Monday, August 06, 2018

பலி ஆடுங்க கசாப்கடைக்கு தேடி வருதுங்க

சென்னை - சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைந்த பின்னர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலையை பூட்டு போட்டு பூட்டிவிடுவோம்!” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் #
# முதல்ல அதிமுக அமைச்சர்கள்"வாய்க்கு"திண்டுக்கல்"பூட்டு போடனும்,சும்மா எதுனா உளறிக்கிட்டு
cps


=============


சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 2 வது இடம் - செய்தி # கேவலமான ஆட்சிக்கே 2 வது இடம்னா"கடைசி இடம் பெற்ற மாநிலம் எவ்ளோ"கேவலமா இருக்கும்?===========
3 எடப்பாடி ஆட்சியில் வானம் மும்மாரி பொழிகின்றது - அமைச்சர்கள் #;

1 மொள்ளமாரி
2 சோமாரி
3 கேப்மாரி


===========


4 OPS
டெல்லி சென்றிருப்பது தமிழகத்திற்கு அதிக நிதி கிடைப்பதற்காக கூட இருக்கலாம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் # நீங்க"கைடு"பண்ணுங்க,அதன்படி நடக்கறோம் ,ரெய்டு மட்டும் வேணாம்னு கால்ல விழுந்துட்டு"வருவாரு============


5 ஆன்மீக பயணத்தில் இருக்கிறேன்.. அரசியல் பேச மாட்டேன்.. சிம்லாவில் ரஜினி பேட்டி # நம்ம அரசியல் பயணமே ஆன்மிக அரசியல்தானே?பேசலாமே?


============


6 மோடியைப் போல் அனைவரும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் - தமிழிசை
# அத்வானி"மாதிரி ஒருத்தர்"சிக்குனா நாம,மோடி ஆகிடலாம்,ஆனா சிக்கனுமே?


============


7 நான் ஏழை. அதனால்தான் ராகுல் கண்ணைப் பார்க்க பயப்படுகிறேன் - மோடி #
# ஏழையா இருக்கறவங்க"நாட்ல நடக்கறதை எல்லாம்"பாக்காம கண்ணை மூடிக்க வேண்டியதுதான்கறாரா?


=========


8 புதிய 100 ரூபாய் நோட்டுகளை எ.டி.எம் -ல் பயன்படுத்தும் வகையில் மாற்ற ரூ.100 கோடி தேவைப்படும் என தகவல் - செய்தி # வெட்டிச்செலவு பண்றதுல இந்த அரசு கெட்டி===========


9 சென்னை - சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைந்த பின்னர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலையை பூட்டு போட்டு பூட்டிவிடுவோம்!” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் #
# முதல்ல அதிமுக அமைச்சர்கள்"வாய்க்கு"திண்டுக்கல்"பூட்டு போடனும்,சும்மா எதுனா உளறிக்கிட்டு


==============


10 தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அம்மா இனி மோடிதான்" - தமிழிசை
# பொதுவா அம்மாக்கள் வீட்டை விட்டு வெளில போகமாட்டாங்க,இவரு நாட்லயே இருக்க மாட்டாரே?=============


11 எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொல்லியிருக்கிறார் - ஓ.பன்னீர்செல்வம் # நமக்கு அவமானப்படறது,கேவலப்படறது புதுசா பாஸ்?=========4


12 நான் அரசியலுக்கு வர மாட்டேன்; அதற்கான தேவையும் தற்போது இல்லை - சிம்பு # பாஸ்,முதல்ல ஷுட்டிங்க்கு கரெக்டா வாங்க,புலம்பறாங்க டைரக்டர்ஸ்


=========


13 More

நான் ஏழை என்பதால் ராகுல் காந்தியின் கண்ணை பார்த்து பேசும் தைரியம் இல்லை - மோடி #
வாழையடி"வாழையா வழக்கத்தில்"உள்ள விஷயம்
கோழைக்கு தான் கண்ணை பார்த்து பேச தைரியம் இருக்காது


=========

14 புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ஏடிஎம்களை மாற்றி அமைக்க 100 கோடி செலவு ஆகும் என தகவல் "வேற முட்டுக்கோல் வேற


சுண்டக்கா கால்"பணம் சுமை கூலி"முக்காப்பணம்
இதுக்கு பேசாம அந்த பருத்தி மூட்டை குடோன்லயே"இருந்திருக்கலாம்னு"மீம்ஸ் பறக்கப்போகுது


============


15 வெளியில் புலி... சட்டமன்றத்தில் எலி... - திமுக குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம். # விஜய்"நடிச்ச புலியும் ஜெயிக்கல,வடிவேலு"நடிச்ச எலியும் ஜெயிக்கல னு சூசகமா சொல்றார் போல


============


16 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் - தினகரன், அ.ம.மு.க. # 20 ரூபா டோக்கன்"இடைத்தேர்தல்ல ஒர்க்அவுட் ஆச்சு,இதுல ஆகுமா


============

17 மதுக்கடைகளை மோடியால் மட்டுமே மூட முடியும் - # பொன்.ராதாகிருஷ்ணன்#
அப்புறம் ஏன் பாஜக ஆளும் மாநிலங்களில் 4 வருசமா மூடலை?=============

18 காவல் நிலையத்தில் விசாரணை கைதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் இருவருக்கு தூக்கு தண்டனை @கேரளா தீர்ப்பு,காக்கிசட்டை ரவுடிகளுக்கு அள்ளு"விட்ருக்குமில்ல?===========


19 தமிழகத்தில் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7,700ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்வு டபுள்.வெரிகுட்.செவிலியர்கள் இன்னொரு தாய்,தரலாம் ,தப்பில்லை


==========


20 ட்விட்டரில் கணக்கு தொடங்கினார் அமைச்சர் செல்லூர் ராஜூ - செய்தி
# பலி ஆடுங்க கசாப்கடைக்கு தேடி வருதுங்க பாவம்


============

0 comments: