Tuesday, June 11, 2013

உலக சுற்றுச் சூழல் தினம் VS ஃபிகர்

1.உன் உதட்டில் ரகசியம் தான் தங்குவதில்லை, என் உதடுகளையாவது தங்க விடேன்--------------------


2. எந்தப்பிரச்சனை வந்தாலும் ஆறுதல் தேடி உன் மடி  சாய்வேன். பிரச்சனையே நீ தான் என்றால் நான் என் செய்வேன் ? # சும்மா


------------------------


3. கே பாலச்சந்தர் ட்விட்டர் ல இருக்கும் பெண்ணை ஹீரோயினாக்கி ஒரு படம் எடுக்கிறாராம்.டைட்டில் சந்து பை ரவி :-)-------------------------------


4. எல்லா இந்தியப்பெண்களும் என் மனைவியின் சகோதரிகள் ( ALL INDIAN GIRLS R MY WIFE'S SISTERS)-----------------------


5. புத்திசாலிப்பெண்கள் ஜிம்மில் கருப்புக்கலர் உடைகளை அணிகிறார்கள் :-(-----------------------


6. போட்டுக்குடுப்பவர்கள் ,அடுத்துக்கெடுப்பவர்கள்,நல்லவன் போல் நடிப்பவர்களையே இத்தேசம் கொண்டாடுகிறது------------------------


7. எந்த ஊர் பொண்டாட்டியா இருந்தாலும் தன் புருசன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையா இருப்பதையே விரும்புகிறாள்--------------------------


8. அழகிய பெண்களுக்கு அறிவான ஆண்கள்தான் பிடிக்குமா?


ம்ஹூம்.மாங்கா மடையர்களைத்தான் மங்கைகள் விரும்புகிறார்கள்


---------------------------


9. அன்பே! மாடி மெத்தையை விட உன் மடி மெத்தை SAWலச்சிறந்தது


---------------------


10. இன்று உலக சுற்றுச் சூழல் தினம். நம்ம ஏரியாவில் இருக்கும் பிகர்களை அடுத்த ஏரியா ஆளுங்க கரெக்ட் பண்ண விடாம பாதுகாப்போம்-------------------------


11. சம்சாரம் எது சொன்னாலும் சரி சரி என்று தலையாட்டுபவனே சரா சரி தமிழ்ப்புருஷன்---------------------


12. உங்க 2 பேருக்கும் தகராறு வந்தா உன் சம்சாரம்தான் அடி குடுப்பாளாமே?அவ என்ன குடுக்கற்து? நானே வாங்கிக்குவேன் ;-)


---------------------


13. ஜட்ஜ் - நாளை காலை 6 மணிக்கு தூக்குதண்டனைனு தீர்ப்பு சொல்றேன்.பயப்படாம சிரிக்கறே?


கைதி - நான் எந்திரிக்கறதே தினமும் 8 மணிக்குத்தானே?----------------------


14. சாதித்தவர்கள் அனைவரும் நம்மை விடத்தாழ்ந்த நிலையில் இருந்து துவங்கியவர்களே்----------------------

15. நான் பதவிக்கு வர பாடுபட்ட தொண்டர்கள் என் வீட்டுக்கு வெளியே.தனக்குப்பதவி வேண்டும் என கேட்க வந்தவர்கள் என் வீட்டுக்குள்-MGR@1977்


-----------------------


16. மாங்கா சாப்பிடறதுல கில்லாடியா இருக்கறவங்களை மா மேதைன்னு கூப்புட்ர முடியாது------------------------

17. அத்தான்.மேரேஜ் ஆகி 10 வருசம் ஆச்சு.எனக்காக என்ன செஞ்சிருக்கீங்க?


11 குழந்தைங்க குடுத்திருக்கேனே?பத்தலைன்னா சொல்லு.மேலும ரெடி பண்ணுவோம்


------------------------


18. என்னை ஏன் காதலிக்கிறய்? எதற்கு என் மேல் அன்பு வைக்கிறாய்? எப்படி உன்னை நம்புவது? என கேள்விமேல் கேள்விகேட்டால் ஓடிடுவேன் என எச்சரிக்கிறேன்--------------------------

19. திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றால் அபராதம் – அதிரடியாக அறிவித்துள்ள சீனா # டெலிவரிக்கு 1 மணி நேரம் முன்னே தாலி கட்டிட்டா ஓக்கேவா?----------------------


20. மண் தரையில் ஒவ்வொரு முறை குழந்தை விழும்போதும் சலிக்காமல் நீரில் கழுவி விடும் அம்மா போல் உன் மீது ஒவ்வொரு முறை காதலில் விழும்போதும் நீ அலட்சியம் என்னும் நீரால் கழுவி விடுகிறாய்----------------------------------------------


15.