Thursday, August 23, 2018

சாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்?

தலைவரே!இதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம்?


78
சராசரியா சம்பளம் எவ்வளவு?
10,000 ரூபா (அந்தக்காலத்துலயே)
சரி,இளையராஜா எத்தனை படம்?
படத்துக்கு ரூ 5 லட்சம் − 25 லட்சம் (இந்தக்காலத்துல)
1000 படம் மேல சம்பளம் ?
இப்ப கணக்கு போட்டு சொல்லுங்க,யாருக்கு சொத்து அதிகம்?=============


2 தலைவரே!எதுக்காக சமையல்காரம்மா முனியம்மாவை"அனுப்பிட்டு"ரோசியை வீட்டு சமையல் பண்ண விட்டுட்டீங்க?


இனிமே யாரும் என்னை ஓசி சோறுனு கிண்டல் பண்ண முடியாது,ரோசி (சமைச்ச) சோறு"னு பதிலடி"குடுத்துடுவமில்ல?===============


3 குருவே!நாத்திகர் எவரும் கோவில் சிலைகளை திருடவில்லை..னு"சொல்றாங்களே,உண்மையா?


ஆமா,பிசாத்து காசு 10,000 ,20,000 திருடுனா கட்டுபடி ஆகுமா?அவங்க டார்கெட் கோடிகள்ல..==============


4 தலைவரே!தேர்தல் வரும்போது"வீடு வீடா படி ஏறி "அம்மா ,தாயே !ஓட்டு போடுங்கனு பிச்சை எடுப்பது யாரு?


நாம
கோடிக்கணக்குல ஊழல் பண்ணி சொத்து சேர்த்தாலும் கட்சித்தொண்டன்கிட்டயே தேர்தல்நிதி பிச்சை எடுப்பது யாரு?
அதும் நாம ,எதுக்கு பழைய குப்பையை கிளறனும்?
இணையம் நீங்க போட்ட பிச்சையாமே?==============


5 தலைவரே!தமிழை வளர்த்தார் ,தமிழை வளர்த்தார்னு எல்லாரும் சொல்றாங்களே?


செல்வியோட முழுப்பேரு தமிழ்ச்செல்வி,இப்ப புரியுதா?==============


6 ஜோசியரே! ,பொண்ணு ரொம்ப சுத்த பத்தமா இருக்கனும்,அப்டி ஒரு ஜாதகம் கொண்டுவாங்க


கவலையேபடாதீங்க,மியூசிக்கலி வீடியோ போடறதா இருந்தாலும் குளிக்கற வீடியோதான் போடும்,எவளோ சுத்தம் பாருங்க==============


7 பேங்க் மேனேஜர்"சார்,செல்"போன் வாங்க லோன்"வேணும்


ஓஹோ,என்ன"போன்?
லெ"loan"னோவா==============8 வரலாறு மிஸ் வனஜா = மோனோலிசா எதுக்கு புகழ் பெற்றவர்?


மாண்பு மிகு மாணவன் = மோனோ ஆக்டிங்க்"க்கு னு நினைக்கறேன் டீச்சர்==============


9 குருவே!அனைத்து ரகசியங்களும்

வெளி(யிட)ப்படும் இடம்,
டீக்கடை பெஞ்ச்.!!னு சொல்றாங்களே ,அது"நிஜமா?
ஆமா,நல்லவேளை,டீக்கடைக்கு பொறணி பேசற பொண்ணுங்க அதிகம் வர்றதில்ல==============10 தரகரே!பொண்ணுக்கு இடது கை பழக்கமா?வலது கை பழக்கமா?

2 கையும் பழக்கம்தான்,ஏன்"கேட்கறீங்க?
அய்யய்யோ, 2 கன்னத்துலயும்"அறை வாங்க"வேண்டி வருமே?


==================


11 ஈரோடு ல சுத்தி பாக்கற மாதிரி என்ன இடம் இருக்கு??

ஆட்டோ ஸ்பேர்ஸ் கடைகள்
புரில
அங்கே தான் "சுத்தி" பார்க்க முடியும்


====================


12 தலைவரே!சொந்தமாக வீடு, கார் இல்லாமல் இருந்தவர்னு உங்களைப்புகழ்ந்திருக்காங்களே!

அதுதான்யா சாணக்கியத்தனம்.உழைச்சு சம்பாதிச்சதைதான் நம்ம பேர்ல வாங்கனும்,ஊரான் சொத்தை அடிச்சு சம்பாதிச்சதை சம்சாரம்,மகன்,மகள்,பினாமி பேர்ல தான் வாங்கனும்


==================


13 டாக்டர்,நகம் கடிக்கறவங்கள்ல 89% பேர்"மத்தவங்களை மதிக்க மாட்டாங்களாமே ,அது நிஜமா?

ஆமா,பொதுவா பொண்ணுங்கதான் நகம் கடிப்பாங்க,பொண்ணுங்க மத்தவங்களை மதிச்சதை கல்வெட்டுகள்ல,ஓலைச்சுவடிகள்ல படிச்சிரூக்கேன்


==================14 தலைவரே!கோகோ வை தடை பண்ணனுமாம்

அந்த கேம்க்கு என்னய்யா?பொண்ணுங்க சிட்டாட்டம் விளையாடுவாங்களே?
அப்டேட் ஆகுங்க,கோல மாவு கோகிலா படத்துல இந்துக்கடவுளை கிறிஸ்டியன் டைரக்டர் அவமானப்படுத்திட்டாராம்


===================


15 இன்னைக்கு பிரேயர்ல காலம் தவறாமை பத்தி பேசச்சொன்னோமே?ஏன் பேசல?

சாரி சார்,ஸ்பீச் ரெடி பண்ண லேட் ஆகிடுச்சு,நான் ஸ்கூல் வர்றப்ப ப்ரேயரே முடிஞ்சிடுச்சு


==============


16 பிரபல"ரைட்டர் = என் நாவலைப்பற்றி எழுதி உங்க டைம்லைன்ல போஸ்ட் போட்டு அந்த லிங்க்கை கமெண்ட்டா என் டைம்லைன்ல போட்டா குலுக்கல்"முறைல, 10 பேரை தேர்ந்தெடுத்து ஓட்டப்பந்தயம்"வெச்சு,3 பேருக்கு என் புக்கை"இலவசமா தருவேன்

சார்,ஒரு பர்லாங்க் தூரம் நடந்தா லைப்ரரி வரும்,அங்கே போனா போதாதா?


================


17 மிஸ்,பால்/ஹார்லிக்ஸ்"குடிக்கறப்ப எப்பவும் உதட்ல சிந்தினபடிதான் குடிப்பீங்களா?கர்ச்சீப்ல துடைச்சுக்கலாமில்ல?

பால் வடியும் முகம்னு ஊரு"சனம் சொல்லுமில்ல?


================


18 சாதா முத்தம்
செல்ல முத்தம் என்ன வித்யாசம்?
சாதா முத்தம் நாம பொண்ணோட உதட்ல/கன்னத்துல தர்றது. "செல்"ல முத்தம் என்பது பொண்ணுங்க பேசிட்டு இருக்கற(ப்ப)"செல்"ல"முத்தம் தர்றது


==============


19 குருவே!தலையில் வைக்கும் பூச்சரத்தின் நீளம் குறைய குறைய பெண் வளர்கிறாள்.என அர்த்தமா?

ஆமா,அது கன்னிப்பெண்ணுக்கு.மணமான பெண் மணமான புதுசில் 4 முழம்,அடுத்த வருசம் 3 என படிப்படியாக குறைந்து 5 வது வருசம் வைக்கறதே இல்ல================


20 வீட்ல ஏதாவது ரெஸ்டாரண்ட் வச்சிருக்கிர மாப்பிள்ளையா பாத்து மேரேஜ் பன்னி குடுத்தாங்கன்னா டெய்லி பிரியாணி சாப்டலாம் 🙄🙄

அதை விட நகைக்கடை வெச்சிருக்கற மாப்ளை சிக்குனான்னா டெய்லி எம்ஜியார் மாதிரி தங்க பஸ்பமா சாப்பிடலாம்


============

0 comments: