Wednesday, August 22, 2018

=கேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.

நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்"கற்காமல் இருப்பது பெரிய பின்னடைவு (நீச்சல் குளத்தில் கோச்சிங்க் கிளாஸ் 10 நாட்கள் போவதெல்லாம் செல்லாது,கிணறு,குளம்,ஏரி,ஆறு,கடல்"நீச்சல் பழகனும்)

===============2 உறவினரோ,நண்பரோ,பழக்கமானவரோ யார் ஓசி"சோறு போட்டாலும்/வாங்கிததந்தாலும் சாப்பிட்டு விடாதீர்கள்,சமயம்"வரும்போது தயா அழகிரி போல் சொல்லிக்காட்டுவார்கள் .


===========


3 இக்கட்டான சூழல்களில் ரெடி கேஷ் உதவுவது போல் ஏடிஎம் கார்டு உதவுவதில்லை.பாக்கெட்டில் பணம் இருப்பது பெரிய பலம்

===========


4 வெள்ளம் புகுந்த ,நீரில் மூழ்கிய வீடுகளிலிலிருந்து குழந்தைகள்,சிறுவர்கள்,சிறுமிகளை காப்பாற்றுவது எளிது.ஆண்களைக்காப்பாற்றுவதுதான் சவால் ,ஆட்கள் 90 கிலோ வெயிட் இருக்காங்க,நீளமான கூந்தல் உள்ள 50 கிலோ எடைக்கு குறைவாக இருக்கும் பெண்களைக்காப்பாற்றுவது எளிது


============


வெள்ளம் போன்ற"இயற்கைப் பேரிடர் சமயங்களில் ஜீன்ஸ் பேண்ட் ,வேட்டி,லுங்கி/கைலி ,தவிர்ததல் நலம்.சைக்ளிங்க் சார்ட்்ஸ்/பர்முடா/டைட்ஸ் நல்லது.பெண்கள் சேலை தவிர்த்து சுடி அணிதல் நலம்


============


வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க உதவிய 2 காரணிகள்
1 சின்ன வயசுலயே வாய்க்கால்,கிணறு,குளம் என கண்ணில் பட்ட நீர்நிலைகளில் நீச்சல் கற்றுத்தந்த அப்பா 2 ஏடிஎம் கார்டை எப்போதும் நம்பாதே,ரெடி கேஷ் தான் உதவும் என்ற எம் டி யின் அறிவுரைப்படி எப்போ வெளில போனாலும் ரெடி கேஷ் 10,000 பழக்கம்


===========


7 ஒரு சினிமா விமர்சகரின் மிக முக்கியப்பணியே தியேட்டரில் ஜனங்களின் பல்ஸ் உணர்ந்து அதை பதிவாக்குவதே!விமர்சகரின் தனிப்பட்ட ரசனையை தெரிவிக்கலாம்,கூடவே ஏ,பி,சி செண்ட்டர் ரசிகர்களின் வரவேற்பு பற்றியும்"கணிக்க வேண்டும்


==================


8 வீட்டில் இட்லி,தோசை,சப்பாத்தி சாப்பிடும்போதே ஒரு"கரண்டி குழம்பு எவ்வளவு உணவுக்கு தாங்குது என்பதை கணித்து விட்டால் வெளி இடங்களில் பார்சல் உணவில் குழம்பு பயன்பாட்டிற்கு உதவும்.பலர் பயந்து பயந்து கொஞ்சமாக குழம்பு தொட்டு சாப்பிட்டு பின் மிச்சம் ஆனதை விரக்தியுடன் பார்க்கின்றனர்


==============


9 வார இதழ்களால் ,அதன்"விமர்சகர்களால் கணிக்கமுடியாத,யூகிக்காத பிரம்மாண்ட வெற்றியை அள்ளிய தமிழ் படங்கள்
1 சின்னத்தம்பி 2 கரகாட்டக்காரன் 3 தென்றலே என்னைத்தொடு 4 உதயம் 5 இதயத்தை திருடாதே 6 உள்ளத்தை அள்ளித்தா 7 புது வசந்தம் 8 முதல் வசந்தம் 9 முதல் மரியாதை 10 மை டியர் குட்டிச்சாத்தான்


==================


10 கேரளாவில் மம்முட்டி,மோகன்லால் ரசிகர்களை விட விஜய்"ரசிகர்கள் அதிக அளவில் மக்களுக்கு உதவியதாக தகவல்,தமிழனாக"நமக்கு இதில் பெருமை


==============


11 கேரளா, கர்நாடகா,தமிழநாடு வை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை
ஆந்திராவின் பல மாவட்டங்களில் கனமழை அதென்ன பாஜக எதிர்ப்பு மாநிலங்களில் மட்டும் மழை?னு ஒரு க்ருப் கிளம்பி இருக்குமே?


===============


12 கல்ஃப் கண்ட்ரிஸ்ல வேலை பாத்துட்டு வர்றவங்களுக்கு இந்தியால நல்ல வேலை கிடைக்குதா?
கிடைக்கும்,ஆனா நம்மாளு அங்கே வாங்குன அதே சம்பளம்"எதிர்பார்ப்பாப்டி===============


13 கமல் டான்ஸ் ,விமல் டான்ஸ் என்ன வித்யாசம்?
நடனக்கலைகள் அனைத்தையும் முறைப்படி கற்று சிப்பிக்குள் முத்துல நடனம் தெரியாதவர் மாதிரி ஸ்டெப் போட்டா அது கமல். நமக்கு எதுவுமே தெரியாதுனு உண்மையை ஒத்துக்கிட்டு கை காலை உதறி ,ஒப்பேத்தி ஸ்டெப்"போட்டா அது விமல்


=================14 இழவு விழுந்த வீட்டில் அழுவதை விட டிவி சீரியல் பார்க்கும் போதுதான் பெண்கள் நிஜமாய் அழுகிறார்கள்.போலிகளை நம்பி ஏமாறுபவர்கள் பெண்கள் என்பதற்கு சிறந்த எ.கா இதுதான்


=============15 டீக்கடைல,சலூன்ல ,பஸ் ஸ்டாப்ல ஆண்கள் 4 பேர்,சந்திச்சா "கேரளா வெள்ளம்,தமிழக அரசியல்,இப்டி பேசிக்கறாங்க.பொண்ணுங்க சந்திச்சா பிக்பாஸ் 2 ,டிவி சீரியல்,சமையல் குறிப்பு,சேலை எங்கே வாங்குனது?இது மாதிரி நாட்டுக்கு உபயோகமான முன்னேற்றப்பாதைல போறாங்க


=================


16 தமிழ்சினிமாவில் நீண்ட நாட்கள் /பல வருடங்கள் மார்க்கெட்டுடன் இருந்தவர்கள்/இருப்பவர்கள்
1 சரோஜாதேவி 2 நதியா 3 குஷ்பூ 4 ராதிகா 5 த்ரிஷா 6 நயன்தாரா

==============


17 மார்க்கட் நடிகைகள் பாகம் 2
சிம்ரன் ஜோதிகா மாதவி அம்பிகா ராதா


===============


18 குருவே!அய்யர்கள் அயிரை மீன் சாப்பிடுவாங்களா?
ஜிலேபி மீனை சுகர் பேஷண்ட்ஸ் சாப்பிடலாமா?னு கேட்கற மாதிரி சம்பந்தம் இல்லாம இருக்கு,அவங்க சைவம் தானே? பெரும்பாலும்


==================


19 கேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000. விருப்பம் உள்ளவர்கள் கேரளா செல்லலாம் . 20 நாட்கள் வேலை இருக்கும்


==============
20 ஒரு ஐ போனை ஒரிஜினலா இல்லை யா னு எப்படி கண்டு பிடிப்பது ??
1 Go to Google I phone IMEI என்று டைப் செ‌ய்யவு‌ம் Optionல் முதலில் வரும் web site open செய்யவும் IMEI Number type செய்யவும் உங்கள் போனின் ஜாதகமே வரும் 2 கீழ வீசுங்க. உடைந்தால் ஒரிஜினல். உடையவில்லை எனறால் டூப்ளிகேட்


====================

0 comments: