Thursday, August 23, 2018

= சாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்?

பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய்
"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா இருந்தா 40 பவுன் போட்டு கல்யாணம் கட்டிக்கலாமே?


==============


2 தமிழிசை,ஹெச் ராஜா கவனத்துக்கு ,கோலமாவுகோகிலா ல இந்துக்களை புண்படுத்தும் ,இந்து மதத்தினரை புண்படுத்தும் பல காட்சிகள் இருக்கின்றன.தடை விதிக்கப்போராடவும்
பை ஈரோடு மாவட்ட நயன் தாரா பேரவை


================


3 கேரளாவில் பணிபுரியும் தமிழர்கள் கவனத்துக்கு,போக்குவரத்து,சாலைகள் சரியான பிறகு (24/8/18)நீங்கள் பணிக்கு திரும்பும்போது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நல்ல நிலையில் இருக்கிறதா?என செக் செய்து கொள்ளவும். வெள்ளம் வந்து வடிந்ததால் காய்ச்சல் பரவும் அபாயம் உண்டு


================


அறிமுகமே இல்லாதவரின் வெற்றி உனக்கு சந்தோஷத்தைத்தந்தால்
பழகியவரின் தோல்வி உனக்கு வருத்தத்தைத்தந்தால் நீ போகும் பாதை சொர்க்கத்தை நோக்கி


=================


5 ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவும்போது செல்பி எடுக்காதீர்!உங்கள் சுயரூபம் தெரிந்துவிடும்================


6 குருவே!
அதிகம் பேசறவங்க தான் நினைச்சதை சாதிச்சுக்கறாங்க..என்ற கருத்து உண்மையா? ஒருவேளை அதிகமா பேசறதுதான் சாதனை னு நினைச்சாங்களோ என்னவோ?போதிக்கறவன் வேணா அதிகம் பேசலாம்,சாதிக்கறவன் பேச மாட்டான்,பேசறவன் சாதிக்க மாட்டான்


===============


7 சில்லறை கேட்டால் இருக்கு னு"சொன்னா"சில்லறைப்பசங்க"னு"பேரு"வந்துடும்
இல்லை என்பவர்கள் நாணயமில்லாதவர்கள் னு"பேரு வாங்குவாங்க வாழ்ந்தாலும் ஏசும்;தாழந்தாலும் ஏசும் மொமெண்ட்


=============


8 கோபத்தினால் நீங்கள்
சம்பாதிப்பது வீண் வம்புகளையும் எதிரிகளையும் மட்டுமல்ல,பிளட் பிரஷரையும்,டென்ஷனையும்"தான்,மற்றவர்கள் மீது"நீங்கள் படும் கோபம் உங்கள் உடல்நலனுக்கு எதிரி


=================9 சாமி"கும்பிடும்போது ஜனங்க"கண்மூடறாங்களே அதுதான் கண் மூடித்தனமான நம்பிக்கை


==============


10 பெண்கள் உங்களைக்கண்டுக்கலை என்ற கவலையா?உங்கள் வருகையை"தினம்"எதிர்பார்த்துக்காத்துக்கிடக்கனும்னு எண்ணமா?
பால்காரராகவோ பேப்பர் போடற பையனாகவோ பார்ட்டைம் ஜாப் செய்யவும்


====================

11 நல்ல வேளை,மாடர்ன்"பொண்ணுங்க லெக்கின்ஸ் +டாப்ஸ்"டக் இன்"பண்றது ஒரு பேஷன்"னு பாலோ பண்ணலை,எதிர்காலத்துல"வந்தாலும் வரலாம்


===========12 எனக்கு தெரிஞ்சு பெரும்பாலான பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டா பெல்ட் போடுறதே இல்ல!! ஏன்?
பெல்ட் போட்டா இடுப்புல தழும்பு ஏற்படும்னு நினைக்கறாங்க,ஸ்கூட்டி பியூட்டி கள் பிரேக் போடறப்ப கால்களை தரை ல தேய்க்கற மாதிரி 2 மே மூட நம்பிக்கை தான்


==============


13 சாதா முத்தம்
செல்ல முத்தம் என்ன வித்யாசம்? சாதா முத்தம் நாம பொண்ணோட உதட்ல/கன்னத்துல தர்றது. "செல்"ல முத்தம் என்பது பொண்ணுங்க பேசிட்டு இருக்கற(ப்ப)"செல்"ல"முத்தம் தர்றது


=================


14 சென்னை− திருவனந்தபுரம் 12695,12696
கேரளா எக்ஸ்பிரஸ் 12625 இயங்கத்தொடங்கி விட்டது.வழக்கமாக 60 கிமீ −75 கிமீ வேகத்தில் செல்வது இன்னும் 2 நாட்களுக்கு 40−50 கிமீ வேகத்தில் இயங்கும்


=============


15 விஜய் நேரடியாக கேரள"முதல்வர் நிதி கணக்கில் பணம் தராமல் ரசிகர்கள் மூலம் தந்ததை பலர்"குறை கூறுகிறார்கள்.சென்று சேரும் இடம் சரியானதாக இருந்தால் போதும் ,வழி முக்கியமல்ல.அய்யர்(குருக்கள்) கிட்ட பூ குடுத்து விடுவதற்கும் ,நேரடியா சாமி சிலைல பூ வைப்பதற்கும் என்ன வித்யாசம்?


=================


16 குருவே!‌நாம ஜெயிக்கனும்னா எதிரியை விட நாம பலசாலியா இருக்கனும்,
இல்ல எதிரியை பலவீனம் ஆக்கனும்.! என்பது உண்மையா? ரன்னிங்க் ரேஸ்ல முதல்ல ஓடறவனை முந்தத்தான் பாக்கனும்,அவன்"காலை வாரி விட குனிஞ்சா 3 வதா வர்றவன் முந்திக்குவான்


===================


17 வழுக்கை தலையன் திருப்பதி போனா என்ன பிரயோஜனம்?
இது என்ன கேள்வி?மொட்டை அடிக்கவா போறாங்க?திருப்பதி லட்டு பிரசாதமா கிடைக்குதே?அதுக்கு வழுக்கை,சொட்டை விதிவிலக்கா என்ன?


==================


18 மனுஷ்யபுத்திரன் ஹெச் ராஜா மீது போலீசில் புகார் கொடுக்கும்போது பி.ராஜா என தவறுதலாக புகார் கொடுத்து விட்டார்.இது செல்லாது.


===================


19 நீ புத்திசாலியா இருந்தா நான்"முட்டாள் இல்லைனு தெரியும்=================


20 சமைப்பது சுலபம்
நாக்குக்கு ருசி என நூடுல்ஸ் அடிக்கடி சமைப்பது சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடானது.குழந்தைகளுக்கு இந்த ருசியை பழக்காதீர்கள்


================

0 comments: