட்ர்டு தரமாட்டேன் என சவடால் எல்லாம்

Unknown said...

வை.கோ. க்கான கவுண்டர் அட்டாக் அருமை. நல்லா கணிக்கிறீங்க பாஸ்.

Unknown said...

எல்லாமே அருமை!
அதிலும் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி,வை.கோ கவுண்டர் அட்டாக் சூப்பர்! :-)

Prabu Krishna said...

தமிழ்மணம், முன்னணி வலைப்பதிவுகளில் முதலிடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

a said...

Counter கமெண்ட் சூப்பருங்கோவ்வ்வ்வ்......

T.V.ராதாகிருஷ்ணன் said...

superb

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

ஆர்.கே சதீஸ்குமார் said

//இதுக்குத்தான் இத்தனை அலப்பறையா..ரேட்டை ஏத்தத்தான் போராட்டம் ,கணவனை விட்ர்டு தரமாட்டேன் என சவடால் எல்லாம்//

ரிப்பீட்டு.

எல்லா கவுண்டர் கமெண்டும் சூப்பர் தல

அஞ்சா சிங்கம் said...

Best Online Jobs said...

100% Genuine & Guarantee Money Making System. (WithOut Investment Online Jobs).

Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com..........//////////////////////////

நாட்ல கொசுத்தொல்லை ஜாஸ்தி ஆகிடுச்சு..
மருந்து அடிங்கப்பா ..............

ஆமினா said...

//..நீங்களே கோடி கோடியா சம்பாதிச்சுக்குங்க.. ஏதோ 5 வருஷத்துக்கு ஒரு தபா நாங்க ரூ 2000 சம்பாதிக்கறது உங்க கண்ணை உறுத்துதா?///

அதானே....