Wednesday, June 06, 2012

ஆ ராசாவின் உள்குத்து கடிதம் - கலைஞர் அதிர்ச்சி - ஜூ வி கட்டுரை

அலற வைத்த ஆ.ராசா கடிதம்


ழுகார் உள்ளே நுழைந்ததும், தனது சிறகுகளுக்குள் இருந்து 'முரசொலி’யை எடுத்தார்! 

''கருணாநிதியின் 89-வது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களைவிட, வராதவர்களைப் பற்றித்தான் அதிகம் பேச்சு'' என்று பொடி வைத்துச் சொன்ன கழுகார், கையில் இருந்த ஜூன் 2-ம் தேதி முரசொலியின் இரண்டாம் பக்கத்தைத் திருப்பினார்.


''ஆ.ராசாவின் கடிதம்தானே?'' என்றோம்.


''கடிதமா அது. தி.மு.க. வட்டாரத்தில் அதை, 'கந்தகக் குண்டு’ என்றே வர்ணிக்கிறார்கள். நிபந்தனை ஜாமீனில் வெளியே விடப்பட்டு இருக்கும் ராசா, டெல்லியில்தான் தங்கி இருக்கிறார். டெல்லியை விட்டுக் கிளம்ப வேண்டுமானால், தனி நீதிமன்றத்தின் அனுமதி வாங்க வேண்டும். 'ஜூன் 3-ம் தேதி தலைவரின் பிறந்தநாள். அதற்கு நிச்சயம் நீங்கள் வந்துவிட வேண்டும்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொன்னார்கள். ராசாவும் ஆர்வமாக இருந்தார். ஆனால், கோபாலபுரத்தில் சிலருக்கு அதில் விருப்பம் இல்லை. 'ராசா வந்தால், பிறந்த நாள் விழாவின் ஹைலைட்டே அவர் வருகை என்று ஆகிவிடும்’ என்று சொல்லி கட்டையைப் போட்டு விட்டார்கள். இது ராசாவின் கவனத்துக்குப் போனதாம். கோபம் கொண்டாலும் ஏனோ தன்னை சாந்தப்படுத்திக் கொண்டார்!''


''சிறை தந்த பக்குவமாய் இருக்கும்.''


''இருக்கலாம்! சென்னைக்கு வந்து கருணாநிதியை வாழ்த்த இயலாத நிலையில், டெல்லியில் இருந்தே ஒரு கடிதத்தை எழுதினார் ராசா. அந்தக் கடிதம் தனது கைக்குக் கிடைத்ததும் கலங்கிப்போன கருணாநிதி, நான்கைந்து முறைக்கு மேல் அதைப் படித்தாராம்.


 'அப்படியே முரசொலியில் போடலாம்’ என்று சொன்னவர், திடீரென  'போடலாமா... வேண்டாமா?’ என்று குழம்பிப்போனாராம். கருணாநிதியை அளவுக்கு மீறிப் புகழ்வதுதான் அந்தக் கடிதத்தின் ஒட்டுமொத்த சாரம்சம் என்றாலும், ஒரே பத்தியில் தன்னுடைய ஒட்டுமொத்த ஆத்திரத் தையும் தீர்த்துவிட்டார் ராசா என்பதுதான் கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு!''


''என்ன சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்?''


''கருணாநிதி தனது வாழ்க்கை வரலாறாக எழுதிய 'நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காண்பித்துத் தொடங்கும் ராசா, 'வாழ்க்கையைப் போராட்டம் என்று வர்ணிப்போர் உளர், எனக்கோ போராட்டமே வாழ்க்கை... என்று சொல்லி இருக்கிறீர்கள். இது உங்களைப் பற்றிய உங்களின் சுயவிமர்சனம். இந்த வரையறைக்குள் வர எனக்கும் தகுதி உண்டு என வரித்துக்கொள்வதற்கு உங்களுக்குப் பின் தலைவன் இல்லை என்பது உங்களுக்குப் பெருமை. எங்களின் வெறுமை’ என்று கடுமையான வார்த்தைகள் போட்டு எழுதி இருக்கிறார் ராசா.


'கலைஞருக்கு அடுத்து ஸ்டாலின்தான் தலைவர்... இல்லை இல்லை அழகிரிக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது... ஏன் ஒரு பெண் வரக் கூடாதா? கனிமொழிதான் அடுத்த தலைவர்’ என்று ஒவ்வொருவரும் அணி அணியாகப் பிரிந்து நிற்கிறார்கள். இந்த அணிகளுக்கு ஆட்களைத் திரட்டுவது மட்டும்தான் இப்போது கட்சியில் நடக்கிறது. கட்சியில் ராசா என்பவரும் முக்கியமான மையம். 

அவரை யார் இழுப்பது என்று போட்டியே நடக்கிறது. ராசாவுக்கும் ஸ்டாலினுக்கும் ஏனோ பிடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு இரண்டு மூன்று தடவை திகார் சிறையில் போய்ப் பார்த்தார் அழகிரி. ஸ்டாலினும் இரண்டு தடவை ராசாவுடன் திடீர் சந்திப்பு நடத்தினார். கனிமொழி மீதும் ராசாவுக்கு சில வருத்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் கலை ஞருக்கு இணையான தகுதி இங்கு எவருக்கும் இல்லை என்ற கோபத்தை ராசா காட்டினார்’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.''


''ராசாவின் கோரிக்கைதான் என்ன?''


''ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவி அவருக்குத் தரப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். 'கட்சிக்காகத்தான் அவர் பல அவமானங்களைப் பட்டார். அதைக் கட்சிதான் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால், அவரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் வேண்டா வெறுப்பாகப் பார்ப்பது ஏன்?’ என்று ராசா ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். அதனால்தான், ராசா சென்னைக்கு வராமல் இருப்பதே நல்லது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்களாம்!''


''கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எப்படி?''


''எல்லாக் கூட்டங்களிலும் உமது நிருபர்கள் வலம் வந்தார்களே! ஒரு சில குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். மூன்று நாட்களாக ஸ்டாலின் நல்ல மூடில் இல்லை. ஜூன் 1-ம் தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. மகளிர் அணி விழா நடத்தியது. மகளிர் அணி நடத்தினாலும் கனிமொழிக்கு முக்கியத்துவம் தந்த விழா அது. ராஜாத்தி அம்மாள் துணையாக அந்தக் கூட்டத்துக்குப் பார்வையாளராக வந்த கருணாநிதி, விழா முடியும் வரை நெடுநேரம் இருந்து, கண்டுகளித்தார். கனிமொழியின் அன்றைய பேச்சு பலராலும் வரவேற்கப்பட்டது. கூட்டத்துக்கு ஸ்டாலினும் வந்திருந்தார்.


அடுத்த நாள், காமராஜர் அரங்கத்தில் இளைஞர் அணி சார்பில் ஒரு கருத்தரங்கம். வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்துக்கும் கருணாநிதி வரவேண்டும் என்று அழைத்தாராம் ஸ்டாலின். வருகிறேன் என்று முதலில் ஒப்புக்கொண்ட கருணாநிதி, ஏனோ வரவில்லை. இது ஸ்டாலினைக் கோபம்கொள்ள வைத்ததாம். அதனால்தான் 3-ம் தேதி பிறந்த நாள் அன்று முழுப் பங்களிப்பையும் தராமல் ஸ்டாலின் தவிர்த்து விட்டதாகச் சொல்கிறார்கள்'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட் மாறினார்.


''சிங்கத்தைச் சீண்டிவிட்டது மாதிரி நடராஜன் சிலிர்த்து எழ ஆரம்பித்து இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கி விட்டார் நடராஜன் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். போலீஸுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட நடராஜன், இப்போது மனித உரிமை கமிஷனின் கதவைத் தட்டிவிட்டார். 4-ம் தேதி, காவல்துறைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் நடராஜன் புகார் அளித்தார்.


 புகார் கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், 'கடந்த பிப்ரவரி 18-ம் தேதி டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் வந்த 15-க்கும் மேற்பட்ட போலீஸார் என் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து என்னைத் தாக்கினார்கள். ஏன், எதற்கு என்றுகூட எனக்குப் புரியவில்லை. அதன்பின், என்னை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றி, செங்கிப்பட்டி, வல்லம் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்றனர். அங்கு என்கவுன்ட்டர் செய்து என்னைக் கொல்லப்போவதாகப் பேசிக்கொண்டனர்.


 அதன் பிறகு, எங்கிருந்தோ வந்த உத்தரவை அடுத்து என்னை தஞ்சாவூர் கொண்டு சென்றனர். இது மனித உரிமை மீறல்’ என்று சொன்னார். டெல்லிக்குச் சென்று மத்திய மனித உரிமை ஆணையத்திலும் இதுபற்றி புகார் கொடுக்கப்போகிறாராம்.


'இப்போது, அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. அதிலும் போலீஸ்காரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை. நில மோசடி என்று போலிப் புகாரில் என்னைக் கைது செய்த போலீஸ்காரர்களால் அதை நிரூபிக்க முடிந்ததா? என் வீட்டில் இருந்து எதையாவது இந்த போலீஸால் கைப்பற்ற முடிந்ததா? நான் இப்போது ஜாமீனில் இருக்கிறேன். ஆனால், இப்போதும் இந்தப் போலீஸ் தொல்லையைத் தாங்க முடியவில்லை. அதிகாலையில் வாக்கிங் போக முடியவில்லை. இருட்டில் மறைந்துகொண்டு ஒருவன் பின் தொடர்கிறான். கேட்டால், போலீஸ் என்கிறான். 

 ஆனால், அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொன்னால், காட்டுவது இல்லை. அவன் போலீஸ்காரனா இல்லை... ராமஜெயம், தா.கிருஷ்ணனைக் கொலை செய்த கும்பலில் ஒருவனா என்பது எப்படித் தெரியும்?’ என்று பதற்றமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் நடராஜன்.''


''ம்!''


''தஞ்சாவூரில் பி.ஆர்.ஓ-வாக இருந்தவர் கிரி. இவர் எம்.நடராஜனுக்கு ஒரு வகையில் உறவினர். ஜெ. - சசி பிரிவின்போது இவர் வேலூருக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், தஞ்சாவூரில் நடந்த நடராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அம்மா பயத்தில் உளவுத்துறையைக் கண்டு பலரும் ஓடி ஒளிந்தனர். 

 ஆனால், இவர் மட்டும் வலிய உளவுத்துறையினரிடம் சென்று 'என்னைப் பற்றி ஏதாவது போட்டுக்கொடுங்க’ என்று ரீதியில் பேசினார். திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கல்தா கொடுத்த நேரத்தில், இவரையும் சேலம் போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இடமாற்றம் செய்தார்கள். பதவி ஏற்பதற்காக சேலம் சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். பின்னே, அப்படி ஒரு பதவியே கிடையாது என்று அங்கு சொன்னார்களாம்.''


''இது மாதிரியான இடத்தை எல்லாம் எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறார்களோ!'' என்று நாம் சொன்னதைக் கேட்டுச் சிரித்தபடி எஸ்கேப் ஆனார் கழுகார்!


படங்கள்: என்.விவேக், கே.குணசீலன்


 பிரேமலதா காட்டிய திசை!


இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, ஜூன் 3-ம் தேதி புதுக்கோட்டை வந்தார் பிரேமலதா விஜயகாந்த். கறம்பக்குடியில் பிரசாரத்தைத் தொடங்கியவர், மீனம்பட்டி கிராமத்தில் பேசியபோது, ''தி.மு.க தலைவர் கருணாநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்'' என்று புது டிராக் போட்டார். ''இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு தே.மு.தி.க. சார்பில் 89-வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரி¢வித்துக் கொள்கிறோம்'' என்று மீண்டும் அவர் அழுத்திப் பேசியது அ.தி.மு.க-வினரை யோசிக்க வைத்திருக்கிறது. 'இந்தப் பேச்சுக்கு கருணாநிதியிடம் இருந்து விரைவில் பாசிட்டிவ் பதில் வரும்’ என்று தே.மு.தி.க-வினர் சந்தோஷத்தில் கிடக்கிறார்கள்.


 கார்த்திகேயன் மன மாற்றம்!


அகில இந்திய மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் மாநாடு சென்னையில் நடந்தது. பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் கலந்துகொண்டார்கள். வெளிமாநிலங்களில் இருந்தும் மனித உரிமை ஆர்வலர்கள் வந்திருந்தார்கள்.

 இதில் ஹைலைட், ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனின் அறிக்கைதான். மரண தண்டனை தேவை இல்லை என்பதற்கான வாதங்களை அறிக்கையில் வைக்கும் கார்த்திகேயன், 'என் எண்ணத்தில் மரண தண்டனை உலகமெங்கும் ஒரு நாள் ஒழிக்கப்பட்டுவிடும் எனத் திண்ணமாக நம்புகிறேன். தூக்குக் கயிற்றின் நிழலில் இருக்கும் மனிதனின் எண்ணவோட்டம், தண்டனை விதிப்புக்கும் தண்டனை நிறைவேற்றத்துக்கும் இடையே உள்ள மிகநீண்ட இடைவெளி, தன் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை ஆகியன ஒன்றாக இணைந்து கொடும் மனவலியை ஏற்படுத்தி உள்ளத்தைச் சிதைத்து இரட்டைத் தண்டனைக்கு வழி வகுத்துவிடும்'' என்று கறாராக தனது முடிவைச் சொன்னது, தமிழ் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது!



1.ஆவுடையப்பன் - ஜெயக்குமார்... இதில் சமாளிப்பதில் கெட்டி யார்? 

 
ஆவுடையப்பன் சீரியஸான முகத்தை வைத்துச் சமாளிப்பார். ஜெயக்குமார் சிரித்த முகத்துடன் அதையே செய்வார். ரெண்டு பேருமே ஜாடிக்கு ஏற்ற மூடிகள்!


 
2. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினராக ஒரு தமிழர் கூட இல்லையாமே? 


காரியக் கமிட்டியிலா... காங்கிரஸிலா?



3. நூற்றாண்டு விழா காணும் மு.வ. பற்றி..? 



மொழி வளமும் இலக்கியத் திறனும் இருக்குமானால், ஓர் அலுவலக எழுத்தர்கூட தன்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகும் அளவுக்கு வளர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு உதாரணம் மு.வரதராச​னார். காக்காய் பிடிப்பு, கழுத்​தறுப்புகள் இல்லாமல் தன் தகுதியால் அந்தப் பதவியை அடைந்த சிலரில் ஒருவர். பரிமேலழகர் மூலமாக, பண்டிதர்களுக்கு மட்டுமே என மூடிவைக்கப்பட்டு இருந்த திருக்குறளை, தனது இனிய, எளிய தெளிவுரை மூலமாக பாமரர்க்கும் திறந்து விட்டவர்.


 'மு.வ.வின் கையடக்கத் திருக்குறள் தெளிவுரை’ என்ற பாக்கெட் அளவுப் புத்தகம் இதுவரை எத்தனை லட்சங்கள் விற்றன என்பது அதை வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கே தெரியாது.
அனைத்தையும்விட, தமிழ் இலக்கியம் சொல்லும் நெறிகளின்படி வாழ்ந்த மனிதர். ஏழை மாணவர்களை அவரே படிக்க வைத்தார். தன்னை விடத் தகுதியான மாணவன் என்று உணர்ந்தால், தனது புத்தகத்துக்கு மதிப்புரை எழுதவும் வைத்தார். அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபோது ஒரு காட்சி...
கோவில்பட்டி கோ.வெ.நா.கல்லூரி முதல்வரும் தகுதிவாய்ந்த அறிஞருமான அரசு.நாராயணசாமி, உடல் நலம் குன்றிய நிலையிலும் தன்னைப் பார்க்க வருகிறார் என்று தெரிந்ததும், துணை வேந்தரான மு.வ. தனது அறையில் இருந்து எழுந்து வெளியில் வந்து அவரைச் சந்தித்து அனுப்பி​வைத்த பெருந்தன்மைக்காரர். தமிழால் மு.வ. தகுதி பெற்றிருந்தாலும் அவரால் தமிழும் தகுதி பெற்றது!\\




3. பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றையும் ஏற்றிய ஜெயலலிதா, பெட்ரோல் விலையை ஏற்றியதற்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கிறாரே? 


'எந்த விலையாக இருந்தாலும் நான்தான் உயர்த்துவேன்’ என்ற எண்ணத்தால் இருக்குமா?



4. நாடகம் சரி, அதென்ன 'கபட’ நாடகம்? 



அரங்கத்தில் நடப்பது நாடகம். அரசியலில் நடப்பது கபட நாடகம்! 'கபடம்’ என்றால் திருட்டுத் தனம்.


சமீபத்திய உதாரணம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தினார்கள். நாடு முழுவதும் எதிர்ப்பு வந்தபோதும், 'எங்களுக்கு வழி இல்லை. மக்கள் இந்த சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று மத்திய பிரசார பீரங்கிகள் ஊதின.


 திடீரென, இப்போது 2 ரூபாய் குறைக்கப்பட்டது மட்டும் எப்படி சாத்தியம் ஆனது? 6 ரூபாய் உயர்த்தினால் போதுமானது என்றுகூட எண்ணெய் நிறுவனங்கள் சொல்லி இருக்கலாம். '8 ரூபாய் உயர்த்துவோம். எதிர்ப்பு வந்ததும் 2 ரூபாய் குறைப்போம்’ என்று ஒட்டகத்தின் கண்ணில் புல்லைக் காட்டி எடுத்துப் போடும் ஏமாற்று வேலையை பட்டப்பகலில் செய்தார்களே... அதற்குப் பெயர்தான் கபட நாடகம்!




5. 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரே பிரதமராக வர வேண்டும்’ என்கிறாரே சங்மா? 


இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன், நேரடியாகத் தேர்தலில் நின்று வென்று எம்.பி. ஆனவர் அல்ல. மாநிலங்கள்அவை உறுப்பினர். எனவே, சங்மாவுக்கு மன்மோகன் மீது என்ன வருத்தமோ? ஒருவேளை சங்மாவுக்கு எதிராக சிங் கட்டையைப் போடுகிறாரோ?


6. 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ விளம்பரங்களுக்கு மட்டும் பல கோடி செலவு செய்து விட்டார்கள் போல? 


ஒருவேளை, நூறு ஆண்டுகளுக்குத் தர வேண்டிய விளம்பரங்களை ஓராண்டில் தரத் திட்ட​மிட்டுள்ளார்களோ?



7. உண்மையான தமிழினத் தலைவர் யார் என்று கேட்டால்  'பட்’டென்று என்ன சொல்வீர்கள்? 


யாரும் இல்லை என்பேன்!



8. 'தமிழ் ஈழம் கேட்பதைக் கைவிட வேண்டும் என்று இங்கு உள்ள தலைவர்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்’ என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்? 


யாராவது அவரை வாங்கித் தரச் சொன்னார்​களா? ஞானதேசிகன் ஏன் பயப்​படுகிறார்?



9. அரசியல் அறம் என்பது என்ன? 


எழுத்தாளர் வைகறை, 'வாருங்கள் கவிஞர் இன்குலாப்பை சந்திப்போம்’ என்ற நிகழ்ச்சிக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேசிய இன்குலாப் இப்படிச் சொன்னார்...


'தமிழர் பெரும்பான்மையாக இருந்து சிங்களவர் களை ஒடுக்கினால், என் பேனா சிங்​களவர் களுக்காகவே எழுதும்’. இதுதான் அரசியல் அறம்!


10. வெற்றி மட்டுமே ஒரு மனிதனை அடையாளப்​படுத்துகிறதே? 


வீரபாண்டிய கட்டபொம்மனும், பூலித் தேவனும், மருது பாண்டியரும் வாழ்ந்த காலத்தில் தங்களின் லட்சிய வெற்றிகளைப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களை மனிதர்கள் ஆராதிக்கிறார்களே. என்ன காரணம்? வெற்றி பெற்றவர்களைத்தான் அடையாளப்படுத்த வேண்டுமானால், அவர்களைக் காட்டிக் கொடுத்தவர்​களைத்தான் நாம் பூஜித்திருக்க வேண்டும்.
லட்சியத்துக்காக, கொள்கைக்காகப் போராடியவர்கள், வாதாடியவர்கள் வரலாற்றில் இடம் பெறு​​வார்கள். அதில் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை!


 THANX -JU VI

கொங்குமண்டல கணவன்மார்கள் கவனத்துக்கு .......

தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்..
1.கொங்குமண்டல கணவன்மார்கள் தங்கள் மனைவியை செல்லமாக பரிமளா எனவும், மச்சினியை ஷர்மிளா எனவும் அழைக்கிறார்களாம் # ட்விட்டர் ஜி கே



--------------------------------


2. அக்கா வேடத்தில் நடிக்க மாட்டேன் - அசின் ஆவேசம் #  மேடம், 10 வயசுப்பொண்ணுக்கு அக்கா வேஷம் இருந்தாக்கூடா நாட் ஓக்கே?



---------------------------


3. சாலையோரத்தில் நடந்த திருமணம்! மணமக்களை நேரில் வாழ்த்திய நமீதா!! # ரோடு ராக்கிங் மச்சான்-னாரா?



--------------------------------



4. மின் திருட்டு ரூ.900 கோடி: பிடிபட்டது ரூ.60 கோடி # ஷாக்கிங்க் நியூஸ் தான்



---------------------------------


5. தன் அம்மாவுடன் அனுசரித்துப்போகும் மணமகள் தேவை என கல்யாண மாலையில் வேண்டும் மாப்ஸ்,உங்கம்மா சண்டைக்காரினு டெல்லிங்க்?



----------------------------------------


பிக்அப்"டா ;)))அழுத்துடா ராஜா.!! அழுத்துடா ராஜா.!! #பின்னாடி என்னடா வியாபாரவிளம்பரமா !.ஓ. இது,விளம்பரமாடலா!! ;))



6. ஜீப்ரா = (வரிக்)குதிரை = பரி # அப்போ அல்ஜீப்ராவை கண்டுபிடிச்சது  யாரோ ஒரு பரிமளாப்பிரியரோ? # வெட்டி ஆராய்ச்சி



------------------------------------


7. ஈகோ என்பது உதடுகளுக்குத்தான், கண்களுக்கு இல்லை 



-------------------------------------


8.தேமுதிகவினருக்கு நாகரீகமோ, அடிப்படை சட்டமோ தெரியாது.-சரத்குமார்#  சட்டம் சம்பந்தமா நான் நடிச்ச படமே 27, நீங்க நடிச்சது 9 தான்-கேப்டன்


--------------------------------

9.  சச்சின் - நான்  எம் பி ஆகிட்டேன்,நான் சபைக்கு போறப்போ என் கூட வரப்போற பார்ட்னர்  யாரு?


-----------------------------


10. சச்சின் - நான் இதுவரை நூறு நூறா 100 தடவை செஞ்சுரி அடிச்சிருக்கேன், இது போதாதா  அரசியலுக்கு வர ?


ஆ ராசா - கோடி அடிச்சவங்களுக்கு முன்னால


----------------------




11. நான் ஒரு தடவை என் முடியை ( திருப்பதிலயோ, பழநிலயோ ) எடுத்துட்டா மறுக்கா நானே என் முடியை எடுக்க மாட்டேன், ஃபங்க் வெச்சுக்குவேன் # துப்பாக்கி பஞ்ச் டயலாக்



--------------------------------

12. அடிக்கறவங்க ஈசியா அடிச்சுட்டுப்போயிடறாங்க,வலிக்காத மாதிரியே முகத்தை வெச்சுக்க ரொம்ப சிரமமா இருக்கு :)


------------------------------

13. வண்ணான் துறையில் இருக்கும் சலவைக்காரியை நான் சைட் அடிக்கக்காரணம் வெளுத்ததெல்லாம் அமலாபால் என நினைக்கும் அப்பாவித்தனமே!


--------------------------------


14. உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று ( 5.6.2012)ஒரு நாள் முழுக்க உன்னைச்சுற்றி நானும், என்னை சுற்றி நீயும் விளையாடிக் கொண்டு இருப்போம்,வா



-------------------------------

15. சாஸ்திர சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் உனக்கு முத்தங்கள் தரும் தருணங்களில் உன்னிடம் அனுமதி கேட்பேன் என எதிர்பார்க்காதே!



---------------------------------



Gauthaman Ds Karisalkulaththaan's photos


இன்று உலக சுற்றுச்சூழலியல் தினம்: (5.6.2012)



16. மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன் குடம் என்ற பழமொழில இருந்து அறிய வரும் தகவல் - மாமியாரோ மருமகளோ எதையாவதுஉடைச்சுட்டுதான்இருப்பாங்க


---------------------------------


17. நாட்டின் பொருளாதாரம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்: சிதம்பரம் # எங்க அச்சம் எல்லாம் எங்க வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல்,கரன்ட் தான்


----------------------------------

18. அரசு மது விற்கலாம் தவறில்லை - உயர்நீதிமன்றம் கருத்து! # ஆனா எவனும் அதை வாங்கி குடிக்கக்கூடாது - ராம்தாஸ்



-------------------------------------


19. எதிரிகளை வெல்வது என் நோக்கம் இல்லை, என் இலக்கு அவர்களை நண்பர்கள் ஆக்குவதே :)



-------------------------------


20. பொதுவாழ்வில், குடும்ப வாழ்வில் தனி மனித ஈகோவை விடுத்து மன்னிப்பு கேட்பதால் ஒரு பிரச்சனை முடிவுக்கு வரும் எனில் அதில் தவறில்லை



----------------------------------

Christopher Daniyal shared Anish Ani's photo.
 

டிஸ்கி - சென்னை மெகா ட்வீட்டப்பில் விடுபட்ட என்னால் முடியும் அமைப்பு பற்றி..


என்னால்  முடியும்
ஒவ்வொருகுழந்தைக்கும்அடிப்படைக்கல்விகிடைப்பதற்கானதிட்டம்
35-18:  நாம் அனைவரும் எளிதில் செய்யக்கூடியது கழித்தல் கணக்கு. அரசு பாடத்திட்டத்தில் இரண்டாம் வகுப்புக்குழந்தைகள் இதைச்செய்ய இயல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் சில ஆய்வுகள்,   3-5 வகுப்புகளில் படிக்கும் கிராமப்புறக்குழந்தைகளில், 55% குழந்தைகளால் கழித்தல் கணக்குகளுக்கு விடை காண இயலவில்லை. 50%க்கு மேற்பட்ட குழந்தைகளால் தமிழில் ஒரு எளிமையான பகுதி கூடப்படிக்க இயலவில்லை.இந்தக்குழந்தைகளில் பலர் தாழ்த்தப்பட்ட ஏழைக்குடும்பத்தைச்சார்ந்தவர்கள்இந்தக்குழந்தைகளின் அறியாமை, அவர்கள் குடும்ப சூழ்நிலையினால் அல்லது ஆற்றல் பற்றாக்குறையினால் ஏற்பட்டது என்று எண்ணுவது எளிது.  


ஒவ்வொரு குழந்தையாலும் முடியும்” என்றநம்பிக்கையை நிதர்சனமாக்க யுரேக்கா அறநிறுவனம், கல்லூரிமாணவர்கள், தனியார் நிறுவன தொண்டூழியர் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒன்று சேர்ந்து, கிராமப்புறக்குழந்தைகளுக்குத்தேவையான அடிப்படைக்கல்வி வழங்குவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதனைப்பற்றிய விவரங்களை அறியவும், பங்கேற்கவும்,  நம் குழந்தைகளின் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தவும் மேலும்படியுங்கள்...


எங்குதுவங்குவது ?


முதல்படி, பிரச்சனையின் தன்மையையும் அளவினையும் அறிந்து கொள்வது.கிராமங்களில்,குழந்தைகளின் அடிப்படை கணிதம் மற்றும் படிக்கும் ஆற்றலை ஒரு எளியதிறனாய்வு மூலம் நிர்ணயிக்க முடியும். இந்த ஆய்வை 3-4 நபர் 3 மணி நேரத்தில் முடிக்க முடியும்.  இதனைக்குழந்தைகளின் வீட்டிலேயே எளிய செயல்முறைகளைக்கொண்டு மதிப்பிடலாம். இதனைத்தொடர்ந்து,  ஆய்வு முடிவுகளை குழந்தைகளின் பெற்றோர் மற்று ம்ஊர்பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தொண்டூழியர்களும் மற்றவர்களும் கலந்தாலோசித்து, ஊர்ப்பள்ளியின் உதவியுடன் ஏற்ற தீர்வை நிர்ணயிக்கலாம். பள்ளி ஆசிரியர்களிடமும் இந்த ஆய்வின் முடிவுகளைப்பகிர்ந்து கொண்டு குழந்தைகளுக்குத்தேவையான பயிற்சியளிக்க உதவிடலாம்.


திட்டத்தின்வீச்சளவு


தொண்டூழியர்– 200
குழந்தைகள் – 2918
மாவட்டங்கள்-8
ஒன்றியங்கள்- 27
கிராமங்கள்– 105


நிலைமையைமாற்றபெற்றோர்விண்ணப்பங்கள்: 1410



தொடர்பு கொள்ளவும் - செல்வா 9790951652.




Tuesday, June 05, 2012

நாளைய இயக்குநர் - ஃபேன்ட்டசி கதைகள் -(27.5.2012)-விமர்சனம்

மரசிற்பம் செய்யும் மாமனிதர்..........-k r vijayan.
Photo: மரசிற்பம் செய்யும் மாமனிதர்...........
1. இயக்குநர் பெயர் - பாக்யராஜ் கண்ணன் - குறும்படத்தின் பெயர் - வசூல்

இயக்குநர் தன் பேருக்குத்தகுந்த மாதிரி குறும்பான கதையைத்தான் செலக்ட் பண்ணி இருக்காரு..

ரஜினியின் அதிசயப்பிறவி,வடிவேலுவின் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் படங்கள் மாதிரி இதுவும் ஒரு ஃபேண்டசி மேல் லோக கதை தான்.. அதாவது எம தர்ம மகாராஜா தன் சின்ன வீடான ரம்பை வீட்டுக்கு போறப்ப சாரி போன பின் அங்கேயே பாசக்கயிறை மறந்து வெச்சுட்டு வந்துடறாரு .. அதனால காலைல பூலோகத்துல ஒரு  உயிரை எடுக்க வேண்டிய சூழ்நிலைல அவரால உயிரை எடுக்க முடியலை.. அந்தாளோட சம்சாரம் அவரை எமலோகத்துக்கு கூட்டிட்டுப்போக ஒரு கண்டிஷன் போடறாங்க.. அதாவது அவங்க கணவர் பல பேருக்கு பணம் கடன் கொடுத்திருக்கார்.. அந்த கடன் பல லட்சங்கள் மதிப்பு பெறும்.. ஏதாவது ஒரு கடனை வசூல் பண்ணிக்கொடுத்துட்டு கூட்டிட்டுப்போங்கங்கறாங்க .. ( இவ தான்யா பொண்டாட்டி - டாக்டர் ராஜசேகர்க்கு அடுத்த பட டைட்டில் ரெடி )

எமனும், சித்திர குப்தனும் அங்கே இங்கே அலைஞ்சு பார்க்கறாங்க, வேலை ஆகலை..என்ன நடக்குதுங்கறதை காமெடியா சொல்லி இருக்காரு.. ஒரு 8 நிமிஷ படத்துக்கு அவர் உழைப்பு அதிகம் .. வெல்டன் சார்..

எமனா நடிச்சவர் நடிப்பு கலக்கல்னா அந்த சொர்ணாக்கா நடிப்பு செம.. வசனங்களில் நகைச்சுவை இழை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. கடனை எப்போ ரிட்டர்ன் பண்ணப்போறே?

எப்போ வேணும்னாலும்.. கைல காசு இருக்கறப்ப

2. மகனே!

யார்.. என் அப்பனே!

3. ஏத்துன போதையைக்கூட இறக்கிடலாம், ஆனா கொடுத்த கடனை திருப்பி வாங்கவே முடியாது

4. அவங்க ரம்பா மாதிரி என் கண்ணுக்கு தெரியறாங்க..

 என் கண்ணுக்கு என் வாகனம் எருமை மாதிரி தெரியறாங்க..

5. எனக்கு ஒரு சந்தேகம்..

 கேளு

 பவர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

6. இப்போ கணக்கு சரியா வருதா?

ம்ஹூம், கணக்கு சரியா வர்லை, காதல் தான் வருது



எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.
Photo: எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது  சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.




2. இயக்குநர் பெயர் - ஸ்ரீகணேஷ்  - குறும்படத்தின் பெயர் - பரிசு



ஒரு ஏழை.. குடிசை வீட்ல வசிக்கறாரு.. அவர் குடிகாரர்.. மனைவிதான் பொறுப்பா வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாத்துது.. அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை.. 10 வயசு.அந்தபெண்ணோட கனவுகள் பூ வளர்க்கனும்,கிதார் கத்துக்கனும், சைக்கிள் வாங்கனும்,,


 சைக்கிள் வாங்க காசு சேர்க்கறா.. அம்மா தீனி வாங்க குடுக்கற காசு, அக்கம் பக்கம் வீடுகளில் கடை கண்ணிக்குப்போய் அவங்க தர்ற டிப்ஸ் காசு எல்லாம் உண்டியல்ல சேர்த்து வைக்கிறா..


அப்போ டி வி ல ஒரு நியூஸ்... தானே புயல் நிவாரண நிதிக்காக அறைகூவல் விடுக்கறாங்க.. இவ தன் உண்டியல்ல சேர்த்து வெச்ச காசை கொண்டு போய் டி வி ஸ்டேஷன்ல கொடுக்கறா.. அவளைப்பற்றி டி வி நியூஸ்ல சொல்றாங்க.. அதைப்பார்த்த அவ பெற்றோர் உள்ளம் உருகறாங்க, அவ அப்பா இனி நான் குடிக்கலை.. 2 மாசம் குடிக்காம பணம் சேர்த்து வெச்சிருந்தா உனக்கு சைக்கிள் வாங்க காசு சேர்ந்திடும்னு சொல்றார்..


க்ளைமாக்ஸ்ல டி வி ல இருந்து அவ வீட்டுக்கு சைக்கிள் பரிசு வருது..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சைக்கிள் வாங்கி இருந்தாக்கூட இப்படி சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்.. இப்போ தானே நிவாரண நிதிக்கு பணம் குடுத்தது மனசுக்கு நிறைவா இருக்கு

2. நீ ஏம்மா இந்த வீட்ல வந்து பிறந்தே?

3. ஃபோட்டோ எடுத்துக்கவா?

வேணாம் சார்.. நான் அழுத மாதிரி இருக்கேன், நல்லா வராது

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. காசின் தேவை உள்ள ஏழைப்பெண் அடிப்படையில் கிறிஸ்டினாக இருந்தாலும் தான் கண்டெடுக்கும் 100 ரூபாய் பணத்தை இந்து உண்டியலில் போடுவது

2. அந்த 100 ரூபாய் இருந்தா குவாட்டர்க்கு ஆச்சு, என அப்பாவும், 4 கிலோ அரிசியாவது வாங்கி இருக்கலாம் என அம்மாவும் எதார்த்தமாக பேசுவதும், தன் பெண்ணின் நல்ல குணத்தை அவர்கள் புரியாதபடிக்கு இருப்பதும், பின் தாமதமாக அதை உணர்வதும்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அந்த சிறுமி டி வி ஸ்டேஷன்ல பணம் குடுத்துட்டு அப்பவே கிளம்பிடுது.. ஜஸ்ட் ஒரு ஃபோட்டோ  எடுக்கலாம்னு டி வி ஆஃபீசர் கேட்டப்பக்கூட வேனாம்னு சொல்லி கிளம்பிடுது.


டி வி செய்தில கூட அந்த சிறுமி பேர் சொல்லலை.. அப்படி இருக்கும்போது சைக்கிள் பரிசு தர அந்த ஆஃபீசர் கரெக்டா அந்த குடிசை வீட்டுக்கு வருவது எப்படி? எந்த விபரமும் அந்த சிறுமி சொல்லலையே?


2. அப்பா திருந்திடறாரு.. அப்போ அந்த சிறுமி தூங்கிட்டு இருக்கு.. அவளை எழுப்பி விட்டு அப்பா “ நான் திருந்திட்டேன்”னு சொல்றாரு.. மகள் மேல் பாசம் உள்ள எந்த அப்பா தூக்கத்தை கலைச்சு விட்டு தான் நல்லவன்னு சொல்வாரு.. காலைல சொல்லிக்கலாமே?

Photo


=

3. இயக்குநர் பெயர் - அஸ்வின்   - குறும்படத்தின் பெயர் - இன்பாக்ஸ்

இது செம ரொமாண்டிக் கதை.. எல்லாரும் நிமிர்ந்து உக்காருங்க..

ஹீரோயின் 75 மார்க்  ஃபிகரு.. செம கலரு.. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல என்னமோ வாங்குது,, ஒரு அழகான கேரி பேக் மாதிரி 1 தர்றாங்க.. அதே கடை, ஹீரோவும் ஏதோ வாங்கறாரு.. அவருக்கும் ஒரு கேரி பேக்..

அந்த கேரி பேக் மெயில் சேட் மாதிரி யூஸ் ஆகுது.. அதாவது ஒரு சீட்ல ஹீரோ தன் பேரை எழுதி உள்ளே போட்டா அது ஹீரோயின் பேக்ல போய் சேருது, ஹீரோயின் அதை படிச்சுப்பார்த்துட்டு அதே போல் ரிப்ளை பண்ணுது.. 2 பேரும் தங்களைப்பற்றி தகவல்களை பகிர்ந்துக்கறாங்க..

2 பேரும் அதை வெச்சு சீட்டு விலையாடறாங்க.. எப்படின்னா 13 கார்டு அந்த பாக்ஸ்ல போட்டா அவ பாக்ஸ்க்கு அது போயிடும்..திடீர்னு கேரி பேக் கிழிஞ்சுடுது.. ஹீரோ சோகம் ஆகறாரு.. ஹீரோயினும் தான்.. 2 பேரும் எதேச்சையா பார்க் வர்றாங்க.. ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க, சேர்ந்துடறாங்க ...

நம்ப முடியாத கதை தான்.. ஆனாலும் ரசனையா தான் எடுத்திருக்காங்க

1. படத்தில் நோ வசனம்.. எல்லாம் காட்சிகள் தான் மகேந்திரன் சார் படம் மாதிரி

2. படம் பார்க்கறவ்ர்களை ஏங்க வைத்து விடுகிறது அது போல் ஒரு கேரி பேக் கிடைக்காதா என..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஒரு சீன்ல ஹீரோயின் லேப்டாப்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கு.. டக்னு அதை க்ளோஸ் பண்ணிடுது.. சைன் அவுட் கொடுத்து ஆஃப் பண்ணி அப்புறமா லேப்டாப்பை மூடனும்கற பேசிக் நாலெட்ஜே கிடையாதா?

2. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் வெவ்வேற ஏரியா.. அதெப்பிடி கரெக்ட்டா ஒரே பார்க் வந்து ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க? இன்னும் நம்பகத்தன்மையோட  அந்த ட்விஸ்ட்டை யூஸ் பண்ணி இருக்கலாம்..

இந்தப்படத்துக்கு சிறந்த படம் விருது கிடைச்சுது..


கமல் பேட்டி BY சிவசங்கரி @ விகடன் பொக்கிஷம் -1983


மல்ஹாசனைச் சந்திக்க அவர் இல்லத்துக் குச் சென்றபோது கூடத்தில் பழுப்பு நிற கதர் சட்டை, நாலு முழ வேட்டியில் இருக்கும் பெரியவரிடம் என்னை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.


அவர், கமலின் தந்தை... மென்மையாகச் சிரிக்கிறார்.

''பரமக்குடியில் இருந்து எப்போது வந்தீர் கள்?''

''இரண்டு நாள் முன்பு... நாளை இரவு திரும்புகிறேன்.''

''ரயிலிலா?''

மீண்டும் அதே மென்மையான சிரிப்பு... ''முப்பது வருஷமாக பஸ்தான்...''


''சின்ன வயசு கமலைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?''


''ம்ம்ம்? கமலுக்கு அவன் அம்மாவிடம் ஏக ஆசை. சின்னப் பையனாக இருக்கையில் நினைத் துக்கொண்டு அவளிடம் ஓடி வருவான். வயிற்றைத் தடவிக் கொடுத்து, 'இங்கேதானேம்மா நான் இருந்தேன்; இங்கிருந்துதானே வந்தேன்?’ என்று கேட்டு வாஞ்சையுடன் அந்த வயிற்றில் முத்தம் கொடுப்பான்.''



தொடர்ந்து பேசுவதற்குள் கமல், கங்கை அமரன் சிரித்துக்கொண்டே உள்ளே வருகிறார் கள்.


''அமரனின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? 'கால்வாய்க் கரை’... முதலில் 'கோழி கூவுது’, பிறகு 'கொக்கரக்கோ’... தொடர்வது கால்வாய்க் கரைதானே?''


பலத்த சிரிப்பு கூடத்தில் உள்ள அனைவரையுமே ஆக்கிரமிக்கிறது. இரண்டு நிமிஷங்களில் கங்கை அமரன் விடைபெற்றுக்கொண்டு புறப் பட, கமல் எதிரில் உள்ள திவானில் அமர்கிறார்.


''ஸாரி... உங்களை முதலில் ஐந்து மணிக்கு வரச் சொல்லிவிட்டு, பின் ஆறு என்று மாற்றியதற்கு. நிறைய ரசிகர்கள் 'இலங்கைத் தமிழர் படு கொலையை எதிர்த்து நாமும் ஓர் ஊர்வலம் போகலாம்’ என்ற கோரிக்கை யுடன் கூட்டமாக வந்துவிட்டார்கள்.

'அவசரப்படக் கூடாது. இது இந்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்னை. நாம் தனிப்பட்டரீதியில் எதையாவது செய்யப்போக, அது அங்கு ஏற்கெனவே அவதிக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் இனத்தை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்தி விடக் கூடாது. யோசித்து, ஆக்கபூர்வ மான காரியத்தை அவசியம் செய்ய லாம்’ என்று கூறி அனுப்பினேன்.''


ரசிகர்களைப் பற்றி கமல் குறிப்பிட்ட தால், ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட கேள்வியுடனேயே பேச்சைத் தொடங்கு கிறேன்.



1. ''வெகு சீக்கிரமே நீங்கள் அரசியலில் நுழையப்போகிறீர்கள்... அதன் அஸ்தி வாரம்தான் இந்த விரிவான ரசிகர் மன்ற நடவடிக்கைகள் என்கிறார்களே?'' 


உதட்டைப் பிதுக்குகிறார். கைகளை விரித்து, தோளைக் குலுக்கி 'நான் என்ன சொல்வேன்’ என்கிற பாவனையுடன் ஏறிடுகிறார். ''லயன்ஸ் கிளப் போல முழுக்க முழுக்க சமூக சேவை பிரக்ஞை கொண்ட ஓர் அமைப்பை உண்டாக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவுதான் என் ரசிகர் மன்றம். 1980 வரை ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, சமூக சேவை என்ற விழிப்பு உணர்வு வந்த பிறகு, ஏன் ரசிகர்மன்றத்தைத் தோற்றுவித்து ஆக்கபூர்வமாகச் செயல்படக் கூடாது என்று தோன்றியது.


தயவுசெய்து என் ரசிகர் மன்ற அலுவல கத்துக்குப் போய் நாகராஜனைச் சந்தியுங்கள். முதன்முதலில் பஸ் ஸ்டாப்பில் 'இன்ன எண் பஸ்... இன்ன இடத்துக்குச் செல்லும்’ என்ற விவரம் அடங்கின பலகையை மாட்டி, எங்களுக்குத் தெரிந்த விதத்தில் சமூக சேவையை ஆரம்பித்ததைப் பற்றிக் கூறுவார்!''


2. ''அப்படியென்றால், நீங்கள் பணம் கொடுப்ப தாகவும் அரசியலில் புக இதன் மூலம் படிக்கட்டுகள் கட்டுவதாகவும் கூறுவதில் நிஜம் இல்லையா?'' 


''சத்தியமாக இல்லை. இன்று வரை என் ரசிகர் மன்றத்துக்காக நான் பைசா செலவழித்தது இல்லை. போன் பில்கூட அவர்களேதான் பார்த்துக் கொள்கிறார்கள்.''


3. ''உங்கள் ரசிகர் மன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகள் என்னென்ன?'' 


''இறந்த பிறகு கண் தானம் செய்ய பெயரைப் பதிவுசெய்துகொண்டு இருக்கிறோம். நல்ல புத்தகங்களை வாங்கி நூலகங்களை உருவாக்க இருக்கிறோம். ஆகஸ்ட்-15 போன்ற விசேஷ தினங் களில் நான் உட்பட மன்றத்தைச் சார்ந்த பலரும் இலவசமாக ரத்த தானம் செய்து ஆஸ்பத்திரி களில் ரத்த வெள்ளத்தை உண்டாக்கப் போகிறோம். எங்காவது இறப்பு நடந்தால், அங்கு சென்று கண் தானத்தின் மேன்மையை விளக்கி, இறந்தவரின் கண்களைத் தானமாகப் பெற முயற்சிக்கப்போகிறோம்!''




4. ''கைக் காசைச் செலவழித்து... உங்களுக்காக, உங்கள் வார்த்தையை நிறைவேற்றப் பாடுபடும் ரசிகர்களை நினைக்கையில்..?'' 



''நெகிழ்ந்துபோகிறேன். எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்று தவித்துப்போகிறேன். முடிந்த வரைக்கும் தனித்தனியே அனைவரையும் சந்தித்து என் குறிக்கோள், நன்றி, சந்தோஷத்தைத் தெரிவிக்கப் போகிறேன். இத்தனை ஆயிரம் பேர் உழைப்பும் கமல்ஹாசன் என்ற தனி நபருக்குப் பெருமை சேர்க்கத்தான் என்பதை நினைத்தால் சிலிர்த்துப்போகிறது. 'பதிலுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?’ என்று மனசு பரபரக்கிறது.


என் ரசிகனுக்குத் தேவையான படத்தைக் கொடுத்து, அவனை மகிழ்விப்பது ஒன்றுதான் என்னால் முடிந்த சமாசாரம். 'சகல கலா வல்லவன்’ போன்ற படங்களை நான் அதிகம் இப்போது ஒப்புக்கொள்வதற்குக் காரணம், இந்த விதத்திலாவது என் ரசிகர்களைத் திருப்தி செய்யலாமே என்றுதான். நிஜமாகச் சொல்கிறேன், பணமும் புகழும் அடுத்த காரணங்களே!''


5. ''வரதட்சணைக் கொடுமை, முதியோர் பிரச்னை, வறுமை, வேலை இல்லாமை என்று இன்றைக்குத் தாண்டவமாடும் இன்னும் பல பிரச்னைகள் குறித்து..?'' 


''தனி மனிதனாக என்னால் முடிந்ததை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால், எங்கள் இண்டஸ்ட்ரி மாபெரும் சக்தி வாய்ந்தது. இதைச் சரிவரப் பயன்படுத்தினால், பட்டிதொட்டிகளில் உள்ள பாமர மக்களிடமும் நல்லவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துவது சுலபம்!''


6. ''சரி... அதைச் செய்வதற்கு என்னதடை?'' 


''அதிகமாக வரி கொடுக்கும் தொழிலாக இருப்பினும், அதற்கு உரிய மரியாதை எங்களுக்குக் கிடைக்காதது வருத்தப்பட வேண்டிய விஷயம். செக்யூரிட்டியே இல்லாத தொழில் எங்களுடையது. ஒரு ரசாயனத் தொழிற்சாலை ஆரம்பிக்கப் பண உதவி செய்ய முன் வரும் வங்கிகள், ஒரு படம் எடுக்க எங்களுக்கு உதவுவது இல்லை. ஏன் இந்தப் பாரபட்சம்? கேட்டால், பாதுகாப்பு இல்லை என்பார்கள். அரசாங்கம் மட்டும் எங்கள் தொழிலை மதித்து, படத் தயாரிப்புக்குப் பண உதவி செய்ய முன்வந்தால், நிச்சயமாகச் சொல்கிறேன்.


.. பத்தில் ஆறு படங்களாவது உயர்ந்த குறிக்கோளுடனும் சமூகப் பிரக்ஞையுடனும் அமையும். சந்தேகமே இல்லை!''


7. ''இந்த அளவுக்கு வளர்ந்த பின்னர், யாருடைய இழப்பையாவது வெகுவாக உணர்கிறீர்களா?'' 


''என் அம்மா! எதற்கும் இவன் உதவ மாட்டான் என்கிற முடிவுக்கு அனைவரும் வந்துவிட்ட பின், 'எதிர்காலத்தில் என்ன பண்ணுவான், இவனுக்கு என்று கொஞ்ச மாவது வருமானம் வேண்டாமா?’ - என்ற ஆதங்கத்தில் வாசலில் இருக்கும் கடைகளைக் கட்டக் காரணமாக இருந்தவர். I miss her alot!''


8. ''உங்களையே விமர்சித்துக்கொள்ளும் பக்குவம் உண்டா?'' 


''கொஞ்சம் என் பலம், பலவீனம் எனக்குத் தெரியும். எனக்கு வேண்டும், வேண்டாததைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் விவேகத்தை மெதுவாக வளர்த்துக்கொண்டு இருக்கிறேன். முன் கோபம், ஆத்திரம் என் மைனஸ் பாயின்ட்ஸ். ஆனால், எப்பேர்ப்பட்ட விரோதிக்கும் அவர் என் பிடிக்குள் வரும்போதுகூடக் கெடுதல் செய்ய முடியாதது என் ப்ளஸ் பாயின்ட்!''


9. ''தொடர்கதை எழுத முனைந்திருப்பதன் மூலம் எழுத்துலகில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறீர்கள். இந்தக் கதையை நீங்கள் எப்படி உருவாக்கினீர்கள் என்பதைச் சொல்லுங்களேன்...'' 


''இது ரொம்ப வருஷங்களுக்கு முன் என்னுள் ஜனித்தது. நண்பன் ஒருவனுக்கு உண்டான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. இதை முதலில் திரு.பாலசந்தரிடம் கூறினேன். அவர், 'நன்றாக இருக்கிறது, ஆனால், மிt வீs ரீஷீக்ஷீஹ். ரொம்ப பயங்கரம்’ என்று சொன்னார். இந்தக் கதை என்னுள் முழுமையாக உள்ளது. நடிகன் கமல்ஹாசனால் வெளிப்படுத்த இயலாத எல்லைகளை எழுத்தாளன் கமல்ஹாசன் தொட்டுக் காட்ட வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது!''


10. ''பாட, ஆட, நடிக்க, எழுதத் தெரிவதன் மூலம் நீங்கள் ஒரு All Rounder என்பதை நிரூபிக்கிறீர்கள். இன்னும் எந்தக் களத்திலாவது தேர்ச்சி பெற ஆசை உண்டா?'' 


''கர்னாடக இசையை முழுமையாக அறிய, திரு.பாலமுரளியிடம் சங்கீதம் கற்கிறேன். மேடையில் நான் கச்சேரி செய்ய வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. இது எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்னை ரொம்பப் பயமுறுத்துகிறது. இன்னும் சில வருஷங்களில் கம்ப்யூட்டரின் முன் நான் ஒரு ஞானசூன்யமாகி விடுவேனோ என்ற மிரட்சியின் காரணமாக, கம்ப்யூட்டர் பற்றின அறிவைச் சமயம் கிடைக்கும்போது எல்லாம் வளர்த்துக்கொள்கிறேன்!''


11. ''இன்றைய கமல்ஹாசனின் வளர்ச்சியில் உங்கள் மனைவி வாணிக்குப் பங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?'' 


''ரொம்ப... ரொம்ப! முரட்டுத்தனம் நிறைந்த என்னைப் பல விஷயங்களில் ஒருநிலைப் படுத்தியது அவள்தான். என் அம்மாவின் இழப்பை ஓரளவுக்குத் தாங்கிக்கொள்கிறேன் என்றால், அது வாணி தரும் இதத்தால்தான். எல்லாவற்றையும்விட, வாணி எனக்கு ஒரு நல்ல Companion!''


12. ''இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத நினைப்பை என்னிடம் சொல்வது சாத்தி யமா?'' 


''ம்ம்...'' - கமல் சிந்திக்கிறார். தீவிரமான பார்வையுடன் மெதுவாகப் பேசுகிறார். ''விட்டுக்கொடுத்து, விட்டுக்கொடுத்து அதாவது, கலையுலகில் Compromise செய்து செய்து நாளடைவில் எனக்குள் இருக்கும் கலைஞன் கமல்ஹாசன் உருவமற்றுப் போய்விடுவானோ என்ற பயம் எனக்கு உண்டு. 'ராஜபார்வை’ நடிகன் கமல் இன்றைக்கும் அதே வீரியத்துடன் உள்ளே நடமாடிக்கொண்டு இருக்கிறானா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

உண்மையிலேயே கலைஞன் கமல்ஹாசன் இறந்து விடுவானோ என்ற பயம். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறது அல்லவா?''
பேட்டி முடிந்துவிடுகிறது.


கமலின் கடைசி வாக்கியங்கள் ஒருவித வேதனையை உண்டுபண்ண... அப்படியே அமர்ந்து சிந்திக்கிறேன்.


வசதி இருந்தும் எளிமையான வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்று வாழும் தந்தை ஸ்ரீனிவாஸன், அண்ணன் சாருஹாஸன். அன்பையும் சிரிப்பையும் தவிர, வேறு எதையும் தரத் தெரியாத மன்னி. நடிகை என்ற பந்தா இல்லாமல், எந்தக் குடும் பத்திலும் காணப்படும் ஒரு பொறுப்புள்ள பெண் போல காபி கலந்து எடுத்து வரும் சுஹாசினி. சுமுகமாகப் பேசும் சாருஹாஸனின் மூத்த மகள் டாக்டர் நந்தினி. வெட்கத்துடன் 'ஹலோ’ சொல்லி உட்காரும் கடைசிப் பெண் சுபாஷிணி. நாட்டியப் பயிற்சியில் இருந்தாலும் கீழே இறங்கி வந்து நட்புடன் பேசும் வாணி -


இவர்கள் நடுவே வசிக்கும் கமல்...


- ஒரு சமயம், கார் டிரைவர் எங்கோ சென்று விட, சட்டென்று கட்டின லுங்கியுடன் தானே வண்டி ஓட்டிக்கொண்டு என்னை வீட்டில் விட்ட கமல்...


- நல்லது, கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் விவேகத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று வெளிப்படையாகத் தன்னை அலசிக் கொள்ளும் கமல்...
சமூக சேவை செய்வதுதான் முக்கியமே தவிர, கமல்ஹாசனின் பேர் நீடிப்பது அல்ல - என்று தெளிவான சிந்தனையுடன் பேசும் கமல்...


- மனைவி தரும் தோழமையில் பெருமை கொள்ளும் கமல்...


- முக்கியமாக,
மனிதாபிமானத்துடன், தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து, அதில் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பும் கமல் -


இவ்வளவு விழிப்பு உணர்வு உண்டாகிவிட்ட பிறகு, மனிதன் கமல், நடிகன் கமல் அழிந்து போவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது சாத்தியமா என்ன?


ம்ஹூம்...  இல்லை.


இந்தப் பயம் அநாவசியமானது...


நிச்சயம்...

மனசு தெளிந்துவிட, 'நான் கிளம்புகிறேன்... ஆல் தி பெஸ்ட் கமல்!’ என்று கூறியபடி எழுந்து நிற்கிறேன்!

காலச்சுவடு ஆசிரியரின் நண்பர் மரணம் - சில புரிதல்கள்



எல்லா மனிதரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத  துக்க பக்கம் மரணம்.. அது நமக்கான விடுதலைப்பத்திரமும் கூட ..இயற்கையை பல வழிகளில் வஞ்சித்த, வென்ற மனிதன் மரணத்தை மட்டும் வெல்லவே முடியவில்லை.. ஒரு வேளை மரணத்தை மனிதன் வென்று விட்டால் அது இயற்கைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.. வந்தவர்கள் எல்லாம் இங்கேயே தங்கி விட்டால், தேங்கி விட்டால் பூமியில் ஏது இடம்?

இருந்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் மரணம் நம்மை அதிகம் பாதிக்கிறது.. தினசரி நாளிதழ்களில் யாரோ ஒருவரின் மரணச்செய்தியை நாம் படிக்க நேரிடும்போது, டி வியில் பார்க்க நேரும்போது நம்மை அது அதிகம் பாதிப்பதில்லை.. அடிக்கடி சந்தித்தோ, அல்லது நெருக்கமான பழக்கத்திலோ இருப்பவர்கள் இறக்கும்போதுதான் நம்மை மரணம் பாதிக்கிறது.. மரண பயமும் வருகிறது ..

சென்னிமலையில் தி முக  ஒன்றியச்செயலாளர் திரு மெய்யப்பன்.. அவரது தம்பிகள் அங்குராஜ், கே எஸ் சண்முக சுந்தரம் இருவரும் என் பால்ய கால நண்பர்கள்.. அவர்களது சித்தப்பா பையன் அய்யப்பன்.. இவரை பற்றி நான் எனது பத்திரிக்கை உலக அனுபவங்களில் சொல்லி இருக்கிறேன்.. ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் இவரது 3 கவிதைகள் வந்துள்ளன.. அது போக பால்ய காலத்தில் தென்றல் எனும் கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தி வந்த போது எனக்கு உறுதுணையாக இருந்தார்..

இவரது அண்ணன் சென்னிமலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் இல் மேனேஜர்..இவரது அடுத்த அண்ணன் பெயர் சம்பத்.. இவர் தான் நாம் இப்போ பார்க்கப்போற சம்பவ நாயகன்..

ஆள் ஒல்லியா, உயரமா இருப்பார்.. சின்ன வயசுல இருந்தே வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லாதவராக சித்தன் போக்கு சிவன் போக்கு என  ஏனோ தானோ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.. குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனார்..

தினமும் சரக்கு இல்லாமல் தூங்கவே மாட்டார்.. அய்யப்பன் குடும்பத்தில் அனைவரும் எனக்கு அறிமுகம், பழக்கம்.. ஆனால் இவர் மட்டும் அதிக டச் இல்லாமல் இருந்தார்..காரணம் இவர் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார்..

தினமும் மாலை  வேளைகளில், குறிப்பாக சனி, ஞாயிறுகளில் இவர் சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் திண்ணையில் அல்லது ஈஸ்வரன் கோவில் அருகே அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார்..  காலச்சுவடு ஆசிரியர் கதிர்வேலு அவர்களின்  நெருங்கிய நண்பர்..

சமீபத்தில் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.. 2 மாசம் இருக்கும்..

சம்பவம் நடந்த அன்னைக்கு 4 நாட்கள் முன்.....

சம்பத் சாலையில் நடந்து போய்ட்டு இருந்திருக்கார்... திடீர்னு வலது கால் மரத்துப்போன மாதிரி ஒரு உணர்வு.. சாலை அருகே உள்ள விளக்கு கம்பத்தில் கை வைத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கார்.. திடீர்னு அந்த மரத்துப்போன உணர்வு காலில் இருந்து இடுப்பு கை வரை பரவி வலது பாகம் முழுக்கவே மரத்து விட்டது..

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அருகாமையில் உள்ள ஹாஸ்பிடல் சென்றிருக்கிறார்.செல் ஃபோன் கையில் இருந்தது ரொம்ப உபயோகமாக இருப்பது இது போன்ற ஆபத்துத்தருணங்களில் தான்.. வீட்டுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லி விட்டார்..

டெஸ்ட் செய்த டாக்டர் மூளைக்கு செல்லும் சில நரம்புகள் ஜாம் ஆகி விட்டதாகவும்,இனி நாம் செய்ய ஏதும் இல்லையென்றும் கூறி விட்டார்.. எஸ்.. ஹி ஈஸ் ஹவுண்ட்டிங்க் ஹிஸ் டேஸ்..
இவருக்கு வயது 45.. ஆனால் ஆள் பார்க்க 32 வயசு போல் தான் இருப்பார்.. திருமணம் ஆகாதவர்.. பொறுப்பில்லாத மனிதராக இருந்தபோதும் தான் திருமணம் செய்தால் தன்னை நம்பி வந்த பெண்ணை கண் கலங்காமல் வைத்து காப்பாற்ற முடியாது என்ற உண்மை அவரது மனசில் இருந்திருக்க வேண்டும்.. எனவே தான் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல.. காதல் தோல்வி ஏதும் இல்லை..

குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு என்ன ஒரு நிம்மதி என்றால் மேரேஜ் ஆகி ஒரு குழந்தை இருந்திருந்தா இன்னும் சிரமம்.. அந்த குடும்பமும் நிர்க்கதி ஆகி இருக்கும் என்ற எண்ணமே..

2 நாள் சுய நினைவில்..  அப்போதும் அவரால் பேச முடியவில்லை.. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்திருக்கிறது.. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தம்பி அனைவரையும் கடைசி பார்வை பார்த்திருக்கிறார்.. அவருக்கு தன் இறுதி நாட்களில் இருக்கிறோம் என்பது தெரிந்து விட்டது..

இந்த இறப்பில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை ஹாஸ்பிடல் சென்று கம்ப்ளீட் பாடி செக்கப் செய்து கொள்வது அவசியம்..

2.  மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்,சராசரி வாழ்க்கை வாழாமல் வித்தியாசமாக நடவடிக்கை தென் பட்டால் அவரை தனிமையில் விடாமல் இருத்தல்..

3. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் 18 வயசோடு முடிந்து விடக்கூடாது.. காலம் உள்ள காலம் வரை வாரிசுகளுடனான  அருகாமை, அக்கறை இருக்க வேண்டும்..

4. தன்  மகன் இப்படி ஆகிட்டான், இவன் இப்படிதான்.. என தண்ணி தெளிச்சு விட்டுட்டு மத்த வேலையைப்பார்ப்போம் என்ற மனப்பான்மை வரக்கூடாது..

5.ஒரு கலயாணம் காட்சி என்றால் யார் யாரை கூப்பிடனும் என்று ஆற அமர்ந்து லிஸ்ட் போடற மாதிரி 40 வயது கடந்தவர்கள் தங்கள் பால்ய கால நண்பர்கள், பள்ளி, கல்லூரி ,அலுவலக நண்பர்கள் இவர்கள் முகவரி அல்லது அட்லீஸ்ட் தொலை பேசி எண்ணையாவது ஒரு டைரியில் அல்லது ஒரு நோட்டில் எழுதி வைக்க வேண்டும்.. மேலோட்டமான பார்வையில் இது குரூரமாக தோன்றினாலும் என் அனுபவத்தில் நான் கண்ட பல மரணங்களில் கடைசி சமயங்களில் பலருக்கு தகவல்கள் சொல்லப்படாமலேயே இருந்திருக்கின்றன.. சொல்லாத காதல் எவ்வளவு துயரமோ அதை விட இரு மடங்கு துயரமனானது சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லப்படாத மரண தகவல்.

6. இன்சூரன்ஸ் பாலிஸி.. பெரும்பாலோர் இது பற்றி அக்கறை கொள்வதே இல்லை.. நாமே போயிடறோம்.. இனி என்ன ஆகப்போகுது? நமக்குப்பின்னால வரப்போற தொகைக்காக நாம ஏன் கஷ்டப்பட்டு , மெனக்கெட்டு பிரீமியம் கட்டனும் என்ற எண்ணம் மறையனும்.. சம்பத் பாலிஸி ஏதும் கட்டவில்லை.. சப்போஸ் கட்டி இருந்தால் வயசான காலத்தில் அவர் பெற்றோருக்கு உதவியாக இருந்திருக்கும்..

7. திருமணங்களில் மொய் வைப்பது தமிழனின்  பாரம்பரிய பழக்கமாக இருந்து வந்தாலும் நான் வியப்பது மரணம் நடந்த வீடுகளில் ஏன் அந்தப்பழக்கம் வரவில்லை என்பதே.. வசதியான, நடுத்தரக்குடும்பங்களில் பிரச்சனை இல்லை, சம்பத் குடும்பத்திலும் பணப்பிரச்சனை இல்லை, ஆனால் பொதுவாக நான் யோசிப்பது ஒரு ஏழையின் வீட்டில் குடும்பத்தலைவர், அல்லது முக்கியமான நபர் இறந்து விட்டால் அந்தக்குடும்பத்துக்கு மாபெரும் இழப்புத்தானே.. நாம என்ன பண்றோம்.. துக்க வீட்டுக்குப்போறோம்.. கையை கொடுக்கிறோம், துக்கம் விசாரிக்கறோம்.. வந்துடறோம்.. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யனும் என்று நினைப்பதே இல்லை.. ஏழை வீட்டில் மரணம் நிகழ்ந்தால் நம்மாலான பண உதவி செய்ய வேண்டும்..

8. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டீன் ஏஜ் வரை கவனமாக கண்காணித்து வர வேண்டும்.. 18 வயசுக்குள் தான் பெரும்பாலான கெட்ட பழக்கங்களை மனிதன் கற்றுக்கொள்கிறான்.. 19 வயசில் அவனுக்கு ஒரு பக்குவம் வந்து விடும்..  பலரை விசாரித்ததில் தெரிய வரும் தகவல் அவர்கள் ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை கற்றுக்கொண்டது அவர்கள் 15 டூ 18 வயசில் தான்.. அது மாற்ற முடியாத பழக்கமாக மாறி அவனை சிதைக்கிறது..

9. இருக்கும் வரை ஜாலியாக இருப்போம், எல்லாத்தையும் அனுபவிப்போம் என்ற எண்ணம் தான் பெரும்பாலான தவறுகளுக்குக்காரணம்.. இருக்கும் வரை ஆரோக்யமாக இருப்போம் என எண்ணுவதில்லை... யோகா, மூச்சுப்பயிற்சி என தினமும் 30 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும்..

10 , கடைசியாக நான் சொல்லப்போவது பைத்தியகாரத்தனமாகவோ , அல்லது தேவையற்றதாக தோணும்.. இருந்தாலும் சொல்லிடறேன்... நாம வாரம் ஒரு முறை ரிலாக்ஸ்ஸாக இருக்க, டைம் பாஸ் பண்ண  சினிமா, கோயில், பீச், பார்க் எங்காவது சென்று மனதை ரிலாக்ஸ் பண்ணிக்கறோம்.. பொழுது போக்கு - எண்ட்டர்டெயின்மென்ட்.. அந்த மாதிரி மாதம் ஒரு முறை அரசு மருத்தவமனைக்கு ஒரு விசிட் அடிக்கனும்.. எத்தனை பேர் .. எத்தனை நோய்கள், எத்தனை அஜாக்கரதைகள், எத்தனை விபத்துகள் என்பதை கண்கூடாக கண்டால் நமக்கு வாழ்வின் அர்த்தம், மதிப்பு புரியும்.. அதே போல் தெரிந்தவர், உறவினர் மரணங்களுக்கு  செல்கையில் சுடுகாடு வரை போய் வர வேண்டும்.. அந்த குடும்பத்துக்கும் ஒரு ஆறுதல், நமக்கும் வாழ்வின் நிலையாமை தத்துவத்தை நமக்கு நாமே உணர நல்ல வாய்ப்பு

சம்பத்தின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. நான் மரணத்தகவல் சொன்னதும் பொள்ளாச்சியில் தன் குடும்பத்துடன் சுற்றுலாவில் இருந்தபோதும் உடண்டியாக அதை  கேன்சல் செய்து சென்னிமலை வந்து துக்க நிகழ்வில் பங்கு கொண்ட  காலச்சுவடு ஆசிரியர்க்கு என் நன்றிகள்..

 சம்பத்தின் புகைப்படம்  போட வேண்டாம் என அவர் குடும்பத்தில் கூறி விட்டனர்.. அவர் இன்னும் அவர்களோடு வாழ்வதாக  நம்புவதால்...

நான் ஏன் இவ்வளவு முட்டாளா இருக்கேன்னா.......


 https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc6/149793_358002940929367_102856449777352_1006961_1666476748_n.jpg




1.மிஸ், நான்தான் உங்களை லவ் பண்ற முதஆளா?



ஆமா, லவ் பண்ணி 1 வருஷம் ஆகியும் சும்மா தொண தொணன்னு பேசிட்டு மட்டும் இருக்கற முதஆள் நீங்க தான்


---------------------------


2.  நான் ஏன் இவ்வளவு முட்டாளா இருக்கேன்னா எப்படியும் பொண்ணுங்க அறிவாளியை முட்டாள் ஆக்கிடுவாங்க, ஏன் அவங்களுக்கு சிரமம்?ஹி ஹி


------------------------------


3 மனசுக்குப்பிடிச்சவரின் தவறுகளை ( -) நாம் கண்டு கொள்வதில்லை,பிடிக்காதவர்களின் சின்ன சின்ன குறைகளை நாம் ஒதுக்கி விட முடிவதில்லை


-----------------------------------

4. பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகுவோம் - மு.க # சோனியா - நீங்க முதல்ல விலகுங்க, அப்புறம் நாங்க வாபஸ் வாங்கறோம்


-----------------------------------

5  நம் உள்ளங்கைகள் இரண்டும் இணைந்திருந்தபோது நம் நான்கு கண்களும் கலந்திருந்தது

----------------------

6.  பொய் சொன்ன வாய்க்கு விருந்தே கிடைத்தது. நீ அழகென்றேன்! உன் உதட்டால் மென் ஒத்தடம் இட்டாய்!


---------------------------

7.  சேவல்களை நாம் என்றும் ரசித்ததே இல்லை, நம் இருவரையும் பிரிக்கும் முதல் பறவை அதுதான்



---------------------------

8. . என் கவிதைகளுக்கான கருப்பொருள் தீரும்போதெல்லாம் உன் கண்களை ஒரு முறை பார்த்து என் கற்பனையை கூர் தீட்டிக்கொள்வேன்



---------------------------------
9. .  உன் வாசம் வீடெங்கும் விரவிக்கிடக்கிறது.. உன் அழகு அறை எங்கும் பரவிக்கிடக்கிறது! நீ மாலை வரும் வரை தாக்குப்பிடிக்க அவை போதும்


-------------------
10.  . உன் அழகு ஜெவின் அகம்பாவம் போல் அதீதமாய்! என் அன்பு கலைஞரின் பொய் போல் கணக்கற்றதாய்!



------------------------------


11. சென்னை மெரினாவில் கடல் சீற்றம்: பொதுமக்கள் குளிக்க தடை ..# இதை சாக்கா வெச்சு வீட்டுல கூட குளிக்காம இருந்திடாதிங்க


------------------------------

12. பெண்கள் கண்ணுக்குப்போடும் ஐ டெக்ஸ் மையை நரை மீசை மறைக்க பயன்படுத்தலாம் என முதன் முதலில் கண்டு பிடித்தவன் தமிழனே! # டையிங்க் மாஸ்டர்


-------------------------------------


13. திருமணம் ஆனதும் ஆண்கள் கற்றுக்கொள்ளும் முதல் பாடம் மனைவி சேலை கட்டும்போது அவர்கள் காலடியில் அமர்ந்து சேலைக்கு மடிப்பு பிடிப்பதே:)



------------------------------------

14. குட் மார் னிங்க் மேடம் என்றேன், முறைத்தார், சிரித்தேன் # அப்ரைசல் ஊ ஊ ஊ ஊ



----------------------------


15. கணவன்மார்கள் பனியன் அணியும்போது தங்கள் மனைவியின் உதவி நாடுவதில்லை, ஆனால் ... ஹி ஹி ஹி மியாவ் # நீதி - ??


------------------------------


16,  கலகங்கள் ஒழிந்தால் ,கழகங்கள் அழிந்தால் தமிழ்நாட்டுக்கு நன்மை பிறக்கும்,தமிழன் வாழ்வு சிறக்கும்


----------------------

17. நித்யானந்தாவுக்கு சைவ சித்தாந்தம் தெரியுமா? புதிய "வீடியோ'வால் சர்ச்சை # நான் பேசிக்கலி சைவம், பிசிக்கலி அசைவம் - நித்தி



-----------------------------


18.நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் வறுமை பாதிக்குப் பாதி குறைந்து இருக்கிறது.''- மன்மோகன் சிங் # அத்தனை ஏழைகளையும் நாடு கடத்தீட்டீங்களா?


--------------------------------

19. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டுமா- ஏ.பி.பரதன் # மொடாக்குடின்னா ஓக்கேவா?


------------------------------

20.  பாரத் பந்த், பஸ் ஓடலைன்னா லீவா?ன்னு கேட்டேன், அப்போ ஆஃபீஸ்லயே தங்கிக்கோன்னுட்டாரு டேமேஜர் , நற நற


------------------------------



Monday, June 04, 2012

மயங்கினேன் தயங்கினேன் - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22218_1.jpgஉங்க இடது கைல 2 ராஜேஷ் குமார் நாவல், வலது கைல 3 தேவி பாலா நாவல், 5 நாவலையும் அட்டர் டைம்ல படிச்சு கதை சொல்லுன்னு உங்க கிட்டே சொன்னா எப்படி இருக்கும்?அப்படித்தான் இந்த படத்தை பார்க்கறப்ப எனக்கும் இருந்துச்சு.. பொறுமையா உக்காருங்க, கதை சொல்றேன்... 

டிராக் -1 :  ஹீரோயின் க்கு ஒரு தங்கச்சி, ஒரு அம்மா, ஒரு அப்பா.. எதிர்பாராதவிதமா அம்மா, அப்பா இறந்துடறாங்க, அந்த அதிர்ச்சில தங்கச்சி மன நிலை பாதிக்கப்பட்டுடறா... மனநலக்காப்பகம்ல அவளை சேர்க்கறாங்க.. அங்கேயே ஹீரோயினும் சிஸ்டம் ஆபரேட்டரா சேர்ந்துக்கறாங்க.. அந்த காப்பகத்தோட நிறுவனர் நம்ம நித்தியானந்தா மாதிரி.. அந்த காப்பகத்துல இருக்கற பொண்ணுங்களை ரேப் பண்ணி தன் வெப்சைட்ல அப்டேட் பண்றான்.. ( வெப்சைட் லிங்க் எல்லாம் கேட்கக்கூடாது.. ) ஹீரோயின் அதைக்கண்டுபிடிச்சு போலீஸ்ல வில்லனை மாட்டி விட்டுடறா.. அந்த கடுப்புல வில்லன் அவளை பழி வாங்க தேடிட்டு இருக்கான்..

டிராக் 2 - ஹீரோவோட ஃபிரண்ட் காதல் படத்துல பரத் வந்தா மாதிரி ஒரு பைக் மெக்கானிக். தனுஷ்க்கு தம்பி மாதிரி ஆள் இருப்பார், ஆனா அவரையும் ஒரு 50 மார்க் ஃபிகர் வலியனா துரத்துது.. லவ் பண்ணுது.. அவன் மேல மேல வந்து விழுது.. மெயின் மேட்டர் தவிர மத்த மேட்டர் எல்லாம் முடிஞ்சுடுது, ஆனா வீட்ல சிங்கப்பூர் மாப்ளை பார்க்கறாங்கன்னு சொன்னதும் பாப்பா எந்த விதமான  மன தடுமாற்றமோ, சங்கடமோ இல்லாம ஓக்கே சொல்லிடுது.. இவன் மெண்ட்டல் ஆகிடறான்


 டிராக் -3 :  இன்னொரு வில்லன், இவன் .இன்ஸ்பெக்டர், ஆள் புரியாத புதிர் ரகுவரன் மாதிரி சைக்கோ பார்ட்டி.. ஆஃபீஸ் போறப்போ அவன் சம்சாரத்தை வீட்டுக்குள்ளேயே பூட்டிட்டு போற ஆள்.. ஒரு நாள் அவன் இல்லாதப்ப அங்கே வர்ற ஹீரோவோட ஃபிரண்ட் கூட பழக்கம் ஆகி ஹி ஹி .. ஒரு டைம் ஃபுல் மீல்ஸ் சாப்பிடச்சொல்லி அவன் சாப்பிட்டதும் தற்கொலை செஞ்சுக்குது//


டிராக்  4 : இப்போ தான் மெயின் கதை.. ஹீரோ ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்..ஹீரோயின் அதே நிறுவனத்துல ஒர்க் பண்ற டெலி காலர்.. ஏதாவது அவசர கேஸ்னா அவ தான் ஹீரோவை கூப்பிடுவா .. ஐ மீன் ஃபோன்ல .. 2 பேரும் நேர்ல பார்த்துக்காமயே ஃபோன் லவ் பண்றாங்க.. ஆனா குள்ளநரிக்கூட்டம் படத்துல வர்ற மாதிரி நேர்ல பார்த்துக்கறாங்க.. ஆனா அவங்க தான் இவங்கன்னு அவங்களுக்கு தெரியாது..எப்படியோ கஷ்டப்பட்டு தெரிஞ்சு நம்மையும் கஷ்டப்படுத்தி பாடா படுத்தறாங்க..



http://www.koodal.com/cinema/koodal_reel/2011/mayanginen-16.jpg


இந்த 4 டிராக்கும் எப்படி இணையுது? வில்லன் துரத்திட்டு வந்த ஹீரோயின் வில்லன் கைல மாட்னாளா? என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதி கதை.. ம்க்கும், 98 % கதை சொல்லியாச்சு..


நிதின் சத்யா நல்ல நடிகர் தான்.. ஆனா இந்தப்படத்துல அண்ணனுக்கு சான்ஸ் கம்மி.. ஏதோ வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம நடிக்கறார்.

மத்த ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் பற்றி சொல்ல பெருசா ஏதும் இல்லை.. கஞ்சா கறுப்பு கடி கடுப்பு.. என்ன சொன்னாலும் காமெடின்னு நினைச்சுக்குவார் போல. .


சைக்கோ போலீஸ் அஜய் ரத்னம் நடிப்பு  ஓவர் டோஸ்








இயக்குநரிடம் சில கேள்விகள்


1. இன்ஸ்பெக்டர் வில்லன் கோயிலுக்கு தன் சம்சாரத்தோட போறார், அப்போ சம்சாரம் மஞ்சள் கலர் சேலை கட்டிட்டு வருது, கோயில்ல ஒரு பன்னாடை அதாவது ஹீரோவோட ஃபிரண்ட் “ மேடம்  நீங்க செம கட்டையா இருக்கீங்க.. இந்த மஞ்சள் கலர் புடவை உங்களுக்கு சூப்பர்னு சொல்றான்.. எந்த ஊர்லயாவது கணவனை பக்கத்துல வெச்சுக்கிட்டே அப்படி யாராவது கமெண்ட் அடிப்பாங்களா? அதுவும் கணவர் ஒரு இன்ஸ்பெக்டர்..


2. வீட்டுக்கு வந்ததும் இன்ஸ்பெக்டர் கடுப்பாகி அந்த  மஞ்ச சேலையை உருவி சிகரெட் லைட்டரால எரிச்சிடறார்... அடுத்து 2 நாள் கழிச்சு ஹீரோவோட ஃபிரண்ட்  வீட்டுக்கு வந்து இன்ஸ்பெக்டர் சம்சாரம் கிட்டே “ நான் உங்களை முதல் முதலா பார்த்தேனே , மஞ்சள் கலர் புடவை அதை கட்டிட்டு வாங்க.. பார்க்கனும் போல இருக்குங்கறான்.. மேடமும் கட்டிட்டு வர்றாங்க.. அது எப்படி?


3. ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ ஹீரோயின் டெட் பாடியை வெச்சு அவ தலை மாட்டுல ஆரம்பிச்சு குழி தோண்டுறான்.. ஆனா குழி தோண்டி முடிக்கறப்போ அந்த குழி ஹீரோயின்க்கு கை சைடுல இருக்கு..


4. மொட்டை மாடில 1 ஏக்கர் அளவு இடம் இருக்கு.. நாடோடிகள் படத்துல வர்ற மாதிரி ஹீரோ மற்றும் நண்பர்கள் 3 பேரு படுத்திருக்காங்க.. ஹீரோவின் தங்கை போக ஏகப்பட்ட இடம் இருந்தும் அந்த 3 பேரை மிதிச்சுட்டு போறா.. அது காமெடியா?


5. ஹீரோயின் அடிக்கடி ஹீரோவுக்கு ஃபோன் பண்றாங்க , 2 பேரும் நேர்ல பார்த்துக்கிட்டதில்லை.. இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக் , ஹீரோ ஹீரோயினை பார்க்கலை ஓக்கே ஆனா ஹீரோயின் கம்ப்யூட்டர்ல தான் ஒர்க் பண்றாங்க? ஹீரோ அதே கம்பெனில ஒர்க் பண்றப்போ அவர் நினைச்சா ஈசியா சிஸ்டம்ல பார்க்கலாமே?


6. ஒரு சீன்ல ஹீரோயின் கொலுசுல திருகாணியை டைட் பண்ண பாவாடையை ஏன் முழங்கால் வரை தூக்குது? ஹீரோவும் பக்கத்துல இல்லை.. ஆடியன்சை கிளுகிளுப்பேத்தவா?


7. எந்த லூசாவது தான் பண்ற கில்மா ரேப் வேலையை எல்லாம் தன் வெப்சைட்ல ஏத்துவானா? வில்லன் அப்படி பண்றாரே? அதுவே எவிடென்ஸ் ஆகாதா?


8. சரி. அப்படித்தான் வெப்சைட்ல ஏத்தி வெச்சிருக்கார்னே இருக்கட்டும் , அதே சிஸ்டம்ல ஒர்க் பண்ண ஹீரோயினை  வில்லனே அப்பாயிண்ட் பண்றாரே? அது எபப்டி? அவ பார்ப்பா-னு தெரியாதா?


9. வில்லனின் கில்மா வேலைகளை எல்லாம் பென் டிரைவ்ல காப்பி பண்ணி மறைவா  வைக்காம லூஸ் ஹீரோயின் என்னமோ பெருமையா கம்பேனி ஐ டி கார்டு டேக் மாதிரி கழுத்துல மாட்டிட்டு இருக்கு.. அவளை பிடிச்ச வில்லன் உலக மகா  கேனம் போல “ ஆதாரத்தை எங்கே வெச்சிருக்கே?னு கேட்கறான்

10. ஒரு சீன்ல வில்லன் கோபம் வந்து அவர் போட்டிருக்கற பவர் கிளாசை தூக்கி எறியறார்.. யாருக்கு நஷ்டம்? புரொடியூசருக்கும், வில்லனுக்கும் தான்..

11. வில்லன் ஒரு பொம்பளை பொறுக்கி.. ஹீரோயின் லட்டு மாதிரி இருக்கா .. தனியா மாட்டிக்கிட்டா.. வில்லன் கூட 17 அடியாள்ங்க இருக்காங்க.. அவங்களை காவலுக்கு வெச்சு ஹீரோயினை ரேப் பண்ணாம் அந்த வில்லன் லூசு மாதிரி என்னமோ ஹீரோவை துரத்தி துரத்தி அடிக்கற மாதிரி அடிச்சுட்டு இருக்கான்.. அப்படியா ஒரு பெண்ணை அடிப்பாங்க?


12. ஆசிரமத்துல வில்லன் போலீசால் அப்போதான் கைதாகிறார்.. உடனே  மக்கள் எல்லாம் என்ன விபரம்னே தெரியாம கல் எடுத்து அடிக்கறாங்க..


13. வில்லன் தன்னை  சேஸ் பண்ணிட்டு இருக்கான்கற மேட்டரை ஹீரோயின் ஏன் எஸ் எம் எஸ் பண்ணலை?


14.  அம்மா, தங்கையுடன் வீட்டில் இருக்கும் ஹீரோ ஃபிரண்ட்சுடன் டைனிங்க் ஹால்ல சரக்கு ஓப்பன் பண்றார்.. பக்கத்துலயே அம்மா..


15.  பூட்டுன வீட்ல நுழையும் திருடன் முதல் வேலையா தாழ்ப்பாள் போட்டுக்குவான்.. ஆனா வில்லன் வீட்டுக்குள்ளே எப்படி திருடன் உள்ளே இருக்கும்போது வர்றான்?







 மனம் கவர்ந்த வசனங்கள்


1. பிடிக்காத பொண்ட்டாட்டியா இருந்தாலும், புருஷனா இருந்தாலும்  பேசிக்காம இருக்க மாட்டாங்க ..


2.  மாமி .. ஏதாவது உண்டியல்ல போடுங்க.. கோவில் கும்பாபிஷேகத்துக்கு நிதி திரட்டறோம்..

 என் கிட்டே குலுக்கி என்ன பிரயோசனம்.. மாமா கிட்டே குலுக்குங்கோ..

மாமா..

 போப்பா .. நான் மாமி உண்டியல்லயே காசு போடறதில்லை, சாமி உண்டியல்லயா போடப்போறேன்?


ஹூம், மாமா போடத்தயங்குனாலும் மாமி போட்டுடறா ..



3. அந்தக்காலத்துல விவரமாத்தான்யா கண்டு பிடிச்சிருக்காங்க.. போலீஸ்க்கு சைரன் மாதிரி, பெண்ணுக்கு கொலுசு.. ஓசையை வெச்சே கண்டு பிடிச்சுடலாம்..


4.  ஏண்டா, நீ கொடுத்த 500 ரூபா நோட்டுல காந்தித்தாத்தாவே இல்லையே?

ஹி ஹி அவசரத்துல என் தாத்தா ஃபோட்டோவை பிரிண்ட் பண்ணீட்டேன்..


5. யோவ்.. நான் புதுசா? பழசா?ங்கற  ஆராய்ச்சி இப்போ ரொம்ப முக்கியமா?


6. யோவ், நீ கறுப்பு.. உன் பொண்ணு சிவப்பு... எனி ஃபேமிலி சீக்ரெட்?

 போடா.. நீ கூட கறுப்பு, உங்கக்கா சிவப்பு நான் ஏதாவது கேட்டேனா?


7. என்னடி வேணும் உனக்கு?

 நீ தான்


 எஸ்னு சொன்னா கிஸ் வரை போயிடுவே.. கிளம்பு காத்து வரட்டும்


8.  யோவ்.. என்னைப்பத்தி உனக்குத்தெரியாது.. என் வலை தனி வலை ..






9.  உன் ஆள் வர்றாடா..

 ஏழரை வருதுன்னு சொல்லு..

 என்னடா சொன்னே?

 ஸ்பேனர் சைஸ் சொன்னேன்க்கா..


10. உங்க பேர் அனுவா?

 ஏன்?

 காபி வித் அனு மாதிரி.. ஹி ஹி


11. காலைல கொடுத்த காபி செம அதே மாதிரி குடுங்க..

 அதே மாதிரி கொடுத்தாச்சு..

 எப்படி?

 அது ஜெராக்ஸ் காப்பி ஆஃப் த காப்பி


12.  மேடம், அவனோட ரைட் ஹேண்ட், லெஃப்ட் ஹேண்ட் எல்லாம்  நான் தான்.. எதா இருந்தாலும் என் கிட்டே சொல்லுங்க..


ஏன் அவன் ஹேண்டி கேப்டா?


13. ஏண்டா லூசு.. பர்த்டேக்கு பொக்கே தராம புரோட்டாவா தருவாங்க ?


14. குழந்தைங்க அழுதுட்டே பிறக்கறது சிரிச்சுட்டே  வாழத்தான்


15. ஆம்பளைங்களை சந்தோஷப்படுத்தறதே  நல்ல பெண்ணுக்கு அழகு..


16.  ஆம்பளைங்க கிட்டே எப்படி வேணாலும் பேசிக்கோ, ஆனா பொம்பளைங்க கிட்டே மட்டும் ரொமாண்டிக்கா பேசு..


17. நான் தான் ஒத்தைல இருக்கேன்னு பார்த்தா  எனக்கு வந்திருக்கற  தலைவலியும் ஒத்தையா தான் இருக்கு ..


18.  என்னங்க.. நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்களுக்கு தலைவலி தைலம் தடவவா? ரிலீஃபா இருக்கும்


 என் வாழ்க்கைல  இனி ரிலீஃபும் இல்லை, ரீ லைஃபும் இல்லை








எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - அஜித் பெயின் ( தலவலி)










http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22221_1.jpg


அப்பாடேக்கர் ட்வீட்டரின் பேட்டி -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 7





சென்னையில் நடந்த மெகா ட்வீட்டப்ல வாழை அமைப்பு பற்றி திவ்யா மேடம் பேசிய உரை தான் இந்த பதிவுல முதல்ல வந்திருக்கனும்.. ஆனா தமிழனான நான் தமிழ் சினிமா பார்த்து பார்த்து கெட்டுப்போனதால கருத்து சொல்றதை ஓப்பனிங்க்ல வெச்சுக்கறது இல்லை.. இடைவேளைக்குப்பிறகுதான் .. அவர் பேசியதின் சாராம்சம்


வாழை

சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த இயந்திர வாழ்வில், பள்ளிப்பருவத்தின் முக்கியம் அறியாத கிராம குழந்தைகளுக்கு வழிகாட்டியாக சிலர் செயல்படுகிறார்கள் என கேள்விப்பட்டேன். வார இறுதி ஓய்வுநாளை எப்படி செலவு செய்வதென்று அறியாமல் பல இளைஞர்கள் உள்ளனர். வாழையை பற்றி அறியாதவரை நானும் அப்படிதான் இருந்தேன்.


நம் சமுதாயத்தை எப்படியாவது மாற்றவேண்டுமென்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் உண்டு. ஆனால் எந்த விதத்தில் செயல்படவேண்டுமென தெரியாமல் இருப்போம். நமக்கும் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது நம் வாழை. நம் சமுதாயத்தில் அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைத்தால் போதும், இந்த சமுதாயமே மேன்படும். இதனை அடைவதற்கு வாழை சிறந்த செயல்முறையை வரையறுத்துள்ளது, நம்முடைய பங்கு இதனை செயல்படுத்துவதில்தான் உண்டு.

மாதம் ஒரு முறை கல்வி பட்டறைக்கு செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் பட்டறை செயல்படுத்த தேவைப்படும் மூலபொருளை தயார்படுத்தி இருப்பர் (வரப்போகிற பட்டறைகளுக்கு நாமும் உதவலாம்), நாம் அதனை செயல்படுத்த உதவினால் போதும். அந்த பட்டறையில் கல்வி மற்றும் soft skills பற்றிய sessions இருக்கும்.

கல்விக்கு மேல் குழந்தைகளுக்கும் நமக்கும் ஒரு அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை உறவை வாழை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த உறவு பட்டறை முடித்து நாம் வீடு திரும்பிய பிறகும் தொடரும். அவர்களுடன் கடிதத்தின் மூலமாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாகவோ தொடர்புகொண்டு அவர்களின் முன்னேற்றத்தை நாம் அறிந்து கொள்ளலாம், மேலும் அவர்களை ஊக்குவிக்கவும் செய்யலாம்.




வாழை நம்மிடம் எதிர்பார்ப்பது:

1. நம்முடைய நேரம் (மாதம் ஒருமுறை கிராமத்திற்கு சென்று கல்வி புகட்ட)

2 குழந்தைகளிடம் செலவிட சில நேரம் (வாரம் ஒருமுறை அவர்களிடம் தொலைபேசியில் பேச)

3  வருடத்தில் 12 முறை பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும்

4 வாழை யாரிடமும் கட்டாயமாக பணம் எதிர்பார்பதில்லை, விருப்பப்பட்டவர்கள் வருட சந்தாவோ அல்லது நன்கொடையோ அளிக்கலாம்

5 . கல்வி பட்டறைக்கு சென்று வர பேருந்து சந்தா.

வாழைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்


இவங்க பேசி முடிச்ச பின்னால நான் கொஞ்சம் ஹால்க்கு வெளீல வந்தேன்.. அப்போ பல்லவ மன்னன் அங்கே நின்னுட்டு இருந்தாரு..அவர் கிட்டே பேசுனது..






 “ யோவ்.. என்னய்யா நயன் தாராவை பறி கொடுத்த சிம்பு மாதிரி பம்மிக்கிட்டு நிக்கறீங்க? உள்ளே தானே ட்வீட்டப் மீட்டிங்க் நடக்கு.. இங்கே என்ன பண்றீங்க? “


 இல்லை மாப்ஸ்.. என்னை பிளாக் பண்ணிட்டாரு ஒரு பிரபல ட்விட்டர்... அவர் இப்போ இங்கே வந்திருக்காரு. அவர் கிட்டே  ஏன் என்னை பிளாக் பண்ணிட்டீங்க?ன்னு கேட்கலாம்னு வந்தேன்..


இதெல்லாம் சப்ப மேட்டர்.. அவர் என்ன இண்ட்டர் நேஷனல் ஃபிகரா? அவர் பிளாக் பண்ணுனா என்ன லாஸ் உங்களுக்கு? ஆனா அந்த மடம், ஆகாட்டி சந்த மடம்.. “இவர் போனா வேற ஒருத்தர் வந்துட்டு போறாருன்னேன்..


அவர் உடனே சொன்ன ஃபிளாஸ்பேக் ( இதில் அவன் இவன் என அவரைப்பற்றி இவர் குறிப்பிடுவது ஒரு உரிமையிலும், பழக்கத்திலும்)


ஆரம்பத்தில் நானும் அவனும் நல்ல முறையில் தான் நட்போடு இருந்தோம்.. அவனோட ஸ்பெஷாலிட்டி டைமிங்காக காமடி பண்ணுவது தான்.. அவன் மூலமாக தான் எனக்கு பிரீயாவுடு டேவிட் அறிமுகம் ஆனார். ஒருநாள் திடீர் என்று அவன் டுவீட்ஸ் வராததை கண்டு அவன் ப்ரோபைல் பேஜை கிளிக் செய்தேன்.

அப்போது தான் அவன் ப்ளாக் செய்தது தெரிய வந்தது.. நாம எதுவும் அவன திட்டவோ கிண்டலோ செய்யலையே எதுக்கு ப்ளாக் செஞ்சான் என்ற ஆதங்கம் இருந்தது..

அப்போது தான் ரியல்பீனு புதிதாக டுவீட்டார் வந்த நேரம். அந்த பெண் அவரிடம் மேன்ஷன் போட்ட போது ஸ்டுபிட் என்று பதில் அளித்தார் DKCBE.

பிரீயாவுடு டேவிட் ,வாலிபன் ஷேக் போன்றவர்களுக்கு போன் செய்து கேட்டதில் அவர்களும் சொன்னார்கள் தீபக் எப்போ ப்ளாக் பண்ணுவான் எதுக்கு ப்ளாக் பண்ணுவான் என்றே தெரியாது அவன் ரொம்ப சென்சிடிவ் என்றார்கள்.

எனக்கு முன் புரட்சிகனல்SGR என்பவரை ப்ளாக் செய்தார் தீபக். அப்போது SGRக்காக நான் தீபக்கிடம் கேட்டபோது his tweets are stereotypic என்று பதில் அளித்தார்..

ஒருநாள் திடீர் என்று எனக்கு தீபக் மேன்ஷன் போட்டு "yes I have unfollowed and going to block riyazdentist " grow up kids .. U are not replying my mentions 

என்ற டுவீட் போட்டார். அதுக்கு நான் பதில் சொன்னேன் நான் எந்த ஒரு mentionக்கும் பதில் அளிக்காமல் இருந்ததில்லை.. ஒருவேளை groupப்பாக ரயில் வண்டி சாட் நடக்கும் போது தவறி இருக்கலாம் என்றேன். போனில் தொடர்புகொன்டாலும் பிக்கப் பண்ண மாட்டான்.

கோவை டுவீடப் நடந்த போதும் அதை தொடர்ந்து திருச்சி டுவீட்டப் போதும் நான் கால் பண்ணி அவன் எடுக்கவே இல்ல .

இப்போ அபோ நேரில் சந்தித்து கேட்டேன்., அதுக்கு அவன் பதில் " I don't like your tweets so blocked" that is my wish 



 ஃபிளாஸ்பேக் ஓவர்

இதானா மேட்டர்... விடுங்க கேட்டுடலாம்.. அப்டின்னேன். இங்கே ஒரு விஷயம் நல்லா கவனிங்க.. டாக்டர் ரியாஸ் அந்த பிரபல ட்வீட்டரை நண்பர் என்ற முறையில் பழகிய பழக்கத்தை வைத்துத்தான் அவன் இவன் என்ற நடையில் பேசி இருக்கார்..



இப்போ அந்த பிரபல பிளாக் ஸ்பெஷலிஸ்ட்டிடம் ஒரு பேட்டி 


அண்ணே, வணக்கம்னே... கின்னஸ் ரெக்கார்டுல இடம் பிடிக்கற அளவு  ஏகப்பட்ட பேரை பிளாக் பண்ணி இருக்கீங்க.. என்ன ரீசன்னு சொன்னீங்கன்னா உங்களுக்குப்பின்னால வர்ற  இளம் சந்ததியினர் திருந்துவாங்க, பல விஷயம் தெரிஞ்சுக்குவாங்க.




எனக்கு இங்க்லீஷ்ல ட்வீட் போட்டா பிடிக்காது.. நான் கலைஞர் மாதிரி பயங்கரமான தமிழ்ப்பற்றாளன். அதனால இங்க்லீஷ்ல யார் ட்வீட் போட்டாலும் உடனே பிளாக் தான்..ஒருத்தன் எனக்கு குட்மார்னிங்க்னு ட்வீட் போட்டான், உடனே அவனை பிளாக் பண்ணிட்டேன்

 அண்ணே, நீங்க பண்றது அநியாயம்... GM  னு இங்க்லீஷ்ல போடறது ஈசியா? காலை வணக்கம்னு போடறது ஈசியா? அதுவும் இல்லாம அவர் மொபைல் ட்வீட்.. தமிழ் விசை ஒர்க் ஆகலையாம்.. பார்த்து மன்னிச்சு விட்டுடுங்கண்ணே

அதெல்லாம் முடியாது.. நான் கலைஞர் மாதிரி, கொண்ட கொள்கைல இருந்து என்னைக்கும் மாறவே மாட்டேன்


ஓஹோ.. உங்க ஆட்டோகிராஃப் இந்த டைரில போட்டுக்கொடுங்கண்ணே...


இந்தா. பொழச்சுப்போ..


அண்ணே.. இப்போதான் தமிழன்.. தமிழ் என் மூச்சு... பேச்சுன்னு சொன்னீங்க.. உங்க பேரைக்கூட இங்க்லீஷ்ல தான் போடறீங்க, அது ஏண்ணே?


 அது வந்து.....  வந்து.. ம் எனக்கு கேள்வி கேட்டா பிடிக்காது. மென்ஷன்க்கு பதில் சொல்லலைன்னா பிடிக்காது. உனக்குக்கூட மென்ஷன் போட்டு ஒரு கேள்வி கேட்டேன், நீ பதில் சொல்லலை, உடனே பிளாக் தான்..


 அப்டி என்னண்ணே கேள்வி கேட்டீங்க. நான் கவனிக்கலை. மன்னிச்சுடுங்கண்ணே.. இப்போ அதே கேள்வியை திருப்பிக்கேளுங்க.. பிரமாதமா பதில் சொல்றேன்....

 உனக்கு மூளை இருக்கா?




 ம்க்கும்.. இதான் அந்த கேள்வியா?இந்த மாதிரி கேள்விஎல்லாம் டைம் லைன்ல கேட்டா எபப்டி பதில் சொல்ல? டி எம் ல கேட்டிருந்தா “ இல்லை”ன்னு டக்னு சொல்லி இருப்பேன்..


 நான் தான் உன்னைக்கண்டுக்கவே இல்லையே. எதுக்கு வலியனா வந்து என் கிட்டே பேசறே.. ?



 அண்ணே.. எல்லாம் ஒரு பொதுசேவை தான்.. மக்களுக்கு பல விபரங்கள் போய்ச்சேர வேணாமா? அது இருக்கட்டும்.. இந்த மெகா ட்வீட்டப்க்கு தோராயமா  120 பேரு வந்திருக்காங்கன்னு அட்டெண்டென்ஸ் ரிஜெஸ்டர் சொல்லுது.. ஆனா நீங்க மட்டும் தான் நடமாடும்  சாராயமா வந்திருக்கற மாதிரி தெரியுது. அது ஏன்?


சரக்கடிக்காமல் ஒரு நாளும் இருக்க வேணாம் - இதுதான் என் பாலிஸி.. அது என் பர்சனல் மேட்டர். அதைக்கேட்க நீ யார்டா வெண்ணே..

அண்ணே. சரக்கடிச்சு நீங்க குப்புறக்கா, அப்புறக்கா உங்க வீட்லயோ, ரோட்லயோ கிடந்தா எவன் கேட்குறான்.. பொது இடத்துல மப்போட வந்திருக்கீங்களே.. அது சரியா?ன்னு கேட்கறேன்...


 நான் வந்து யார் கிட்டேயாவது தகராறு பண்ணேனா? யாருக்காவது டிஸ்டர்பா இருந்தேனா? நான் பாட்டுக்கு ஓரமா விழுந்து கிடந்தேன், என் மப்பு என் சரக்கு என் உரிமை.....


சாரிண்ணே.. ஓக்கே .. இனி ஏதும் கேட்கலை.. பை..


கடைசில சாப்பாடு.. பிரமாதமா இருந்துச்சு.. அருமையான சமையல்.. ஏற்பாடுகள். சுடச்சுட பரிமாறுனாங்க.  குலோப்ஜாமூன் 2 , ஒரு வெஜிடபிள் சூப்.. வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி.. தயிர் சாதம் என ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்க்கு நிகரான கலக்கலான  டிஃபன் ஐட்டம்ஸ்.  ரூ 160 மதிப்புள்ள உணவு என அறியத்தகவல்...

 பல உற்சாகமான அனுபவங்களை மறக்க முடியாத ஞாபகங்களை இந்த சந்திப்பு தன்னகத்தே கொண்டது.. கருத்து வேற்றுமைகள், சில மனஸ்தாபங்கள் எழுந்தாலும் இந்த சந்திப்பு வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பாக இருந்தது..

 மீண்டும் ஒரு முறை விழா ஏற்பாட்டாளர்கள்  எக்ஸ்பர்ட் சத்யா, கரையான், பரிசல்காரன், கேசவன், பாலு அனைவருக்கும் நன்றிகள்.. விழாவை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துகள்.. 






டிஸ்கி-





இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html


எழுத்தாளர் சோலை - சில நினைவுகள்

ளிமையான எழுத்து, ஆழ்ந்த அனுபவம், கம்யூனிஸ சிந்தனை, தெளிவான பார்வை, வெகுஜன அக்கறை, நிகழ்காலப் பரபரப்பு  - இந்தக் கலவைதான் எழுத்தாளர் சோலை. பத்திரிகை​யாளராக, அரசியல் விமர்சகராக அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் பணியாற்றிய சோலை, கடந்த 29-ம் தேதி காற்றில் கரைந்து போனார். அவரைப் பற்றிய நினைவுகள்...

1. நல்லகண்ணு (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி): சோமசுந்தரம் என்ற சோலை அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே பூமி தான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, நிலம் இல்லாதவர்களுக்காகப் போராடினார். பூமி தானப் பிரசாரத்துக்குப் போன தோழர் ஜீவானந்தம், சோலை அவர்களின் எழுத்து ஆற்றலைக் கண்டு 'ஜனசக்தி’யில் பணியாற்ற 1959-ல் அவரைச் சென்னைக்கு அழைத்து வந்தார். கட்சியில் பிளவு ஏற் பட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். பிறகு, எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். சோவியத் யூனியன் சென்று வந்ததும் அவர் எழுதிய, 'சிவப்பு ரோஜா’ பலராலும் பாராட்டப்பட்டது.
முற்போக்கு எண்ணம் கொண்ட சிறந்த பத்திரிகை​யாளர். எளிய தமிழில், அழுத்தமான கிராமப்புற வார்த்தைகளுடன் அவர் வடிக்கும் கட்டுரைகள், அனைத்து மக்களையும் வெகுவாகக் கவர்ந்தவை. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை, விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆழ்ந்து யோசித்து எழுதும் வல்லமை படைத்தவர். எனக்கும் அவருக்கும் மிக நெருங்கிய பழக்கம் உண்டு. சில விஷயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும், அதை நட்புடன் விமர்சித்துக் கொள்வோம். நீண்ட அரசியல் அனுபவம்​கொண்ட ஒரு பொக்கிஷத்தை இன்றைய தலைமுறை இழந்துவிட்டது. அவரது வாழ்க்கை அனைத்து பத்திரிகை​யாளர்களுக்கும் பாடம்.



2. ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று 'தீக்கதிர்’ இதழைத் தொடங்கி நடத்திய நால்வரில் முக்கி யமானவர் சோலை. அடுத்தடுத்து அரசியல் ரீதியாக அவர் பல மாறுபட்ட தளங்களில் இயங்கினாலும், மிகச்சிறந்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் பொன்விழா ஆண்டு, வரும் ஜூன் 29-ம் தேதி தொடங்குகிறது. அந்த விழாவுக்கு நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என்று நான் சொன்னபோது, அழைப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அவர் தொடங்கிய பத்திரிகையின் பொன்விழாவைக் காண்பதற்கு முன்பே இயற்கை அவரை அழைத்துக்கொண்டு விட்டது. தீக்கதிர் இதழின் பொன் விழாவுக்கு அவர் ஒரு சிறப்புக் கட்டுரை தீட்டி வைத்திருப்பதாகச் சொன்னார். அதைத் தீக்கதிர் இதழில் பிரசுரிப்போம். இதுதான் அந்த எளியவருக்கு நாங்கள் செலுத்தும் நன்றி கலந்த அஞ்சலி.



3. துரை கருணா (பத்திரிகையாளர்): எம்.ஜி.ஆர் நடத்திய, 'அண்ணா’ பத்திரிகையின் ஆசிரிய​ராக சோலை அவர்கள் இருந்தபோது, நான்கு ஆண்டு காலம் அங்கு நான் நிருபராகப் பணியாற்றி​னேன். எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை முன்னிறுத்​தியபோது, சோலை அவர்களைத்தான் ஜெயல​லிதாவுக்கும் அரசியல் ஆலோசகராக நியமித்தார். உட்கட்சிப் பிரச்னைகளைத் தீர்த்து​வைப்பதில் சோலை வல்லவர். ஒரு முறை திருநெல்வேலி தொகு​திக்கு இடைத்தேர்தல் வந்தபோது, கருப்பசாமி பாண்டியனை அழைத்த எம்.ஜி.ஆர், 'நீதான் வேட்பாளர்... போய் வேலையைத் தொடங்கு’ என்று சொல்லி விட்டார். தேர்தல் நேரத்தில் ஆர்.எம்.வீரப்பனின் எம்.எல்.சி. பதவி போய் விட்டது. 


எனவே, ஆர்.எம்.வீரப்பனை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டிய கட்டாயம். அதனால் வேறுவழி இல்லாமல் ஆர்.எம்.வீரப்பனை வேட் பாளராக எம்.ஜி.ஆர் அறிவிக்கவே, கருப்ப​சாமி பாண்டியன் கோ​பத்தில் தலைமறைவு ஆகிவிட்டார்.  சோலையை  அழைத்த எம்.ஜி.ஆர், 'கானாவை சமாதானப்படுத்துங்கள்’ என்றார். அடுத்த சில நாட்களில், 'கருப்பசாமி பாண்டியன்தான் எனது முழுத்தேர்தல் பயணத்தையும் பார்த்துக்​கொள்வார்’ என்று, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். இதைப்பார்த்து கலங்கிப் போனார் கருப்ப​சாமிப் பாண்டியன். 


இதுதான் சோலை அய்யாவின் திறமை. எம்.ஜி.ஆர். - இந்திரா காந்தி ஆகியோருக்கு இடையே அரசியல் ரீதியான நெருடல் வந்தபோது, டெல்லி சென்று இந்திராவின் பிரதமச் செயலாளரான பி.சி.அலெக்சாண்டரிடம் பேசி, இருவருக்குள் இருந்த இடைவெளியைக் குறைத்தவர் சோலைதான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், அரசியல் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டு எழுத்துப் பணிகளை மட்டும்தான் கவனித்தார். அவரது மறைவு பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் இழப்பு.


4. இரா.ஜவஹர் (விமர்சகர்): அனைத்துத் தலைவர்களையும், 'அண்ணே... அண்ணே...’ என்று அழைத்து வந்த மூத்த பத்திரிகையாளர் சோலை, எனக்கு மட்டும் 'சோலை அண்ணன்’.  என் குருநாதர். 1977-ல், 'மக்கள் செய்தி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை, ஆசிரியர் சோலை எனக்கு அளித்தார். அதுதான் பத்திரிகைத் துறையில் எனது முதல் பணி. ஒரு நாளிதழ் ஆசிரியராக அவர் பணியாற்றும் பாங்கு, இப்போது நினைத்துப் பார்த்தாலும் வியக்கவைக்கும்.


செய்திகளைத் தேர்வு செய்வது, நிருபர்களுக்குப் பணி ஒதுக்குவது, தலையங்கம், கட்டுரைகள் எழுதுவது, தொலைபேசியில் வரும் செய்திகளை மின்னல் வேகத்தில் எழுதி அச்சுக் கோக்க உடனுக்குடன் கொடுப்பது, தேவையானால் மெய்ப்பு (புரூஃப்) பார்ப்பது, இதழ் விற்பனை நிலவரத்தைக் கண்காணிப்பது... எதைத்தான் செய்யவில்லை அந்த மனிதர்! ஆனால், அனைத்தையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் செய்தார்.
 பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை மேம்படுத்தி, சத்துணவுத் திட்டமாகச் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். இது ஐ.நா. சபை வரை பேசப்பட்டது. இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தவர் சோலைதான். இது அப்போதே பிரபல வார இதழில், 'மாங்குயில் கூவிடும் இடத்தைப் பெயராகக்கொண்டவர்தான் இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தார்’ என்று எழுதப்பட்டு இருந்தது. இத்தகைய திடீர் யோசனைகள் அவருக்கு  பிரத்யேகமானவை. இறந்தாலும் எண்ணற்ற பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் வழிகாட்டியாகத் தொடர்வார் அண்ணன்!''     

நன்றி - ஜூ வி