Monday, August 20, 2018

டாக்டர் ,மஞ்சள் காமாலை நோய் க்கு மாதுளம் பழம் சாப்பிடலாமா?

இன்றைய கால கட்டத்தில்

பஸ்,ஸ்டாப்பில்
பார்க்கும் பெண்களிடமே காதல் வயப்படுகிறார்கள் என்றால்
அது
காதலா? மோகமா? காமமா?
யோவ், தனியா பொண்ணுங்களைப்பார்க்கறதே அபூர்வமா இருக்கு,ஜோடியாவே சுத்தறாங்க,எதுனா"எங்கேயாவது"பாத்தா"டக்குனு"ப்ரப்போஸ்"பண்ணி ரிசர்வ் பண்ணிக்கறதுதான்


========

2 குருவே!நட்பா இருக்கிறவங்க ஒத்த கருத்துடையவங்களா தான் இருக்கணும் நியதி இருக்கா?


அப்டி எல்லாம் எதுவும் கிடையாது,திராவிட அரசியல் நடத்தும் கமல் ,ஆன்மீக அரசியல் நடத்தப்போகும் ரஜினி மாறுபட்ட எதிர் பாதை பயணம்,நட்பா இல்லையா?=========


3 கோவப்பட்டு திட்றோம் திட்டுவாங்குறவங்க அழறாங்க அப்போ நம்ம கோவம் நியாயமாகுமா ?


யாரும் யாரையும் எக்காரணத்துக்காகவும் அழ வைப்பது நியாயம் ஆகாது===========4 குருவே!செட்டில் ஆகாதவங்கள லவ் பண்ணி கடைசி வரை அவங்க கூடவே இருந்து அவங்கள முன்னேற வைக்கிற காதலிகள் இப்போ இருக்காங்களா?


அதெல்லாம் 1990 கள்லயே காலாவதி ஆகிடுச்சு,சொந்த பங்களா இருக்கா?வசதி இருக்கா?னு முதல்ல பார்ப்பாங்க.விதிவிலக்குகள் ஒரு 10% இருக்கலாம்,அவங்க கிராமத்துப்பொண்ணுங்க===========


5 டாக்டர்,மூக்கு செமையா வலிக்குது 😢 ஒன் வே ட்ராபிக் வேற.. 3 டேஸா இப்படி இருக்கு... என்ன பண்ணா சட்டுனு சரியாகும்..?


வெந்நீரில் மஞ்சள் தூள் ,தூவி ஆவி பிடிக்கவும் ,15 நிமிடத்தில் சரி ஆகும்
==========


6 சம்பளம் மட்டும் தரும் கம்பெனியில் பணி புரிவது ஒரே ஒரு பெண் உள்ள வீட்டில் பொண்ணு கட்டுவது போல,இன்சென்ட்டிவ் ,சைடு வருமானம் உள்ள பணியில் சேருவது மச்சினிகள் உள்ள வீட்டில் பொண்ணு கட்டுவது போல


============


7 ரைசா பிக்பாஸ்ல கமல் கிட்ட குட்டு வாங்குனார்.விஸ்வரூபம் 2 ரைசாவின் ப்யார்பிரேமா ்காதல் படம் முந்திடுச்சாம்,கமலுக்கு வந்த சோதனை,அடப்பாவமே"


=========


8  நாங்க இந்தியாவுக்குள் நுழைவோம் - சீனா
போட்டியா நாங்களும் ஒரு படத்தை டப் பண்ணி சைனா அனுப்பறமே?பார்ப்பமா?யாருக்கு பாதிப்பு அதிகம்னு?


========


9 குருவே!உள்ளம் அழகாய் இருந்தால் தான்

உள்ளங்கை கூட அழகாய் தெரியும்.என்பது உண்மையா?

கண்ட கண்ட நெயில் பாலீஸ் போட்டு கெடுக்காம இயற்கை ஒப்பனை மருதாணி இட்டாலே செக்கச்சிவந்த வானமாய் விரல்கள் ஜொலிக்காதா?==========


10 டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு , லோன் தரும் வங்கிகள் கவனத்துக்கு, கேரளாவில் கடும் மழை, வெள்ளம் காரணமாக கடந்த 74 நாட்களாக பாதிப்பு, மக்களிடையே பணப்புழக்காட்டம் இல்லை, இந்த ஓணம் கடந்த வருடத்தை விட 50% குறைவான வியாபாரமே இருக்கும், வசூல் 65% குறையும், கவனத்தில் கொள்க


============


11 கார் , பைக் லோன் வாங்கி சரியா ட்யு கட்டாதவங்க புத்திசாலித்தனமா செயல்படறதா நினைச்சு ரயில்வேஸ்டேசன், பஸ் ஸ்டெண்ட் , பார்க்கிங் செண்ட்டர்களில் பாஸ் போட்டுட்டு போய்டறாங்க, நாங்க முதல்ல டார்கெட் வைப்பதே அங்கேதான் என் சிப்சு


============

12 27/5/2018 லிருந்து 10/8/2018 வரை 76 நாட்களாக தொடர்ந்து"தினசரி"மழை ,வெள்ளம் கேரளாவில்.சபரிமலை யில் பெண்களையும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்னு"கோர்ட் தீர்ப்பு வந்தது இப்பதான் ,ஒரு க்ரூப்"இது"சாமி குத்தம்னு,கிளம்பிடுச்சு,அடேய்!
==============


13 பருப்புக்குழம்பு ன்னாலே சத்துணவுக்குழம்பு னு கிண்டல் பண்ணுவாங்க,ஆனா அமாவாசைக்கு படையல் போட அதைத்தான் வெச்சாகனும்===========


14 ஊர் , உலகம் உங்களைப்பைத்தியக்காரன் என்றும் , பிழைக்கத்தெரியாதவன் என்றும் தூற்றுகிறதா?அப்போ நீங்க சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம், பெரும்பான்மை யினர் செய்யும் செயல்கள் தான் சரி என்று ஆகி விடாது============
15 வெறுப்பவர்கள் பட்டியலிலோ,விரும்புபவர்"பட்டியலிலோ இடம் பிடித்து விடுங்கள்,கவனிக்க"வைப்பதுதான் முக்கியம்=================16 மழைல நனையிறது ரொம்ப பிடிக்கும் னு"கவிதை எழுதறவங்க கேரளா ,எர்ணாக்குளம்,ஆலுவா செல்லவும் .தொடர்ச்சியா தினம்"மழை தான்


================


17 ப்யார்ப்ரேமாகாதல் ஒரு"கலாச்சாரசீர்கேடு மிக்க கமர்ஷியல்"கில்மாப்படம்.18+
விஸ்வரூபம்"2 ஒரு"சராசரி ஏ செண்ட்டர் ஆக்சன்"மசாலா படம்.இதை வெச்சு ரைசா கிட்ட கமல்"தோத்துட்டார்னு மீம்ஸ்"போடறது லாஜிக் இல்ல.எப்பவும் கெட்டதுக்கு அதிக வரவேற்பு இருக்கும்==============


18 டாக்டர் ,மஞ்சள் காமாலை நோய் க்கு மாதுளம் பழம் சாப்பிடலாமா?

அது ரத்த அழுத்தத்தைத்தான் கட்டுப்படுத்தும்.bp பேஷண்ட்களுக்கு நல்லது.மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி சாறு,இளநீர் ,மோர் ,ஆரஞ்சு சாறு இப்டி குளிர்ச்சியா சாப்பிடலாம்.தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கனும்.உணவில் எண்ணெய் தவிர்க்க


===================


19 122 எம்எல்ஏக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது - தினகரன்
இருந்து ரகசியமா ஆதரிப்பாங்க போல


=================


20 கடும் மழை ,வெள்ளம் காரணமா சபரிமலை ஏரியாவில்(கேரளா) நோய்தொற்று கிருமிகள் ,காய்ச்சல் அபாயம்"உண்டு என தகவல்,மீறி போய்ட்டு பின் சாமி மேல பழி போடாதீங்க


==============

0 comments: