Showing posts with label mokkai. Show all posts
Showing posts with label mokkai. Show all posts

Thursday, February 10, 2011

தல தலயா அடிச்சுக்கிட்டேன் யார் கேட்டா..? இப்போ பாருங்க...

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில் இது.இந்தியாவுல ஏன் இவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா?னு கேட்டு அதைப்பற்றி காமெடியா ஒரு விளக்கம் கொடுத்திருக்காங்க.தேவைப்பட்ட இடத்துக்கு மட்டும் தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்.ஒரு வெளை இதை ஏற்கனவே பார்த்திருந்தால் ரிப்பீட் ஆடியன்ஸாக ரசிக்கவும்.

இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடி,அதுல 9 கோடி பேரு ரிட்டயர் ஆகிட்டாங்க.37 கோடி பேரு மாநில அரசில் பணி புரிகிறார்கள்.20 கோடி பேரு நடுவண் அரசில் பணி புரிகிறார்கள்.(மத்திய அரசுன்னு சொன்னா டாக்டர் ராம்தாஸ்க்கு கோபம் வந்துடும்.)

2 பிரிவுலயும் யாரும் வேலை செய்யறதில்லை. ஐ டி ல (அதாவது தகவல் தொழில் நுட்பம் எனப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி )1 கோடி பேரு இருக்காங்க.ஆனா அவங்க இந்தியாவுக்காக வேலை செய்யறதில்லை.25 கோடி பேரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். 1 கோடி பேரு குழந்தைங்க.(5 வயசுக்கும் கீழ).15 கோடி பேரு வேலை இல்லா பட்டதாரிகள்.1 கோடியே 20 லட்சம் பேரு எப்பவும் ஹாஸ்பிட்டலே கதினு இருக்காங்க.79,99.998 பேரு ஜெயில்ல களி சாப்பிட்டுட்டு இருக்காங்கன்னு ஒரு நிலையியல் புள்ளி விபரம் சொல்லுது.மிச்சம் இருக்கறது நீயும் ,நானும் மட்டும்தான்.நீ  வெட்டியா மெயிலை படிச்சுட்டு ,அதை ஃப்ரண்ட்ஸ்க்கு ஃபார்வர்டு பண்ணிட்டு இருக்கே.நான் மட்டும் தனியா இந்தியாவை எப்படி காப்பாத்தறது?அதான் மடேர் மடேர்னு தலைல அடிச்சுக்கறேன்.
Why INDIA is in trouble.....


Population: 110 crore


9 crore retired 
[][][][][]
37 crore in state Govt; 


20 crore in central Govt. 


(Both categories don't work) 
[][]
1 crore IT professional (don't work for India ) 
[][][][]
25 crore in school 
[][][]
1 crore are under 5 years 
[][]
15 crore unemployed 
[][][]
1.2 crore u can find anytime in hospitals 
[][][][][][]
Statistics says u find 79,99,998 people anytime in jail 
The Balance two are U & Me. 


U are busy " checking Mails /sending fwds.. "..!! 
[][][][][][]
HOW CAN I HANDLE INDIA alone? 


[]- பி.கு-இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை.

Tuesday, January 18, 2011

பிரபல தமிழ் சினிமா ஹீரோக்கள் வலைப்பூ ஆரம்பித்தால்...(ஒரு ஜாலி கற்பனை)

http://3.bp.blogspot.com/_zHh2s8KidXI/SWM7qSKsZMI/AAAAAAAACLg/bO6Jrfpotws/s400/Tamanna.jpg
1 ரஜினி - நான் 3 மாசத்துக்கு ஒரு தடவைதான் பதிவு போடுவேன்.
நான் ஒரு பதிவு போட்டா அது 100 பதிவு போட்ட மாதிரி...என் பிளாக்ல
ஃபாலோயர்ஸ் மட்டும் 4 கோடி பேர் சேர்ந்துட்டாங்க..தமிழ்மணத்தில
பதிவை போட அவங்களுக்குகட்டணம் செலுத்தறது மத்தவங்க பாலிசி.
ஆனா என் பதிவை போட அவங்க கிட்டே கட்டனம் வசூல் பண்றது
என் பாலிசி.நான் பதிவு போட்டா நெட் டிராஃபிக்கே ஜாம் ஆகிடும். ஆன் லைன்ல அதிகபட்சம் 60 பேர பார்த்திருப்பே... வினவு பதிவுன்னா 140 பேரைப்பார்த்திருப்பே.. 4 லட்சம் பேர் ஆன்லைன்ல ஒரே பிளாக்ல பார்த்திருக்கியா?இப்புடுச்சூடு கண்ணா.. இனிமே ஒரு படம் முடிச்சதும் இமயமலைக்குப்போக மாட்டேன்,நெட் செண்ட்டருக்கு  வந்துடுவேன்.நடிகை மீனாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்காம். 2020ல அந்த பொண்ணோட ஜோடி சேர்ந்துட வேண்டியதுதான்..

2. கமல் - என் பிளாக் காத்து வாங்கிட்டு இருக்குன்னு ஆளாளுக்கு நக்கல்
அடிக்கறாங்க..நான் எழுதறது எதுவும் புரியறதில்லைன்னு ஒரே கம்ப்ளைண்ட்.
நான் படத்துல வசனம் பேசறது மட்டும் புரிஞ்சிடுச்சா?அதுக்கு மட்டும்
கை தட்டுறீங்க..?கூகுள் காசுல ஆரம்பிச்ச பிளாக்ல நல்ல நல்ல
பதிவா போடுவேன்,காசு குடுத்து டொமைன் ஆரம்பிக்கனும்னா
ஜகா வாங்கிடுவேன்.என் பிளாக் ஓப்பன் பண்ணுனா ஆன்லைன்ல
எப்பவும் பெண்லைனா இருக்கும். அதாவது பெண்கள் கூட்டமா இருக்கும்.
எனக்கு ஒரே ஒரு டவுட்.என் படத்துல எப்படியும் ஒரு கிஸ் சீன்
வெச்சிடுவேன்.பிளாக்ல என்ன பண்றது?பேசாம லோகோவை கிஸ் பண்ண்ற
மாதிரி வெச்சிட வேண்டியதுதான்.

3.கேப்டன் - இந்த பிளாக்கர்ஸ் உலகத்துல மொத்தம் 1680 பதிவர்கள் இருக்காங்க. அதுல மொக்கைப்பதிவர்கள் 380 பேர். நல்ல பதிவர்கள் 1002 பேர்..கணக்கு உதைக்குது... மனப்பாடம் பண்ணிட்டு வர்றப்ப எங்கேயோ தப்பு நடந்திருக்கு.. மைனஸ் ஓட்டு -பிளாக் உலகுல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.வசனம் பேசும்போதும் சரி..பதிவு போடும்போதும் சரி..பல்லைக்கடிச்சுக்கிட்டேதான் பதிவு போடுவேன்..என் கல்யான மண்டபத்தை இடிச்சாங்க  பொறுத்துக்கிட்டேன்.. என் பிளாக்கை யாராவது ஹேக் பண்ண நினைச்சா அவங்களை சும்மா  விடமாட்டேன்..பஞ்ச் டயலாக் பேசியே அவங்களைக்கொன்னெடுத்துடுவேன்..
 என் பிளாக்கை ஓப்பன் பண்ணுனா ஆன்லைன்ல ஒரே ஒரு ஆள்தான் வர்றதா சிலர் நக்கல் அடிக்கறாங்க.. அந்த ஒரு ஆளும் நான்தான்.. எனக்கு கூட்டணி பிடிக்காது.. அது அரசியலா  இருந்தாலும் சரி..வலைப்பதிவா இருந்தாலும் சரி.. தனியாத்தான் எல்லாம்..யாரும் என் பிளாக் பக்கம் வராதீங்க.. ஆனா ஓட்டு மட்டும் போட்டுடுங்க..
http://thebollywoodactress.com/wp-content/uploads/2008/05/asin1.jpg
4. விஜய் - தமிழ்மணம் டாப் 20 -ங்கறது ஒரு வட்டம் மாதிரி.. இதுல மேல இருக்கறவர்  கீழே வருவார்..கீழே இருக்கறவர் மேலே போவார்..தமிழ்மணம் கட்டண சேவையை பயன்படுத்தி ஹிட்சை ஏத்திக்கற மாதிரி என் படம் ரிலீஸ் ஆகற தியேட்டர்லயும் ஏதாவது சேவையை  பயன்படுத்தி படத்தை ஹிட் ஆக்கிடனும்..ஆளாளுக்கு பிளாக்ல நம்மை நக்கல் அடிக்கறாங்க..இனி பிரச்சனை இல்ல ,காவலன் ஹிட் ஆகிடுச்சு.. இனி என்னைப்பத்தி எவனாவது போஸ்ட் போட்டு நக்கல் அடிக்கட்டும்..எதிர் பதிவா போட்டு பின்னி எடுத்துட வேண்டியதுதான்..நான் பதிவு போட்டா யாரும் தூங்க மாட்டாங்க.. பதிவு போடலைன்னா யாரும் தாங்க மாட்டாங்க..என்ன ஒண்ணுமே புரியலைன்னு யோசிக்கறீங்களா? பிரபல பதிவர்னா அப்படித்தான் அவங்க பதிவும் புரியக்கூடாது.. அவங்க பேசுறதும் புரியக்கூடாது..

5. டி ஆர் - ஏய் டண்டணக்கா டனக்கு நக்கா.. என் பையன் பேரு சிம்பு ,நான் ஆரம்பிக்கப்போற பிளாக் பேரு வம்பு..WWW.VAMBU.BLOGSPOT.COM. நான் அடிக்கடி கட்சி மாறிடறேன்னு ஆளாளுக்கு நக்கல் அடிக்கறாங்க..நான் பிளாக்கர்சை பார்த்து கேக்கறேன். நீங்க மட்டும் நிலையா ஒரே திரட்டி மட்டும் போதும்னு என்னைக்காவது நினைச்சு இருக்கீங்களா? தமிழ்மணமும் வேணும்,இண்ட்லியும் வேணும் அப்படின்னு சேஃப்டியா இருக்கலையா? அதே மாதிரிதான் நானும் ..என் பிளாக் லோகோவா யாரய்யா அது கரடி பொம்மையை அட்டாச் பண்ணுனது? ஓ.. என் ஃபோட்டாவா?..தறுதலைக்காதல்கள் இருக்கறதுக்கு மத்தில ஒரு தலைக்காதல் அப்படின்னு படம் எடுத்து ஓஹோன்னு வரப்போறேன்..

6. கார்த்தி - பயமா? எனக்கா? நல்லதா ஒரு பதிவு கூட போடாமயே வலைப்பதிவு உலகை விட்டுப்போயிடுவேனோன்னு ஒரே ஒரு பயம்தான் இருக்கு.நான் போஸ்ட் போடும்போது என் கை மீசையை முறுக்கிட்டு இருக்கனும். சிரிச்சுக்கிட்டே போஸ்ட்டை ரிலீஸ் பண்ணனும்.தமனா அடிக்கடி என் பிளாக்ல கமெண்ட் போடறதா ஒரு குற்றச்சாட்டு இருக்கு..எப்போ பதிவு போட்டாலும் மீ த ஃபர்ஸ்ட் -னு ஒரு கமெண்ட் போட்டு 2 பேரும் எப்பவும் ஒண்ணாதான் இருக்கோம்கறதை காட்டிக்குடுத்திடறாங்க..ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.. நான் எங்க வீட்ல பார்க்கற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.

டிஸ்கி 1 - ஈரோடு மாவட்ட கழகக்கண்மணிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க ( மிரட்டுனாங்க அப்படிங்கறதைக்கூட நாசூக்காத்தான் சொல்ல வேண்டி இருக்கு) கலைஞரின் இளைஞன் பட விமர்சனம் லாக் செய்து விட்டேன்.. இனி அந்தப்படம் ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் 100 நாட்கள் ஓடி விடும் என்று எதிர்பார்க்கிறேன்..ஹா ஹா ஹா

டிஸ்கி 2 -- பொங்கல் லீவ்ல நெட் பக்கம் வராதவங்களுக்காக

இளைஞன் - வறட்சி ஆகி விட்ட புரட்சி - சினிமா விமர்சன

2.

காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்


.3 சிறுத்தை - செம ஸ்பீடு வித்தை - சினிமா விமர்சனம்

4.       ஆடுகளம் - அதகளம் - சினிமா விமர்சனம்

5.

பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை 

 

கோக்கு மாக்கு ஜோக்கு - BY ''A" பேக்கு 21+

Saturday, January 08, 2011

தத்துவம் மச்சினி தத்துவம் 17 3/4 +

http://narumugai.com/wp-content/uploads/2010/10/Namitha1-300x300.jpg
1. யாராலும் திருடி படிக்க முடியாத ரகசிய புத்தகம் - கனவு


2. அமைதியை விட வலிமையான சத்தம் உலகில் இல்லை.
உன் அமைதியை ஒருவன் புரிந்து கொண்டால் உன் வார்த்தைகளை
அவன் தவறாக ஒரு போதும் புரிந்து கொள்ளமாட்டான்.


3. கணிணிக்குள் வாழ்க்கையை தேடுகிறோம்,கடைசியில்
உழவனின் உழைப்பைத்தின்று வாழ்கிறோம்.


4.நாம வாழனும்னா எத்தனை பொண்ணுங்களை வேணாலும் சைட்
அடிக்கலாம்,ஆனா சாகனும்னா ஒரே ஒரு பொண்ணை மட்டும்
லவ் பண்ணுனா போதும்.லைஃப் க்ளோஸ்.


5. உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி ,உங்கள் ஆதரவு இல்லாம நாங்க
போன வருஷ டார்கெட்டை அச்சீவ் பண்ணி இருக்க முடியாது..உங்கள்
ஆதரவை இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கிறோம்-
இப்படிக்கு டாஸ்மாக் மேனேஜர்.6. என்னடா?ரொம்ப குறைஞ்ச மார்க் வாங்கி இருக்கே?

அப்பா, உங்களுக்கே தெரியும்.. விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப்போச்சு.
எதையும் அதிகமா வாங்க முடியல..

நீதி - நம்ம மேல இருக்கற தப்பை மறைக்க 1008 வழி இருக்கு.7. ஒரு நாள் ஒரு கிளிக்கு மேரேஜ் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதான்.

நீதி 1 - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நீதி 2 - நாங்களும் ரெண்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கோம்.


8.  படிச்சிருக்கொம். அப்படின்னு டைப் பண்ணும்போதுதான் ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. அது ஏன் பொண்ணுங்க எல்லாரும் திட்டறப்ப, : ஏய் ,மிஸ்டர்,பார்த்தா படிச்சவானாட்டம் இருக்கே.. இப்படி இண்டீசண்ட்டா நடந்துக்கறியே?”அப்படின்னு திட்டறாங்க?

#டவுட் 1 - அப்படி என்ன இண்டீசண்ட் புரொபோசல் இவன் பண்ணி இருப்பான்?
#டவுட் 2. - படிக்காத பையன் கிண்டல் பண்ணுனா எப்படி திட்டுவாங்க?9. ஒரு பொண்ணு இறந்துட்டா..அவளோட ஆவி மேல் லோகம் போச்சு,
அவளோட இதயம் இன்னும் துடிச்சுக்கிட்டே இருக்கறதைப்பார்த்து கடவுள்
ஆச்சரியப்பட்டாரு.”இது எப்படி சாத்தியம்?”னு அந்த ஃபிகர் கிட்டே கேட்டாரு.
அதுக்கு அந்த ஃபிகர் சொல்லுச்சு.”நான் இறந்தாலும் என் காதலன் என் இதடத்துக்குள் இன்னும் உயிரோடதான் வாழ்கிறான்,”
உடனே கடவுள் அந்த ஃபிகரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு.. ஏன்?
ஓவர் ஆக்டிங்க் பண்ணுனதுக்காகவும்,ஆ ராசாவை விட அதிகம பொய்
பேசுனதுக்கும்.

10. இன்கம்டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட் எல்லா பொது இடங்களிலும்
மறைமுக காமிரா செட் பண்ணி வெச்சிருக்காங்க.. அதனால யாரும்
வெங்காயமோ ,தக்காளியோ வாங்காதீங்க..


டிஸ்கி 1 - இதெல்லாம் நான் குங்குமம் பத்திரிக்கைக்கு அனுப்பி.....

வராத மேட்டர்ஸ்(ஆல் ரிஜக்ட்டட்).

டிஸ்கி 2- நமீதா நம்மை(?!) மச்சான்னு கூப்பிடறப்ப நாம் ஏன் அவங்களை மச்சினின்னு கூப்பிடக்கூடாது? (#டவுட்)

டிஸ்கி 3 - டைட்டில்ல 18 + அப்படின்னு போட்டா தாக்கி பதிவு போடறாங்க.. அதனால இனி 17 3/4 + போடலாம்னு ஒரு ஐடியா,மற்றபடி இதுல ஏ ஜோக்ஸ் எல்லாம் இல்ல.ஒரு முன்னோட்டம்தான்...