Saturday, June 15, 2013

தில்லுமுல்லு - சினிமா விமர்சனம்

 

ஆ ராசாவை விட பக்கா ஃபிராடு ஹீரோ , கம்ப்பெனி ஓனர் கிட்டேயே முருக பக்தரா வேஷம் போட்டு வேலைக்கு சேர்றான், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா  தனக்கு ஒரு அண்ணன் இருப்பதா டபுள் கேம் ஆடி அண்ணனாவும் ஆக்ட் குடுக்கறான். கம்பெனி  ஓனர் பொண்ணுக்கு கராத்தே சொல்லித்தரும்போது எதேச்சையா காதலையும் சொல்லித்தர்றான். இந்த உண்மை எல்லாம் ஓனருக்குத்தெரிய வரும்போது என்ன நடக்குது என்பதைத்தான் முடிஞ்ச வரை காமெடியா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க .

கே பாக்யராஜ் சாயல்ல யோகராஜ்னு ஒருத்தர் ஒரு ஹிட் படம் கொடுத்தார். அத்தோட சரி ஆள் அட்ரசே இல்லை. என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான். அது மாதிரி தான் . கே பாலச்சந்தர் டைரக்‌ஷன்ல ரஜினி நடிப்பில் வந்த படத்துக்கும் , இதுக்கும் ஏணி யைக்கொண்டாந்து வாணி வெச்சாலும் எட்டாது .

ஹீரோ அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா ( டைட்டில்ல அப்டித்தான் போடறாங்க) . இவரோட டைமிங்க்சென்ஸ் அட்டகாசம் . ரொம்ப அசால்ட்டா டயலாக் டெலிவரி பண்றார். ஆனா முக பாவனைகள் சுத்தமா வர்லை . இப்படியே போனா போர் அடிச்சிடும் , உஷார் . 
ஓனராக பிரகாஷ் ராஜ். இப்படி ஒரு கேனத்தனமான கேரக்டர் இந்தக்காலத்திலா என நாம் வியக்கும்போது அதே கேள்வியை க்ளைமாக்ஸில் சந்தானத்தை விட்டே கேட்க வைத்து நம் வாயை அடைப்பது இயக்குநர் சாமார்த்தியம் . பிரகாஷ் ராஜுக்கு நவரச நடிப்பு , சந்தோஷ் சுப்ரமணியம் படத்துக்குப்பின் நல்ல ரோல் . 


ஹீரோயின் இஷா தல்வார்.  பார்த்தவுடனே தள்ளிட்டுப்போகத்தூண்டும் அளவுக்கு எல்லாம் இல்லை , வெறும் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த உடம்பு போல எடுபடலை ( அட எடு பட்ட பயலே, படத்தை விமர்சனம் பண்ணசொன்னா.. ) இவருக்கு ஒரு நல்ல டிப்ஸ் , டெய்லி காலைல 2 பூரி சாப்பிட்டா  உடம்புக்கும் நல்லது ..... டூயட் காட்சிகளில் லோ ஹிப்பில் 8 காட்சிகளில் வ்ருகிறார். ( அப்போகூட நாங்க ஹிப்பைப்பார்க்கலை , கவுண்ட்  பண்ணிட்டு தான் இருந்தோம், கடமை வீரன் கந்த சாமி )


கோவை சரளா எதிர்பாராத ஆச்சரிய காமெடி கலக்கல் . அவர் நாக்கில் வேல் குத்தி மெட்ராஸ் பாஷையை மறைப்பது செம காமெடி .  இடைவேளை ட்விஸ்ட்டில் அவர் கார் முன் பல்டி அடிப்பது அதகளம் . 

இளவரசு குணச்சித்திர காமெடி நடிப்பு இதம் . க்ளைமாக்சில் நட்புக்காக சந்தானம் வரும்போது தியேட்டரே அல்லோலகல்லோலப்படுது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஆர வாரம். சிவா கூட சந்தானம் காம்பினேஷன் காட்சிகளில் அடக்கி வாசித்து இருப்பது ஆச்சரியம் . 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த திரைக்கதை என்றாலும் காட்சிகளில் முடிஞ்சவ்ரை புதுப்புது ஐடியாக்கள் புகுத்திய விதம் , படம் 70 % காமெடியாகவே கொண்டு சென்றது 


2. வசனகர்த்தாவை தாண்டி சிவாவின் சொந்த டயலாக்குகள் , டைமிங்க் விட்டுகள் படத்துக்குப்பெரிய பிளஸ்


3.  கோவை சரளாவின் ஆர்ப்பாட்டமான காமெடி காட்சிகள் பி சி செண்ட்டர் ரசிகர்களை நிச்சயம் கவரும் 


4. கடைசி 15 நிமிடங்கள் சந்தானத்தின் போர்ஷன் பெரிய ரிலீஃப். கொஞ்சம் போர் அடிக்கற மாதிரி தெரியும்போது மிகச்சரியாக டிரம்ப் கார்டை யூஸ் பண்ணிய விதம் 


5. ஹீரோயின் தோழிகள் 5 பேர் வரிசையாக வரும் ஒரு காட்சியில் ரோஸ் கலர் டி சர்ட் போட்ட பக்கா ஃபிகரை போகிற போக்கில் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டியது 


6. புரோட்டா சூரியின்  காதல் கிளைக்கதை ஓரளவு காமெடிக்கு கை கொடுத்தது 
இயக்குநரிடம் சில கேள்விகள்1. ஹீரோ டபுள் ஆக்ட் , ஹீரோவின் அம்மா டபுள் ஆக்ட் அதாவது ட்வின்ஸ் எனும்போது ஒரு முறை கூட இரு ஜோடியையும் ஒரு சேர என் கண்ணால் பார்க்க வேண்டும் என ஓனர் சொல்லவே இல்லையே? அது ஏன்? 


2. அவ்வளவு பெரிய கம்ப்பெனி ஓனர் எப்போ பாரு சிவா பின்னால் அவர் குடும்பம் பின்னால் சுத்திட்டு இருக்காரே , பிஸ்னெசை யார் கவனிப்பா? 


3. ஓனருக்கு ஹீரோவோட டபுள் கேம் தெரியல , ஓக்கே ஆனா ஒரு காதலிக்கு தன் காதலன் யாரு? என்ன?னு தெரியாதா? காதலனின் வாசம் ஒரு காதலிக்குத்தெரியாம இருக்காதா?  அவளுக்கு ஏன் டவுட்டே வர்லை? ( இதை ஏன் கேட்கறேன்னா பொண்டாட்டிங்க எப்பவும் புருஷன் வீட்டுக்கு வந்ததும் போலீஸ் நாய் மாதிரி மோப்பம் பிடிச்சு என்ன  புது வாசம் அடிக்குது? தம் அடிச்சீங்களா? ஆஃபீஸ்க்கு புதுசா லேடி ஸ்டாஃப் ஜாயின் பண்ணி இருக்காங்களா?னு கேள்வியா போட்டுத்தாக்குவாங்க ) 


4. கண்ல லென்ஸ் போட்டிருந்தா கண்ணை உறுத்தும் . அந்த லென்ஸ் கண் ல இருந்து கழண்டு விழுந்ததும் கன்னத்துல இருப்பதும் ஹீரோவுக்கு தெரியாம இருப்பது எப்படி? உணரவே முடியலையே ஏன்? 


5. புகழ் பெற்ற தொழில் அதிபரான பிரகாஷ் ராஜ் கண் முன் கோவை சரளா கைது செய்யப்படறாங்க . அப்போ சிவா வந்து சமாளிக்கிறார். பிரகாஷ் ராஜ் ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஃபோனை போட்டு உண்மை என்ன?னு கேட்கலை? 


 


6. அவ்வளவு பெரிய பணக்காரர், அடிக்கடி வெளிநாடு போகிறவர் பாஸ்போர்ட் , விசா ஏன் புதுப்பிக்காம இருக்கார்? 


7. துபாய்ல இருக்கும் தன் மகளை கண்காணிக்க இங்கே இருந்து ஒரு ஆளை அனுப்பும் நேரத்தில் துபாய்லயே ஒரு ஆளை ஏற்பாடு செய்யலாமே? ஏன்னா இவருக்குத்தான் இன்னும் டவுட் இருக்கே? சிவா 2 ஆள் இல்லை, ஒரே ஆள் தான் என. ஏன் வாலண்ட்ரியா சிவாவையே அனுப்பனும்? 


8. கராத்தே என்பது ஓப்பன் கிரவுண்டில் பிராக்டீஸ் பண்ணுவாங்க , சிவா ஹீரோயினை அவர் ரூமுக்கு தள்ளிட்டுப்போய் கராத்தே சொல்லித்தர்றேன் என அப்பா முன்னாலயே சொல்வதும் அவர் அதை வேடிக்கை பார்ப்பதும் ஓவர் 


9. ஹீரோ - ஹீரோயின் காதல் மலரும் தருணம் சரியாக சொல்லப்படவே இல்லை 


10 . தன் காதலன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று தெரிந்ததும் ஹீரோயின் சாமியாட்டம் ஆடுவார் என பார்த்தால் அவர் 2 செகண்ட்டில் கேனம் மாதிரி சிரிக்கிறார். நிஜ வாழ்வில் பொண்ணுங்க 1000 மன்னிப்பு கேட்டாலும் அதப்பு காட்டுவாங்க , இப்படி எல்லாம் ஈசியா மடங்கிட மாட்டாங்க 

 


11. பிரகாஷ் ராஜ் சிவாவின் மோசடியை நேருக்கு நேராக பார்க்கும்போது அப்பவே தட்டிக்கேட்காமல் சன் டி வி நித்யானந்தா வீடியோ எடுத்தது  மாதிரி மெனக்கெட்டு செல் ஃபோனில் வீடியோ எடுத்துட்டு இருக்கார். ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது? 

12.  கோடிக்கணக்கான சொத்து போய்டுச்சு. அதுக்கான கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஏன் சுப்ரீம் கோர்ட்க்கு ஹீரோ போகலை? 


13 . சத்யன் ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு அடிக்கடி சிவா போறார். சினிமா இண்டஸ்ட்ரி வேலைக்கு போகாம ஏன் ஒரு கம்ப்பெனி வேலைக்கு ட்ரை பண்றார்? சினி ஃபீல்டுல லட்சக்கணக்குல சம்பாதிக்கலாமே? 


14. சிவா மேல செம காண்டா இருக்கும்   தேவ தர்ஷினி திடீர்னு சிரிச்சுப்பேசுவது எப்படி?


மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஓவர் ஆக்டிங்க்னு தயவு செஞ்சு சொல்லாதீங்க ,அந்த மாதிரி ஃபேமிலில நான் பொறக்கலை 


2. ஒரு பழத்துல எத்தனை விதை இருக்குன்னு எல்லாரும் பார்த்தபோது ஒரு விதைல எத்தனை பழங்கள் இருக்கும்னு பார்த்தவன் நான் 3. பசுபதின்னா என்ன நினைச்சீங்க? 


ப = பழநி மலை , சு = சுவாமி மலை , ப = பழமுதிர்ச்சோலை , தி = திருப்பரங்குன்றம் , திருத்தணி , திருச்செந்தூர் , அறுபடை வீடு 4. நீங்க ஃபேஸ்புக்ல இருக்கீங்களா? 


இல்லை சார், நான் மயிலாப்பூர்ல இருக்கேன்


5. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா? சேட்டு வீட்டு கல்யாணத்துல எப்பவும் ஜிலேபி நல்லாருக்கும் ;-))


6.  சட்டைக்குப்பணுவேண்டா அயனு, என்னை சட்டை பண்ணலைன்னா ஆகிடுவேண்டா லயனு , எப்படி பஞ்ச் டயலாக் ?7. ஹீரோக்களோட டார்ச்சர் தான் தாங்க முடியலைன்னா இப்போ ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் டார்ச்சரும் தாங்க முடியலை 8. 20- 20 மேட்ச் பார்க்கறீங்க, இதுலயே ரெண்டு 20 இருக்கும்போது ஏன் வாழ்க்கைல 2 ட்வின்ஸ் இருக்கக்கூடாது?9. உங்க புக் விக்க ஒரு ஐடியா , நம்ம கம்பெனி மினரல் வாட்டர் பாட்டில் ஒண்னு வாங்குனா ஒரு புக் ஃப்ரீன்னு சொல்லிடுவோம் ? 


 அப்புறம் வாட்டர் பாட்டில் பிஸ்னெஸ் படுத்துக்கும் 10.  பொழுது போகாம ஏதாவது ஒரு பொன் மொழியை சொல்லிட்டு போயிட வேண்டியது , இருக்கறவன் மண்டையை உடைச்சு யோசிக்கனும்
 

11  பெண்கள் போடற துணி குறைஞ்சாலும் அவங்க துணிச்சல் குறையக்கூடாது 


12. ஒரு ஃபயரே இன்னொரு ஃபயரைகாப்பாத்த முடியாது 13. கராத்தாலே முதல் ஸ்டெப் டிராயரை கழட்டனும்


 வாட்? 


 மேஜை டிராயரை 
14.  உங்க வீட்ல எத்தனை பேரு?


 நான், எங்கண்ணன் , 2 பேரு 


 ஓஹோ, நீ , உங்கண்ணன் 2 பேரு மொத்தம் 3 பேரா? 15.  கர்ட்டரை மூடு , பெட்ஷீட்டை போர்த்து - இதுதான் கராத்தேவின் முத ஸ்டெப் 16.  என் அவசரம் உனக்குப்புரியல, உடனடியா இப்போ நான் ஒரு பொண்ணை அம்மா ஆக்கனும்


 வாட்? 

 அம்மாவா நடிக்க வைக்கனும் 


17.  எமனுக்கு இவன் பினாமி , எனிமிக்கு சுனாமி 18. எப்போ ஒரு பொண்ணு தயிர் வடை வேணாம்னு சொல்றாளோ அப்போ அவ லவ்ல விழுந்துட்டான்னு அர்த்தம் 


19.  கைக்கு எட்டுன கடாய் சிக்கன் வாய்க்கு எட்டலை 


20. சின்ன வயசுல இருந்தே மத்தவங்க உதவி இல்லாம நான் எந்த டெஸ்ட்டும் பாஸ் பண்ணதே இல்லை21.  சார், துபாய்ல உங்களுக்கு டேட் ( பேரீச்சை ) வாங்கி வரவா? 


 அவன் டேட் வாங்க போகலை , டேட்டிங்க் பண்ண போய் இருக்கான்


22.  ரீம் நெம்பர் 309 ஓக்கேவா? 

 அய்யய்யோ 

 ஏன்? உனக்கு அது பிடிக்கலைன்னா வேற ரூம் மாத்திக்கலாம்23. என்ன? உங்க வீட்ல ஏ சி இல்லையா? 


 இன்னும் கொஞ்ச நேரத்துல கரண்ட்டே போகப்போகுது 24.  தாலிப்பிச்சை தரனும் 


 பிச்சை எல்லாம் கோயிலுக்கு வெளீல எடுக்கனும் 25.  என்னப்பா ? கைல வேலை வெச்சிருக்கியே? 

 ஏம்ப்பா , உன் பொண்டாட்டியையே வெச்சிருக்கேன்கறேன் , வேலை வெச்சிருந்ததுக்கு  இப்படி ஜெர்க் ஆகறே? 26. கும்முனு இருப்பானு சொன்னிங்க , குங்ஃபூ பாண்டா மாதிரி இருக்கா 27.  என்னப்பா , இவ்ளவ் பெரிய பிரச்ச்னை ஓடுது , டென்சனே இல்லாம  சர்க்கரைப்பொங்கல் சாப்பிட்டுட்டு இருக்கே? 

 அப்போ பூரிக்கிழங்கு சாப்ட்டா ஓக்கேவா? 28. என்ன? எல்லாரும் சேர்ந்து என்னை தேடறாங்க, நான் என்ன புதையலா?


29. இந்த வீணாப்போனவன் கூட வாழறதை விட நீ விதவையாவே வாழலாம் 30. வாரா வாரம் டி வி ல தில்லு முல்லு படம் போட்டுட்டே இருக்கான் , அதைப்பார்த்தும் இந்த டபுள் ரோல் கதையை உங்க  முதலாளி நம்பறான்னா அவன் எவ்ளவ் பெரிய கேனயனா இருப்பான் ? ( படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கும் இது பொருந்துமா? ) 

சி பி கமெண்ட் - சிவா ரசிகர்கள் , காமெடி பிரியர்கள் பார்க்கலாம், ஜாலியாப்போகுது , அங்கங்கே கொஞ்சம் இழுவை போடுது சிவாவின் டைமிங்க்சென்ஸ் மட்டுமே பிளஸ் - , க்ளைமாக்ஸ் சந்தானம் பார்ட் கலக்கல்


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 


 ரேட்டிங்க் -  2.75 / 5 


டிஸ்கி -

தீயா வேலை செய்யனும் குமாரு - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/06/blog-post_14.html


0 comments: