Sunday, January 08, 2017

இந்தியப்பொருளாதாரமும் மந்த்ரா நிலைமையும்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை பஞ்சம் ஏற்பட்டுள்ளது’’ நடிகர் பாண்டு பேச்சு # பைரவா ட்ரெய்லர் பார்க்கலை போல

============

2 இளைஞர்கள் பயங்கரவாதத்தை நோக்கி செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் பெற்றோருக்கு, மோடி அறிவுறுத்தல்.# அவங்க பேங்க்/ஏடிஎம் ல க்யூவுல நிக்கவே டைம் சரியா இருக்கு

===========

3 சசிகலா ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் - ஜெ நினைவிடத்தில் அமைச்சர்கள் பேட்டி# சொன்னதைச்சொல்லும் கிளிப்பிள்ளை,வாங்குன காசுக்கு வஞ்சகம் வைக்கலை


=================

4 ஐஸ்வர்யா தனுஷ்-ன் இயக்கத்தில் திரைப்படமாகிறது போட்டியில் தங்கம் வென்ற -ன் வாழ்க்கை வரலாறு.# டைட்டில் மாரி 3?

============

5 மோடி அறிவித்த திட்டங்களால் நாடு வலிமை பெறுவது உறுதி - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..# கண்ணுக்கு எட்டுன ஏடிஎம் தூரம் வரை வலி தான் தெரியுது

==============

6 பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.9 % குறைத்துள்ளது.# வங்கியின் பொருளாதார முன்னேற்றம், பொதுமக்களுக்கு பின்னேற்றம்

============

7 தயாரிப்பாளர் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி - விஷால் # இப்பவெல்லாம் பொண்ணுங்களுக்கும் பதவி ஆசை பெருகிடுச்சு


====================


8 கனி, காய், பூ, இலை, கிளை, வெளியே தெரியும்; இவற்றை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் வேர், வெளியே தெரியாது- சசிகலா # சொல்லும், செயலும் எல்லாமே மர்மமாவே இருக்கே?


====================


 சசிகலாவுடனான சந்திப்பு, மரியாதை நிமித்தமானது; இந்த சந்திப்பை, யாரும், தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். -திருமாவளவன் # மரியாதை நிமித்தம்கறாரு,ஆனா கால்ல விழவே இல்லையே


=====================

10 ஃபயர் புகழ் நந்திதாதாஸ் தனது 2வது கணவரை முதல் முறையாக விவாகரத்து செய்ய முடிவு # இதுல ட்விஸ்ட் என்னான்னா இவரோடது தனுசு ராசி

========================


11 இன்று முதல்வரை சந்திக்க உள்ளேன்: பொன்.ராதா # ஓபிஎஸ் சையா? சசிகலாவையா? தெளிவா சொல்லுங்க


===============

12 தமிழிசைகுட்டிக்கரணம்போட்டாலும்,BJP தமிழகத்தில் காலுான்ற முடியாது- EVKS # என்னமோ காங்கிரஸ் மட்டும் ஸ்டடியா 2 கால்களும் ஊன்றி நின்னா மாதிரி====================13 சோழ மண்டலம், , இன்று தற்கொலை மண்டலமாக மாறி வருகிறது.-திருநாவுக்கரசர் # தண்ணீர் தராம தண்ணி காட்டும் கர்நாடகாவில் காங் ஆட்சி தானே?============14 ADMK.வில் இருந்து விலகுகிறார், நாஞ்சில் சம்பத்.ஜெ வழங்கிய காரை ஒப்படைத்தார் நேரா அறிவாலயம் போய் வேன் சாவி வாங்கி இருப்பாரே?
====================15 தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. -ஸ்டாலின் # நம்ம ஆட்சில நல்லதே நடக்காது போல=====================

16 ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை; அதை விலக்க வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது.- நாஞ்சில் சம்பத் #மர்மத்தை விலக்கனும்,நிஜத்தை விளக்கனும், துப்பு துலக்கனும்

=======================

17 மோடியின் பொருளாதார கொள்கை, ம ந கூ உறவில் விரிசலை ஏற்படுத்தி விட்டது.-திருமாவளவன் # அப்போ மோடியின் ஆட்சியில் நல்லதே இதுவரை நடக்கலைனு யாரும் சொல்லிட முடியாது

==================

18  காங்கிரசை சீண்டிப் பார்ப்பதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்.-திருநாவுக்கரசர் # அப்படி நிறுத்தலைன்னா? அதான் நிறுத்திடனும்னு சொல்லிட்டேனே?


=====================

19  மோடி பேசியே மயக்கும் தந்திரமான பேச்சாளர் -சரத் பவார் # பேசாமலயே மவுனியா மயங்கி,தயங்கிக்கிடப்பவர்களுக்கு இவர் தேவலைங்கறீங்களா?


=====================

20 இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை தற்காலிகமே: பிரணாப் # ஆமா, எதிர் காலத்துல மந்த்ரா நிலைமை ஆகிடும்


=====================

0 comments: