Saturday, August 18, 2018

கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்

Image result for kolamaavu kokilaஇது ஒரு ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட் ,ஹீரோயினோட அம்மாவுக்கு கேன்சர், மருத்துவ செலவுக்கு பணம் வேணும்,, அதுக்காக நாயகி எதேச்சையா ஒரு ஸ்மெக்ளிங்க் க்ரூபோட அபின் கடத்தலுக்கு உதவுது, அது சக்சஸ் ஆனாங்காட்டி அந்த க்ரூப் அவரை தொடர்ந்து உபயோகப்படுத்துது. அந்த க்ரூப்புக்கு நாயகி தண்ணி காட்றதுதான் மிச்ச மீதி காமெடி திரைக்கதை


 இது ஒரு எதிர்பாராதா வெற்றிப்படம். படம் போட்டதுல இருந்து கடைசி வரை ஆடியன்ஸ் சிரிக்கறாங்க , ரசிக்கறாங்க , குறிப்பா பெண்கள்


 ஸ்லிம் ஃபில் சிங்காரி , ஸ்லோமோஷன் நடை ஒய்யாரி  நயன் தான் நாயகி , நானும்  ரவுடிதான் , அறம் படங்கள் வரிசையில் பிரமாதமான நடிப்பு வாரி வழங்கி இருக்கார், ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு ஸ்மெக்ளிங் க்ரூப்புக்கு அல்வா கொடுப்பது அசத்தல் 


 யோகி பாபு கிட்டத்தட்ட  ஹீரோ மாதிரி , கலக்கறார் , காமெடி ஆக்டிங் குட் , அவர் கூட வரும் தொண தொண  சகலைக்கு நல்ல எதிர் காலம் உண்டு , இவர் துள்ளாத மனமும் துள்ளும்  ல ரூட் சொல்லும் பாரி வெங்கட் போல் சாயல்


மொட்டை ராஜேந்திரன் மேலும் ஒரு  காமெடி வில்லன் , கலக்கல் நடிப்-பு 


 சர்ண்யா அம்மாவாக வருகிறார், எம்டன் மகன் பாதிப்பு பல இடங்களில், பெண்கள் கை தட்டும் நடிப்[பு 

 அனிரூத் தான் இசை , 2 பாட்டு ஹிட் பி ஜி எம் வழக்கம் போல் குட்

திரைக்கதை , இயக்கம், வசனம் , நடிப்பு எல்லாமே கனகச்சிதம்


Related image


நச் டயலாக்ஸ்

போலீஸ் கிட்ட கை கட்டி நின்னாதான் நம்ம தொழில் நடக்கும்


நான் யார் தெரியுமா?

தெரியும்
யாரு?
என் ஆளோட அக்காவை லவ் பண்றிங்க
ஆ!,அப்போ நீ சகலை,உள்ள வா

பொண்ணு எப்டி இருக்கா தெரியுமா?பால் கொழுக்கட்டை மாதிரி


மொட்டை ராஜேந்திரன் = அடிக்கடி ஆளை மாத்திட்டே இருக்க நாம லவ்வா பண்றோம்? ஸ்மெக்ளிங்க் பண்றோம்


வில்லன் டு நயன் = என்னால ரேப் எல்லாம் பண்ண முடியாது,நீயாப்பாத்து கோ ஆபரேட் பண்ணாதான் உண்டு,ஸ்பைனல் கார்டு டோட்டல் டேமேஜ்

நாம தப்பு பண்றோம்கறத நம்ம முகம் காட்டிக்கொடுத்துடக்கூடாது


யோகிபாபூ − யார்றா நீ,காட்டுக்குரங்குக்கு மொட்டை அடிச்சு விட்டது மாதிரி?
நீ மட்டும் என்ன?முடி வெச்ச மொரட்டுக்குரங்கு மாதிரிதான இருக்க?

இதுக்கு முன்னால நீ சரக்கு அடிச்சிருக்கியா?
நானெல்லாம் ராஜ போதைக்காரன்

Image result for kolamaavu kokila
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


ஈரோடு"சண்டிகா ,நயன்தாரா வுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் அதிகம் போல,வந்திருக்கற 146 பேர்ல 82 பேர் லேடீஸ்,இதுல பால்கனி ஆடியன்ஸ் 32============

தலைவி நயன் ஓப்பனிங்க் சீன்ல மாடிப்படி ஏறி வருது,சம்பளம் படத்துக்கு படம் கூடி வருது னு குறியீடு,.இந்தப்படத்துக்கு 2 1/4 கோடி


யோகிபாபு ஓப்பனிங்க் சீனுக்கு ஆரவாரமான கை தட்டல்,அடுத்த படத்துல சந்தானம் போல ஹீரோதான் னு கண்டிஷன் போடப்போறாரு


முன்னால நிக்கற,கண்ணால சொக்குற பாடல் காட்சி படமாக்கம் மணிரத்ன தரம் ,நயன் இளைச்சிருக்கு,மாடு இளைச்சாலும்.....


தமிழ் சினிமா வில் பனங்கிழங்கு காட்டப்பட்ட வெகு சில படங்களில் இதுவும் ஒண்ணு .பனை கிழங்கு சாப்பிட்டால் பரம்பரைக்கே சர்க்கரை வியாதி வராதாம்

1986 ல ரிலீஸ் ஆன தழுவாத கைகள் படத்துல தான் முதல் முறையா புற்றுநோய் பிரச்சனை கதைக்கருல காமெடி திரைக்கதை அமைச்சாங்க அதுக்குப்பின் இதுதான்


தலைவி நயன் எதுக்காக புருவ நீளத்தை குறைச்சிருக்கு?தெரில ,அறம் படத்து ல வந்ததை விட 1 இஞ்ச் நீளம் கம்மி


நயன் போட்டிருக்கற பாவாட மாதிரி டிரஸ் கேரளா ஸ்பெஷல் ,ரேப்பர் ரவுண்ட்.
ஜாக்கெட் நெக் பைப்பிங் ,பப் கை பைப்பிங்க் ,ஜாக்கெட் பாட்டம் பைப்பிங் இவங்களா கண்டுபிடிச்ச புது காஸ்ட்யூம் டிசைன் போல

படிக்காதவன்(ரஜினி) படத்துல அம்பிகா செஞ்ச கேரக்டர்தான் இதுல நயன் கேரக்டர்

10 தரமான ஏ சென்ட்டர் ஆடியன்சுக்கான காமெடி,ஆனா பி,சி சென்ட்ர் ஆடியன்சும் கை தட்டி ரசிக்கறாங்க,முதலீட்டைப்போல் 4 மடங்கு சம்பாதிக்கும் ,இடைவேளை வரை குட்

11 இந்தப்படத்துக்கு பொருத்தமான தலைப்பாக எனக்குத்தோன்றியது
அபினும்,நானும் ஒரு பொண்ணு நினைச்சா
போங்காட்டம்

Image result for kolamaavu kokila

சபாஷ் டைரக்டர்

1  இந்தப்படத்துக்கு நடிகர் நடிகைகள் தேர்வு பிரமாதம், நீண்ட இடைவெளிக்குப்பின் யார் மீதும் குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பு 

2   நயனின் அட்ராசிட்டி அசத்தல், காஸ்ட்யூம் டிசைன் பக்கா


3  யோகிபாபு , மொட்டை ராஜேந்திரன், அந்த நெக் பெண்ட் வில்லன் நடிப்பு எல்லாமே ரசிக்க வைக்குது

4 ஆரம்பம் முதல் இறுதி வரை யோசிக்கவே விடாத ரகளையான திரைக்கதை +

லாஜிக் மிஸ்டேக்ஸ்

லாஜிக் மிஸ்டேக் 1 − எந்த மேனேஜரும் ஒரு பெண்ணை ஆபிஸ் ல கரெக்ட் பண்ண டைம் எடுத்துக்குவார்,இப்டி மடத்தனமா திடீர்னு கில்மா க்கு கூப்பிட்டு மொக்க வாங்க மாட்டாங்க

2   பின் பாதியில்  வில்லன் க்ரூப் அடியாட்கள் ஒவ்வொருவராக உள்ளே போய் மாட்டுவது நம்பற மாதிரியே இல்லை, டவுட் வராதா?

3  கழுத்தை அசைக்க முடியாத வில்லன் நாயகியை ரேப் பண்ண நினைத்ததும் மயக்க மருந்து தந்து ஈசியா ப்ராஜெக்ட் முடிக்கறதை விட்டு சேர் டேபிளை எல்லாம் எதுக்கு உடைச்சார் தெரில 

4  வில்லன் க்ரூப் ல அனைவரும் செல்லூர் ராஜூக்களாகவே இருப்பது அபத்தம்
Image result for nayanthara hot
சி.பி கமெண்ட்கோலமாவு கோகிலா− ஆல் செண்ட்டர் ஹிட்.திரைக்கதை,இயக்கம்,நடிப்பு கனகச்சிதம்.பெண்கள் கூட்டம் அள்ளுது,நயன் தாரா,யோகிபாபு ராக்கிங் பர்பார்மெனஸ்,பேமிலி ஆடியன்சை வரவழைக்கும் ஸ்மெக்லிங்க் த்ரில்லர் காமெடி பிலிம் ,விகடன் 44 ,ரேட்டிங்க் 3.25 / 5 , லாஜிக் பார்க்கக்கூடாத காமெடி மேஜிக்

0 comments: