Showing posts with label AZAGIRI. Show all posts
Showing posts with label AZAGIRI. Show all posts

Tuesday, January 22, 2013

அழகிரி அதிமுக வில் அம்மாவுக்கு வாரிசாவாரா? ஓ பக்கங்கள் ஞாநி அலசல்


ஓ பக்கங்கள்

ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா?

ஞாநி

ஒருவழியாக கலைஞர் கருணாநிதி தாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும் உணர்ந்துள்ளார். அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக அவர் சொல்லி விட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. 


இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்த போதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சர் ஆனவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தாம் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவகவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்து இருக்கலாம்.



ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க. கட்சிக்குள் இருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்தது இல்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில், வைகோவை ஸ்டாலினுக்குச் சமமான தலைவராக்காமல் தமக்குச் சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக்கதை.) அப்படியே ஸ்டாலினுக்குச் சமமான தலைவர்தான் ஜெயலலிதா என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தம்மை ஜெயலலிதாவுக்குச் சமமாக தாமே குறுக்கிக் கொண்டார்.


ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளே இருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். ஸ்டாலினைவிட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ தொடக்கத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால் தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.


ஸ்டாலின்தான் அடுத்தகட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தம் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை. பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.


ஆனால் சொந்தத் தொழில் முயற்சிகளில் தோற்றுப்போன அழகிரி, அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாகச் சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அழகிரி, அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும்.


அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டும் என்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள் இருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று. தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை.


தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை தில்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.

குடும்ப நிர்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குல் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தமக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தம்மை டி.வி. நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராகக் காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன.


ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்து விட்டார். தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்னைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.


இப்போது ஒருவழியாக அவரைத்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவராகத் தாமே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லி விட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உட் கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும், தி.மு.க.வில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும்.


அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக அ.தி.மு.க.வுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை.


அழகிரி செகண்ட் சாய்ஸை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.க.வைப் பலவீனப்படுத்த விரும்பும் தில்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம்.

ஆனால், அழகிரி, எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும். குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.


கலைஞர் இனி தம் முடிவை வீட்டு நிர்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, ‘கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ, அப்போது நான் உயிரோடு இருந்தால்’ ஸ்டாலினையே முன் மொழிவேன்’ என்று சோல்லி இருக்கிறார்.

தம் காலம் முடிவதற்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தாம் விடைபெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இதுகாட்டுகிறது. எனவே தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான். இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.க.வைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

‘தி.மு.க. முடிந்து போன கதை’ என்று அண்மையில் ஜெயலலிதா தம் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க. முடிந்த கதையா காது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித வோட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.


அண்ணா 1949ல் தி.மு.க.வை ஆரம்பித்த போது அவருக்கு வயது நாற்பதுதான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்தக் கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்து விட்டிருக்கும். இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி. இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடுவயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.

இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தம்மையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.க.வைப் பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?

கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வியூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்து கொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட்அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்குச் சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை.

தி.மு.க. என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டுப் போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்துப் பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.


நன்றி - கல்கி , புலவர் தருமி 

Wednesday, June 20, 2012

ட்விட்டர் கேங்கின் அலப்பறை - உடன்பிறப்புகளே! - குறும்பட விமர்சனம்

டைட்டிலே இது தி மு க வுக்கு எதிரானதுன்னு சொல்லிடுது.. இந்த கதைக்கு போறதுக்கு முன்னே நீங்க மனதளவில் ஸ்டாலினை அண்ணனாவும், அழகிரியை தம்பியாவும் கற்பனை பண்ணிக்குங்க. ஏன்னா நிஜ வாழ்வில் அண்ணன் அழகிரி, தம்பி ஸ்டாலின் .. ஆனா இந்தக்கதைல கொஞ்சம் மாத்தி இருக்காங்க.. 


ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு அரசியல் தலைவரை ஒரு கும்பல் ஃபோன்ல மிரட்டுது . உங்களை கொலை பண்ணப்போறோம். உங்க கூட இருக்கறவங்க தான் அதை செய்யப்போறாங்க..  அப்டினு..


அதே மாதிரி அவரை ஒரு ரூம்ல அடைச்சு வெச்சுட்டு பாஸ்க்கு ஃபோனை போடறாங்க.. அந்த பாஸ் வேற யாருமில்லை. அந்த அரசியல் தலைவரோட  தம்பி தான். அண்ணனோட  அரசியல் செல்வாக்கு பிடிக்காம அவருக்கு பிறகு தான் தான் வாரிசு ஆகனும்கற வெறில  இந்த பிளான். 

இப்போ அரசியல்வாதி தன் சாணக்கியத்தனத்தை காட்ட தன்னை கொலை வந்த ஆட்கள்ட்டயே பேரம் பேசறார்.. ஒரு கோடி வாங்குன ஆட்கள் 10 கோடிக்கு ஆசைப்பட்டு பிளேட்டை திருப்பி போட்டுடறாங்க. 

 அரசியல் தலைவர்  தன் தம்பியை போலீஸ்ல மாட்டி விட்டுடறார்.. அவ்ளவ் தான் கதை,.,. 


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்


 படத்தில் பாராட்டுக்குரிய முதல் அம்சம் பின்னணி இசை. மிகச்சிறப்பா வந்திருக்கு..  படத்தோட விறு விறுப்புக்கு அது ரொம்ப உதவியா இருக்கு. 

 2 வது அம்சம் அண்ணன் , தம்பி கேரக்டர்ல நடிச்சிருக்கற 2 பேரும். 

 அண்ணனா  வர்றவர் ட்விட்டர் நண்பர் டி பி கேடி பெங்களூர்.. ஆள் நல்ல பாடியா இருக்கறதால அரசியல் தலைவர் கெட்டப் நல்லா சூட் ஆகுது.. அவரோட பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்புகள் எல்லாம் கன கச்சிதம் 

தம்பியா வர்றவர் படத்தோட இயக்குநர். சிங்கம் சூர்யா மாதிரி கெட்டப்.. ஆள் நல்ல கலர்..  ஹீரோவா நடிக்க முயற்சி செஞ்சா கோடம்பாக்கத்தில் சான்ஸ் உண்டு..  ஆனா வசனம் பேசும்போது ,மட்டும் பல்லை கடிச்ச மாதிரி பேசறார்.. பல இடங்கள்ல செயற்கை தட்டுது.. 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இவனுங்க பேச்சே இன்னைக்கு சரி இல்லையே? ஒருத்தன் முடிச்சுட்டுத்தான் போவேன்கறான்.. இன்னொருத்தன் இனி பார்ப்போமா? மாட்டோமா? அப்டினு சொல்றான்.. ம் .. 


2. ஒரு கல்லுல 3 மாங்கா அடிச்சே எனக்கு பழக்கம்


3. நாளைக்கு தலைப்புச்செய்தி,.. நாளான்னைக்கு தலைவர் பதவி.. 


4. என்னது? 10 கோடியா? ஒரு கோடிதானே பேசுனது?

 மாத்தி மாத்தி பேசறது அரசியல்வாதி நீங்க மட்டும் தானா? நாங்க பண்ணக்கூடாதா?

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்துல வசன உச்சரிப்புல ஒரு நாடகத்தனம் தெரியுது.. எல்லாருமே தயங்கித்தயங்கித்தான் பேசறாங்க..


2. மஞ்சள் பனியன் போட்டு வர்றவர் ஆள் வில்லன் மாதிரி ஜைஜாண்டிக்கா இருந்தாலும் வில்லனுக்குரிய சீரியஸ்னெஸ் மிஸ்சிங்க்,.. போதாததுக்கு ஜோக் எல்லாம் அடிக்கறார். வில்லன்க்கு டார்க் கலர்ல தான் டிரஸ் போட வைக்கனும். காமெடி ஆள் தான் மஞ்சள் டிரஸ் போடனும்


3. கூலிங்க் கிளாஸ் கழட்டறது, அப்புறம் போடறது பஞ்ச் டயலாக் பேசறது எல்லாம் உயிர் பயத்துல இருக்கற ஆள் செய்ய மாட்டார்.. அவருக்கு உயிரை காப்பாத்தனும்கற டென்ஷன் தான் இருக்கும்.. ஸ்டைல் பண்றதுக்கோ, பந்தா காட்டவோ அப்போ தோணாது..


4.  சி பி ஐ ஆ ஃபீசர் தம்பி கேரக்டர் கிட்டே பேசிட்டு அப்புறம் இப்போ இன்னொரு ஆஃபீசர் வருவார் பாருங்க , அப்டினு வர வைக்கறதும் நாடகத்தனமே.. ஏன் 2 பேரும் ஒண்ணா வர மாட்டாங்களா?


5. தன் தம்பி தான் தன்னை கொலை பண்ண ஆள் ரெடி பண்ணான் என்பது தெரிந்ததும் அண்ணன் ஷாக் ஆகறார், ஓக்கே அதை ஏன் 3 கட் ஷாட்ல  காட்டனும்?முதல் டைம் காட்டறப்போ ஓக்கே, 3 டைமும் காட்டுவது போர்


6. கொலை முயற்சிக்கே கைதா? அப்டினு நக்கலா ஒரு வசனம் வருது. ஏன்? அட்டெம்ப்ட் மர்டர், அட்டெம்ப்ட் ரேப் எல்லா க்ரைம்க்கும் தனி தனி செக்‌ஷன் இருக்கே..


7. போதை மருந்து கடத்தல் ஐ விட்னசா வர்றவர் கிராமத்து தமிழ்ல பேசறது ரொம்பவே செயற்கை.. அதே போல் அவர் தன் முதலாளியை பார்த்ததுமே பணியாமல் அவரிடம் பேசும்போது தான் மடிச்சுக்கட்டிய லுங்கியை கீழே இறக்கி வசனம் பேசறார்.. 

8. க்ளைமாக்ஸ் ல பணத்துக்காக கொலை செய்யும் கும்பல்ட்ட அண்ணனா வர்ற டி பி கே டி பேசற செண்ட்டிமெண்ட் டயலாக்கும் தேவை இல்லாதது.. 


9. ஒரு சீன்ல இன்ஸ்பெக்டர் இளமாறன் அப்டினு கூப்பிடற மாதிரி ஒரு ஷாட் வருது.. அந்த சீன்ல 4 இன்ஸ்பெக்டர் இருந்தா அது ஓக்கே. இருக்கறதே ஒரு இன்ஸ்பெக்டர் தான்.. இன்ஸ்பெக்டர்னு தான் கூப்பிடுவாங்க..


10. பொண்டாட்டி சீரியஸ்னு ஒரே ஒரு பொய் தான் சொன்னேன், உடனே கபிலன் ஊருக்கு ஓடிட்டான்னு ஒரு டயலாக் வருது.. கபிலனோட பொண்டாட்டி சீரியசா இருக்கறது  கபிலனுக்கே தெரியாம இவருக்கு எப்படி தெரியும்? அப்படியே இவர் சொன்னாலும் கபிலன் ஊருக்கு ஃபோன் பண்ணி விசாரிக்க மாட்டாரா?


11. கூலிங்க் கிளாஸ்ங்கறது பைக்ல வேகமா போறப்போ, வெய்யில்ல நடக்கறப்போ போடறது.. வீட்ல ஹால்ல தனிமைல இருக்கறப்போக்கூட கூலிங்க் கிளாஸா?


12. கதைல வர்ற அண்ணன்க்கு வயசு மீறி மீறிப்போனா அல்லது மீறாம போனா 40 தான் இருக்கும், ஆனா அவர் அரசியல் வாரிசை அறிவிக்கறாரு.. 89 வயசான கலைஞரே அதை இன்னும் செய்யலை... அவர் உடம்புக்கு எதுவும் ஆகலை.. அப்புறம் என்ன அவசரம்?



இப்போ கீழே உள்ள விபரங்கள் இயக்குநரின் வலைப்பூவில் இருந்து எடுக்கபட்டவை 


நடிகர்கள்:
அரவிந்த்
பலராமன்
சந்தோஷ்
ராஜேஷ்
லலிதா ராம்
மொகம்மெத் கஃபில்
தனசேகர்
சுப்பிரமணியன்
சரவணகுமார்
ஜெய் சங்கர்
கார்த்திக் அருள்

தொழில்நுட்ப வல்லுனர்கள்:



இசை, விளம்பரப்படம் வடிவமைப்பு – சாய் சுதர்ஷன்


ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – சரவண ராம் குமார்


ஒளிப்படங்கள் – கார்த்திகேயன்


ஒப்பனை – ஹரிஷ்


ஆங்கில அடிவரிகள் – அரவிந்த்


நட்புக்காக: கார்க்கியின் குரல்

Wednesday, June 06, 2012

ஆ ராசாவின் உள்குத்து கடிதம் - கலைஞர் அதிர்ச்சி - ஜூ வி கட்டுரை

அலற வைத்த ஆ.ராசா கடிதம்


ழுகார் உள்ளே நுழைந்ததும், தனது சிறகுகளுக்குள் இருந்து 'முரசொலி’யை எடுத்தார்! 

''கருணாநிதியின் 89-வது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களைவிட, வராதவர்களைப் பற்றித்தான் அதிகம் பேச்சு'' என்று பொடி வைத்துச் சொன்ன கழுகார், கையில் இருந்த ஜூன் 2-ம் தேதி முரசொலியின் இரண்டாம் பக்கத்தைத் திருப்பினார்.


''ஆ.ராசாவின் கடிதம்தானே?'' என்றோம்.


''கடிதமா அது. தி.மு.க. வட்டாரத்தில் அதை, 'கந்தகக் குண்டு’ என்றே வர்ணிக்கிறார்கள். நிபந்தனை ஜாமீனில் வெளியே விடப்பட்டு இருக்கும் ராசா, டெல்லியில்தான் தங்கி இருக்கிறார். டெல்லியை விட்டுக் கிளம்ப வேண்டுமானால், தனி நீதிமன்றத்தின் அனுமதி வாங்க வேண்டும். 'ஜூன் 3-ம் தேதி தலைவரின் பிறந்தநாள். அதற்கு நிச்சயம் நீங்கள் வந்துவிட வேண்டும்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொன்னார்கள். ராசாவும் ஆர்வமாக இருந்தார். ஆனால், கோபாலபுரத்தில் சிலருக்கு அதில் விருப்பம் இல்லை. 'ராசா வந்தால், பிறந்த நாள் விழாவின் ஹைலைட்டே அவர் வருகை என்று ஆகிவிடும்’ என்று சொல்லி கட்டையைப் போட்டு விட்டார்கள். இது ராசாவின் கவனத்துக்குப் போனதாம். கோபம் கொண்டாலும் ஏனோ தன்னை சாந்தப்படுத்திக் கொண்டார்!''


''சிறை தந்த பக்குவமாய் இருக்கும்.''


''இருக்கலாம்! சென்னைக்கு வந்து கருணாநிதியை வாழ்த்த இயலாத நிலையில், டெல்லியில் இருந்தே ஒரு கடிதத்தை எழுதினார் ராசா. அந்தக் கடிதம் தனது கைக்குக் கிடைத்ததும் கலங்கிப்போன கருணாநிதி, நான்கைந்து முறைக்கு மேல் அதைப் படித்தாராம்.


 'அப்படியே முரசொலியில் போடலாம்’ என்று சொன்னவர், திடீரென  'போடலாமா... வேண்டாமா?’ என்று குழம்பிப்போனாராம். கருணாநிதியை அளவுக்கு மீறிப் புகழ்வதுதான் அந்தக் கடிதத்தின் ஒட்டுமொத்த சாரம்சம் என்றாலும், ஒரே பத்தியில் தன்னுடைய ஒட்டுமொத்த ஆத்திரத் தையும் தீர்த்துவிட்டார் ராசா என்பதுதான் கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு!''


''என்ன சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்?''


''கருணாநிதி தனது வாழ்க்கை வரலாறாக எழுதிய 'நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காண்பித்துத் தொடங்கும் ராசா, 'வாழ்க்கையைப் போராட்டம் என்று வர்ணிப்போர் உளர், எனக்கோ போராட்டமே வாழ்க்கை... என்று சொல்லி இருக்கிறீர்கள். இது உங்களைப் பற்றிய உங்களின் சுயவிமர்சனம். இந்த வரையறைக்குள் வர எனக்கும் தகுதி உண்டு என வரித்துக்கொள்வதற்கு உங்களுக்குப் பின் தலைவன் இல்லை என்பது உங்களுக்குப் பெருமை. எங்களின் வெறுமை’ என்று கடுமையான வார்த்தைகள் போட்டு எழுதி இருக்கிறார் ராசா.


'கலைஞருக்கு அடுத்து ஸ்டாலின்தான் தலைவர்... இல்லை இல்லை அழகிரிக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது... ஏன் ஒரு பெண் வரக் கூடாதா? கனிமொழிதான் அடுத்த தலைவர்’ என்று ஒவ்வொருவரும் அணி அணியாகப் பிரிந்து நிற்கிறார்கள். இந்த அணிகளுக்கு ஆட்களைத் திரட்டுவது மட்டும்தான் இப்போது கட்சியில் நடக்கிறது. கட்சியில் ராசா என்பவரும் முக்கியமான மையம். 

அவரை யார் இழுப்பது என்று போட்டியே நடக்கிறது. ராசாவுக்கும் ஸ்டாலினுக்கும் ஏனோ பிடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு இரண்டு மூன்று தடவை திகார் சிறையில் போய்ப் பார்த்தார் அழகிரி. ஸ்டாலினும் இரண்டு தடவை ராசாவுடன் திடீர் சந்திப்பு நடத்தினார். கனிமொழி மீதும் ராசாவுக்கு சில வருத்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் கலை ஞருக்கு இணையான தகுதி இங்கு எவருக்கும் இல்லை என்ற கோபத்தை ராசா காட்டினார்’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.''


''ராசாவின் கோரிக்கைதான் என்ன?''


''ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவி அவருக்குத் தரப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். 'கட்சிக்காகத்தான் அவர் பல அவமானங்களைப் பட்டார். அதைக் கட்சிதான் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால், அவரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் வேண்டா வெறுப்பாகப் பார்ப்பது ஏன்?’ என்று ராசா ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். அதனால்தான், ராசா சென்னைக்கு வராமல் இருப்பதே நல்லது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்களாம்!''


''கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எப்படி?''


''எல்லாக் கூட்டங்களிலும் உமது நிருபர்கள் வலம் வந்தார்களே! ஒரு சில குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். மூன்று நாட்களாக ஸ்டாலின் நல்ல மூடில் இல்லை. ஜூன் 1-ம் தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. மகளிர் அணி விழா நடத்தியது. மகளிர் அணி நடத்தினாலும் கனிமொழிக்கு முக்கியத்துவம் தந்த விழா அது. ராஜாத்தி அம்மாள் துணையாக அந்தக் கூட்டத்துக்குப் பார்வையாளராக வந்த கருணாநிதி, விழா முடியும் வரை நெடுநேரம் இருந்து, கண்டுகளித்தார். கனிமொழியின் அன்றைய பேச்சு பலராலும் வரவேற்கப்பட்டது. கூட்டத்துக்கு ஸ்டாலினும் வந்திருந்தார்.


அடுத்த நாள், காமராஜர் அரங்கத்தில் இளைஞர் அணி சார்பில் ஒரு கருத்தரங்கம். வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்துக்கும் கருணாநிதி வரவேண்டும் என்று அழைத்தாராம் ஸ்டாலின். வருகிறேன் என்று முதலில் ஒப்புக்கொண்ட கருணாநிதி, ஏனோ வரவில்லை. இது ஸ்டாலினைக் கோபம்கொள்ள வைத்ததாம். அதனால்தான் 3-ம் தேதி பிறந்த நாள் அன்று முழுப் பங்களிப்பையும் தராமல் ஸ்டாலின் தவிர்த்து விட்டதாகச் சொல்கிறார்கள்'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட் மாறினார்.


''சிங்கத்தைச் சீண்டிவிட்டது மாதிரி நடராஜன் சிலிர்த்து எழ ஆரம்பித்து இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கி விட்டார் நடராஜன் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். போலீஸுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட நடராஜன், இப்போது மனித உரிமை கமிஷனின் கதவைத் தட்டிவிட்டார். 4-ம் தேதி, காவல்துறைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் நடராஜன் புகார் அளித்தார்.


 புகார் கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், 'கடந்த பிப்ரவரி 18-ம் தேதி டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் வந்த 15-க்கும் மேற்பட்ட போலீஸார் என் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து என்னைத் தாக்கினார்கள். ஏன், எதற்கு என்றுகூட எனக்குப் புரியவில்லை. அதன்பின், என்னை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றி, செங்கிப்பட்டி, வல்லம் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்றனர். அங்கு என்கவுன்ட்டர் செய்து என்னைக் கொல்லப்போவதாகப் பேசிக்கொண்டனர்.


 அதன் பிறகு, எங்கிருந்தோ வந்த உத்தரவை அடுத்து என்னை தஞ்சாவூர் கொண்டு சென்றனர். இது மனித உரிமை மீறல்’ என்று சொன்னார். டெல்லிக்குச் சென்று மத்திய மனித உரிமை ஆணையத்திலும் இதுபற்றி புகார் கொடுக்கப்போகிறாராம்.


'இப்போது, அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. அதிலும் போலீஸ்காரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை. நில மோசடி என்று போலிப் புகாரில் என்னைக் கைது செய்த போலீஸ்காரர்களால் அதை நிரூபிக்க முடிந்ததா? என் வீட்டில் இருந்து எதையாவது இந்த போலீஸால் கைப்பற்ற முடிந்ததா? நான் இப்போது ஜாமீனில் இருக்கிறேன். ஆனால், இப்போதும் இந்தப் போலீஸ் தொல்லையைத் தாங்க முடியவில்லை. அதிகாலையில் வாக்கிங் போக முடியவில்லை. இருட்டில் மறைந்துகொண்டு ஒருவன் பின் தொடர்கிறான். கேட்டால், போலீஸ் என்கிறான். 

 ஆனால், அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொன்னால், காட்டுவது இல்லை. அவன் போலீஸ்காரனா இல்லை... ராமஜெயம், தா.கிருஷ்ணனைக் கொலை செய்த கும்பலில் ஒருவனா என்பது எப்படித் தெரியும்?’ என்று பதற்றமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் நடராஜன்.''


''ம்!''


''தஞ்சாவூரில் பி.ஆர்.ஓ-வாக இருந்தவர் கிரி. இவர் எம்.நடராஜனுக்கு ஒரு வகையில் உறவினர். ஜெ. - சசி பிரிவின்போது இவர் வேலூருக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், தஞ்சாவூரில் நடந்த நடராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அம்மா பயத்தில் உளவுத்துறையைக் கண்டு பலரும் ஓடி ஒளிந்தனர். 

 ஆனால், இவர் மட்டும் வலிய உளவுத்துறையினரிடம் சென்று 'என்னைப் பற்றி ஏதாவது போட்டுக்கொடுங்க’ என்று ரீதியில் பேசினார். திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கல்தா கொடுத்த நேரத்தில், இவரையும் சேலம் போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இடமாற்றம் செய்தார்கள். பதவி ஏற்பதற்காக சேலம் சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். பின்னே, அப்படி ஒரு பதவியே கிடையாது என்று அங்கு சொன்னார்களாம்.''


''இது மாதிரியான இடத்தை எல்லாம் எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறார்களோ!'' என்று நாம் சொன்னதைக் கேட்டுச் சிரித்தபடி எஸ்கேப் ஆனார் கழுகார்!


படங்கள்: என்.விவேக், கே.குணசீலன்


 பிரேமலதா காட்டிய திசை!


இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, ஜூன் 3-ம் தேதி புதுக்கோட்டை வந்தார் பிரேமலதா விஜயகாந்த். கறம்பக்குடியில் பிரசாரத்தைத் தொடங்கியவர், மீனம்பட்டி கிராமத்தில் பேசியபோது, ''தி.மு.க தலைவர் கருணாநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்'' என்று புது டிராக் போட்டார். ''இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு தே.மு.தி.க. சார்பில் 89-வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரி¢வித்துக் கொள்கிறோம்'' என்று மீண்டும் அவர் அழுத்திப் பேசியது அ.தி.மு.க-வினரை யோசிக்க வைத்திருக்கிறது. 'இந்தப் பேச்சுக்கு கருணாநிதியிடம் இருந்து விரைவில் பாசிட்டிவ் பதில் வரும்’ என்று தே.மு.தி.க-வினர் சந்தோஷத்தில் கிடக்கிறார்கள்.


 கார்த்திகேயன் மன மாற்றம்!


அகில இந்திய மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் மாநாடு சென்னையில் நடந்தது. பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் கலந்துகொண்டார்கள். வெளிமாநிலங்களில் இருந்தும் மனித உரிமை ஆர்வலர்கள் வந்திருந்தார்கள்.

 இதில் ஹைலைட், ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனின் அறிக்கைதான். மரண தண்டனை தேவை இல்லை என்பதற்கான வாதங்களை அறிக்கையில் வைக்கும் கார்த்திகேயன், 'என் எண்ணத்தில் மரண தண்டனை உலகமெங்கும் ஒரு நாள் ஒழிக்கப்பட்டுவிடும் எனத் திண்ணமாக நம்புகிறேன். தூக்குக் கயிற்றின் நிழலில் இருக்கும் மனிதனின் எண்ணவோட்டம், தண்டனை விதிப்புக்கும் தண்டனை நிறைவேற்றத்துக்கும் இடையே உள்ள மிகநீண்ட இடைவெளி, தன் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை ஆகியன ஒன்றாக இணைந்து கொடும் மனவலியை ஏற்படுத்தி உள்ளத்தைச் சிதைத்து இரட்டைத் தண்டனைக்கு வழி வகுத்துவிடும்'' என்று கறாராக தனது முடிவைச் சொன்னது, தமிழ் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது!



1.ஆவுடையப்பன் - ஜெயக்குமார்... இதில் சமாளிப்பதில் கெட்டி யார்? 

 
ஆவுடையப்பன் சீரியஸான முகத்தை வைத்துச் சமாளிப்பார். ஜெயக்குமார் சிரித்த முகத்துடன் அதையே செய்வார். ரெண்டு பேருமே ஜாடிக்கு ஏற்ற மூடிகள்!


 
2. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினராக ஒரு தமிழர் கூட இல்லையாமே? 


காரியக் கமிட்டியிலா... காங்கிரஸிலா?



3. நூற்றாண்டு விழா காணும் மு.வ. பற்றி..? 



மொழி வளமும் இலக்கியத் திறனும் இருக்குமானால், ஓர் அலுவலக எழுத்தர்கூட தன்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகும் அளவுக்கு வளர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு உதாரணம் மு.வரதராச​னார். காக்காய் பிடிப்பு, கழுத்​தறுப்புகள் இல்லாமல் தன் தகுதியால் அந்தப் பதவியை அடைந்த சிலரில் ஒருவர். பரிமேலழகர் மூலமாக, பண்டிதர்களுக்கு மட்டுமே என மூடிவைக்கப்பட்டு இருந்த திருக்குறளை, தனது இனிய, எளிய தெளிவுரை மூலமாக பாமரர்க்கும் திறந்து விட்டவர்.


 'மு.வ.வின் கையடக்கத் திருக்குறள் தெளிவுரை’ என்ற பாக்கெட் அளவுப் புத்தகம் இதுவரை எத்தனை லட்சங்கள் விற்றன என்பது அதை வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கே தெரியாது.
அனைத்தையும்விட, தமிழ் இலக்கியம் சொல்லும் நெறிகளின்படி வாழ்ந்த மனிதர். ஏழை மாணவர்களை அவரே படிக்க வைத்தார். தன்னை விடத் தகுதியான மாணவன் என்று உணர்ந்தால், தனது புத்தகத்துக்கு மதிப்புரை எழுதவும் வைத்தார். அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபோது ஒரு காட்சி...
கோவில்பட்டி கோ.வெ.நா.கல்லூரி முதல்வரும் தகுதிவாய்ந்த அறிஞருமான அரசு.நாராயணசாமி, உடல் நலம் குன்றிய நிலையிலும் தன்னைப் பார்க்க வருகிறார் என்று தெரிந்ததும், துணை வேந்தரான மு.வ. தனது அறையில் இருந்து எழுந்து வெளியில் வந்து அவரைச் சந்தித்து அனுப்பி​வைத்த பெருந்தன்மைக்காரர். தமிழால் மு.வ. தகுதி பெற்றிருந்தாலும் அவரால் தமிழும் தகுதி பெற்றது!\\




3. பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றையும் ஏற்றிய ஜெயலலிதா, பெட்ரோல் விலையை ஏற்றியதற்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கிறாரே? 


'எந்த விலையாக இருந்தாலும் நான்தான் உயர்த்துவேன்’ என்ற எண்ணத்தால் இருக்குமா?



4. நாடகம் சரி, அதென்ன 'கபட’ நாடகம்? 



அரங்கத்தில் நடப்பது நாடகம். அரசியலில் நடப்பது கபட நாடகம்! 'கபடம்’ என்றால் திருட்டுத் தனம்.


சமீபத்திய உதாரணம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தினார்கள். நாடு முழுவதும் எதிர்ப்பு வந்தபோதும், 'எங்களுக்கு வழி இல்லை. மக்கள் இந்த சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று மத்திய பிரசார பீரங்கிகள் ஊதின.


 திடீரென, இப்போது 2 ரூபாய் குறைக்கப்பட்டது மட்டும் எப்படி சாத்தியம் ஆனது? 6 ரூபாய் உயர்த்தினால் போதுமானது என்றுகூட எண்ணெய் நிறுவனங்கள் சொல்லி இருக்கலாம். '8 ரூபாய் உயர்த்துவோம். எதிர்ப்பு வந்ததும் 2 ரூபாய் குறைப்போம்’ என்று ஒட்டகத்தின் கண்ணில் புல்லைக் காட்டி எடுத்துப் போடும் ஏமாற்று வேலையை பட்டப்பகலில் செய்தார்களே... அதற்குப் பெயர்தான் கபட நாடகம்!




5. 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரே பிரதமராக வர வேண்டும்’ என்கிறாரே சங்மா? 


இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன், நேரடியாகத் தேர்தலில் நின்று வென்று எம்.பி. ஆனவர் அல்ல. மாநிலங்கள்அவை உறுப்பினர். எனவே, சங்மாவுக்கு மன்மோகன் மீது என்ன வருத்தமோ? ஒருவேளை சங்மாவுக்கு எதிராக சிங் கட்டையைப் போடுகிறாரோ?


6. 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ விளம்பரங்களுக்கு மட்டும் பல கோடி செலவு செய்து விட்டார்கள் போல? 


ஒருவேளை, நூறு ஆண்டுகளுக்குத் தர வேண்டிய விளம்பரங்களை ஓராண்டில் தரத் திட்ட​மிட்டுள்ளார்களோ?



7. உண்மையான தமிழினத் தலைவர் யார் என்று கேட்டால்  'பட்’டென்று என்ன சொல்வீர்கள்? 


யாரும் இல்லை என்பேன்!



8. 'தமிழ் ஈழம் கேட்பதைக் கைவிட வேண்டும் என்று இங்கு உள்ள தலைவர்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்’ என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்? 


யாராவது அவரை வாங்கித் தரச் சொன்னார்​களா? ஞானதேசிகன் ஏன் பயப்​படுகிறார்?



9. அரசியல் அறம் என்பது என்ன? 


எழுத்தாளர் வைகறை, 'வாருங்கள் கவிஞர் இன்குலாப்பை சந்திப்போம்’ என்ற நிகழ்ச்சிக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேசிய இன்குலாப் இப்படிச் சொன்னார்...


'தமிழர் பெரும்பான்மையாக இருந்து சிங்களவர் களை ஒடுக்கினால், என் பேனா சிங்​களவர் களுக்காகவே எழுதும்’. இதுதான் அரசியல் அறம்!


10. வெற்றி மட்டுமே ஒரு மனிதனை அடையாளப்​படுத்துகிறதே? 


வீரபாண்டிய கட்டபொம்மனும், பூலித் தேவனும், மருது பாண்டியரும் வாழ்ந்த காலத்தில் தங்களின் லட்சிய வெற்றிகளைப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களை மனிதர்கள் ஆராதிக்கிறார்களே. என்ன காரணம்? வெற்றி பெற்றவர்களைத்தான் அடையாளப்படுத்த வேண்டுமானால், அவர்களைக் காட்டிக் கொடுத்தவர்​களைத்தான் நாம் பூஜித்திருக்க வேண்டும்.
லட்சியத்துக்காக, கொள்கைக்காகப் போராடியவர்கள், வாதாடியவர்கள் வரலாற்றில் இடம் பெறு​​வார்கள். அதில் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை!


 THANX -JU VI

Monday, April 23, 2012

ஸ்டாலின் - அழகிரி - மதுரை - என்ன பிரச்சனை? ஜூ வி கட்டுரை

துரையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் 17 பேருக்கு அதிரடியாக ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி, அழகிரியின் அஸ்திவாரத்தில் கை வைத்து இருக்கிறது தி.மு.க. தலைமை! 



'தங்கள் மாவட்டத்தில் கடந்த 15.4.2012 காலை, கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தியபோது, தாங்கள் அந்தக் கூட்டத்திலும், அன்று மாலை தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளாததோடு, தங்கள் பகுதியில் இருந்து விண்ணப்பித்து இருந்த இளைஞர்களையும் நேர்காணலில் கலந்துகொள்ளச் செய்யாதது கழகக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியதாகவும் தலைமைக் கழகம் கருதுகிறது.


 தங்களின் இச்செயலுக்கு உரிய காரணத்தையும் விளக்கத்தையும் இக்கடிதம் கண்ட ஒரு வார காலத்துக்குள் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். தவறினால், தலைமைக் கழகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்’ என்று, தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கூரியரில் அனுப்பிய நோட்டீஸ் 17-ம் தேதி, மதுரை தி.மு.க-வினர் வீட்டுக் கதவைத் தட்டி உள்ளே விழுந்தது.  


முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், பொன்முத்துராமலிங்கத்தின் மகன் சேதுராமலிங்கம், ரவீந்திரன், முபாரக் மந்திரி, ஒச்சுபாலு உள்ளிட்ட எட்டு பகுதிச் செயலாளர்கள், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சின்னம்மாள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வி.கே.குருசாமி, தர்மலிங்கம் உள்ளிட்டவர்கள்தான் ஷோ-காஸ் நோட்டீஸ் வாங்கிய பாக்கியவான்கள்.


 இதற்கிடையே, ஸ்டாலினின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநகரச் செயலாளர் தளபதி, அழகிரிக்கு பயந்து ஏற்கெனவே தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு ஃபேக்ஸில் அனுப்பி விட்டாராம்.


கடந்த 17-ம் தேதி காலையில் அறிவாலயத்தில் ஆற்காட்டார் முன்னிலையில் கருணாநிதியிடம் வருத்தப்பட்டு பேசிய ஸ்டாலின், 'கழகத்தில் சேலமும் மதுரையும் மட்டும் தனித்தீவாக இருக்கிறது. என்னை நோகடிக்கும் விதமாகவே தொடர் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தலைவரின் நிகழ்ச்சியை நிர்வாகிகள் புறக்கணித்தால் அவர் என்ன மனவேதனையில் இருப்பாரோ, அத்தகைய வேதனையில்தான் இப்போது நான் இருக்கிறேன். என்னைப் புறக்கணித்த அத்தனை பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

இதையடுத்து, 'மதுரையில் என்னதான் நடந்தது?’ என்று அழகிரி வட்டத்து சீனியர்கள் சிலருக்குப் போன் போட்டு விசாரித்தாராம் டி.கே.எஸ்.இளங்கோவன். அவரிடம் பேசிய பொறுப்பாளர் ஒருவர், 'கடந்த 10 வருஷமா அண்ணன் - தம்பி சர்ச்சைக்குள்ள சிக்கிக்கிட்டு நாங்க படாதபாடு படுறோம். போனா இவருக்கு வருத்தம்;


போகாவிட்டால் அவருக்குக் குத்தம். நாங்க என்னதான் பண்றது? கட்டுக்கோப்பான இயக்கத்தில் தலைவரோட பிள்ளைகளே ஆளுக்கு ஒரு நிலைப்பாட்டுல இருந்தாங்கன்னா... நாளைக்கு வீரபாண்டியார் மகன் ஒரு தப்புச் செஞ்சா தலைவரால் எப்படித் தட்டிக்கேட்க முடியும்?’ என்று வேதனையைக் கொட்டினாராம்.

நம்மிடம் பேசிய மதுரை தி.மு.க-வின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர், ''1982-ல் இருந்து அழகிரியால் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்ட சிம்மக்கல் தாவூத், காவேரிமணியம், வேலுச்சாமி போன்றவர்கள் பிறகு, அவராலேயே ஓரம் கட்டப்பட்டார்கள். அந்த வரிசையில் இப்போது தளபதியும் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். 'எனக்குப் பதவியே வேண்டாம்; பொழப்பைப் பாக்கவிடுங்க’ன்னு கடந்த நாலு மாசமாவே சொல்லிட்டு இருந்தாரு தளபதி.

 ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்காக, யாருகிட்டயும் கை ஏந்தாம 10 லட்ச ரூபாய் வரை செலவு செஞ்சிருக்கார். அதுதான் தப்பாப்போச்சு. கட்சி சொன்ன வேலையை செய்யலைங்கிறதுக்காக நடவடிக்கை எடுத்தா, அது சரி. ஆனா, கட்சி சொன்ன வேலையை செஞ்சதே தப்புங்கிற மாதிரி தளபதியை ராஜினாமா பண்ண வெச்சது நியாயம்தானா?'' என்று வருத்தப்​பட்டார்.

தி.மு.க. சட்டப்புள்ளி ஒருவரோ, ''ஸ்டாலின் மதுரைக்கு வந்தார். அன்று 'எங்களைப் போக வேண்டாம்’னு சொன்னது உண்மைதான். அதை மீறி நாங்கள் வந்திருந்தால், அதனால் வரும் பாதிப்புகளில் இருந்து ஸ்டாலின் எங்களைக் காப்பாற்றி இருப்பாரா? ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு எங்​களைப் போகவிடமால் தடுத்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும்​தானே... அப்படியானால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பும் தைரியம் தலைமைக்கு இருக்கிறதா?’  என்று சீறினார்.

ஷோ-காஸ் நோட்டீஸ் பற்றி அவைத்தலைவர் இசக்கி​முத்துவிடம் பேசினோம். ''விளக்கம் கேட்டிருக்காங்க. அழகிரி அண்ணன் வந்ததும் அவருகிட்ட கேட்டுட்டு முடிவெடுக்கலாம்னு இருக்கேன்'' என்றார்.

பொருளாளர் மிசா பாண்டி​யனிடம் கேட்டதற்கு, ''வழக்கமா பொதுச்செயலாளர்தான் நோட்டீஸ் அனுப்​புவார். ஆனா, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்​கோவன் அனுப்பி இருக்கார். இது உண்மையான நோட்டீஸ்தானா இல்லை, யாராச்சும் டுபாக்கூரா அனுப்பி​ இருக்​காங்களான்னு செக் பண்ணணும்'' என்று கலகலப்பாக ஆரம்பித்தவர்,


 ''இளைஞர் அணி நேர்காணல் கூட்டங்களுக்கு கட்சிப் பொறுப்பாளர்கள் போகணும்னு கட்டாயம் இல்லை. அதனால் போகலை. கண்டனக் கூட்டத்துக்கு நாங்க போகலைன்னு யாரு சொன்னது? அந்தக் கூட்டமும் முறையாவா நடந்துச்சு? கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளரான அழகிரி அண்ணனின் பெயரை போஸ்டர்களில் போடலை. அவருக்கே இந்த நிலை என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்னு யோசிச்சோம்.


அதனால, மேடைக்குப் போகாம இருந்துட்டோம். மீறி மேடைக்குப் போயிருந்தாலும் ஏதாவது குழப்பத்தை விளைவித்து, 'இவங்களாலதான் நடந்துச்சு’னு எங்க மேல பழிபோடவும் தயங்க மாட்டாங்க. அப்படித்தானே பரமக்குடியில ரித்தீஷ் மேல பழி சுமத்தினாங்க?

துணைச் செயலாளர் சின்னம்மாளின் சொந்த அண்ணன் 13-ம் தேதி கடலூரில் விபத்தில் இறந்து விட்டார். துக்கத்தில் இருந்த அவருக்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். எங்களுக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி அண்ணன் இருக்கிறார். 20-ம் தேதி அவர் மதுரை வந்ததும், இதற்கு என்ன பதில் கொடுக்கிறதுன்னு கேட்டு முடிவெடுப்போம்.


மதுரை நிர்வாகிகள் அனைவரையும் தலைமைக் கழகம் சென்னைக்கு அழைத்து, எங்கள் மீது கூறப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டுக்கு, எங்களிடமும் விளக்கம் கேட்கணும். நாங்கள் 17 பேரும் பொறுப்பில் இருந்து விலகத் தயார். ஆனால், எங்களுக்கு பதிலாக வரும் 17 பேருக்காவது இனிமேல் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற விதியை கழகத் தலைமை வகுத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார். 

''கட்சிப் பொறுப்பாளர்களை ஸ்டாலின் கூட்டத்துக்கு போக​விடாமல் நீங்கள்தான் கஸ்டடியில் வைத்திருந் ததாக சொல்கிறார்களே'' என்று கேட்டதற்கு,


''கஸ்ட​டின்னு சொன் னாங்களா... அடைச்சி ​வெச்​சிருந்தேன்னு சொன்​னாங்களா? என்னோட காம்ப்ளக்ஸ் வாசல்ல நான் இருக்கும்போது கட்சிக்​காரங்க என்னைப் பார்க்க வர்றாங்க. உங்களைப் போலநண்பர்​​களும் வர்றாங்க. அவங்கள உட்கார​வெச்சுப் பேசிக்கிட்டு இருந்தா, அடைச்சி​வெச்சிருக்கேன்னு சொல்றதாக்கும்'' என்று சிரித்தார் மிசா பாண்டியன்.

அழகிரி படம் இல்லாமல் போஸ்டர் அடித்தது குறித்து இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் தரப்பிடம் பேசினோம். 'உங்க படத்தை போஸ்டர்ல போடலாமா?’ என்று அழகிரியிடம் ஜெயராம் கேட்டதாகவும்,  'எம் பேரைப் போட்டா கண்டிச்சு அறிக்கை விடுவேன்’ என்று அழகிரி சொல்லி விட்டதாகவும் சொல்கிறார்கள். 

ஷோ-காஸ் நோட்டீஸ் விவகாரத்தைக் கேள்விப்பட்ட அழகிரி, 'உங்களுக்கு எதுக்கு அனுப்புறாங்க? தைரியம் இருந்தா எனக்கு அனுப்பட்டும்’ என்று சீறியதாகச் சொல்கிறார்கள். ''நோட்டீஸுக்கு பதில் கொடுக்க வேண்டாம். எல்லாரும் ராஜினாமா பண்ணிருங் கன்னுதான் அண்ணன் சொல்லப்போறார்'' என்று சொல்லும் அழகிரி விசுவாசிகள், அழகிரியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

இதனிடையே, கடந்த 16-ம் தேதி மதுரையில் ஸ்டாலினை சந்தித்த தென்மாவட்டச் செயலாளர்கள் சிலர், 'இனிமே நீங்க அடிக்கடி மதுரைப் பக்கம் வரணும். எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தால், உங்கள் பின்னால் நிற்கத் தயார்’ என்று தெம்பு கொடுத்தார்களாம். 'எனக்கென்ன தயக்கம்? நீங்கள் அழைத்தால் கட்டாயம் வருவேன்’ என்று சொன்ன ஸ்டாலின், 'மே தினப் பொதுக் கூட்டத்தைக்கூட மதுரையில் நடத்தலாம்னு யோசிக்கிறேன்’ என்று சொன்னாராம்.

மதுரை மண்ணில் இன்னும் என்னென்ன களேபரங்கள் அரங்கேறப் போகின்றனவோ..?

டெயில் பீஸ்: 19-ம் தேதி இரவு ஷோ-காஸ் நோட்டீஸ் பெற்ற 17 பேரும் மதுரையில் ஹோட்டல் ஒன்றில் ரகசியமாகக் கூடிப் பேசினார்களாம். 'போஸ்டர்களில் அண்ணன் அழகிரியின் பெயர் போடாதது குறித்து மாநகரச் செயலாளர் தளபதியிடம் விளக்கம் கேட்டோம். அவர் சரியான பதிலை சொல்லாததால், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை’ என ஒரே மாதிரியானப் பதிலை அழகிரியிடம் காட்டிவிட்டு அனுப்ப அனைவரும் முடிவு செய்திருக் கிறார்களாம்.

-


 காமராஜர் - கண்ணதாசன் நட்பு எப்படிப்பட்டது? 


ஒரு கள்ளமும் இல்லாத தகப்பனுக்கும் எதிர்பார்ப்பு இல்லாத பிள்ளைக்குமான நட்பு அது. கண்ணதாசன் தி.மு.க.வில் இருக்கும்போது, காமராஜரை பொதுமேடைகளில் விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர். 'அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ என்று பாட்டு எழுதி, காமராஜருடன் ஐக்கியம் ஆனவர். 'காட்டுக்கு ராஜா சிங்கம், பாட்டுக்கு ராஜா கண்ணதாசன்’ என்று பெருந்தலைவரே பாராட்டினார். 'ராஜாவோ இல்லையோ... நான் அடிபணியும், சக்கரவர்த்தி எனக்குச் சூட்டிய மகுடம் இது’ என்றார் கண்ணதாசன்.


கவிஞரிடம் தலைவருக்குப் பிடிக்காதது... மதுவின் மீதான மயக்கம். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக ஒருவர் நியமிக்கப் படும்போது... மது பெர்மிட் இருந்தால் அதனை சரண்டர் செய்துவிட வேண்டும் என்பது அந்தக் காலத்து விதி. கண்ணதாசனுக்கு டெல்லியில் இருந்து நோட்டீஸ் வந்தது. 'சரண்டர் பண்ணிடப்போறேன்’ என்று காமராஜரிடம் கவிஞர் சொன்னார். 'எதை?’ என்றார் தலைவர். 'அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கார்டைத்தான்’ என்று கவிஞர் சொன்னதும் காமராஜர் சிரித்த சிரிப்பில் இருக்கிறது அவர்களின் நட்பு.


''உங்கள் பெயரை 'காமதாசன்’ என்று மாற்றலாமா?'' என்று ஒருவர் கேட்டார். ''நல்லது 'ராஜ’ என்று நடுவில் சேர்த்து 'காமராஜதாசன்’ என்று வையுங்கள்'' என்று சொன்ன பதிலில் நட்பு மட்டும் அல்ல, பக்தியே தெரிகிறது!



திருச்சியில் நடந்த காங்கிரஸ் முப்பெரும் விழாவினால் திருப்பம் உண்டா? 


இளங்கோவன் இருந்த பக்கம் ப.சிதம்பரம் திரும்ப மாட்டார். தங்கபாலு பக்கம் இளங்கோவன் திரும்ப மாட்டார். இந்தத் திருப்பத்தையா கேட்கிறீர்கள்?
 எஸ்.ஏ.காதர், விழுப்புரம்.


'ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது’ என்கிறாரே ஜெயலலிதா?


'யாருடைய சட்டத்தின் ஆட்சி’ என்பதையும் ஜெயலலிதா விளக்கிச் சொல்லி இருக்க வேண்டும். நாளிதழ்களில் நித்தமும் தெறிக்கிறதே ரத்தம். அது யாருடைய சட்டத்தின் ஆட்சி?


'கொலவெறி’ பாடல் இருந்தும் '3’ படம் குப்புறக் கவிழ என்ன காரணம்? 


அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு இருந்தால்... சினிமா மட்டுமல்ல, எதுவுமே கவிழத்தான் செய்யும்!


தம்மைச் சந்திக்க வந்த பா.ஜ.க. முக்கியத் தலைவர் அருண் ஜெட்லியிடம் தமது கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறுமா? 


ஆசை நிறைவேறுமா என்பது அப்புறம். ஜெயலலிதா, இப்படி ஒரு கோரிக்கை வைத்தாரா என்பதே சந்தேகம். துணை ஜனாதிபதி என்றால் யாருக்கு? தனக்கா? இல்லை கட்சியில் இன்னொரு வருக்கா? புரோட்டோகால்படி தன்னைவிட உயர்வான ஒரு பதவியை இன்னொருவருக்கு வாங்கித் தருவாரா ஜெயலலிதா? லாஜிக் இடிக்கிறதே!


இலங்கை செல்லும் குழுவில் கனிமொழி, திருமாவளவன் ஆகிய இருவரும் இடம்பெற்றிருக்க வேண்டாமா? 


போன முறை போய் 'பெயர் கெட்டது’தான் மிச்சம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்!




கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நிகழ்ச்சி ஏதாவது சமீபத்தில் நடந்ததா? 


இலங்கை செல்லும் குழுவில் தி.மு.க. இடம்பெறாது என்ற கருணாநிதியின் அறிவிப்பு!
காங்கிரஸையும் மன்மோகன்சிங்கையும் சோனியாவையும் விட்டுக் கொடுக்க மாட்டார் கருணாநிதி என்பதே இது வரையிலான நிலைமையாக இருக்க... அவரது இந்த முடிவு எதிர்பாராததுதான்.


தமிழக வாக்காளர்கள் ஏமாறுகிறார்களா? ஏமாற்றப் படுகிறார்களா? 


ஏமாறுகிறார்கள்! ஏமாறத் தயாராகவும்  இருக் கிறார்கள்.. எத்தனை முறை வேண்டுமானாலும்!!



மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளராக மூன்றாவது முறை பிரகாஷ் காரத் தேர்வானது குறித்து? 


பிரகாஷ் காரத் மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டதைவிட முக்கியமானது, மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாநாட்டில் போடப்பட்டுள்ள தத்துவார்த்த தீர்மானம். 'அனைத்து வகையான கேடான போக்குகளுக்கு எதிராக நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்துவோம்’ என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

'பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே இந்தியாவைப் பொறுத்தவரை, வர்க்கப் போராட்டமாக அமையும்’ என்று, சீத்தாராம் யெச்சூரி பேசி இருக்கிறார். மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரகாஷ் காரத் இதற்கு என்ன முயற்சிகள் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தே அவரை அளவிட முடியும்!


மூன்றாவது அணி அமைப்பதால் எல்லாம் அவர்களது தத்துவார்த்த தீர்மானத்தை நிறைவேற்றிவிட முடியாது!



  தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் என்ன ஆகும்? 


கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், கஞ்சா கருப்பு, கருணாஸ் எல்லாரும் சேர்ந்து நடிக்கும் படம் எப்படி இருக்கும்? சகிக்காது அல்லவா? அப்படி இருக்கும் அந்தத் தொகுதி!


Wednesday, August 17, 2011

அழகிரிக்கு ஆப்பு வைக்க அம்மாவோட அம்மா வந்தாலும் முடியாது - மிஸஸ் அழகிரி பகிரங்க சவால் - ஜூ வி பேட்டி - காமெடி கும்மி

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/a/ganthi%20azhakiri.jpg 
ஜெ.வுடன் சமாதானமா?

காந்தி அழகிரி சீறல் பேட்டி

'மதுரை மீட்பு’ நடவடிக்கைகளில் ஜெயலலிதாவின் கிடுக்கிப் பிடி நாளுக்கு நாள் வலுக்கிறது. 

சி.பி - மதுரை மீட்பா? மதுரைக்கு ஆப்பா?

மத்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி நின்றவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட... 

சி.பி - நின்றவர்கள் மட்டும் தானா? உட்கார்ந்தவங்க, படுத்தவங்க எல்லாரும் தான்...

அடுத்த கைது, காந்தி அழகிரிதான் என காச்மூச் கிளம்பி விட்டது. 


சி.பி - அப்படி கிளப்பி விட்டதே விகடன் குரூப்தான்னு நினைக்கறேன்.. ஹா ஹா 

இதற்கிடையில் கைது நடவடிக்கைக்குப் பயந்து அழகிரியின் குடும்பத்தார் வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டதாகவும் பரபரப்பு. 'பரபர செய்திச் சுரங்கமாக’ அழகிரியின் குடும்பம் மாறிவிட்ட நிலையில், ஜூ.வி-க்கு காந்தி அழகிரி அளித்த பிரத்யேகப் பேட்டி... 


சி. பி - ஆமா, இந்த இக்கட்டான சூழல்ல இவங்க கிட்டே பேட்டி எடுக்கறீங்களே? இதனால உங்களுக்கு ஆபத்து வருமா? இதை கும்மி அடிக்கறதால எனக்கும் ஆபத்து வருமா? அய்யய்யோ!!!!!!  

http://kovai24x7.com/wp-content/uploads/2011/05/p105.jpg


1. ''கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியை தி.மு.க. சந்திக்கும் என எதிர்பார்த்​​தீர்களா?''

சி.பி - அண்ணன் அழகிரி தேர்தலுக்குப்பின் அதிமுகவே இருக்காதுன்னாரு, அம்மா தேர்தலுக்குப்பின் திமுக ஆளுங்க யாரும் வெளில இருக்கக்கூடாதுன்னு நினைக்கறாங்க..  


''இல்லை!
ஆனாலும், மக்களின் தீர்ப்பைத் தலை வணங்கி ஏற்கும் பக்குவமும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், தோற்று விட்டதை நினைத்து வருத்தப்படும் நிலையில் நாங்கள் இல்லை!''


சி.பி - அப்புறம் ஏம்மா உங்க ஆத்துக்காரர் புலம்பிட்டே இருக்கார்? 

2. ''ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது வழக்கமானதுதான். ஆனால், 'மதுரை மீட்பு’ என அறிவித்து அதிரடி கிளப்புகிற அளவுக்கு மதுரையை நோக்கி ஜெ. ஆவேசம் காட்டுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''


சி.பி - ஆபரேஷன் மதுரைன்னு சொல்லி அம்மா குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்திட்டாங்க..


''தேர்தலுக்கு முன்னரே மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் எனது கணவர் பெயரையும், அவருடைய நண்பர்கள் பெயர்களையும் பட்டியல் போட்டு பழிக்குப் பழி வாங்குவேன் என ஆவேசமாக முழங்கினார் அந்த அம்மையார். அதைத்தான் இப்போது செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

சி.பி - சொல்வதைச்செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்னு உங்க மாமனார் சொன்னதை அம்மா ஃபாலோ பண்ணீட்டாங்க போல.. 

கட்சிக்கும் என் கணவருக்கும் நெருக்கமான ஆட்களைச் சிறையில் தள்ளுவதன் மூலமாக, தான்  நினைத்ததைச் சாதித்துவிட முடியும் என்பது அவருடைய நம்பிக்கை. கைதுகளை அரங்கேற்றுவதும், குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுவதும் மதுரையின் வழக்கமான காட்சிகளாகத் தொடர்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

சி.பி - இது முதல்லயே தெரிஞ்சிருந்தா அண்ணன் ஜிம்முக்குப்போய் டயட்ல இருந்து ஒல்லி ஆகி இருப்பார். குண்டர் சட்டம் ஒண்ணும் பண்ண முடியாதே?

அடிப்படைத் தேவைகளையும் ஆக்கப்பூர்வத் திட்டங்களையும் எதிர்பார்த்துதான் மக்கள் ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அவற்றைப் பரிபூரணமாகச் செய்யவேண்டியவர்கள், இப்படிப் பழிவாங்கும் போக்கையே முதன்மையான வேலையாகச் செய்கிறார்கள். செய்யட்டும்... இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்!''


சி.பி - டம் ,டம் ,மேடம், மக்களோட  அடிப்படைத்தேவையே மின்சாரம் தான், அதை எப்படி நிறைவேத்துனீங்கன்னு ஊருக்கே தெரியுமே?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0b0EwKoY8x5D_cGxo8xbpel9mRHGVIixvXKvpNGW9l5rQcGYNQ3u7Is5RiWwZOECxVrrZJqFJJFY85M9tTbcmQwPAUyYcHPp-5y3fgBjT5XrmbbIq57-2r-81dNY5j8ze-ebjwU2K4v8O/s1600/Durai+Dhayanithi+Marriage+Invitation.jpg


3. ''பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி என அரசியலுக்கு உட்பட்டவர்கள் மட்டும் அல்லாது, உங்களை நோக்கியும் போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமாகிறதே..?''


சி.பி - ஒவ்வொரு ரவுடியும் பேருக்குப்பின்னால அடை மொழி வெச்சுக்கறானுங்க, இதுக்காகவே அவனுங்களை உள்ளே தள்ளி டேய் , இனி இப்படி பேரு வெச்சுப்பியா? வெச்சுப்பியா? ன்னு கேட்டு லாடம் கட்டனும்.. லாக்கப்ல.. ராஸ்கல்ஸ்


''விசுவாசிகளைச் சிறையில் தள்ளுவதன் மூலமாக, என் கணவரைத் தனிமைப்படுத்தி சங்கடத்தில் ஆழ்த்தலாம் என்பது அவர்களின் கனவு. அதன் அடுத்த கட்டமாகத்தான் ஒரு குடும்பத் தலைவியான என்னை நோக்கியும் போலீஸை ஏவி விடுகிறார்கள். இதன் மூலமாக என் கணவரை நிலைகுலைய வைக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அதற்காகப் பொய்யான ஜோடிப்புகளைச் செய்து, அடாவடி, மோசடி என என்னென்னவோ கிளப்பி விடுகிறார்கள். பொய் வழக்குகளைப் போடச் சொல்லி, போலீஸைத் தூண்டிவிடுகிறார்கள்''


சி.பி - முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி பொய்யர்களை பொய் வழக்கு போட்டு அடைச்சாலும் தப்பில்லைன்னு அம்மா நினைக்கறாங்களோ என்னவோ?


4.''இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் உங்கள் கணவரை எத்தகைய மன நிலையில் வைத்திருக்கின்றன?''

 சி.பி - ஹா ஹா அண்ணன் அரண்டுட்டாரு, வெளியே வடிவேல் மாதிரி உதார் விட்டாலும் உள்ளே கைபுள்ள மாதிரி பம்பிட்டு தான் இருக்காரு.. 

''எப்போதுமே அவர் எதையும் எதிர்கொள்ளும் மன நிலையில்தான் இருப்பார். 


 சி.பி - ச்சே ச்சே உங்க மேரேஜ்ஜை வெச்சு அப்டி ஒரு முடிவு எடுக்கப்படாது.. 



ஆட்சி மாறினால் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார். 


 சி.பி - அதான் ஃபாரீன்ல பணப்பரிவர்த்தனை எல்லாம் நடந்து சேஃப் பண்ணிக்கிட்டீங்களா? 


http://www.makkalmurasu.com/wp-content/uploads/2011/08/gandhi.jpg

எதிர்பார்த்ததையும் தாண்டி அடக்குமுறை நடவடிக்கைகள் இப்போது தீவிரமாக நடக்கின்றன. கைதுக் களேபரங்களை அரங்கேற்றினால், கட்சியையும் என் கணவரையும் அழித்துவிடலாம் என அந்த அம்மையார் நினைப்பது தவறு. எத்தனையோ சூறாவளிகளையும் போராட்டங்களையும் கடந்து வந்தவர்தான் என் கணவர். 


சி.பி - ஆமாமா, சுயநலத்துக்காக அண்ணன் எதுவும் பண்ணுனதே இல்ல. எல்லாம் பொது நலம் தான் ... மதுரையை ஆட்டையைப்போட்ட அட்டகாசப்பாண்டியன் ஆச்சே அவரு?




அம்மையாரின் அடக்குமுறைகள் எங்கள் கட்சியை இன்னும் வளர்க்கவே செய்யும். கடைக்கோடித் தொண்டன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் படிக்கல்லாக மாறும். இந்த அம்மையார் நடத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பார்த்து கட்சிக்குள் இருந்த சிறுசிறு பூசல்களைக்கூட மறந்துவிட்டு, அனைவரும் ஒருமித்துக் கைகோத்து நிற்கிறார்கள்.

சி.பி - இந்த லைன் மட்டும் தலைவர் கலைஞர் எழுதிக்கொடுத்திருப்பாரு போல.. 


உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா... வெற்றி, மகிழ்ச்சி என சாதகங்கள் மட்டுமே நிலவும் நேரத்தைக் காட்டிலும், இந்த மாதிரியான இக்கட்டான சூழலில்தான் என் கணவர் படு ஆக்டிவாகவும், 'வரட்டும் பார்க்கலாம்’ என்கிற வைராக்கியத்துடனும் இருப்பார். அவருடைய ஆதரவாளர்கள் கைதான உடனேயே முதல் ஆளாகப் போய்ப் பார்த்தார். 'நான் இருக்கேன். தைரியமா இருங்க’ எனச் சொன்னார்.

 சி.பி - உடனே அவங்க , அண்ணே, நீங்க இருப்பீங்க, நாங்க இருப்போமா? அப்டின்னு கேட்டிருப்பாங்களே?




பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தைரிய மன நிலையில்தான் அவர் இருக்கிறார்!''


சி.பி - அதாவது மக்கள் பணத்தை எடுப்பது எப்படின்னு எடுத்துக்காட்டாக.?
5. ''நிலம் வாங்கிய விவகாரத்தில் உங்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதே... உண்மையில் அந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது?''


சி.பி - பச்சப்புள்ள மாதிரி கேள்வி கேட்டுட்டு. எல்லா நிலத்தையும் அண்ணன் பேர்லயே எழுதிட்டா கனக்கு காட்ட வேணாமா? அதான் பாதி அண்ணி பேர்ல.. 
''ஒரு பாமரனுக்கும் தெரிந்த விஷயத்தைக் கேட்கிறேன்... ஒரு சொத்தை வாங்கும்போது, அதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதைத்தானே பார்த்து வாங்குவோம்.

சி.பி - அதானே, பிரச்சனை என்னன்னா வில்லங்கமே நீங்க தான், இப்போ உங்களுக்கே அம்மா ஒரு வில்லங்கமா .. 


நாங்கள் வாங்கிய சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை. விற்பவர்களின் முழு ஒப்புதல், முறையான விலை, உரிய ஆவணங்கள் எனப் பத்திரப் பதிவுக்குப் பின்பற்றக்கூடிய அனைத்தையும் முறையாகக் கடைப்​பிடித்தே அந்த நிலத்தை வாங்கினோம். அதில், திடீரென இப்போது எங்கே இருந்து வில்லங்கம் வந்தது?


சி.பி - மிரட்டி கையெழுத்து வாங்கிட்டா அது முழு ஒப்புதல் ஆகிடுமா?

எங்கள் மீது புகார் கொடுத்த விவசாயி ஒருவரே போலீஸ் ஸ்டேஷனைத் தேடி வந்து, 'சிலருடைய தூண்டுதலால் புகார் கொடுத்துவிட்டேன். இப்போது புகாரை வாபஸ் பெற விரும்புகிறேன்!’ எனச் சொல்கிறார். புகார் கொடுத்தவரே பின்வாங்கிய நிலையிலும், போலீஸ் நடவடிக்கைகள் தீவிரம் ஆகிறது என்றால், இது அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கைதானே!

சி.பி - எத்தனை படம் பார்த்திருக்கோம், புகார் கொடுத்தவர் வாபஸ் வாங்கறார்னா மிரட்டப்பட்டிருக்கார்ன்னு தெரியாதா?



நாங்கள் சொத்துக்களை வளைத்து​விட்டதாகப் பரப்பியவர்கள், புகார் கொடுத்​தவரே எங்களுக்கு ஆதரவாகப் பேசுவதை கண்டுகொள்வது இல்லை!''
 http://www.viduthalai.periyar.org.in/20101118/photo03.jpg


6. ''கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்குப் பறந்து ​விட்டதாகப் பரபரப்பான பேச்சு அடிபட்டதே?''

சி.பி - பேச்சு மட்டுமா அடிபட்டுது? அண்ணனே  அடி பட்டார்னு ஒரு கிசு கிசு.. 



''வெளிநாடுகளுக்குப் போவது தவறு என்கிற சட்டம், எனக்குத் தெரிந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. இப்போது புதிதாக யாரும் அப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்களோ என்னவோ? இப்போதும் எப்போதும் நாங்கள் இங்கேதான் இருப்போம். எங்கேயும் பறக்க மாட்டோம். எங்களுக்கு எதிராக ஏதாவது நடக்காதா எனப் பறப்பவர்கள்தான், இப்படிப் பரப்புகிறார்கள். இதை எல்லாம் எங்கள் மீதான அக்கறையாக எடுத்துக்கொண்டு, சிரிக்கவே செய்கிறோம்!''


சி.பி - அட!!!! இந்த லைனும் மேடம் சொந்தமா சொன்ன மாதிரியே இல்லையே? கலைஞரும் கூடவே இருந்திருப்பாரோ? டவுட்டு.. 


7. ''கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து, ஜெயலலிதாவுடன் உங்கள் கணவர் சமாதானம் பேசியதாகக்கூட செய்தி பரவியதே?''

சி.பி - பம்புனதை இப்டியா பப்ளிக்கா கேட்பது? 


''சரியான கட்டுக்கதை அது! எதிர்க் கட்சியினரோடு சரண்டர், சமாதானம் என்பது எல்லாம் என் கணவரின் சரித்திரத்திலேயே இல்லாதது. ஜெயலலிதாவுடன் சமாதானம் என்பது எப்போதுமே கிடையாது... நெவர்!''


சி.பி - தரித்திரம் வந்து சகுனி ஆடும்போது சரித்திரங்கள் உருவாகும்.. செய்த பாவங்கள் விடாது துரத்தும் என்று முன்னோர் சொன்ன முது மொழிக்கு அது கருவாகும்.. 

8. ''இதை எல்லாம் மீறி, உங்களின் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால், அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?''

சி.பி - ஹா ஹா இது கூடவா தெரியாது..? அய்யய்யோ .. கையைப்பிடிச்சு இழுத்துட்டான். பெண் என்றும் பாராமல் நள்ளிரவில் கைதுன்னு ஃபிளாஸ் நியூஸா சன் டி வி ல போட்டு தாளிச்சிட மாட்டாங்க.. ?

''சட்டப்படி, நீதிமன்றத்தில் தைரியமாக எதிர்கொள்வேன். கைதுக்கோ, சிறைக்கோ அஞ்சாத தைரியத்தை, அவரைக் கரம் பிடித்த நாளில் இருந்தே கற்றுவைத்து இருக்கும் ஆள் நான். அவருடைய நான்கு எழுத்துக்களே என் நம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் போதுமானது... ஆமாம்!''


சி.பி - அண்ணி செம டேலண்ட் போல இருக்கு, போற போக்கை பார்த்தா அழகிரி எப்பவாவது சி எம் ஆனா அண்ணி டெபுடி சி எம் ஆகிடுவாரு போல.. 


9. ''உங்கள் கணவருக்கும், ஸ்டாலினுக்கும் மறுபடியும் மனக் கசப்புத் தொடங்கி விட்டதா என்ன?''

சி.பி - எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கிட்டே ஒண்ணுமே தெரியாத பச்சப்புள்ள மாதிரி கேள்வி கேட்கறதைப்பாரு.. 

''என்றுமே இணைந்திருக்கும் சகோதரர்கள் அவர்கள். அவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படாதா என ஏங்குபவர்கள் கிளப்பி விடும் வழக்கமான வதந்தி அது. புரியாமல்தான் கேட்கிறேன்... இதே வதந்தியை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிளப்புவாங்களோ... ஏதாவது கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பா!''


சி.பி - வித்தியாசமா யோசிப்பது, எகனை மொகனையா யோசிப்பது எல்லாம் அரசியல்வாதிகளுக்குத்தான் பழக்கம் ஆச்சே?  எங்களுக்கென்ன?

http://4.bp.blogspot.com/_tLiBAL1NJYE/SFaRoCgrFgI/AAAAAAAABLM/DKXLSpJ0E0c/s1600/Khyber+Girls.gif

டிஸ்கி 1- மேலே உள்ள ஃபோட்டோ ஒரு ரிலேக்‌ஷனுக்காக மட்டுமே..


டிஸ்கி 2 - நம் வருங்கால சந்ததிகள் காந்தி அழகிரி என்றால் மஹாத்மா காந்தி பரம்பரை என தவறாக நினைச்சுடப்போறாங்க. அவங்களுக்கு விளக்கவேண்டியது நமது கடமை.

டிஸ்கி 3 - பிரேமலதா விஜய்காந்த், காந்தி அழகிரி 2 பேரும் தோற்றத்துலயும் சரி, பேச்சுலயும் சரி.. ஒரே சாயல்.. எதிர்காலத்துல 2 பேரும் அரசியல்ல ஒரு ரவுண்ட் வரலாம்.. கபர்தார்..

thanx - ju vi

Saturday, August 13, 2011

அழகிரியை ஏவி விட்டு திமுகவை பிளக்க பிளான் போடும் ஜெ ,கலைஞர் திகைப்பு!!!!

http://2.bp.blogspot.com/_a-5_Ktv6jB8/TSgffk6N-cI/AAAAAAAABjQ/1C900QxKI38/s1600/Azhagiri.jpg
ழுகார் சில கடிதங்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தார். முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு அட்ரஸ் பண்ணப்பட்ட கடிதங்கள்! அவரே சொல்ல ஆரம்பித்தார்...

சி.பி - பத்திரிக்கை நடத்தறவங்க  மினி போஸ்ட் ஆஃபீஸே நடத்தறாங்க போல.. எங்கே லெட்டர் போறதா இருந்தாலும் இவங்க பார்வைக்கு முதல்ல வந்துடுது.. 


 ''சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு உண்டாக்​குவதாகக் காரணம் சொல்லி, சென்னையைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றை சீல் வைத்திருக்கிறது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆனால், காரணம் அது மட்டுமே இல்லையாம்! 'தேர்த​லுக்கு முன்பு தேர்தல் நிதிக்காக அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஒரு முக்கிய நிர்வாகி, அந்த மருந்து கம்பெனி அதிபரை தொடர்பு கொண்டாராம். கேட்டதை விட குறைச்சலான தொகை கொடுத்ததோடு, ஏதோ கமென்ட் அடித்ததாகவும் சொல்கிறார்கள். 



சி.பி - இவ்வளவுதானே, ஒரு மன்னிப்பை கேட்டுட்டு மீதி அமவுண்ட்டை செட்டில் பண்ணிட்டா மேட்டர் ஓவர்..
மருந்து கம்பெனி அதிபரோ இப்போது கோட்டைக்கு நடையாய் நடப்பதோடு, தோழி குடும்பத்தின் மூலமும் முயற்சி செய்து பார்த்து விட்டாராம். அதிகார மையத்​திலோ, 'இது விஷயமா என்கிட்ட யாரும் பேசாதீங்க’ என கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி விட்டதாகக் கூறு​கிறார்கள்! என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக்கொண்டு இருக்​கிறார், மருந்து கம்பெனி அதிபர். நான் கொண்டு வந்​திருப்பது அந்த அதிபர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்​பிய கடித நகல்கள்​தான்!''


சி.பி - ஜெராக்ஸ் மிஷின் வேற வெச்சிருக்கீங்களா?
''காரணம் ரொம்ப சாதார​ணமாக இருக்கிறதே?''


''அப்படியா... இதையும் கேட்டுவிடும்... முதல்வர் சென்று தங்கக்கூடிய சிறுதாவூர் பங்களா இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கிறது இந்த கம்பெனி, போதுமா? சுற்றுச்​சூழல் மாசு எப்படி பாதிக்கும் என்று புரிகிறதா? மேலும், சில வருடங்களுக்கு முன்னால், அந்த குறிப்பிட்ட கம்பெனியின் பாய்லர் ஒன்று வெடித்து, ஒருவர் இறந்து போனார். அந்த சம்பவம்கூட புதிய ஆட்சியாளர்களின் மனதில் பச்சென்று பதிந்து இருக்கக்கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள். 


கம்பெனி உரிமையாளர், ஆந்திரத் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவராம். அவர் மூலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்​தையும் தோல்வியில் முடிந்துவிட்டதாம்!'' என்ற கழுகார், அந்தக் கடிதங்களை சற்றே தள்ளிவைத்துவிட்டு, தி.மு.க. பக்கம் தாவினார்.


''தி.மு.க-வுக்குள் ஸ்டாலின், அழகிரி இருவருக்கும் நடக்கும் அதிகாரப் போட்டியை அதிகமாகவே ரசிக்க ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க. தரப்பு. இதில் குறுக்குச் சால் ஓட்டி ஏதாவது ஓர் அணிக்குத் தூபம் போடுவதற்கான வேலைகளைச் சில தூதர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு மதுரை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள், ஆர்வத்தை பெருக்கி வருகின்றன. 

 http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_77341425419.jpg
மதுரையில் அழகிரியின் தளபதிகளாக இருந்த பலரும் கைதாக... காந்தி அழகிரி பெயரில் பதிவான ஒரு நிலத்தின் விவகாரமும் வில்லங்கம் ஆகியுள்ளது. 'உங்களை வளைப்பதற்கு போலீஸ் தயாராக இருக்கிறது. அதற்கு ஆதாரமாக ஏராளமான வழக்குகள், வாக்குமூலங்கள் உள்ளன. இந்தச் சுழல் சர்ச்சைகளில் இருந்து போலீஸ் உங்களை விடுவிக்க வேண்டுமானால் எங்களுக்குக் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள். எப்படியானாலும் ஸ்டாலின்தான் தி.மு.க-வின் அடுத்த தலைவராக வரப் போகிறார். அதை எதிர்த்து இப்போதே கட்சிக்குள் புரட்சியைத் துவங்குங்கள். 

சி.பி - சகுனி வேலை செய்யறதுல தான் தமிழர்களுக்கு எம்புட்டு ஆர்வம்?
உங்கள் ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு, 'நாங்களே உண்மையான தி.மு.க.’ என்று கோஷம் கிளப்புங்கள்’ என்று ஐடியாவும் அனுப்பி வைத்திருக்கிறார்களாம் இந்த சில்மிஷ தூதர்கள். இப்படியரு ஆஃபர் எந்தளவுக்கு அழகிரியிடம் எடுபடுமோ..?''


சி.பி - அதெல்லாம் ஒண்ணும் எடுபடாது..  கலைஞரின் சாணக்கியத்தனம் இன்னும் யாருக்கும் புரிபடாதது..
 
''அதையும் விசாரித்திருப்பீரே..?''


''அழகிரிக்கு நெருக்கமான மதுரை ஆட்களிடம் விசாரித்தேன். 'நீங்கள் சொல்வது மாதிரி சிலர் எங்கள் காதுபட பேசி, தூதுவிட நினைப்பது உண்மைதான். ஆனால், அண்ணன் இந்த உடன்பாட்டுக்கு தயாராகவே மாட்டார். எங்களைப் பொறுத்த வரையில், அவர்தான் எப்படியும் அடுத்த தலைவர். அதில் எந்த மாற்றமும் இல்லை. 


சி.பி - எதுக்கு தலைவர்? மதுரைக்குத்தானே?

ஸ்டாலின் அந்த இடத்தில் வந்து உட்காருவது அதிகாரபூர்வமாக முடிவானால், நாங்களாகவே புரட்சி கீதம் இசைக்கத்தான் போகிறோம். 


சி.பி - எஸ் ஏ சந்திரசேகர் மாதிரியே பேசறாரே?  புரட்சி கீதம் , வறட்சி நாதம்னு..

மற்றபடி அ.தி.மு.க. ஆட்களை நம்பி நாங்கள் எதையும் செய்வதற்கில்லை. கட்சியில் சில விஷயங்கள் அழகிரிக்கு பிடிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தலைவரை அந்தளவுக்கு நோகடிக்கும் காரியத்தை அண்ணன் செய்யமாட்டார்!’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். 


 சி.பி - என் கணிப்பு அண்ணன் அழகிரி கலைஞர் இருக்கறவரை கமுக்கமா இருந்துட்டு அவர் காலத்துக்குப்பின் தான் பிரச்சனை பண்ணுவார்னு,ஏன்னா இப்ப பிரச்சனை பண்ணுனா அவரை ஓரங்கட்டிடுவாங்க..



ஆனால் ஆளும் தரப்போ... 'அவரவர் வலி அவர்களுக்குத்தான் தெரியும். ஒருபுறம் சோதனை கொடுத்தபடியே, மறுபுறம் வரம் கொடுக்க தூது விடுவோம்' என்று தளராமல் சொல்லி வருகிறதாம்!''
''ஓ!''


''இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் எல்லாச் சிறைகளுக்கும் விசிட் அடித்து கோஷ்டிகளைக் கடந்து ஆறுதல் கூறுவதைப் பார்க்க வேண்டி உள்ளது. அழகிரிகூட பாளை சிறைக்குச் சென்று மதுரை ஆட்களை மட்டும் பார்த்தார். ஆனால் ஸ்டாலின், எல்லாச் சிறைகளையும் வலம் வந்து​விட்டார். பாளை சிறையில் இருந்த திருவாரூர் பூண்டி கலைவாணனை ஸ்டாலின் சந்தித்தபோது, 'பொட்டு’ சுரேஷ§ம் ஸ்டாலினைப் பார்த்து வணக்கம் வைத்தாராம்.



'உங்க மேல இன்னிக்கும் ஒரு கேஸ் போட்டிருக்காங்க போல’ என்று பரிவாக ஒரு வார்த்தை சொல்லி வைத்தாராம் ஸ்டாலின். அப்படியே திருச்சி சிறைக்கு வந்தவர், அங்கு 'அட்டாக்’ பாண்டியை சந்தித்தார். இதெல்லாம் மதுரை தி.மு.க-வினர் கவனத்தை ஸ்டாலினை நோக்கித் திருப்பி உள்ளதாம். திருச்சி பிரமுகர் காஜாமலை விஜய்யும் அந்தச் சிறையில்தான் இருந்தார். 'நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. வழக்குகளை எல்லாம் சட்டப்படி சந்திப்போம். உங்கள் பின்னால் கட்சி இருக்குது!’ என்று ஸ்டாலின் சொல்ல... 'நீங்க வந்து பார்த்ததே போதும் அண்ணே... நாங்க எதுக்கும் கலங்க மாட்​டோம்!’ என்று சிறையில் இருந்தவர்கள் உருகி விட்டார்களாம்...''

 சி.பி - உருகுதே, மருகுதே ஒரே விசிட்டினாலே...

''ம்... தி.மு.க-வுக்கு இதுவும் ஒருவித 'மிசா' காலம்தான்!''


''ம்! முக்கியமாக நில மோசடி வழக்குகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைப் பார்த்து கருணாநிதிதான் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளாராம். 'இந்தக் கைதுகளுக்குத் தடை வாங்கும் வகையில் பேராசிரியர் அன்பழகனை வைத்து மொத்தமாக ஒரு வழக்குப் போடலாமே’ என்று யாரோ ஆலோசனை சொல்ல... அதில் அன்பழகனுக்கு உடன்பாடு இல்லையாம். அதனால், வழக்கறிஞர் அணித் தலைவர் ஆலந்தூர் பாரதியை வைத்து மனு ஒன்று ரெடி ஆகிறது!'' என்று சொன்ன கழுகார்,


''நடிகர் வடிவேலுவைச் சுற்றி வலை இறுகிக் கொண்டிருக்கிறது. உமது நிருபரை முடுக்கிவிடும்! '' என்று உத்தரவு போட்டுவிட்டு பறந்தார்.

 சி.பி - ஆமா, இவர் பெரிய சுதந்திரப்போராட்ட தியாகி, இவரை கைது பண்ணலைன்னா பெரிய பிரச்சனை உருவாகும்..!! அட போங்கப்பா, போய் பொழப்ப்பை பாருங்க..

மூன்று உயிர்கள் தப்புமா?


'ராஜீவ் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்’ என்ற தகவல் பரவியதை தொடர்ந்து தமிழின உணர்வாளர்கள் மத்தியில் ஒரே பதற்றம்.


''இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும் நிலையை தமிழக கட்சிகள் உருவாக்கிய நேரத்தில், 'ஹெட்லைன்ஸ் டுடே’ சேனல், போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களை நேரடியாகச் சென்று, பேட்டி எடுத்து ஒளிபரப்பியதும், இலங்கை அரசின் போர்க் குற்றச்சாட்டு மேலும் வலுவாகி வருகிறது.

இலங்கைக்கு இந்திய அரசு உதவிய நிலையில், அகில இந்திய அளவிலான ஈழ மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டிய நிலைக்கு டெல்லி தள்ளப்பட்டது. இந்த நிலையில்தான், மூவரின் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!'' என்று தமிழின உணர்வாளர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். 

''ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட சி.பி.ஐ. புலனாய்வுக் குழு, இன்னும் விசாரணையை முடித்து அறிக்கையைத் தரவில்லை. உண்மைகளைக் கவனத்தில்கொள்ளாமல், கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்திருப்பதை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கையில் இறங்குவோம்!'' என்று பழ.நெடுமாறன் அறிவித்து இருக்கிறார்.


ராஜீவ் கொலை வழக்கில் மறுவிசாரணை வேண்டும் என வலுவாகப் பேசப்பட்டு வரும் நிலையில், மூவரின் உயிர் தப்புமா? என்பது பெரும் கேள்வியாக தொக்கி நிற்கிறது!


கர்நாடகாவில் ஒரு ஓ.பன்னீர் செல்வம்!


அப்பாடா... கர்நாடகாவில் நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் ஓய்ந்து விட்டது.

'1600 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா’ என லோக் ஆயுக்தா அறிக்கை வெளி யான பிறகும், நாற்காலியை விட்டு இறங்காமல் அடம் பிடித்த எடியூரப்பாவை குண்டுக் கட்டாக இறக்கி விட்டது பி.ஜே.பி. மேலிடம்.


ஆனாலும், எடியூரப் பாவின் கட்டளைப்படி அவரது விசுவாசியான சதானந்த கவுடா முதல்வர் ஆக்கப்பட்டு உள்ளார். கர்நாடகாவில் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதா யத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் முதல்வர் ஆக முடியாது என்பது எழுதப்படாத சட்டம். 

எடியூரப்பா லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். சதானந்த கவுடா ஒக்கலிகர். கர்நாடகத்தில் பெரும்பதவிக்கு வருபவர்கள் மடாதிபதிகளின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான மடாதிபதிகள் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. எனவே அவர்களின் பேராதரவைப் பெற்ற எடியூரப்பாவின் கைப்பாவையான சதானந்த கவுடாவை முதல்வர் ஆக்க ஒப்புதல் அளித்தனர். முதல்வர் பதவி ஏற்றவுடன் சதானந்த கவுடா, கீழே முதல் வரிசையில் 'உர்’ரென உட்கார்ந்து இருந்த எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். 


பத்திரிகையாளர்களிடம் பேசிய போதும் எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளினார். இதைப் பார்த்து, 'கர்நாடக ஓ.பன்னீர் செல்வம்’ என, சதானந்த கவுடாவைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் கமென்ட் அடித்தவுடன் குபீர் சிரிப்பு எழுந்தது.

சி.பி - ஜால்ராக்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் 

thanx - ju vi