Tuesday, August 21, 2018

திமுக ஒரு பகுத்தறிவுக்கட்சி னு மார்தட்னவங்க அப்டியே லைன்ல வாங்க

1    பா.ஜ.,வைச் சேர்ந்த, ஹரியானா முதல்வர், மனோகர் லால் கட்டாருக்கு, மாநிலத்தில், எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என தெரியவில்லை. - டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: # கவர்னர் கூட சண்டை போட்டுட்டு இருக்கறதுதான் நல்லாட்சியா?


==========


2   உலகின் ஆறாவது பொருளாதார சக்தியாக, இந்தியா உருவெடுத்துள்ளது. அதே சமயம், வளர்ச்சியின் பலன்கள், சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களுக்கும் சென்றடைவதை, நாம் உறுதி செய்ய வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:  # நாட்டை விட்டு ஓடிப்போற பொருளாதாரக்குற்றவாளீகளை தடுத்தாலே பாதி பொருளாதாரம் சரி ஆகிடும் போல


===============3   சில நேரங்களில், வெற்றி வசப்படும்; சில நேரங்களில், அது வாய்க்காது. எனவே, ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் தோல்வியை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் உள்ள குறைபாடு என, கருதக் கூடாது -  சோனியா:  # சரி , 2019 லயும் இதே டயலாக் தானா?


===============


4  கருணாநிதியின் உடலை, மெரினாவில் அடக்கம் செய்ய தடையாக இருந்த, நான் தொடுத்த வழக்கு, வாபஸ் பெறப்பட்டதாக, ஊடகங்களில் தகவல் வெளியானது. உண்மையில் அந்த வழக்கை, நான் வாபஸ் பெறவில்லை. என் வழக்கறிஞரை மிரட்டி, வழக்கை வாபஸ் பெறச் சொல்லி, தி.மு.க.,வினர் அடித்து துன்புறுத்தினர். எனக்கும் மிரட்டல்கள் வந்தன. நான் தொடுத்த வழக்கு, அடிப்படை ஆதாரம் இல்லாதது என, தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான ஆணையை, உயர்நீதிமன்றம் இன்னும் தரவில்லை  - சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி # டிராபிக் ராமசாமி பாகம் 2 படத்தை சன் டி வியே எடுப்பாங்க 
===============


 இந்தியா முழுவதும் பெரிய அளவில், எங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது -   கமல் # “கட்சி “விஸ்வரூபம்” எடுக்கும்னு இன்னும் நம்பறார் போல 


==============


6    'உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்ற அந்த மூன்று வார்த்தைகள் தான், தலைவர் எனக்கு விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள். மூன்று வேளையும், என்னை இயக்கப் போகும் சாவி அது தான். அந்த உழைப்பு - ஸ்டாலின் # மற்றவர்களீன் உழைப்பில் வாழ்வதுதானே அரசியல்வாதிகளின் பிழைப்பு, ? அதை மாற்றினா சரி


=============


7     பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டும், ஏன் அதிகளவில் பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்? - ராகுல் # காங் ஆட்சில வெளீல விஷயம் வர்ல, இப்போ வந்திருக்கு


============

8  வெளிநாட்டுக்கு தப்பும் பொருளாதார குற்றவாளிகளை தடுக்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் # அப்ப ஏற்கனவே தப்புன விஜய்மல்லய்யா,நீரவ் மோடி,லலித மோடி எல்லாம் அவ்ளோதானா?போனது போனது தான்?=================9 அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க ரஜினிக்கு இடமில்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ # பாஜக"தலைமை கட்டளை இட்டாலும் இதே பதிலா?===============10 2 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி - செய்தி
# அப்ப 2 வருசமா இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் லாங் லீவ்ல இருந்துதா?


==============


11 சாதியை சொல்லிக் கூப்பிட்டா என்னைப் பொறுத்தவரை அது பெரிய கெட்டவார்த்தை - # தேவர் மகன் ன்னா கொக்கா?
சபாஷ் நாயுடு


=============12 குடும்ப பிரச்சனையால் திமுக பலவீனம் அடைந்துவிடக் கூடாது – திருமாவளவன்
# ஓஹோ,குடும்பத்துல பிரச்சனை இருக்குதா?நீங்க சொல்லி தான் தெரியும்,அழகிரி அண்ணன் ஆக்டிவ் மோட்===============


13 சூரியனிலிருந்து மின்சாரம் எடுத்தால் சூரியபகவான் கோபப்படுவார் -
MP அசோக் சக்சேனா. # சூரிய நமஸ்காரம் பண்ணி சரி பண்ண முடியாதா?யார்யா இவரு?செல்லூர் ராஜுவுக்கே டப் பைட் தர்றவரு?


=================


14 ராகுலுக்கு பதில் சொல்ல எனக்கு இத்தாலி மொழி தெரியாது - அமீத்ஷா #
நீங்க ஹிந்தில சொல்லுங்க,அதை மொழி பெயர்த்து ராகுல்ட்ட சொல்ல ஆள் இருக்கு,ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்னாளாம்


=================15 அதிமுகவில் மக்களை கவரக்கூடிய தலைவர்கள் இல்லை - செல்லூர் ராஜூ
# அதனாலதான்"மக்கள் மனம்"கவரந்த ரஜினி யை அதிமுக தலைவர் ஆக்கப்போறாங்களாமே?===============


16 அரசியலுக்குள் குற்றவாளிகள் நுழையக்கூடாது : உச்ச நீதிமன்றம் கண்டிப்பு # நாட்டு நிலவரம் தெரியாம இருக்காரு,அரசியல்க்கு வந்தவங்க 90% பேரு திருடன்,கேப்மாரி,மொள்ளமாரி,முடிச்சவுக்கிதானே?நல்லவன் உழைச்சு சாப்பிடுவான்


===============


17 கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர் - மு க அழகிரி
# ரஜினி ஒரு"தீர்க்கதரிசி,இது"தெரிஞ்சுதான்"பல வருடங்களுக்கு"முன்பே "அண்ணன்"என்ன"?தம்பி என்ன?சொந்தம் என்ன?பந்தம் என்ன?னு பாடினார்

================


18 கேரளாவில் கனமழை: சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் தேவசம் போர்டு வேண்டுகோள் # அடுத்த வருசம் கூட சாமியை பாத்துக்கலாம்,எங்கயும் போகாது,வந்து வெள்ளத்துல,நோய்க்கிருமிகள்ட்ட மாட்டிக்காதீங்க மக்களே,தேங்கிக்கிடக்கும் தண்ணீர் வடிய பல நாட்கள் ஆகும்


==============


19 திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும் - மு.க.அழகிரி
# திமுக ஒரு பகுத்தறிவுக்கட்சி னு மார்தட்னவங்க அப்டியே லைன்ல வாங்க,அடிக்கவெல்லாம் மாட்டேன்..


======================20 திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
# பந்திலயே உட்காரவேணாம்னு"கட்சியை விட்டு துரத்திட்டாங்க,இவரு இப்ப வந்து இலைல ஓட்டைங்கறாரு


=


=================

0 comments: