Monday, August 13, 2018

கீர்த்தி சுரேஷ் vs நயன்தாரா

டிஷர்ட்டும், ஷாட்ஸும் போட்டுட்டு ஆபீஸ் போனாதான் என்னவாம். கையும் மூளையும்தான வேலை செய்யுது. இந்த அயர்ன் பண்ற வேலை இருக்கே.. ச்சை...


ஆபீஸ்ல என்ன வேலை பார்க்கறீங்க?

அதான் சொன்னேனே?அயர்ன் பண்ற வேலை==============


2 டாக்டர்,வர வர எந்த சட்டை தெச்சாலும் ரெண்டு மாசத்துல சின்னதாய்ருது,டெய்லரை மாத்தனுமோ?


உங்களை மாத்தனும்,உணவுக்கட்டுப்பாடு,உடல் பயிற்சி எதையும் பாலோ பண்றதில்ல============


3 டாக்டர்,மனசு சரியில்லனா Makeup போட்டா சரியாகிடும் நு Youtube videos பாத்தேன்..நெஜமா பொய்யா?


இது என்னம்மா புது புரளியா இருக்கு?ஏழைங்களுக்கு சாப்பாடு போட்டாலாவது புண்ணியமும்,மன திருப்தியும்,நிம்மதியும் கிடைக்கும்.மேக்கப் போட்டா டிஎம் ல தொந்தரவு தான் கிடைக்கும்
===========4 தினசரி 10,000 ஸ்டெப்ஸ் ( 10 கிமீ) நடைப்பயிற்சி (வாக்கிங்) போனாத்தான் உனக்கு"ஹார்ட் அட்டாக் வராது


டாக்டர்,இது உண்மை ன்னா இந்த உலகத்துல வைகோ ,வும் அஜித்தும்"தான் தப்பிப்பாங்க
===========


5 டாக்டர்,ப்ளட் பிரஷர் அதிகமாக இருந்தா மனதுக்கு பிடித்தவர்களோடு மனம்விட்டு பேசுங்கள்.

குறைவா இருந்தால்,மனைவியோடு மட்டும் பேசுங்கள்..
உடனே நார்மலாயிடும் கறாங்களே,உண்மையா?
பிரஷர் வர்றதே பொண்டாட்டிங்களாலதான்


===========


6 இந்தாங்க போன் நெம்பர்,யாரையாவது கலாய்க்கனும்னா இந்த நெம்பருக்கு உங்க மீம்சை அனுப்புங்க


ஓஹோ,ட்ரோல் ப்ரீ நெம்பரா?
==========


7 இந்த NRIங்க எல்லாம் ஏன் சரவண பவன்ல சாப்பிடுறத பெரிய விஷயமா போட்டோ பிடிச்சி போடுறாங்க.?!


5 ரூபா இட்லியை 75 ரூபாய்க்கு சாப்பிடற முட்டாள் பசங்கனு உலகுக்கு தெரிவிக்கதான்============8 சோனி டி வி வாங்கலாம்னு இருக்கேன்ஏன்? சோனியா இருக்கற டிவி வாங்கனும்? புஷ்டியா வாங்கலாமே?============9 டாக்டர் ,லிப்ஸ்டிக் போட்ற
பெண்களை நிறைய
ஆண்களுக்கு பிடிக்காது. என்பது உண்மையா?

இது என்னய்யா புதுபுரளி, புது வகை செவ்”வாய்” தோஷம் ?

===============
10 இன்ஸ்பெக்டர் , kiki சேலஞ்ச்ல ஈடுபட்டதுக்காக அவரை ஏன் கைது பண்ணுனீங்க? என்ன பண்ணாரு?

மொக்கை ஜோக் சொல்லி எல்லாரையும் சிரிக்கச்சொல்றாரு
==============
11 இனிமே முதல்ல இருந்த மாதிரியே யாரோடவும் பேசாம நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்ஓஹோ,இதுக்கு முன்னால என்ன பண்ணீட்டு இருந்தீங்க?

கடலை போட்டுட்டு இருந்தேன்
பேசலைன்னீங்க?
சேட்டிங்க் ல டைப்பலாம் இல்ல?


===============

12 சீமானையும் ராஜாவையும் கலந்து கட்டி சீமராஜான்னு வச்சிருக்காங்க போல, பட்டையை கிளப்பும்


ஓஹோ,சீமான் ,ஹெச் ராஜா ,ஆ. ராசா எல்லாருக்குமே கெட்ட பேரு தான்.அந்த செண்ட்டிமெண்ட் தான் புதுக்கோட்டை சுவர் ஓவிய சர்ச்சைல சிக்குனாங்களே?===============


13 கிளி ஜோசியகாரன் ஒரே வார்த்தையில முடிச்சிட்டாரு உனக்கு வர பொண்டாட்டி வாயாடி ..

ஆடி மாசத்துல பொண்ணு பார்த்தா அப்டித்தான்=================


13 டைரக்டர் சார்,தீபாவளிக்கு"ரிலீஸ் ஆகப்போற நம்ம படத்துல ஹீரோ கேரக்டர்"பேரு பரத்தா?


அப்டி வெச்சா அது ரீ மேக்னு கண்டுபுடிச்சுடுவாங்க,அதனால ஹீரோ கேரக்டர் நேம் சரத் னு வெச்ட்டோம்===============


14 சார்",நான்"ஆர்டர்"பண்ணது,இன்னும்"வர்ல


வந்தாச்சு,கம்பெனிக்கு"வந்து வாங்கிக்குங்க

ஹோம் டெலிவரி னு சொன்னாங்க?
ஹோம் டெலிவரி ன்னா புடிச்சு உள்ள"போட்டுடறாங்க"இப்பவெல்லாம்
===============
15 குருவே!

"இந்த உலகம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்?"

"அவனவன் வேலையை அவனவன் செய்தாலே இந்த உலகம் நன்றாக இருக்கும்”
பாதிப்பேருக்கு வேலையே"இல்லைங்கறதுதானே பிரச்சனை!இது போதாதுனு"பொறணி பேசறதுக்கு ஒரு"கூட்டம்


==============


16 குருவே!பஸ்ல முதன்முறையாக திருக்குறளை எழுத சொன்னவரு நம்ம தானைத்தலைவர்தான்....னு வாட்சப்ல மெசேஜ் வந்தது,அது உண்மையா?


இது தேவல,வாசுகி மூலமா திருவள்ளுவர் கிட்ட சொல்லி திருக்குறளை எழுத வெச்சவரே தலைவரோட முன்னோர்கள்தான் ஒரு மெசேஜ் வந்தது==============


17 பண்ணிக்கிட்டாங்களாம்

அடடா

ஏன் தலைவரே?அவங்க குடும்பத்தை நினைச்சு கவலையா?
அதில்லை,ஏற்கனவே சார்ட்டேஜ்,அதுலயும் 34 ஓட்டு போய்டுச்சே?=============18 தலைவரே! ராமானுஜம்னு ஆன்மீக தொடருக்கு வசனம் எழுதுனீங்களே?நம்ம பகுத்தறிவுக்கொள்கைக்கு பங்கம் வந்துடாதா?

காசு முக்கியமா? கொள்கை முக்கியமா?============19 குருவே! கீர்த்தி சுரேஷ்க்கு மாடர்ன் டிரஸ் செட் ஆகாதுனு ஜனங்க பேசிக்கறாங்களே?

ஆமா,நயன்தாரா ன்னா எதா இருந்தாலும் செட் ஆகிடும்.


============


20 குருவே!ஒருவருடைய மறைவு அவரை நல்லவராக்கி விடும் என்றால் வாழும் காலத்தில் எதுக்கு நல்லவனா வாழனும்..?

காமராஜர் மாதிரி உயிருடன் இருக்கும்போதும் நல்ல பெயர் வாங்குவதுதான் வாழ்க்கைக்கு அர்த்தம்.மக்கள் வரிப்பணத்தை திருடி சொத்து சேர்ப்பது எப்போதும் அனர்த்தம்தான்


=============0 comments: