Tuesday, August 07, 2018

மாமியார் வீட்டுக்குப்போற வழி எது?

டியர்,என்"கண்ணைப்பாத்துப்பேச மாட்டீங்களா?


சாரி,ஆம்பளைங்க பொண்ணுங்க"கண்ணைப்பாத்து பேச மாட்டோம்--------------


2 குருவே!பெண்கள் கடன் கொடுத்து ஏமாறுவதில்லை, சீட்டு கட்டித் தான் ஏமாறுவார்கள் னு பேசிக்கறாங்களே அது உண்மையா?


அப்டி ஏமாந்தாலாவது பரவால்ல.சாமியாரு,பாதிரியாருனு நம்பி ஏமாந்துடறாங்களே?=============


3 தரகரே!மாப்ளை பேரு என்ன?


நந்த கோபாலன் குமரன்
அழகான தமிழ்ப்பெயர்",ஆனா"மாடர்னா இருந்தாதான்"என்"பொண்ணுக்கு"பிடிக்கும்
கவலைப்படாதீங்க,கல்யாணப்பத்திரிக்கைல NGK னு"போட்டுடுவோம்===============


4 படக்குனு தமிழ்ல எழுத சொன்னா என்ன பண்ணுவிங்க?


சர சர னு எழுதுவேன்

ஏன்?காது கேட்காதா?
படக்னு எழுதச்சொன்னா ,படக்"னுதானே எழுதனும்,ஏன் சரசர னு எழுதுனீங்க?
புரில===============


5 நாம போடுற

எல்லா ட்விட்டையும்
அடுத்த செகண்டே rt
பண்ற அந்த ஒரு நபருக்கு கைம்மாறு என்ன செய்ய முடியும் ???
ஏம்மா,அவன்"மிக மிக ஆபத்தானவன்,இப்டித்தான்"பொண்ணுங்க"ஏமாந்துடறாங்க.==============


6 F TN CM 63?65?67?


புரியல
எதிர்கால"தமிழக"முதல்வர்
கமல்?(63 வயசு)
ரஜினி (67 வயசு)
ஸ்டாலின் (65 வயசு)
யாரா இருக்கும்?===========


7 குருவே!தண்ணீர் குடத்தை ஒரு ஆண் உருவாக்கி இருக்கக் கூடும்.

தண்ணீர் கேனை ஒரு பெண் தான் உருவாக்கி இருக்கக் கூடும்..னு சோல்றாங்களே?நிஜமா?
யார் உருவாக்குனா என்ன?ரெண்டையும் சுமந்துட்டு வர்றவன் ஆம்பளதானே?
===========8 தலைவரே! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் னு சொன்னீங்களா?


ஆமா
உங்களுக்கு தரப்பட்ட பதவி பறிக்கப்பட்டா தாங்கிக்குவீங்களா?
அய்யோ மாட்டேன்,பணம் ,பதவி தான் முக்கியம்,அதுக்கு இடைஞ்சலா எந்த இடையூறு வந்தாலும் தாங்கிப்பேன்=========

9 நான் டைரி எழுதினா தவறிபோய் யாராவது படிச்சாக்க இரத்தம் கக்கி செத்திடுவான்


அதெப்டி?அதான் ஆல்ரெடி அவன்"தவறிப்போய்"செத்துடறான்,மறுபடி எப்டி படிப்பான்?எப்டி சாவான்?
===========


10 குழந்தைகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொடுப்பதோடு சேர்த்து Good டச் , Bad டச் சொல்லிக்கொடுக்கலாம் பள்ளிக்கூடங்களில் !


அதுலயும் ஒரு அபாயம் இருக்கு,நம்மாளு இது"தான் பேடு டச்னு கத்துக்குடுக்கற"சாக்குல"கை வைப்பான்============


11 டியர், Good டச் , Bad டச் அப்டின்னா என்ன?


நான் உன்னை லவ் பண்றப்ப எங்க"எல்லாம் தொட்டேனோ அதெல்லாமே பேடு டச்,எங்க எல்லாம் தொடலையோ அது குட் டச் (கற்பனை)
=============


12 ஆசை துறந்தவன் தான் புத்தன் என்றால்...

விஜய் ரசிகர்கள் கூட புத்தர்கள்தான்
அது"எப்டி?
அஜித் நடிச்சதால "ஆசை" படத்தை பாக்க மாட்டாங்க"இல்ல?============


13 மேடம் ,டப்மாஸ் பண்ணும்போது சிச்சுவேஷனுக்கு சம்பந்தமே இல்லாம சூடா டீ போட்டுட்டே பேசறீங்களே?ஏன்?

ஹாட் டப்மாஷ் னு கல்லா கட்டலாமில்ல?


==============


14 நான் Tv நெறயா பாக்கமாட்டேன்..வீட்ல Strict

நானும்தான்,ஒரே ஒரு டிவி தான் பாப்பேன்,ஏன்னா வீட்ல டைட்.ஒரே ஒரு டிவி தான் இருக்கு


===============

15 டியர்,என் பர்த் டே க்கு மூக்குத்தி கிப்ட் பண்ணுவீங்களா?

மாட்டேன்
ஏன்?
என் பொண்ணை "நோஸ்கட்" பண்ணீட்டியா?னு உங்கப்பா சண்டைக்கு வந்துட்டா?


================16 மிஸ்!உங்க ஆதார் நெம்பர் யார் கேட்டாலும் தந்துடாதீங்க,அபாயம்

ஏன்?
அப்டி"தந்தா உங்க பாய்"பிரண்ட்ஸ்"டீட்டெய்ல்ஸ்"எல்லாம் மாப்ளை வீட்டுக்கு தெரிஞ்சுடுமாம்===============17 என்னையும் என் அம்மாவையும் ஒன்னா பாக்கும்போது
இது உங்க தங்கச்சியானு என் அம்மாவ பாத்து கேட்டா எங்க அம்மா முகம் முழுக்க சிரிப்போட இல்ல இவ என் பொண்ணுணு சொல்வாங்க
ஆம்பளைங்க டெக்னிக்மா இதெல்லாம்,பசுவுக்கும் ,கன்னுக்குட்டிக்கும் வித்யாசம் தெரியாமயா இருப்பான்?


==============


18 குருவே!20 பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒருத்தி கள்ளக்காதலன் வைத்திருக்கிறாளென்றால் அங்கே 19 கண்ணகிகள் உருவாகிறார்கள்.என்பது"உண்மையா?

அதைக்கூட சகிச்சுக்கலாம்,மேனேஜர் உட்பட"எல்லா ஆண்களும் கோவலன்களாக துண்டு போட ரெடியா இருப்பாங்க


===============


19 பவன்கல்யாண் தெலுங்குல நடிச்ச "அத்தையின் வீட்டுக்கு போகும் பாதை எது ?"தமிழ்ல ரீமேக் பண்ணப்போறாங்களாம்.

ஓஹோ,என்ன டைட்டில்?
மாமியார் வீட்டுக்குப்போற வழி எது?


==============


20 மாப்ளை,ஒரு டம்ளர்"தண்ணி குடிச்சா எவ்ளோ பெரிய கோபமா இருந்தாலும் கரைஞ்சிடுமாம்

அத்தை,ஒரு சொம்பு தண்ணி கொண்டு வாங்க
அவ்ளோ கோபமா?
ஒரு டம்ளர் தண்ணி கேட்டு அரை மணி நேரமாகுது,இன்னும் உங்க பொண்ணு சீரியலை விட்டு வரல.விளம்பர இடைவேளைலதான் வருவாப்டி போல


============

0 comments: