Monday, August 06, 2018

தேங்காய் எண்ணெய்ல சமைச்சா கொழுப்பு ,பிபி அபாயம்னு சிலர் சொல்றாங்களே?நிஜமா?

காலையிலேயே

பயபுள்ள ஓவரா ஐஸ் வைக்குது
அன்பு பொங்கி ஊத்துது
வழக்கத்துக்கு மாறா புருசன் அதீத அன்பா இருந்தா பழக்கத்துக்கு மாறா இன்னொரு சேனல் ஓடுது னு அர்த்தம்==========


மொல்லமாரி

முடிச்சவிக்கி..
இதுக்குலா
எப்படி சொல்றது...🤔
இங்கிலீஷ்ல

slow rain - மொள்ள மாரி
knot opener − முடிச்சவுக்கி==========


3 புரோட்டா சாப்பிடுவது உடல்நலனுக்கு,ஜீரண உறுப்புகளுக்கு கேடு தரும்.பிபி,சுகர் எதிர் காலத்தில் வரும்.நாக்கு ருசிக்கு ஆசப்பட்டு எதிர்கால ஆரோக்யம் இழக்காதீர்;மைதா மாவும் கெடுதல்,புரோட்டாவை மென்மையாக்க கலக்கப்படும் கெமிக்கல் புற்றுநோய்க்கு அடிகோலும்


==========


4 சிறுகதை எழுததாளர்களின்"எழுத்துத்திறமையைவிட அவர்கள் மார்க்கெட்டிங்க் டெக்னிக் கவனம் ஈர்க்கிறது,பாலோயர்சுக்கு ,நண்பர்களுக்கு கூட்டம் கூடும் நேரமான"11 !am /10pm-11pm ல"கரெக்டா லிங்க்"ஷேர்"பண்ணிடறாங்க


============


5
ஆண்கள் சேமிப்பதில் வல்லவர்கள்,பெண்கள் (அம்மா,அக்கா ,தங்கை"தவிர)அதைக்்கரைப்பதில் கை தேர்ந்தவர்கள்

========


6 வாழைப்பழம் உடல் நலனுக்கு மிக நல்லது.ஆனால் மோரீஸ் பழம் தவிர்க்கவும்.அதை பழுக்க வைக்க ஏதோ மருந்து கலக்கறாங்களாம்


===========


7 முன்னொரு காலத்தில் திருமணம் ஆன பெண்களுக்கான ஐடி கார்டாக

கால் விரல் மெட்டி
உச்சி வகிடு குங்குமம்
தாலி
இருந்தது.=============


8 தரை உருள் நகை என்பது விழுந்து புரண்டு சிரிப்பது மட்டுமல்ல,வளையல் கூடத்தான்===========


9 1 காதலன் மெகா ஹிட்டுக்குப்பின் ரிலீஸ் ஆன "ராசய்யா"அட்டர்பிளாப் (அதுல ஹீரோ சம்பளம் 1 கோடி.பஞ்ச் −நான் கோடில சம்பளம் வாங்கறதா சொல்றாங்க,நாளை எவ்ளவ் கோடினு எனக்கே தெரியாது)


2 என் ராசாவின் மனசுல,அரண்மனைக்கிளி செம ஹிட் ,1 கோடி சம்பளம் ராஜ்கிரண் "மாணிக்கம்" மரணஅடி
3 சீமராஜா==============


10 பட்டுப்புடவை யை டிரைவாஷ்க்குதான் போடுவாங்க.எந்த ஊர்ல எந்த பொண்டாட்டி புருசன் கிட்ட அதைத்தந்து நார்மல் வாஷ் பண்ணச்சொல்லும்?


==========


11 30/7/2018 கேரளா பந்த்.சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க உத்தரவிட்ட கோர்ட் தீர்ப்பை எதிர்த்து பாஜக+இந்து முன்னணி நடத்தும் பந்த்.கேரளா பயணிப்போர் தவிர்க்கவும்==========


12 ஒரு கதை எழுதுவதற்கான மிகச் சிறந்த சூழல் எது தெரியுமா உங்களுக்கு?

இப்டி ஆன் லைன் வராம ஆப் லைன் போறது


=============

13 ஈரோடு மகாராஜா மல்ட்டிபிளக்ஸ்ல தமிழ்நாட்லயே அதிக கட்டணம் வாங்கும் தியேட்டர் .ரூ 200 ,ரூ 250.சென்னையை விட அதிகம்.அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட அதிகம்.இங்க ரிலீஸ் ஆகும் ஆங்கிலப்படத்தை ஈரோட்ல வேற தியேட்டர்ல ரிலீஸ் பண்ண விடமாட்டாங்க.============


14 ஈரோடு மகாராஜா வில் ரிலீஸ் ஆகும் ஆங்கிலப்படங்களை அங்கே பார்க்காமல் தவிர்க்க வழி இருக்கு.அருகாமை ஊர்கள் பவானி(16 கிமீ) கொமராபாளையம் (12 கிமீ) பெருந்துறை(18கிமீ)போய்"படம் பார்க்கலாம்.போக்குவரத்து"செலவு 25 ரூபாய்க்குள்.டிக்கெட் ரேட் 80,100 தான் .எப்படியும் 100 ரூ மிச்சம்===============15 கேரளா வில் எல்லா தியேட்டர்களிலும் பெரும்பாலும் பைக் ,கார் பாஸ் வசூலிப்பதில்லை,இலவசம்.தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் பைக் பாஸ் 10 ரூபா,ஈரோடு மகாராஜாவில் 20 ருபா.கேண்ட்டின் தின்பண்டம் 3 மடங்கு ரேட்.10 ரூபா பப்ஸ் 30 ,40 ருபா,வாட்டர்பாட்டில் 40 ரூபா=============


16 இந்த வார ரிலீஸ் ரிசல்ட் (27/7/2018)
3.25/ 5 ஆல் செண்ட்டர் ஹிட்.ஆக்சன் படம்
2 ஜூங்கா − விகடன் 41 ,ரேட்டிங்க் 2.75 / 5 ,பி ,சி செண்ட்டர் மீடியம் ஹிட் ,பிளாக் ஹ்யூமர்
3 மோகினி−பழைய பழி வாங்கல் கதை,மொக்கை திரைக்கதை ,விகடன் 40 ,ரேட்டிங் 2.25 / 5


===========


17 குருவே!நாணயத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன நம் ஒழுக்கம் !என்பது உண்மையா?

நாணயம் இல்லா நாணயம் சொர்க்கத்துக்குப்போக உதவாது.நா நயம் தான் உண்மையான சொர்க்கம்


==============


18 கடைகளில் ஒரு லிட்டர் 80 ரூபா ,90 ரூபா என விற்கப்படும் கடலை எண்ணெய்/ரீபைண்ட் ஆயில் வாங்காதீர்கள்.செக்கில் ஆட்டிய ஒரிஜினல் கடலை எண்ணெய் ஒரு லிட்டர் ரூ"170 (இரண்டாம் தரம்)ரூ 200 (முதல் தரம்) பாதிக்கு பாதி விலை கம்மி னு ஆரோக்யத்தை இழந்து டாக்டர்களுக்கு கப்பம் கட்டாதீர்


========

19 தேங்காய் எண்ணெய்ல சமைச்சா கொழுப்பு ,பிபி அபாயம்னு சிலர் சொல்றாங்களே?நிஜமா?

அப்டி பாத்தா கேரளாவாசிகளுக்கு பிபி புல்லா ஏறி இருக்கனுமே?அவங்க சமையல்ல யூஸ் பண்றது தேங்காய் எண்ணெய்தான்,இடியாப்பத்துக்கு தேங்காய்ப்பால்தான்.ஆரோக்யமானது.தாவரத்தில் எதுவும் கெடுதல் இல்லை(கஞ்சா,அரளி தவிர)


==============


20 கவன ஈர்ப்புக்காக எதுவும் செய்யாமல் இயல்பாய் இருந்தாலே கவனிக்கப்படுவாய்


===========

0 comments: