Thursday, August 09, 2018

.”செல்”லூர் ராஜூ மேல டவுட் வர்லையா?

 சசிகலா, தினகரன் தரப்பில் இருந்து, மிரட்டல்கள் வருகின்றன. எனவே, எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் - ஜெ., தீபா:#மிரட்டல் விடுத்தவங்க  மீது    நடவடிக்கை வேணாம்? பாதுகாப்பு மட்டும் போதும்? எங்கேயோ இடிக்குதே?



=============


2 நடிகர் விஜய், இன்னும் ஆறு ஆண்டுகளில், அரசியலுக்கு வர வேண்டும். திரையுலகை ஆள்வது போல், தமிழகத்தையும் விஜய் ஆள்வார் -    நடிகர் ராதாரவி:  # இதே வாய் தான் போன மாசம் “ நடிகர்களால் இனி நாடாள முடியாதுனு பேசுச்சு?திமுக கூட்டத்தில் ரஜினி, கமலை எதிர்த்து


===========



: இந்த ஆட்சி, ஐந்தாண்டு மட்டும் அல்ல, இன்னும், 50 ஆண்டுகளுக்கு நீடிக்கும்   -  செங்கோட்டையன்  # ஏற்கனவே 2 வருசம் முடிஞ்சுதுங்க, இன்னும் 3 வருசம் தான், அந்த கணக்கே தெரில


=============


4  ஆதார் மூலம் பெறப்பட்ட தகவல்கள், மிகவும் பாதுகாப்பாக உள்ளன. ஆதார் குறித்த தகவல்களை, யாராலும் திருட முடியாது -மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்:   #இப்பதான் ஹேக்கர் ஒருத்தர் ஆதார் நெம்பர் மூலம் பேங்க்ல டெபாசிட் பண்ணாரே? மறந்துட்டீங்களா?


===========


கமல் மீது எனக்கு, எந்தக் கோபமும் இல்லை. அவர் இன்னும், நல்ல இடத்திற்கு வர வேண்டும் என, நினைப்பவன் நான். ஆனால், மக்கள் ரஜினியைத் தான், மிக உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கின்றனர்.-  சாருஹாசன் # ஸ்டாலினுக்கு ஒரு அழகிரி, கமலுக்கு ஒரு சார்ஹாசன்


============

6       அ.ம.மு.க., என்ற கட்சி, ஒரு பிராய்லர் கோழி. அது, தின்று கொழுகொழுவென வளருமே தவிர, முட்டையும் போடாது; குஞ்சும் பொரிக்காது.- அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் # ஆனா 20 ரூபா டோக்கன் கொடுத்தே உங்களுக்கு உலை வெச்சுதே? அர் கே நகர்ல?



=============


7   அ.தி.மு.க.,வில், 'ஸ்லீப்பர் செல்கள்' உள்ளதாகக் கூறும் தினகரனிடம், ஒரு பேட்டரி செல் கூட கிடையாது -வைகைச்செல்வன் # .”செல்”லூர் ராஜூ மேல டவுட் வர்லையா?

============


8  தி.மு.க.,வை விட்டு வந்ததால், யாரும் எனக்கு எதிரியில்லை    தி.மு.க., பிரமுகர்களுடன் இன்றும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். சிலரை நேரில் சந்தித்தும் வருகிறேன். - - குஷ்பு  # ஸ்டாலின் கூட பேசறதில்லையாமே?


==============


9  ,: 'மீம்ஸ்' என்றாலே, சமூக வலைதளங்களில் நானும், சிஸ்டர் தமிழிசையும் தான், 'பேமஸ்!' நாங்கள் பேசினாலும் கலாய்ப்பர்; பேசா விட்டாலும் கலாய்ப்பர்  -  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் # கழுவற மீன்ல நழுவற மீன்?


=============


10   என் தலையில் முடி வளர்ந்திருப்பது போல், 'போட்டோஷாப்' செய்து, 'இது நடந்தாலும் நடக்கும்; தமிழகத்தில் தாமரை மலராது' என, 'மீம்ஸ்' போடுகின்றனர். - ஜெயகுமார்  # "முடியாட்சிக்கு முடிவுனு சொல்றாங்க


===================


11 மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்வது அவசியம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு# வருமானத்தொகை உயர்ந்தால் ஏற்கனவே மணமானவங்களே அந்த வேலையைப்பார்த்துடுவாங்க



================


12  ரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம் # பண்றதெல்லாம் கொடுமை ,இதுல என்ன பெருமை?



==============


13 தமிழகத்தில், 56.4 சதவீத பெண்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுகின்றனர். சரியான முறையில், தாய்ப்பால் ஊட்டாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசி உள்ளிட்டவை வெளியே தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது - தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா # அந்த 56% ல 50 % கிராமத்துப்பெண்களா இருக்கும்


================


14

 அண்ணா பல்கலை தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அரசின் செயல்பாடு சரியாக இருப்பதால், தவறு செய்தவர்கள் சிக்குகின்றனர்.- தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்:  # ஆனா ஜாமீன்ல வெளில வந்து ஃபாரீன் போய்டறாங்க


==============


15 ராஜ்யசபாவுக்குள் வரும்போது, எம்.பி.,க்களுக்கு, அரசியல் எண்ணம் இருக்கக் கூடாது. மக்கள் நலனை மட்டுமே, கவனத்தில் கொள்ள வேண்டும்-    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:  # மக்கள் நலனை கவனத்தில் கொள்ளனும்னா எல்லாரும் ராஜினாமாதான் செய்யனும், அதுதான் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நல்லது


==============


16  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓட்டுச்சீட்டு முறையை தான் ஆதரித்தார். எனவே, ஓட்டுச்சீட்டு முறை கொண்டு வந்தால் நல்லது -லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை # நாம ஜெயிச்சா வாக்கு ப்பதிவு எந்திரம் சரி , தோற்றா முறைகேடு, இதுதானே அரசியல்வாதிகள் ஃபார்முலா?

=================


17   தமிழகத்தில், 56.4 சதவீத பெண்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுகின்றனர். சரியான முறையில், தாய்ப்பால் ஊட்டாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசி உள்ளிட்டவை வெளியே தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது - தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா #  தாய்ப்பால் தந்தா தங்கள் அழகு குறைஞ்சிடும்னு நகரப்பெண்கள் நினைப்பதுதான் இந்த மூடநம்பிகை வளரக்காரணம், அதுக்கு ஒரு விழிபுணர்வுகூட்டம் போட்டு விளக்கனும்

=================


18    : நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிக்கும் தோல் தொழிலை மேம்படுத்த, மத்திய அரசு, 2,600 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதனால், இரண்டு லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுவர் -  மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு # சபாஷ் , தோல் தொழிலுக்கு தோள் கொடுத்து இருக்கீங்க


================


19   அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில், கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு பேரம் நடந்துள்ளது. இந்த பிரச்னைக்கு அடித்தளமிட்டது யார், எந்த பதவியில் ஆரம்பித்து எந்த பதவியில் இருப்பவர் வரை இதில் சம்பந்தப்பட்டுள்ளனர், ஆட்சியாளர்கள், உயர் கல்வித் துறை அதிகாரிகள், பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து, தமிழக அரசு, உரிய நடவடிக்கையை வெளிப்படைத் தன்மையுடன் எடுக்க வேண்டும். -வாசன் அறிக்கை: 

# அண்ணா திமுக என்பதால் அண்ணா யுனிவர்சிட்டியை மானிட்டர் பண்ணாம விட்டுட்டாங்க போல


============


20  தொழில் துவங்க எளிய நடைமுறைகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில், ஆறாவது இடத்தில் இருந்து, இரண்டாவது இடத்துக்கு, தமிழகம் முன்னேறி உள்ளது - தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத்  #  அரசியல் கட்சி ஆரம்பிக்கறது கூட நல்ல தொழில்தான் போல , பலரும் இங்கதான் ஈசியா டக் டக்னு கட்சி ஆரம்பிககறாங்க


=====================

0 comments: