Thursday, August 09, 2018

மருத்துவர் அல்லாதோர் சொல்லி டயட் செய்யுறது சட்டப்படி சரியா!?

குருவே!யானைக்குத் தன் பலம் தெரியாதது போல் தன்னழகும் தெரிவதில்லை என்பது உண்மையா?


ஏதோ பேசனும்கறதுக்காக பேசக்ககூடாது,நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க"வர்றப்ப யானை க்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் தன் பிம்பம் தெரியுமே?


==========


2 டூ வீலரில் பெட்ரோல் ட்ரை ஆகி உருட்டி வருவதை தவிர்க்க 2 வழிகள்

1 எப்போ ரிசர்வ் விழுந்தாலும் 40 கிமீ ஓட்டலாம்னு அசால்ட்டா இருக்காம அடுத்த அருகாமை பங்க்ல பெட்ரோல் போடுதல்

2 ஒரு லிட்டர் வாட்டர் கேனில் பெட்ரோல் ஸ்டாக் வைத்துக்கொள்தல் (வேறு"யாருக்காவது உதவலாம்)
===========


3 மருத்துவர் அல்லாதோர் சொல்லி டயட் செய்யுறது சட்டப்படி சரியா!?


தப்புதான்,கூடிய சீக்கிரம் பேலியோ டயட் பார்ட்டிங்க உள்ளே போகப்போறாங்க
============


4 உங்கள் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்க்கலாம் தப்பில்லை,ஆனா பாஸ்தா, பர்கர் ,பீட்சா ,புரோட்டா கொடுத்து பழக்காதீர்கள்,நீங்கதான் பெற்றோர் சொல் பேச்சு கேட்கல,உங்கள் வாரிசுகளாவது நல்ல பழக்கவழக்கங்களுடன் வளரட்டும்===========5
ஒரு படமோ,டிவி நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் நாம பண்ற விமர்சனத்துக்கும் ஒரு விமர்சனம் வந்தே தீரும்,அதை பாசிடிவ்வாதான் எடுத்துக்கனும்===========
6 6 அடி , 6அடி+ உயரம் உள்ளவங்க பஸ் பயணத்தில் கடைசி வரிசை சீட்டில் அமரலாம் ,முன் சீட் வரிசை இல்லாததால் கால் இடிக்காது,ரயிலில் இந்தப்பிரச்சனை இல்லை.நல்ல இடைவெளி

===========
7 குருவே! கோவத்த வெளிய அப்பவே காட்றவன் வீரன்...
ஆனா கோவமே வராத மாதிரி நடிச்சிட்டு சிரிச்சிட்ருக்கவன் மாவீரன் என்பது உண்மையா?

தன் உள்ள உணர்வுகளை அப்படியே கண்ணாடி போல் காட்டுபவன் சாமான்யன், மறைப்பவனே தலைவன்


==============8 லோ ஹிப் சேலை அணிந்த பெண்கள் நகரங்களில் அதிகம் ,இவங்களை ‘லோ ஹிப்”னாடிசம் கற்ற பெண்கள்னு சொல்லலாம்
===============


9 ஆன் லைன் ஆண்களின் கடலை பிள்ளையார் சுழி""சாப்ட்டீங்களா?இன்

னைக்கு என்ன"சமையல்?"


=============


10 தமிழ்சினிமா வில் இதுவரை 2ம் பாகம் பெரிய ஹிட் ஆனதில்லை.உதா அமைதிப்படை"2 ,புலன்விசாரணை 2 ,சிங்கம் 2 ,தமிழ்ப்படம் 2,கலகலப்பு 2
அரண்மனை 2 ,billa 2 ( விதி விலக்கு முனி 2 காஞ்சனா 2)

விஸ்வரூபம் 2 அதை முறியடிக்கும் என கணிக்கிறேன்

=============

11 சர்கார் ஆல்ரெடி வந்த பரத் எனும் நான் பட சாயலாகவோ ,ரீமேக் ஆகவோ இருக்கும் என கணிக்கிறேன்,சிலர் முருகதாஸ் அட்லீ"லெவலுக்கு இறங்க மாட்டார்ங்கறாங்க============


12 ஏற்கனவே கணித்தபடி கடைக்குட்டி சிங்கம் பி&சி செண்ட்ர்களில் அதிரிபுதிரி ஹிட்.50 கோடி−60 கோடி வசூல் வரும்கறாங்க,தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் சூர்யா வின் NGK வெற்றி"எப்படி இருக்கும்?


============


13 குருவே!ஒருத்தன் ஒரு விசயத்த பத்தி அதிகமா பேசுனா அவனுக்கு அதுல அனுபவம் இருக்குமா?இருக்காதா?

அனுபவம் இருக்கோ இல்லையோ அதுல ஆர்வம் இருக்கும்,ஆர்வம் இருக்கறதால் அனுபவமும் இருக்கும்கறது லாஜிக்=============


14 உங்கள் உடல் ஆரோக்யத்தில் ஏதேனும் கேடு வரப்போகிறது எனில் உங்கள் உடல் அதை முதலில் காட்டிக்கொடுத்து விடும்.ஆஸ்பத்திரி,செக்கப்,டாக்டர் எல்லாம் அப்புறம்


============


15 கேரளா வில் நாளை (7/8/15) பந்த்.பஸ்கள் ,மோட்டார் வாகனங்கள் ஓடாது.மாதத்துக்கு 4 சன்டே போல் 2 அர்த்தால் வந்துடுது,இந்தியாவிலேயே அதிக பந்த் நடக்கும் மாநிலம் கேரளா தான்,ஒரு வருடத்துக்கு சுமாராக 25 −30 நாட்கள்"பந்த் ,பெரிய பொருளாதார சரிவை சந்திக்க நேரிடும்


==============


16 செய்திகளை முந்தித்தரும் அவசரத்தில்
பிரேக்கிங் நியூசை தரும் ஆர்வத்தில்
யாரும்,எந்த மீடியாவும்,தனி நபரும் வதந்திகளை,புரளிகளை,பொய்களை,தவறான ,உறுதி செய்யப்படாத"தகவலை பரப்பாதீர்கள்


=============


17 அமைதியாக இருக்கும் மாநிலத்தை பதட்டமாகவே வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டவைதான் பிரேக்கிங் நியூஸ்


=========

18 நெருங்கிய சொந்தத்தின் மரணத்தை விட மனதை அதிகம் பாதிப்பது நம் கண் முன் அழும் அன்புக்கு உரியவரைப்பார்க்க நேரிடும் அவலம்


=======


19 காமெடி & குணச்சித்திர நடிகர் தம்பி ராமய்யா தன் மகனுக்காக இயக்கிய படம் மணியார் குடும்பம் பரவயில்லை ரகம் என கேள்வி.இதற்கு முன் இவர் இயக்கிய படங்கள்
2010 -இந்திர லோகத்தில் நா அழகப்பன் ( வடிவேல்)]-ஃபிளாப்
2000- மனுநீதி 9முரளி)- மீடியம்


==============


20 அரசியலிலோ , சினிமாவிலோ யாரோ ஒரு முக்கியப்புள்ளியுடன் எடுத்த புகைப்படங்களை தற்பெருமைக்காக காட்டுவது ஒரு வித தாழ்வுமனப்பான்மையை காட்டுவதே===============


0 comments: