Monday, January 30, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 2

சிறந்த படிப்பாளி தான் சிறந்த படைப்பாளி ஆக முடியும்” அப்படீன்னு பல பெரிய மனுஷங்க எல்லாம் சொல்லி இருக்கறதால நானும் படிக்க முடிவு செஞ்சேன்.


ஸ்கூல்லதான் ஒழுங்கா படிக்கலை, இதையாவது படிப்போம்னு நான் ஜோக், காமெடி லைன்ல யார் எல்லாம் சாதனை செஞ்சாங்கன்னு கணக்கு எடுத்தேன். என் லிஸ்ட்ல முதல்ல சிக்குனது எஸ்.வி.சேகர். அவர் காமெடி டிராமாக்கள் ஆடியோ கேசட் எல்லாம் வாங்கிட்டு வந்து கேட்க ஆரம்பிச்சேன். அப்போவே ஒரிஜினல் கம்பெனி கேசட் எல்லாம் 26 ரூபாய். அதே நாடகம் ஸ்டேஜ்ல போட்டப்ப அதாவது ஈரோடு கவிதாலயா சார்பா கொங்கு கலை அரங்கம்ல நடந்தப்ப பாக்கலாமுன்னு போனேன். டிக்கெட் 50 ரூபாய். அதனால வாசல்லியே நின்னு ஸ்பீக்கர் சவுண்ட் மட்டும் கேப்பேன். டிக்கெட் செக் பண்றவங்க முதல் அரை மணி நேரம் தான் இருப்பாங்க, அப்புறம் அவங்க உள்ளே போயிடுவாங்க. அதுக்குப்புறம் நானும் உள்ளே போயிடுவேன். (ஹிஹி)

http://1.bp.blogspot.com/_pjvAS8SYKEQ/SyXmsYugquI/AAAAAAAAALQ/T0H3ddRRQa4/s400/sv-sekar.jpg

எஸ்.வி.சேகரின் மேடை ஆளுமை மிகப் பிரமாதமா இருந்தது. அதாவது வசனங்களை அவர் மனப்பாடம் பண்ணிப் பேசறது  மாதிரியே இருக்காது. சரளமா வரும். அதும் இல்லாம ஒரிஜினல் ஸ்கிரிப்ட்ல என்ன டயலாக் இருக்கோ, அது போக அப்பப்ப நாட்டில என்ன நடக்குதோ அதையும் டைமிங்கா ஜோக் அடிச்சு விடுவார். சொந்தச் சரக்கு. இது எனக்கு ஆனந்த விகடன்ல டாப்பிகல் ஜோக்ஸ் எழுத ரொம்ப யூஸ் ஆச்சு. அரசியல் தலைவருங்க ஏதாவது பேட்டி குடுக்கறப்ப அந்த லைன்ல இருந்து ஒரு ஜோக் தேத்தும் கலையை கத்துக்கிட்டேன்.


பெரும்பாலான அரசியல் தலைவர்கள் எல்லாரும் விடற அறிக்கையே காமெடியாத்தான் இருக்கும் என்றாலும், அதுல நம்ம டச் சேர்த்து ஜோக் ஆக்கும்போது நாம ரெகுலரா எழுதற ஜோக்கை விட அதிக கவனிப்பு இதுலே  கிடைக்கும். அதும் இல்லாம பெரும்பாலாம பத்திரிகைகள் டாபிகல் ஜோக்ஸ், பாலிடிக்ஸ் ஜோக்ஸ் அதிகம் பிரசுரிச்சிட்டிருந்தாங்க.

http://1.bp.blogspot.com/_NKJBxS5NDrw/TFzxfQ9BKbI/AAAAAAAAAuQ/2KMfCM8xe6M/s1600/ARS2.jpeg


அப்புறமா எஸ்.வி.சேகரின் முன்னோடி கிரேஸி மோகன்னு தெரிஞ்சுது. அவர் நாடகங்கள்  கேசட் எல்லாம் வாங்கினேன். வார்த்தை ஜாலம், அதாவது எதிராளி பேசும் வார்த்தைகளை வெச்சே குழப்பி அதுல இருந்து ஒரு ஜோக் எடுக்கறது, இது பிரமாதமா அவருக்கு வருது. அவரோட படங்கள் எல்லாம் கவனமா பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு படத்துல பொதுவா 25 ஜோக்ஸ், இல்லைன்னா அதிகபட்சமா 40 ஜோக்ஸ் தான் பொதுவா வைப்பாங்க, ஆனா கிரேசி மோஹன் டயலாக் எழுதுன படங்கள் எல்லாம் 60 ஜோக்ஸ் சர்வ சாதாரணமா வந்தது.

இப்போ தான் எனக்கு ஒரு பிரச்னை வந்தது. மெம்மரி பவர் எனக்கு கம்மி. படம் பார்த்துட்டு வந்து யோசிச்சு பார்த்தா 20 ஜோக்ஸ் மட்டும் தான் என்னால நினைவு  வெச்சுக்க முடிஞ்சுது. அதை டெவலப் பண்ண ஆரம்பிச்சேன்.


இதிலே, உதாரணத்துக்கு எஸ்.வி.சேகர் நாடகத்துல இருந்து ஒரு சாம்ம்பிள் வசனம் :
ஹலோ அய்யா இருக்காருங்களா?
லேடி : மேலே படுத்திருக்காருங்க ( மொட்டை மாடில)
ஐயையோ, சாரிங்க, நான் அப்புறம் ஃபோன் பண்றேங்க
இந்த ஜோக் தான் அவர் நாடகங்கள்ல சூப்பர் ஹிட் ஆச்சு. நான் மக்கள் ரசனை எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது கே பாக்யராஜ் சார் டைப் இலை மறைவு, காய் மறைவா  ஜோக் இருக்கனும், எஸ் ஜே சூர்யா மாதிரி பட்டவர்த்தனமாய் இருக்கக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.


கூடவே, டைமிங்க் ஜோக் & டாப்பிக்கல் ஜோக் . அதாவது அந்தந்த கால கட்டத்துல என்ன சம்பவங்கள் நடக்குதோ அதை வெச்சு ஜோக் அடிப்பது,எதிராளி என்ன பேசறானோ அவன் வார்த்தைல இருந்தே ஜோக் எடுப்பது.

http://www.outlookindia.com/images/cho_ramaswamy_20090330.jpg


அடுத்த கட்டம் துக்ளக் ஆசிரியர் சோ.


இவர் அதிமுக அனுதாபின்னு ஒரு பேச்சு இருக்கு. அது பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. என் பார்வைல யார் எல்லாம் நல்லா காமெடி பண்ணறாங்களோ அவங்களை எல்லாம் ரோல் மாடலா எடுத்துக்க முடிவு செஞ்சுட்டேன்,. எனக்கு எதிரின்னு யாரும் கிடையாது. விருப்பமான கட்சி, அபிமான நடிகர்னு யாரும் கிடையாது.


முகம்மது பின் துக்ளக் நாடகம் தான் சோ எழுதுன மாஸ்டர் பீஸ். அந்த புக்ல மட்டும் 230 ஜோக்ஸ் தேறுச்சு. பல வருடங்களுக்கு முன்பே எம் எல் ஏ விலை போவது பற்றி மிகப்பிரமாதமா எழுதி இருந்தார். நாளை நடப்பதை இன்றே கணிப்பது என்ற கலை அவரிடம் அதிகம்.


பிளாக் & ஒயிட் படங்கள் என்றாலும், அவரு நடிச்ச படங்கள் கே டிவில எப்போ போடுவாங்கன்னு காத்திருந்து பார்க்கத்தொடங்கினேன். துக்ளக் பத்திரிக்கையும் வாங்க ஆரம்பிச்சிட்டேன். அதுல துக்ளக் சத்யா அபாரமான கார்ட்டூன்கள், காமெடி கட்டுரைகள் எல்லாம் எழுதுவாரு. அதை எல்லாம் ரசனையோட படிச்சேன்.


ஆனந்த விகடன்ல அட்டைபட ஜோக் எழுதி புகழ் பெற்ற படுதலம் சுகுமாரன் சிறுகதை செக்‌ஷன்க்கு போய்ட்டார். அவரை யாரும் மறக்கவே முடியாது, ஏன்னா எம் ஜி ஆர் பிரியட்ல ஒரே ஒரு அட்டைப்பட ஜோக்குக்காக ஆசிரியரே சிறை செல்ல நேரிட்டது.1000 ரூபாய் அபராதம் அரசே கொடுத்து விடுவித்தது. அதே போல் ஆனந்த விகடன் ஆசிரியரை உள்ளே அனுப்பும் அளவு ஒர்த் ஆன( !!!??) ஜோக்ஸ் எழுதனும்னு ஒரு வெறியோட எழுத ஆரம்பிச்சேன்.

ஆனா பாருங்க 2 வருஷமா ஜோக்ஸ் வந்ததே தவிர அட்டைப்படத்துல வரலை. அப்புறம் எப்படியோ போன ஜென்மத்தில நான் செஞ்ச புண்ணியத்துல ஒரு ஜோக் அட்டைப்படத்துல வந்தது.
தலைவரே, ரத்தத்தின் ரத்தமே-ன்னு கட்சிக்காரங்களை கூப்பிட்டது தப்பா போச்சு


ஏன்?

கட்சி பல குரூப்பா பிரிஞ்சிடுச்சு

இந்த ஜோக் அட்டைப்படத்துல வந்தாலும் பெருசா பரபரப்பா பேசப்படலை. அட, குறைந்தபட்சம் ஆசிரியருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட வரலை.


அப்போதான் அதிரடியா ஜோக் உலகுக்கு வந்தார் தஞ்சை தாமு. இவர் என் மானசீக குரு எனலாம். பொதுவா என்னை விட திறமைசாலிங்க எல்லாரையுமே நான் மானசீக குருவா ஏத்துக்குவேன். இவரது வார்த்தை ஜாலங்கள் பிரம்மிக்க வைத்தன.


வி சாரதி டேச்சு பத்திரிக்கை  எடிட்டர்களை கவர்ந்தார் என்றால் தஞ்சை தாமு சாதாரண வாசகர்களை கவர்ந்தார். அவரது ஜோக்குகள் தனித்துவம் பெற்றன. அவரது சொந்த ஊர் தஞ்சாவூர். உடனே அவரை சந்திக்க ரயில் ஏறிட்டேன்.


வல்லம் தாஜூ என்ற பெயரில் கவிதை எழுதியவரும், பல உள்ளூர் பட்டி மன்றங்களீல் பேசியவருமான அவரது நட்பு கிடைத்தது. பல நுணுக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.


அவரது புகழ் பெற்ற ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்…
இவ்வளவு வசதி இருந்தும் தலைவர் தரைல பாய்ல  படுக்கறாரே, அவ்வளவு எளிமையா?


அட நீங்க வேற, அவருக்கு காலைல எழுந்ததும் எதையாவது சுருட்டணும்.

இந்த மாதிரி மற்றவர்கள் யோசிக்காத கோணத்தில் ஜோக்ஸ் எழுதுவதில் அவர் கை தேர்ந்தவர்.


அடுத்து வீ. விஷ்ணு குமார், கிருஷ்ணகிரி. இவரது படைப்பாற்றல் பிரம்மிக்கத்தக்கது. கதை, ஒரு பக்க கதை, கவிதை, ஜோக்ஸ் என எல்லா ஏரியாவிலும் கல்லா கட்டும் ஆள். செம ஷார்ப்பாக இவரது படைப்புகள் இருக்கும். இவரை நேரில் சந்தித்து சில பாடங்களை கற்றுக்கொண்டேன்.


ஆரம்பத்தில் இருந்தே எனக்கு நடிக நடிகைகளை நேரில் சந்திக்கும் ஆர்வம் வந்ததே இல்லை.  இலக்கியவாதிகள், படைப்பாளிகளை பார்க்கும் ஆர்வமே அதிகம் இருந்தது, ஆஃபீஸ் வேலையாகவோ, உறவினர், நண்பர் திருமணங்கள்க்காக வெளியூர் செல்லும்போது அந்த ஊரில் எந்த படைப்பாளி இருக்கார்னு பார்த்து வாலண்ட்ரியா ஆஜர் ஆகி அறிமுகப்படுத்திக்குவேன்.
இப்படி என் எழுத்துப்பணி சீரா போய்ட்டு இருக்கும்போதுதான் சாவி பத்திரிக்கையின் தீபாவளி சிறப்பிதழ்ல என்னோட 8 ஜோக்ஸ், ஒரு சினிமா விமர்சனம், ஒரு காமெடி கட்டுரை ( ஜெவை கிண்டல் பண்ணி) வந்தது. சாவி அவர்கள் எனக்கு ஃபோன் செய்து சென்னை வந்தால் அவசியம் சந்திக்க என்று சொல்ல எனக்கு அது ஒரு பெரிய அங்கீகாரமாக தோன்றியது.


அதுக்கு அப்புறம் தான்…

- தொடருவேன்…

http://4.bp.blogspot.com/_Tq9uaJI0Xww/R8g5fjlXqyI/AAAAAAAACPw/28hI31_yzs4/s200/chavi.JPG
டிஸ்கி - இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்
டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க http://adrasaka.blogspot.com/2012/01/1.html

37 comments:

பிரேம் குமார் .சி said... Best Blogger Tips

இப்போதும் குங்குமத்தில் உங்கள் பெயரை பார்த்தேனே நீங்க தானா அது

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

@பிரேம் குமார் .சி

யா,பேர் மட்டும் தான் பார்த்தீங்க்களா? ஜோக்?

ஹாலிவுட்ரசிகன் said... Best Blogger Tips

குட்மார்னிங் சி.பி. நல்ல மீட்டல். வாஷிங்டன் திருமணம் கதை படிச்சிருக்கேன். அட்டகாசமான காமெடி.

ஹாலிவுட்ரசிகன் said... Best Blogger Tips

நீங்க சொன்ன பின் தான் சோவின் முகம்மது .... நாடகம் பற்றி தெரியவந்தது. தேடிப் பார்க்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>ஹாலிவுட்ரசிகன் said...

நீங்க சொன்ன பின் தான் சோவின் முகம்மது .... நாடகம் பற்றி தெரியவந்தது. தேடிப் பார்க்கிறேன்.

படிங்க :)

விக்கியுலகம் said... Best Blogger Tips

உங்களுடைய கடந்து வந்த பாதைகளை படிச்சிட்டு வரேனுங்க...எப்படியெல்லாம் ஜோக் எழுதி நடித்தாரோ அதே போல இன்று (உண்மையில் காமடி பீசாக!) இருப்பது சேகர் மட்டுமே....ஒரு காலத்தில அவரை போல டைமிங் ட்ரை பண்ணி நாடகத்துல நடிச்சிருக்கேன்...ஹிஹி..ஆனா நாடகத்தை தாண்டி என் நண்பர்கள் வட்டத்திலும் இப்படிப்பேசப்போக(!)...பய புள்ளைங்க, எப்பவுமே ஏன்டா ஏதாவது கலாய்க்கறது போல பேசுற...அது எதிராளிக்கு உன்மேல இன்னும் வெறுப்பை உண்டு பண்ணும்னு சொன்னது தான் ஞாபகம் வருது ஹிஹி!

Mudhal Muttham said... Best Blogger Tips

Nalla muyarchi, nalla anubavangal....!!!!

மனசாட்சி said... Best Blogger Tips

தொடரட்டும்.... தொடர்கிறேன்.

காங்கேயம் P.நந்தகுமார் said... Best Blogger Tips

உங்கள் பத்திரிக்கை உலக அனுபவங்கள் மற்றும் பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ்பெறுவது எப்படி?
இவற்றையெல்லாம் படித்த எனக்கு பத்திரிக்கைகளுக்கு எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. எனது முயற்சிக்கு உங்களின் ஆலோசனையும், ஆதரவையும் எதிர்பார்த்து........

sutha said... Best Blogger Tips

இதில் mention பண்ணி இருக்கற புத்தகம் எல்லாம் என் விலாசத்துக்கு அனுப்பி வைக்கவும் : ))

சேகர் said... Best Blogger Tips

தொடர்ந்து ஜோக்ஸ் எழுதுங்க...

நிரூபன் said... Best Blogger Tips

இனிய காலை வணக்கம் அண்ணர்,

எஸ்வி சேகர் சாரை எனக்கும் புடிக்கும்,

நான் கூட அவரது படைப்புக்களிற்கு ரசிகனாகியிருக்கேன்.

எஸ்,வி. சேகர் சாரின் கல்யாணம் பண்ணிப்பார் அப்படீன்னு ஒரு காமெடி கசெக்ட் என் அப்பா 2000ம் ஆண்டில் எங்கேயோ இருந்தி வாங்கிட்டு வந்து கொடுத்தாரு. நல்ல சூப்பர் ராமா பண்ணுவாரு.

நிரூபன் said... Best Blogger Tips

சின்ன வயசில இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் அப்துல்ஹமீட் சார் தொகுத்து வழங்கும் ஞாயிறு கதம்பம் நிகழ்ச்சியில் எஸ்.வி சேகர் சாரின் இனிய நாடகங்களையும் கேட்டிருக்கேன்.

அப்புறமா 2004-2006 காலப் பகுதியில் ரேடியோ மிற்சி 98.5 எப் எம் இல ஞாயிற்றுக் கிழமை மதியம் எஸ்வி சேகர் சார் ஒரு சூப்பர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவாரு. அது எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்.

நேயர்களுடன் போனில் பேசி சூப்பரா ரகளை பண்ணுவாரு.

அந்த நிகழ்ச்சி என்னான்னு மறந்திட்டேன்.

சூரியன் எப் எம் சென்னை கிளையில் 103.2 எப் எம் அலைவரிசையில் ப்ளேட் தினா அப்படீங்கிற அறிவிப்பாளரின் நிகழ்ச்சியும் எனக்கு ரொம்ப புடிக்கும்,

இவரும் எஸ்வி சேகர் சார் மாதிரி இலகு தமிழ் காமெடி செய்வாரு.

நிரூபன் said... Best Blogger Tips

கிரேஸி மோகன் சார் பத்தி நானும் சொல்ல நினைச்சேன்.
ஆனால் நீங்க ரெண்டாம் பந்தியில சொல்லிட்டீங்க.

திரைப்படங்களில் கூட அவரின் வசனங்கள் வந்திருக்கும்,.

கிரேஸி மோகனின் வசனங்கள், நாடகங்கள் என்றாலே ஓர் தனிச் சுவை தான்.

என் சின்ன வயசினை உங்கள் பதிவு மீட்டிப் பார்க்க வைக்கிறது.

இந்த தொடரை எழுதுவதற்கு நாம தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்,
நீங்க எனக்கு நன்றி சொல்லக் கூடாது,
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said... Best Blogger Tips

சிபி அண்ணர், இந்த மேலே படுத்திருக்கிறாங்க ட்ராமை எஸ்வி சேகர் சார் 2003ம் ஆண்டு துபாயில் இடம் பெற்ற சன் டீவி நட்சத்திர கலை விழாவிலும் செஞ்சிருப்பதாக ஞாபகம்.

டீவியில் பார்த்திருக்கேன்.

செம காமெடியா இருக்கும்.

நிரூபன் said... Best Blogger Tips

ரத்தத்தின் ரத்தமே செம காமெடி சார்..

வேலாயுதம் படப் பாடல் வந்தப்போ அந்த காமெடியும் புக்கில வந்திருந்தா சூப்பரா இருக்கும்.

நிரூபன் said... Best Blogger Tips

தொடரட்டும் உங்கள் எழுத்து, அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

உண்மையிலே சுவாரஸ்யமாக இருக்கிறது இதனைப் படிக்கும் போது.
என் சின்ன வயசு ஞாபகங்கள் அவ்வப்போது வந்து போகுது.

நன்றி.

கோகுல் said... Best Blogger Tips

உங்கள் படைப்புகளை பல பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.
கொஞ்ச நாளைக்கு முன் கூட நீங்கள் சாவி அவர்களை சந்தித்த விஷயம் குறித்து புதிய தலைமுறையில் வந்திருந்தது.

நல்ல அனுபவங்கள்.
தொடருங்க தல.

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said... Best Blogger Tips

உங்கள் அனுபவங்கள் யாவும் அருமை சி பி! நாம எந்தது துறைல ஈடுபடுறோமோ, அதுல நிறைய கத்துக்கணும்கறதுக்கு, உங்க முயற்சி நல்ல எடுத்துக்காட்டு!

எனக்கும் எஸ்.வி,எஸ், கிரேசி மோகன் சோ எல்லோரையும் பிடிக்கும்! படுதலம் சுகுமாரன் கதைகள் படிச்சிருக்கேன்! அவர் சிறை சென்றது ஆச்சரியமான தகவல்!

எஸ் வி சேகரின் “ ஆயிரம் உதைகள் வாங்கிய அபூர்வ சிந்தாமணி” இன்னிக்கும் என்னோட ஐ பாட்டுல இருக்கு!

அதுல அரசியல் வாதியா வந்ததுக்குப் பின்னாடி, வாய்ஸ் மாடுயூலேஷன் சூப்பரா பண்ணுவாரு!

நீங்கள் திரு. சாவி அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி!

தஞ்சை தாமுதான் உங்கள் மானசீக குருவா? பொருத்தமான ஆள் தான்! எனக்கு வி.சாரதிடேச்சுவையும் ரொம்ப பிடிக்கும்!

ஒரு கேள்வி கேட்டு வைக்கிறேன்! அடுத்தடுத்த பாகங்களில் பதில் சொல்லுங்க! தமிழ் ஜோக் உலகில் பெண்களின் பங்களிப்புக்கள் என்ன? பெண் ஜோக் எழுத்தாளர்கள் எந்தளவுக்குச் சாதித்திருக்கிறார்கள்?

சீர்காழி வி ரேவதி உண்மையில் பெண்ணா? அல்லது பெண் பெயரில் எழுதும் ஆணா?

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

@ மணி

சீர்காழி வி ரேவதி உண்மையில் பெண் பெயரில் எழுதும் ஆண்

தமிழ் ஜோக் உலகில் பெண்களின் பங்களிப்புக்கள் என்ன? பெண் ஜோக் எழுத்தாளர்கள் எந்தளவுக்குச் சாதித்திருக்கிறார்கள்? எனது 6 ம் பாகத்தில் சொல்றேன்

<>>>>படுதலம் சுகுமாரன் கதைகள் படிச்சிருக்கேன்! அவர் சிறை சென்றது ஆச்சரியமான தகவல்!

சிறை சென்றது
விகடன் ஆசிரியர்

காட்டான் said... Best Blogger Tips

உங்கள் தொடர் பலருக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்றே திடமாக நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!!!

angelin said... Best Blogger Tips

மிகவும் அருமையான பகிர்வு தொடருங்கள் சிபி ..நீங்க எஸ் வி சேகர் /சோ /கிரேசி மோகன் பற்றி கூறியது அவ்வளவும் உண்மை. நான் ஒவ்வொரு முறையும் சென்னை செல்லும்போது இவர்களின் கேசட்ஸ் எடுத்து வருவேன் ஜுராசிக் பேபி /maadhu plus 2கல்யாணத்துக்கு கல்யாணம் இதெல்லாம் எவ்ளோ நல்ல இருக்கும் .படுதலம் சுகுமாரன் இன்னமும் கதை எழுதுகிறாரா ?
(கொஞ்ச காலம் சுகவீனமாயிருந்தார் )

Chilled beers said... Best Blogger Tips
This comment has been removed by the author.
K.Arivukkarasu said... Best Blogger Tips
This comment has been removed by the author.
K.Arivukkarasu said... Best Blogger Tips

>> டிக்கட் செக் பண்றவங்க முதல் அரை மணி நேரம் தான் இருப்பாங்க. அப்புறம் அவங்க உள்ளே போயிடுவாங்க. அதுக்கப்புறம் நானும் உள்ளே போயிடுவேன். (ஹிஹி)<< உண்மை விளம்பி வாழ்க ! :-))

ராஜ நடராஜன் said... Best Blogger Tips

//டிக்கெட் செக் பண்றவங்க அரைமணி நேரம்தான் இருப்பாங்க!அப்புறம் உள்ளே போய்டுவாங்க.நானும் உள்ளே போய்விடுவேன்.//

சி.பி.வெட்டி ஒட்டற தடா இன்னும் நீடிக்கிறதால நானே வெட்டி ஒட்டிகிட்டேன்.

இந்த டெக்னிக்கெல்லாம் டிராமா முடிஞ்சு இப்ப சொல்லி என்ன பலன்?பதிவையாவது படிச்சு முடிச்சுடறேன்.

ராஜ நடராஜன் said... Best Blogger Tips

படம் சார்ந்தவர்கள் படா ஜோக்கர்களே.
படம் சார்ந்தவர்களும் படா ஜோக்கர்களே.

ஸ்பான்டினியஸா ஜோக்கடிப்பவர்கள் என்.எஸ்.கே,டணால் தங்கவேலு,நாகேஷ் என ஒரு பட்டியலே இருக்குது.

எஸ்.வி.சேகருக்குப் பின்பே கிரேஸி மோகன் பெயர் பிரபலமானதென நினைக்கிறேன்.ஒருவேளை கிரேஸி நாடகத்தில் முந்திகிட்டாரா?

ஹேமா said... Best Blogger Tips

நகைச்சுவைக்குப் பேர்போனவங்களோட எல்லாம் பழக்கம் இருக்கு.அதான் இப்பிடிச் சிரிக்கச் சிரிக்க
எழுதறீங்க சிபி !

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

அண்ணே, இப்போ தான் பதிவை வாசிக்க டைம் கெடச்சுச்சு.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

உங்கள் தொடர் பத்திரிகை துறையில் முன்னுக்கு வர துடிப்பவர்களை முன்னேற்ற உதவும் என நினைக்கிறேன்.

உங்கள் அனுபவம் வாயிலாக பலரையும் சிறு குறிப்பாக சொல்லும் பாங்கு பிடித்தவையாக உள்ளது.

ILA(@)இளா said... Best Blogger Tips

சிக்ஸ் முகம் பத்தியும் சொல்லுவீங்கதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

நல்ல சுவராசியமான அனுபவங்கள், மற்றவர்களுக்கு படிப்பினையும் கூட!

கலையன்பன் said... Best Blogger Tips

"எங்க அப்பாவுக்கு ஃபோன் பணணி விஜி ஓடிப் போய்ட்டான்னு சொல்லுங்க"
"ஆ ஐயோ"
"என்ன?"
"டெலிஃபோன் மணி அடிக்கிது"
-செம ஜோக் (எஸ்.வி.சேகர்)

Mohamed Faaique said... Best Blogger Tips

உங்க கதை செம இண்ட்ரெச்டிங்`ஆ இருக்குங்க... உங்க திறமைக்கு பின்னால உள்ள உங்க உழைப்பு பிரமிக்க வைக்குது....

kovaikkavi said... Best Blogger Tips

பாகம் 2 வாசித்திட்டேன். ஒவ்வொருவரையும் வலென்டியராக சந்தித்தது. எஸ்.வி.சேகர் போன்றோரை கவனித்தது.- ஆர்வம் தெரிந்தது. இடுகை நன்று. தமிழ் மணம் போய் லிங்க எடுத்து - இப்போ பேஃவரெட்டில் போட்டுள்ளேன். இனி நினைத்து நேரம் வாசித்து .குறிப்பிடுகிறேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.