Tuesday, January 03, 2017

அப்போலோ ஹாஸ்பிடல்ல இருந்த சிசிடிவி கேமரா

1  நான் யாரு வம்புக்காச்சும் போயிருக்கேனா நீ சொல்லுஅது சரியாத்தெரியல.ஆனா பல பேர் டிஎம் போயிருப்பதா தகவல்


==============

2 டீ/காபி ஒரு நாளைக்கு எத்தன முறை குடிப்பீங்கஒரு டைம் தான்
ஏன்?
குடிச்சதும் தீர்ந்திடுமே?


================

3 அந்த ஹீரோ அமைதியா

உழைக்குறது ரொம்ப
பிடிக்கும்
ஓஹோ.நாங்க மட்டும் ஆபீஸ்ல ஏலேலோ ஐலசா பாடிட்டேவா ஒர்க் பண்றோம்?================

4 மிஸ்! டிபி ல யாரு?என் அக்கா
ஓஹோ.அப்போ உங்க அக்கா டிஎல் போனா உங்க டிபி இருக்குமா?


================

5 சார்.நீங்க ஒரு தேச பக்தன் கறதுக்காக 2 1/2 மணி நேரமா நின்னுட்டே படம் பார்க்கனுமா?படத்தோட டைட்டில் தேசிய கீதம் ஆச்சே?


====================

6 அண்ணாமலை பட ரீமேக் ல எங்க ஆள் ஹீரோவா புக் ஆகி இருக்கார்பிரமாதம்.ரீ மேக் ஹீரோ ரீ மேக் டைரக்டர்.நல்ல மேட்ச்


==============

7 எப்படியும் இந்த பொண்ணுங்க காதலிக்குறவன கல்யாணம் பண்ண மாட்டாங்க , அப்புறம் ஏன் பசங்களோட நேரத்த வீணடிச்சிகிட்டு ?

டைம் பாஸ் ,பஸ் பாஸ், ரயில் பாஸ்,ஹோட்டல் பாஸ்

=============


8 பூலோகம் பூகோளம் ரெண்டும் ஒரே பொருள் தானே 😊

நோ , பூமி , புவியியல் 2ம் எப்டி 1 ஆகும்?


=================


9 இந்த ஜியோ சிம்ல நெட் ஸ்லோவா இருக்கு, புதுசா சிம்மு வாங்கி யூஸ் பண்ணினா ஸ்பீடா இருக்குமா?


நோ.திமுக, அதிமுக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரிசல்ட் 1 தான்


===================


10 'சரி'ன்னு ரிப்ளை பண்றது தப்பா?இல்லை.இதான் சாக்குன்னு மேலே சரிஞ்சு.விழுந்தா தான் தப்பு


==============

11 கடைசில வர்ஷுவும் ஏமாத்திருச்சு..ஆரம்பத்துலயே ஏமாத்திடுச்சு.உங்களுக்கு இப்போதான் தெரிஞ்சிருக்கு.ஏன்னா உங்களுக்கு "ஆரம்பம்" ஆகாதில்ல?


=================

12 தலைவரே! உங்க கிட்டே கறுப்புப்பணம் இருக்கா?இல்ல.எல்லாத்தையும் பிங்க் கா மாத்திட்டேன்


==============

13 சார்.24 வருசமா எங்களை எல்லாம் என்ட்டர்டெயின் பண்ணுனதுக்கு தாங்க்ஸ்நீங்க என் ரசிகரா?
ச்சே சே ஆனாலும் செம என்ட்டர்ட்டெயின் தான்


==============

14 மேடம்.2 பேருக்கும் வெட்கம் கிடையாதுன்னு டிவி ல சொன்னீங்கஆமா
பொதுவெளில இப்டி பேசுன உங்களுக்கு நாகரீகம் நாசூக்கு கிடையாது?


==============


15 டாக்டர்.பால்பணியாரம் சாப்டனும்னு ஆசையா இருக்கு . நைட் டைம்ல சாப்ட கூடாதாம்ஆமா.நைட் பால் ,காலை பணியாரம் சாப்பிடுங்க


=================

16 கறுப்புப்பணம் வெள்ளையாக்க உதவும் ஏழைகளுக்கு 7 வருச ஜெயில் தண்டனை.ஓஹோ.அப்போ கறுப்புப்பண முதலைகளுக்கு?
500 ரூ அபராதம்


============

17 டாக்டர், 90 கோடி பில் ? எதுக்கு?


ட்ரீட்மெண்ட்க்கு 10 கோடி. என்ன ட்ரீட்மெண்ட் நடந்தது?ன்னு கடைசி வரை சரியா சொல்லாம இருந்ததுக்கு 80 கோடி

================


18 உங்க  பையன் வருங்காலத்துல பெரிய பத்திரிக்கையாளரா வருவான்

 எப்டி சொல்றீங்க?

தப்பு தப்பா  ஹெட்டிங் நியூஸ்  எழுதறானே?

====================

19   ஜட்ஜ் = அப்போலோ ஹாஸ்பிடல்ல இருந்த சிசிடிவி கேமராவை கொண்டாங்க பார்ப்போம்

 சாரி யுவர் ஆனர், அது 80 நாள் முன்பே திருடு போயுடுச்சு


=====================

20  டாக்டர் , உங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆக எவ்ளோ சார்ஜ்?


அதுக்கு கம்மிதான்,ஆனா டிஸ்சார்ஜ் ஆகத்தான் ஜாஸ்தி


===================

0 comments: