Sunday, June 02, 2013

அட கொல்லைல போனவனே என காதலி சொன்னா என்ன அர்த்தம்?

1. தம்பதியினருக்கு இடையேயான பரஸ்பர அன்பு ,பரிவு .,கவனிப்பு 3 ம் இருவரில் ஒருவருக்கு காய்ச்சல் எனும்போது வெளிப்படும்
-----------------------2. உனக்கு உடல் நிலை சரி இல்லாத போதெல்லாம் எனக்கு மன நிலை சரி இருப்பதில்லை ்
----------------------3. உன் மீது நான் காட்டும் அன்பு முழுக்க முழுக்க உனக்கே உரித்தானது--------------------------


4. ஒரே ஒரு நிமிடக்கோபம் கூட பல வருட நட்பை ,சொந்தத்தை முறிக்க வல்லது


-----------------------


5. நமக்குப்பிடித்தவர்களிடம் எந்த அளவுக்கு சண்டை போடுகிறோமோ அந்த அளவுக்கு அன்பு வைத்திருப்போம் # உரிமை


--------------------------


6. உன்னுடன் கை கோர்த்து நடக்கையில் நான் அறிந்திருக்கவில்லை நீ கோர்த்து விடுவதில் ராணி என்பதை
--------------------------


7. உன் முகத்துக்கு ரொம்ப கிட்டே வந்து மியாவ் மியாவ் என கத்துவது உன் கன்னத்தில் இருக்கும் பூனை முடிக்கு வரவேற்பு சமிக்கை
---------------------


8. என் காதல் விழாவின் சுவராஸ்ய தொகுப்பாளினி நீ !


----------------------


9. நெய்யும் ,விளக்கெண்ணெயும் தடவியது போல இயற்கையிலேயே உன் உதடுகள் மினுமினுப்பது எப்படி?மின்மினிப்பூச்சியை ஒட்ட வைத்துக்கொண்டாயா?------------------------------


10.  காலையில் எழுந்ததும் ஒரு குட்மார்னிங் மெசேஜ் கூட அனுப்பக்கூடாதா?என ஊடாடினாள்.புதிதாகச்சொல்ல என்ன இருக்கு? # குட் மார் னிங் ;-))

-------------------------


11. அன்பே! பவுர்ணமி நிலா வெளிச்சத்துலயே உன் முகம் சுமாராத்தானே இருக்கு? அமாவாசை இருட்டில் பார்த்தால் எப்படி இருக்கும் ? #சும்மா
--------------------------


12. உனக்குப்பல மொழிகள் தெரிந்தும் அதற்கான கர்வம் உன்னிடம் இல்லை.எனக்கு உன் மவுன மொழி மட்டுமே தெரியும்.என்ற கர்வம் எனக்கு உண்டு்
------------------------


13. நீ என்னுடனே என்றென்றும் இருப் பாயா? மெத்தையா?-------------------------


14. நீ அருகில் இருந்தால் உன்னை கிஸ் பண்ணத்தோணும்.இல்லை என்றால் மிஸ் பண்றதா தோணும்.நீ எப்போதும் எனக்கு வேணும்------------------------


15. நான் ஒரு அமைதி விரும்பி.உன் உதடுகள் எழுப்பும் இச் சத்தம் மட்டும் பிடித்தது எப்படி?------------------------


16. காதல் என்றால் என்ன? ஒரே குழப்பமா இருக்கே? என்றாள்.குழம்பிய குட்டை தெளிவதற்குள் மீன் பிடித்து விடனும் என்றேன்

--------------------------17. காலங்காத்தால முத்தம் கேட்கறியே ,உனக்கு வேறு வேலையே இல்லையா? என்றாள். எதுவும் பேசக்கூடாது என அவள் வாயை அடைத்து விட்டேன்--------------------------


18. உனக்கு கோபம் வந்தபோதெல்லாம் என்னை சத்த மிட்டாய்! பின் என்னை சமாதானப்படுத்த முத்த மிட்டாய்! #ஆரஞ்சு மிட்டாய் உதட்டழகி
----------------------------


20. கிஸ் ட்யூசன் சென்ட்டரின் மிஸ் நீ! உன்னிடம் பயிலும் ஒரே மாணவன் நான்-----------------------------21. நீ முத்தம் குடுக்க உன் உதடுகளைக்குவித்த போது எட்டாங்கிளாஸ் படிக்கும்போது புரியாத குவி லென்ஸ் தத்துவம் இப்போ புரிந்தது


-------------------------


22. உன் கரம் கோர்த்து உன்னுடன் இணையாக நடப்பதில் உள்ள ஒரே சங்கடம் உன் முழு முகம் பார்க்க முடிவதில்லை என்பதே !
----------------


23. பாப்பான்னா பிடிக்கும் என்றேன்.மழலை விண்ணப்பம் என தெரிந்தும் என் கருவிழி என்றால் அவ்ளவ் இஷ்டமா? என்றாள்
---------------------


24. உன் வீட்டுக்கொல்லைப்புறத்தில் ஒளிந்திருந்தேன் உன்னிடம் பே சொல்ல.குளிக்க வந்த நீ " அட கொல்லைல போனவனே" என்றாய் !------------------------
25 உன்னை செல்லமாய் ஏதாவது திட்டலாம் என என் வாயைத்திறந்தாலே உன் வாயால் என் வாயை அடைத்து விடுகிறாய்-----------------------2 comments:

Seeni said...

ovvontrum....

arumai...

Unknown said...

அருமை . என்ன இளமைகால நினைப்போ