Thursday, June 06, 2013

சோக்காலி - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்

ரோஜா டி.வி. எனும் தனியார் ‌சாட்டிலைட் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்க்கும் சைதன்யா செம சோக்கு பேர்வழி! பிரேம் எனும் சைதன்யாவால் எக்கச்சக்க இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெரும் செல்வந்தரும் தொழில் அதிபருமான கவர்ச்சி நடிகை சோனா, தன் தங்கையை பிரேம் எனும் சைதன்யாவால் பறி கொடுத்து அவரை பழிவாங்க துடிக்கிறார். அதேமாதிரி சோனாவுடன் வேலை பார்க்கும் கராத்தே ராஜாவும் இதுமாதிரி சொந்தத்தை பறிகொடுத்து பிரேமை சொர்க்கத்திற்கு அனுப்ப துடிக்கிறார்.

பிரேமின் தீவிர ரசிகையான நாமக்கல் பரமத்தி வேலூரை சார்ந்த மலர்கொடி எனும் சுவாசிகாவோ தன்னை விரும்பும் அறிவழகன் எனும் ஜெயராமை ஒதுக்கி தள்ளிவிட்டு, பிரேமின் இச்சைக்கு இரையாகிறார். ஒருகட்டத்தில் வயிற்றில் பிரேமின் வாரிசுடன் அவரைத்தேடி சென்னை வரும் சுவாசிகாவிற்கு, பிரேம் வாழ்க்கை கொடுத்தாரா? அல்லது சோனா, கராத்தே ராஜாவின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையானாரா? என்பது க்ளைமாக்ஸ்!!


சைதன்யா, சுவாசிகா, ஜெயராம், சிட்டிபாபு, கஞ்சா கருப்பு, சோனா, அல்வா வாசு, முத்துக்காளை, கிரேன் மனோகர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் எல்லோரும் சோக்காலி சினிமாவை நிறைய நடித்து டிராமா ஆக்கி விடுகின்றனர்!

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை பலம்! ஜே. மோகனின் ஒளிப்பதிவும், ஏ.சரணாவின் எழுத்து, இயக்கமும் பழைய பாணியில் இருப்பது "சோக்காலி"யை பாதி "சீக்காலி"யாகவும் மீதி "ஜாலி"யாகவும் காட்டியிருக்கிறது!

ஆக மொத்தத்தில், "சோக்காலி" பாதி ஜாலி! மீதி...?!"
  • நடிகர் : சைதன்யா
  • நடிகை : சோனா
  • இயக்குனர் :சரணா

 

0 comments: