Thursday, June 27, 2013

தீக்குளிக்கும் பச்சைமரம் - சினிமா விமர்சனம்

 

மார்ச்சுவரில நடக்கும் தில்லுமுல்லுகள் , மோசமான சம்பவங்கள் , சமூக விரோத செயல்கள்  தான் படத்தின் மையக்கரு. கேரளாவில் நடந்த உண்மைச்சம்பவமாம் . அதை எந்த அளவு வல்கரா , கொடூரமா சொல்ல முடியுமோ அந்த அளவு கொடூரமா சொல்லி இருக்காங்க , உஷ் அப்பா , முடியல . சைக்கோவா மாறி விட வாய்ப்பு இருக்கு . உஷார்....


இது ஒரு மலையாள டப்பிங்க் படம். 

படத்தோட ஓப்பனிங்ல வரும் நிழல்கள் ரவி எபிசோடு ஒரு விவசாயிக்குடும்பத்தின் அவல நிலையைச்சொல்லும் அழகு சிறுகதை .  வித்தியாசமான படத்துக்கு வந்துட்டமோ என்ற மன நிலையை மாற்றி விடுகிறது , பின் பாதி கர்ண கடூரக்காட்சிகள். 

ஹீரோ சின்ன வயசுலயே ஒரு கொலை பண்ணி ஜெயிலுக்கு ( சிறுவர் சீர் திருத்தப்பள்ளி) போயிடறார். வெளீல வந்து பொழைப்புக்கு 1008 வேலை இருந்தாலும் மார்ச்சுவரில பிணம் அறுக்கும் வேலைக்குப்போறார். படு கண்றாவியான முகம் , தாடி வெச்சுக்கிட்டு பக்கா ஃபிகரை லவ் பண்றார். அந்த ஃபிகர் என்னடான்னா கிட்டே வந்தாலே வாமிட் வர்ற மாதிரி இருக்கும் கெட்டப்பில் உள்ள ஹீரோவை உருகி உருகி காதலிக்கிறார். ( அந்த முகத்தை ஜீரணீக்கவே எக்ஸ்ட்ரா சம்பளம் 5 லட்சமாம் ) 

உடல் உறுப்புகளை பிணத்துல இருந்து அகற்றி வெளிநாட்டுக்கு விற்பது , கொலையை தற்கொலையா மாத்துவது , லேடி பாடி வந்தா கில்மா பண்ண போலீசுக்கு மாமா வேலை பார்ப்பது போன்ற அவலங்கள் நடப்பதை ஹீரோ பார்த்து பொங்கியண்ணனா மாறிடறார். வழக்கம் போல் வில்லன்கள் ஹீரோயினை கண்டம் பண்ணிடறாங்க , அவங்களை ஹீரோ ரொம்ப கொடூரமா  கண்டம் பண்ணிடறாங்க . படம் பார்க்கும் நாம் செம காண்டாகிடறோம்.


ஹீரோ சின்னத்திரையின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான பிரஜன்.  கேரக்டருக்கு ஏற்ப தாடியுடன் கூடிய கேவலமான தோற்றம். நடிப்பும் ஓக்கே . அவர் முகத்தை இலியானா , தமனா இடுப்பு மாதிரி நினைச்சு அடிக்கடி க்ளோசப்பில் காட்டும் போது உவ்வே .. 


ஹீரோயின் சேர நன்னாட்டிளம் பெண். 36 தேறும் , ஐ மீன் மார்க் .கண்ணும் , உதடும் பெருசு , புருவம் ரொம்ப மெல்லிசு .( புருவம் பெருசா இருந்தா என்ன பண்ணப்போறே?)மேக்கப்பே அதிகம் போடாமல் அழகாகவே இருக்கார். அவர் ஹீரோவிடம் நெருக்கம் காட்டும்போதெல்லாம் நமக்கு குமட்டிக்கொண்டு வருகிறது . நடிகைகள் நினைச்சு பரிதாபம் வருது. அய்யோ பாவம் . பணத்துக்காக கண்டதையும் சகிச்சுக்க வேண்டியதா இருக்கு 

 
ஹீரோவின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி பாந்தமான நடிப்பு . ஹீரோவின் அண்ணியாக வரும்  ரேகா சுரேஷ் அடடே, யார்றா இந்த கட்டை? என கேட்க வைக்கிறார். ஓப்பனிங்கில் இவருக்கு வைக்கப்பட்ட வசனங்கள் , எடிட்டிங்க் செம ஷார்ப் காட்சிகள் . 


ஹீரோயினின் அக்காவாக ஒரு புது ஃபிகர் வந்துட்டுப்போகுது . காட்சி அமைப்புகள் கலாபக்காதலன் மாதிரி தங்கச்சி புருஷனுக்கு ஏங்கும் பெண்ணின் கதையோ என எண்ணும்படி வைத்து ஏங்க வைத்து விடுகிறார்கள் . 


 மார்ச்சுவரி காட்சிகள் தமிழ் சினிமாவுக்கே புதுசுதான். அதில் மாற்றம் இல்லை . நெக்ரோமேனியா எனும் மன நோயை வைத்து தமிழில் வந்திருக்கும் முதல் படம். இந்த மாதிரி சைக்கோ கதையை செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் பண்ணி இருந்தால் கவுரவமான படம் ஆகி இருக்கும்  

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஓப்பனிங்கில் வரும் உழவுத்தொழிலுக்கு வந்தனை செய்யும் காட்சிகள் , படமாக்கம் , அனைத்து நடிகர்களின் நடிப்பு கிளாஸ் ரகம் 


2. மது அம்பாட்டின் ஒளிப்பதிவு வழக்கம் போல் அபாரம்.படத்தின் திரைக்கதைக்கு சம்பந்தம் இல்லாததாக வந்தாலும் ஆங்காங்கே பளிச்சிடும் இயற்கைக்காட்சிகள் அபாரம் 


3. சோகமான கவிதையாய் செல்லும் அந்த ஓப்பனிங்க் எப்பிசோடுக்குப்பின் வரும் துள்ளாட்ட குத்துப்பாடல் அட்டகாசம் 


4. இடைவேளைக்குப்பின் வரும் போஸ்ட்மார்ட்டம் காட்சிகள் திகில் , கொடூரம் . இத்தனை பட்டவர்த்தனமாய் காண்பிக்கனுமா? என கேட்க வைத்தாலும் இது ஒரு முக்கியமான முதல் பதிவு என்ற வகையில் கவனம் பெறுது


5. பட டைட்டில் , போஸ்டர் டிசைன் இதெல்லாமே அக்மார்க் தமிழ்ப்படம் என்று எண்ண வைத்த விதம் 

 மது அம்பாட்
 

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. ஹீரோயின் அக்கா மேரேஜ் பண்ணிக்காம ஏன் தங்கைக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறா? அப்படி ஒண்ணும் நெருக்கடி அமைந்த காட்சி இல்லையே? 

2. ஹீரோயின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அக்காக்காரி அடுத்த காட்சியிலேயே அந்தர் பல்டி அடிப்பது ஏன்? 

3. விவசாய நிலம் பாதிக்கப்பட்டதுக்கு இன்ஷூரன்ஸ் பணம் வந்திருக்குமே? 


4. மகனை விஷம் வைத்து கொன்னுட்டு தானும் தற்கொலை செய்பவர் குற்றுயுரும் கொலை உயிருமா மகனை தவிக்க விட்டுட்டு தூக்கு போட்டுக்குவாரா? செய்வன திருந்தச்செய்னு பாடியை செக் பண்ண மாட்டாரா? 


5. ஒரு சாதாரண கூலித்தொழிலாளி டாக்டரை அப்படி மிரட்ட முடியுமா? அதுக்கு பயந்து டாக்டர் ரிப்போர்ட் மாத்தி தருவாரா? 


6. போஸ்ட் மார்ட்டம் பண்ணும் தொழிலில் அத்தனை பணம் அட்வான்சா தர்றாங்களா? எந்த ஊரில்? தமிழக்த்தில் ரூ 5000 தான் அட்வான்ஸ் . கேரளாவில் ஜஸ்ட் 2000 தான் . படத்தில் என்னமோ  லட்சக்கணக்கில் தருவதாக பில்டப் . அதை வைத்து எல்லாக்கடன்களையும் ஹீரோ அடைப்பது செம காமெடி 


7. படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ஹீரோயினின் அக்கா லவ் எப்பிசோடு போர் 


8. க்ளைமாக்ஸ் காட்சி வக்ரத்தின் உச்சம் . சென்சார் ஆஃபீசர்ஸ் பணம் வாங்கிட்டு சர்ட்டிஃபிகேட் கொடுத்தது அப்பட்டமா தெரியுது 


 மனம் கவர்ந்த வசனங்கள்


 ஒரு வசனம் கூட சொல்லிக்கற மாதிரி இல்லை ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39  குமுதம் ரேங்க்கிங்க் - சுமார் 


 ரேட்டிங்க் =   2.75 /5 


சி பி கமெண்ட் - இந்தப்படத்தை யாரும் தியேட்டரிலோ , டி வியிலோ  பார்த்துடாதீங்க , மன நிலை பாதிக்கப்படுவது நிச்சயம் .படு கேவலமான , கொடூரமான மேக்கிங்க்


2 comments:

Unknown said...

THANKS!

SNR.தேவதாஸ் said...

நாங்களும் தாங்கள் பட்ட அவஸ்தயை அனுபவித்துவிடுகிறோம்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்