Friday, June 28, 2013

அன்னக்கொடி (யும் கொடிவீரனும் ) - சினிமா விமர்சனம்

a


ஹீரோ ஆடு மேய்க்கிறவரு.  அப்போ ஹீரோயின் மட்டும் ஐ ஏ எஸ் கலெக்டராவா இருக்கப்போகுது? அதுவும் சுள்ளி பொறுக்கும் கள்ளிதான். ஒரு டைம் ஹீரோ கால்ல  முள் குத்தும்போது ஹீரோயின் தன் செருப்பைத்தர்றா. ஹீரோ அதுக்கு முன்னால  பொம்பளையைய்யும் பார்த்ததில்லை , லேடீஸ் செப்பலையும் பார்த்ததில்லை போல . அந்த செருப்புக்கு முத்தம் கொடுக்கறார் , மோந்து பாக்கறார் . இன்னும் என்ன என்ன கெரகம் எல்லாமோ பண்றார் ( படிக்கற உங்களுக்கே வாமிட் வர்ற மாதிரி இருக்கே? பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும் ?)

2 பேரும் லவ் பண்றாங்க . ஹீரோயின் அம்மாக்காரி ஒத்துக்கலை.பெண் கேட்க வந்த ஹீரோவையும்  , ஹீரோ அப்பாவையு,ம்  அவமானப்படுத்தி அனுப்பறா. புரட்சித்தலைவி தன் கட்சிக்காரங்களை எப்படி கேவலமா நடத்துவாரோ அதை விட 100 மடங்கு கேவலமா நடத்தறார். ஹீரோ வை கோ மாதிரி பொங்கி எழுந்து ஹீரோயின் அம்மாவை ஓங்கி உதைச்சுடறாரு. போலீஸ் கேஸ் ஆகி 6 மாசம் உள்ளே போறாரு 


அந்த சைக்கிள் கேப்ல  வில்லன் கூட ஹீரோயினுக்கு மேரேஜ் ஆகிடுது .மேரேஜ் மட்டும் தான் ஆச்சு ஆனா வேற எதுவும் ஆகலை ( ஏன்னா இது தமிழ்ப்படம் ) 
வில்லன் ஏன் ஹீரோயினை மேரேஜ் பண்ணியும் அவ கூட மேட்டரே பண்ணலை அப்டிங்கறதுக்கு ஒரு கேவலமான ஃபிளாஸ்பேக் மேட்டர் இருக்கு. என்ன பெரிய சஸ்பென்ஸ்  வேண்டிக்கிடக்கு இந்த குப்பைப்படத்துக்கு? அதையும் சொல்லிடறேன். சின்ன வயசுல வில்லனுக்கு படாத இடத்துல பட்டு பொட்டுனு போயிடுது .  கிளி செத்த கிளி . கோவிந்தா  கோவிந்தா .


 வில்லனோட அப்பா மருமக மேல அதாவது ஹீரோயின் மேல ஆசைப்படறாரு. அந்த மேட்டர் தெரிஞ்சு வில்லனே தன் அப்பாவை சதக் .  தான் எதுக்கும் லாயக்கில்லாதவன்னு தெரிஞ்ச  கில்மா லேடியை சதக் . தனக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்  இந்த உண்மையை ஊருக்கு சொல்லிடக்கூடாதுன்னு அவரையும் ஒரு சதக் . மொத்தத்துல படமே சதக் சதக் தான் .

படத்தோட ஹீரோ யாரோ லக்‌ஷ்மணாம் ,. அய்யோ பாவம் . ஓப்பனிங்கே சரி இல்லை . ஆள் நல்லா தான் இருக்கார் . ஆனா அவருக்கு வாய்ப்பு குறைவு . 


 தமிழ் இனத்தலைவருக்கும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் ஒரு ஒத்துமை என்னான்னா 2 பேருமே தன் வாரிசை எப்படியாவது முன்னுக்கு கொண்டாந்துடனும்னு பாடா பாடு படறாங்க . ஆனா அதுக்கு நம்மை ஏன் இப்படி பாடாப்படுத்தனும் ? 


மனோஜ் தாஜ்மஹால் ல ஏ ஆர் ரஹ்மான் இசை அமைச்சே அட்டர் ஃபிளாப் ஆன பட ஹீரோ. அவரை வில்லன் ஆக்கி படம் பூரா ஹீரோ மாதிரி அலைய விட்டா எவன் உக்காந்து பார்ப்பது ? இந்த லட்சணத்துல அவர் எந்திரன் ரஜினி மாதிரி பஞ்ச் டயலாக் வேற , சகிக்கலை . ( அவர் ம்மேமேமே என க்ளோசப் ல கத்தும்போது அப்பா சாமி முடியல)


ஹீரோயின் கார்த்திகா . அவரை விட அவர் முதுகு நல்லா நடிச்சிருக்கு .தாயைப்போல பிள்ளை , நூலைப்போல சேலைங்கறது மாதிரி ராதா முதுகு மாதிரி கார்த்திகாவுக்கும் முதுகு நல்ல அகலம் தான். ஆனா அவர் புருவம் ராதாவை விட நீளம் . அடேங்கப்பா . என்ன தான் கிராமியப்பெண்ணா மேக்கப் போட்டாலும் அதையும் மீறி அவர் முகத்துல ஒரு சிட்டி களை ஓடுது . 

முதல் மரியாதை டைம் ல எல்லாம் பாரதிராஜா படத்தில் ஒரு கண்ணியம் இருக்கும் . ஆனா இதுல காட்சிக்கு சம்பந்தமே இல்லாம கவர்ச்சிக்காட்சிகள் திணிக்கப்பட்டு ஒரு நல்ல கலைஞன் வியாபாரத்துக்காக விலை போனதை பறை சாற்றுது . யூ டூ பாரதிராஜா?
 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. இதுதான் என் லட்சியப்படம்னு பாரதிராஜா பிரஸ் மீட் ல அடிக்கடி உதார் விட்டு பில்டப் பண்ணினது

2. படத்துல  தன் பையன்  மனோஜ் தான் மெயின்  அப்டிங்கற விஷயத்தை ரகசியமா வெச்சுகிட்டது ( மேட்டர் லீக் ஆனா ஒரு பய படம் பார்க்க வர மாட்டானே? ) 


3. இது லைஃப் டைம் கேரக்டர்மா, உங்கம்மாவுக்கு எப்படி முதல் மரியாதையோ அப்படி உனக்கு அன்னக்கொடி அப்டினு கார்த்திகா கிட்டே பீலா விட்டு முடிஞ்ச வரை கிளாமர் காட்ட வைத்தது 4. ஜி வி பிரகாஷ் குமார்  சைந்தவி கூட ( மேரேஜ் வேலைகள் )  பிசியா இருந்ததால இசைல  பின்னணி இசைல கவனம் செலுத்தலைன்னாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாதது


5. ஆவாரங்காட்டுக்குள்ளே  ஆடோட்டும் புள்ளே ,  போறாளே போறாளே  என்னை விட்டு , காடை முட்டை கண் அழகி  மாடு முட்டும் மார் அழகி  என 3 பாட்டு கேட்கும்படி இருக்கு. பாடல்கள் எடுத்த விதத்தில் மட்டும் பழைய பாரதிராஜா மனம் கவர்கிறார்
இயக்குநரிடம் சில கேள்விகள்  1. தன் கண் முன்னே தன் முன்னால் காதலி புருஷனுடன் சந்தோஷமா வாழ்ந்தாலே காதலன் இன்னொரு மேரேஜ் பண்ணிக்க 1000 தடவை யோசிப்பான். ஆனா தன் காதலி நல்லா வாழலை , மேட்டரே நடக்கலை என்ற விஷயம் தெரிஞ்சும் ஹீரோ எப்படி இன்னொரு  மேரேஜும் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தைக்கு அப்பாவும் ஆகறாரு?


2. தன் மனசில் காதலனை வெச்சுக்கிட்டு என்ன நிர்ப்பந்தத்துல ஹீரோயின் வில்லனை மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்டா? என்பதற்கு சரியான விளக்கம் படத்துல இல்லை  ( ஹீரோயின் அம்மா  வில்லன் கிட்டே கடன் வாங்கிக்கிட்டார் என்பதற்கான காட்சிகளே இல்லை )


3. கதை நடக்கும் கால கட்டம் 1960 மாதிரி தெரியுது. போலீஸ் யூனிஃபார்ம் மட்டும் தான் அப்டி காட்டுது 


4. வில்லன் “ நீ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டே” கேரக்டர். ஆனா அவர் எதுக்கு பலான லேடி வீட்டுக்குப்போறார். போய் அவமானப்படறார்? 


5.  வில்லன்  மேட்டர்க்கு லாயக்கில்லைனு தெரிஞ்சும் எதுக்கு ஒரு மேரேஜ் பண்ணிக்கறார்? மனைவியை கொல்றார்? மீண்டும் ஹீரோயினை எதுக்கு மேரேஜ் பண்றார்?


6. சப்பாத்திக்கள்ளி செடி இலைல முள்ளால் கீறி எழுதுனா பால் வடியும் , ஆனா சுண்ணாம்புல எழுதுன மாதிரி  நீட்டா எழுத்துக்கள் இருக்கே , எப்படி? இதை ஒரு சிட்டி சப்ஜெக்ட் எடுக்கற டைரக்டர் எடுத்தா சரி தெரியலைன்னு விட்டுடலாம், யூ டூ பா ரா? 


7. வில்லன் கில்மா லேடி வீட்டுக்கு போறார். அவ மேட்டருக்கு 5 ரூபா கேட்கறப்ப அவ்வளவா?  என எஸ் ஆகறார். அதே ஆள் ஹீரோயின் அம்மாவை போலீஸ் ல இருந்து ஜாமின்ல எடுக்க 20 ரூபா செலவு பண்றார் , அது எப்படி?  ஹீரோயின் மேல ஆசைபட்டு அப்டி செஞ்சாரா? அவரால தான் எதுவுமே முடியலையே? 


8. காசு கொடுத்தா யாரா இருந்தாலும் ஓக்கே சொல்லும் கில்மா லேடி அந்த 3 பேர் கோழி கொழம்பு வேணும்னு பூடகமா கேட்கும்போது ஏன் துரத்தி விடனும்?

9. ஹீரோயின் தன் பேரை அன்னக்கொடின்னு சப்பாத்திக்கள்ளி இலைல எழுதறா. அப்போ அங்கே வரும் ஹீரோ ( ஆடு மேய்ப்பவர் )  என்ன எழுதனும்? அன்னக்கொடிப்ரியன், அன்னக்கொடி நேசன் இப்படித்தானே எழுதனும் , எதுக்கு கொடி வீரன்? அப்டினு எழுதறார்? இவர் வீரரா? ( டைட்டிலை நியாயப்[படுத்த ? ) 


10. ஒரு சீன்ல ஒரு பிச்சைக்காரி ஹீரோயின் அம்மா கிட்டே வர்றா. அவளுக்கு எதுக்கு அவ்ளவ் மேக்கப்?  ( டான்ஸ் மாஸ்டர் மாதிரி )


11. நட்ட நடு ராத்த்ரி 12 30 மணிக்கு வில்லன் ஹீரோயினை துரத்திட்டு ஓடறார். ஊரு சனமே தூங்கிட்டு இருக்கு. ஆனா ஒரு லேடி அப்போ தான் குப்பை கொட்ட வாசலுக்கு வருது . அந்த நேரத்துக்கு யாராவது குப்பை கொட்ட வருவாங்களா?12. வில்லன் ஹீரோவோட சம்சாரத்தை கடத்திட்டுப்போறார். எதுக்கு ஹீரோ உட்பட எல்லாரும் பதை பதைக்கறாங்க ? வில்லன் தான் அதுக்கு லாயக்கில்லாதவன் ஆச்சே?


13. வில்லன் தன் மனைவியை கொலை பண்ணி தற்கொலை மாதிரி செட் பண்ண தூக்குக்கயித்துல மாட்டி விடறாரு . தூக்கு போட்டுக்கிட்டு செத்தா நாக்கு வெளீல தள்ளி இருக்கனுமே? அப்படி இல்லாதப்ப ஊர் சனங்க ஏன் சந்தேகப்படலே? போலீஸ் விசாரணை பண்ணலை?


14. கார்த்திகா ஒரு டைம் ஆவேசம் ஆகி வில்லன் கிட்டே “ நீ என் புருஷன் தானே , பாயை போட்டாச்சு , வாடா பார்க்கலாம் “ என போரிங்க் பைப் லேடி ரேஞ்சுக்கு இறங்கி கூப்பிடுவது மகா மட்டமான இயக்கம் . அந்த சீனில் காமிரா ஆங்கிள் ஆபாசம்


15. நான் ஆம்பளைடி 1000 வீட்டுக்குப்போவேன், நீ பொம்பளை போன்ற கேவலமான ஆணாதிக்க வசனங்கள் எதுக்கு? மனம் கவர்ந்த வசனங்கள்  


1. கோழி திருடுனவன் கோளாறா தப்பிச்சுக்கிட்டானாம்.கோழி இறகுல காது குடைஞ்சவன் மாட்டிக்கிட்டானாம் ( கி ராஜ நாராயணனின்   கோபல்ல கிராமம் நாவலில் )


2. என்னை பரிகாசம் பண்ண உனக்கு வயசு பத்தாதுடி . நான் வயசுக்கு வந்து பல வருசம் ஆகுதுடா.சீர் செலவுக்கு பயந்து வீட்ல சடங்கு வைக்கலை


3. வாங்குன கடனை கட்ட முடியலையா? நீ கட்டுன மனைவியை  என் கூட அனுப்பி மறு சடங்கு பண்ணிடு. சீர் நான் பண்ணிடறேன்

4.  ஆத்துத்தண்ணி ஒரு ருசி.ஊத்துதண்ணி ஒரு ருசி .சுனைத்தண்ணி மூலிகை ருசி  ( பாலகுமாரனின்  தலையணைப்பூக்கள் நாவல் வசனம் )


5. வாத்தியாரைக்கண்டா , போலீசைக்கண்டா ஓடுவோம்

6. செருப்புப்போடாம போனா கால்ல முள் தான் குத்தும் , ஆனா இடைய சாதி நாம செருப்புப்போட்டுட்டுப்போனா  ஆளையே குத்திடுவாங்க7. இந்த வண்டில நான் ஏறிக்கவா?


 ஏய் , ஓசி டிக்கெட் ஏறிக்கோ8. உங்களைப்பார்த்ததுல எனக்கு கையும் ஓடலை ,காலும் ஓடலை


 கால் ல என்ன சக்கரமா கட்டி வெச்சிருக்கே? ( ஒய் ஜி மகேந்திரனின் வசூல் சக்கரவர்த்தி நாடக வசன் உல்டா)


9.  என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா , அந்த குடிசைல தான் இருக்கா


 அப்டியா, பார்ப்போம் , என்னடி உன் பொண்ணு பெருசாகிட்டான்னு சொன்னே? சிறுசாத்தானே இருக்கு?10.  என்னடி குத்த வைக்க  வர்றியா?

 ஓசில குத்த வைக்க எங்க குல சாமி ஒத்துக்காதே?


 காசு கொடுத்தா எங்க குல சாமி ஒத்துக்காதே


11. கில்மா லேடி - சித்திரை வெய்யில்ல உஷ்ணம் ஜாஸ்தின்னு ஒரு பயலும் வர மாட்டேங்கறான்


12. வில்லன் - உனக்கு 5 ரூபா ஜாஸ்திடி


 கில்மா லேடி - அதுக்காக ஏலமா போட முடியும்


13. போலீஸ் -   நீ எந்த ஊரு?

லேடி -  எந்த ஊர்ல இருந்து பிடிச்சுட்டு வந்தீகளோ அதே ஊருதான்


14. கடிச்சுக்க ஒண்ணும் இல்லை


 பொய். உன் கிட்டே 20 இருக்கு

 புரியல


 உன் கை விரல்கள் , கால் விரல்கள் ( நல்ல வேளை )

15. நக்கறதுன்னு ஆன பின் நாகரீகம் பார்த்தா நல்லா இருக்குமா? 

சி பி கமெண்ட் -அன்னக்கொடி - தயாரிப்பாளர்க்கு அன்னக்காவடி - மணிவண்ணன் ஆத்மா சாந்தி அடையட்டும் - படம் அட்டர்பிளாப் - டி வில போட்டாக்கூட பார்க்க முடியாதுரேட்டிங்க்  - 2 / 5 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் - 39 

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்படம் பார்க்கும்போது  போட்ட ட்வீட்ஸ்


1. ஈரோடு அபிராமியில் அன்னக்கொடி ரிலீஸ் இல்லை.ஸ்ரீ கிருஷ்ணாவில் மட்டும் தான் ரிலீசாம் # 10 58 க்கு சொல்றாங்க.அடேய்


2.   பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாட்டு ஹம்மிங்கை BGMஆக பல காட்சிகளில் ஜி வி பிரகாஷ் உல்டா 3. அய்யய்யோ.தியேட்டர்ல இருந்த 12 பேர்ல 5 பேர் இடை வேளை விட்டதும் கிளம்பிட்டாங்ளே.பயமா இருக்கு # அகொ

4. கதைல செம ட்விஸ்ட்.ஹீரோயின் கார்த்திகாவுக்கும் வில்லன் மனோஜ் க்கும் முதல் இரவு


5. அடேய்.பர்ஸ்ட் நைட்க்கு எந்தப்பரதேசியாவது சரக்கடிச்சுட்டு வருவானா ?,அநியாயமா சீன் போச்சே :-(


6. தியேட்டர்ல இருக்கற 5 பேர்ல 2 செட் காதல் ஜோடி.படத்தை விட இவங்க காட்ர படம் செமவீடியோப்பதிவு
9 comments:

பூங்குழலி said...

1.டீசர் பார்த்துட்டு படம் பாக்க போனா இப்படிதான் .

2.ஆனாலும் இணைய நண்பர்களுக்காக முழு படத்தையும் பாத்தீங்க பாருங்க .நீங்க கிரேட் .

3.கணவன் மேட்டர் ஏற்கெனவே பாக்கியராஜ் .ராஜேஷ் -வடிவுக்கரசி படத்துல வந்தது தானே

4.ஹீரோ குழந்தை பெத்துக்கலைன்னா அவர் எப்படி குழந்தைக்கு காதலி பேர் வைக்க முடியும் .அவர் என்னே ஈமெயிலா வச்சிருக்காரு காதலி பேர பாஸ்வர்டா வைக்க .

5.இளையராஜா இல்லாத பாரதிராஜா படங்கள் அவர் என்ன சால்ஜாப்பு சொன்னாலும் சுமாராகத்தான் இருக்கும்

குரங்குபெடல் said...

என்ன தம்பி . .


இப்டி போட்டு இமயத்தை சாச்சிபுட்ட . . .


அன்னக்கடி . . ?

sulthanonline said...

//ஹீரோயின் கார்த்திகா . அவரை விட அவர் முதுகு நல்லா நடிச்சிருக்கு .தாயைப்போல பிள்ளை , நூலைப்போல சேலைங்கறது மாதிரி ராதா முதுகு மாதிரி கார்த்திகாவுக்கும் முதுகு நல்ல அகலம் தான். //
Semaiya alavu eduthirukkeenga anne :-)

sankaramoorthi said...

தலைவா சூப்பர் கமென்ட்
கிராமத்தில் எத்தனையோ விஷயம் இருக்க ஏன் காதல் கத்தரிக்காய்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட்றா சக்கை!

அட்றா அடிச்சிக் கிழியுதே - சக்கை
அடிக்குதே பாரதிக்கு ஆப்பு!

தண்ணியார் ஊத்திக் குடிச்சாலும் - நச்சென்று
சென்னியார் போஸ்ட்டே சிறப்பு! :)))
-------

//இது தான் என் லட்சியம் படம்-ன்னு பிரஸ் மீட்//

அன்னக்கொடி ஆரம்பத்துக்குன்னே எல்லாரையும் கூட்டியெடுத்த கிராமத் திருவிழாவைப் விட்டுப் போட்டீங்களே!

//மணிவண்ணன் ஆன்மா சாந்தி அடையட்டும்//

நல்லவேளை, இதில் நடிக்க இருந்த அமீர்... ஆன்மா ஆகும் முன்னரே "சாந்தி" அடைஞ்சிட்டாரு!:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஹீரோயின் கார்த்திகா; அவரை விட அவர் முதுகு நல்லா நடிச்சிருக்கு//

:)))

//தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை//

முதுகு மட்டும் மம்மி
மத்த தெல்லாம் டம்மி:)

ஆயிரம் சொல்லுங்க; முதல் மரியாதை ராதா போல் வருமா?

Unknown said...

அலைகள் ஓய்வதில்லை ராதா போலவும் வராதுங்க kannabiran, RAVI SHANKAR (KRS)!ஹ!ஹ!!ஹா!!!

Unknown said...

இதுகெப்படி 'U'சர்ட்டிபிக்கெட் கெடச்சது ?
மனோஜ ஓப்பனிங் சீன்ல பார்த்தப்போ என்னடா, மன்சூரலிக்கான் தான் வில்லனோன்னு தோனுச்சு ? கடைசிவரைக்கும் அப்படித்தான்
#அன்னக்கொடி

Unknown said...

அன்னகொடி..நாய் கடி..