Tuesday, August 07, 2018

குருவின் பெயரை காப்பாற்றிய சிஷ்யர்கள் vs குரு பெயரை கெடுக்கும் இயக்குநர்

எழவு வீட்டிலேனும் அணைத்து வைப்போம் கைபேசியை...!

அப்போ துக்கம் விசாரிக்க வர்றவங்க முகவரி விபரம் கேட்டு போன் பண்ணினா எப்டி பதில் சொல்ல?


=============


2 குருவே!முதலிரவு பொண்ணு வீட்டுல வைப்பாங்களா? பையன் வீட்டுலயா..?

பெரும்பாலும் பொண்ணு வீட்லதான் வைப்பாங்க,அந்தக்காலத்துல மாப்ளை வீட்ல வெச்சா பொண்ணு புது இடம்னு பயந்துக்கும்னு இந்த ஏற்பாடு


=============


3 குருவே!அழக் கூடாதென்ற
வைராக்கியம் போய்
அழுதிட்டா பரவாயில்லை
என்னும் காலம்
பக்குவம்
வரும் போது நமக்கு
வந்துடுச்சுனு எடுத்துக்கலாமா?
அனுபவம் மனமுதிர்ச்சி
சீரியல் பார்க்கறவங்க,வெங்காயம் அரியறவங்க கூடத்தான் அழறாங்க,அதை வெச்செல்லாம் ஒரு முடிவுக்கு வர முடியாது


=============


4 ஷாப்பிங் பண்ற பொண்ணுங்கள வேடிக்க பாக்க பிடிக்குமா?

பின்ன அத்தனை ஆம்பளைங்க அங்கே பர்ச்சேஸ்க்கா வர்றாங்க,இது"நவீன"பூ பறிக்கற நோம்பி மாதிரி


=============


5 உங்கள் மேல் அதிகாரி ஒரு male அதிகாரியாக இருந்தால் வேலை செய்ய கடுப்பாகத்தான் இருக்கும்


==========


6 கொஞ்ச நாள் முன்னால்
ரொம்ப சண்டை போடுவேன்
இப்போ எல்லாம்
சண்டைக்கு வாய்ப்பு இல்லாம போயிடுச்சி
மெச்சூரிட்டியோ பழகிடுச்சோ தெரியல, பழகி இருக்கும்
பொண்ணுங்களுக்கு"மெச்சூரிட்டி"வந்து"நான் கேள்விப்பட்டதில்ல
எப்டி?;;


=============


7 பொதுவெளியிலோ,சமூக வலைத்தளங்களிலோ பேச்சுவாக்கில் உங்கள் நண்பர்களிடம் உங்கள் ஜாதி,பணிஇடம்,வருமானம்,கடன் விபரங்களை பகிராதீர்கள்.உங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது அவர் அதை சொல்லிக்காட்டி ஏளனம் செய்ய வாய்ப்பு இருக்கிறது


============


8 சோபாவிலோ,கட்டில் மெத்தையிலோ படுத்திருப்பது மாமனார் வீட்ல இருக்கற மாதிரி ,சுகமாதான் இருக்கும்,ஆனா அன்னியமா உணர்வோம்,தரையில்/பூமியில்/பாயில் படுத்திருப்பது அம்மா வீட்டில் இருப்பது போல் நெருக்கத்தை உணர்வோம்


===========


9 குருவே!ஹோட்டல்களில் அளிக்கப்படும் டிப்ஸ்கள் நிச்சயம் ஏழை குடும்ப சிறுவர்களுக்கு உடை, நோட்டு,தின்பண்டங்களாய் உருமாறும் !!என்பது உண்மையா?

இருக்கலாம்.சாதா மெஸ்களில் சாப்பிட்டு அதில் மீதம் ஆகும் பணத்தில் நாமே நேரடியாக ஏழை ஒருவருக்கு உணவளிக்கலாமே?


===========


10 காலைல இருந்து திராட்சைப்பழம் கதை,எலுமிச்சம்பழ கதை னு ஓடிக்கிட்டு இருக்கு,நிஜமாவே நடந்திருந்தா சந்தோஷம்,திரைக்கதையா இருந்தாலும் நல்ல கற்பனை வளம் னு சந்தோஷம்


============


11 ஆண்களே
ஊரில் இருக்குற
எல்லா கெட்ட பழக்க வழக்கத்துக்கும் ஆளாகி
நம்பி வந்தவளை ஐசியூ வாசலில்
மன்னிக்க முடியாத
அனாதையா உட்கார வைச்சிராதீங்க. பெருங்குற்றம்.
ஆரோக்யமான,நல்லவனான ஏழைகள் 1000 பேர் ஊர்ல இருக்கறப்ப பணக்காரனான குடிகாரனை கட்டிக்கிட்டது யார்"தப்பு?
திருந்துங்க டா


=========


12 கல்யாணத்திற்கு முன் செல்லம்,பேபி என கொஞ்சிவிட்டு கல்யாணத்திற்கு பின்னாடி அந்த துணியை துவைங்க இந்த துணியை துவைங்க சொல்றதுலாம் எவ்வளவு பெரிய வன்முறை?

பொண்ணுங்க வேலை செஞ்சது 1990 யோட முடிஞ்சுது,புருசனை வேலை வாங்கறது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்,விதிவிலக்கு 5% இருக்கலாம்


=============


13 Hairstyle,Mascara eyeliner kajal lipstic eyebrows pencil, foundation cream இது எல்லாம் போட்டு பழக Class போகப்போறேன்..

ஓஹோ,ஏற்கனவே நாம வெட்டி,இதுல வெட்டி செலவு வேறயா?னு வீட்ல அம்மா,அப்பா கேட்கல===========


14 கல்யாணமான பொண்ணுங்க எல்லாம் உண்டாகி ,பின் குண்டாகறாங்க,பசங்க இளைச்சு ஓடா"தேயறாங்க.ஏன்னா இவன் வேலை செய்யறான்,இவங்க வேலை வாங்கறாங்க,எப்பவும் மேஸ்திரிங்க குண்டாவும்,சித்தாளு ஒல்லியாவும் தான் இருப்பாங்க=============15 6.2 இருக்கவனுக்கு என்னைக்கு ரயில்ல பெர்த் அளவு சரியா இருக்கோ அன்னைக்கு தான் டா இந்தியா வல்லரசு ஆகும்

தேவை இல்லை,இந்தியன் சராசரி உயரம் 5 1/4 அடி. அதான் 5 3/4 அடி நீளம் இருக்கே? 6 அடி ,6 அடி+ ஒரு 2% பேர் இருப்பாங்களா?


==========

16 தாலி கட்டி/பதிவு பண்ணி திருமணம் செய்வது"Officially Committed
வெச்சுக்கறது பர்சனலி கமிட்டட்


============


17 ஓவியா வுக்கு காதல் நம்பிக்கை துரோகம் இழைத்த ஆரவ் உடன் ஜோடியாக ஓவியா ஒரு படத்தில் நடிப்பதாக வரும் தகவல் உண்மை எனில் மக்களை மடையர்களாக நினைக்கிறார்களா?


============


18 குருவின் பெயரை காப்பாற்றிய சிஷ்யர்கள்
கே பாக்யராஜ் (பாரதிராஜா)
இரா பார்த்திபன் (பாக்யராஜ்)
ஆர் பாண்டியராஜன் (பாக்யராஜ்)
குருவை மிஞ்சிய சிஷ்யர்
குருவே இல்லாத ஏகலைவன்
ஷங்கர் (SAC) மணிரத்னம்
அட்லீ (ஷங்கர்)
குரு பெயரை கெடுக்கும் இயக்குநர்


================19 டாக்டர்,இந்த இந்துலேகா ஹேர் ஆயில் யாராச்சும் யூஸ் பண்றீங்களா?
எஃபக்ட் எப்படி?
பிரமாதமான சேல்ஸ்,செம,மார்க்கெட்டிங்,ஆனா"கேரளா ல ஒருத்தர் கேஸ் போட்டு தடை வாங்கிட்டாங்க.


=============20 நகரவாசிகளிடம் (ஏ",பி"செண்ட்டர்) அனுதாப வாக்கு"என்பது"கிடையாது.அது"கிராமங்களில் மட்டுமே செல்லுபடி ஆகும் ,(சி செண்ட்டர்) .எம் ஜி ஆர், ஜெ க்கள் ஜெயித்தது இதை வைத்தே.=========0 comments: