Monday, January 16, 2017

தை பிறந்தால் சசிகலா வுக்கு தலை வலி பிறக்கும்?

1 நான் முதல்வராக இருந்திருந்தால், விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைத்திருப்பேன்.-அன்புமணி # இன்னும் கனவுலகத்துலயே வாழ்வதுதான் உங்க முக்கிய பிரச்சனை

==============


2 தமிழ் மொழிக்கு, கலாசாரத்துக்கு, பண்பாட்டுக்கு எங்கேனும்  ஆபத்து வரும் என்று சொன்னால், அதைப் பார்த்துக் கொண்டு தமிழன் காத்துக் கொண்டிருக்க மாட்டான்.-ஸ்டாலின்: # கனிமொழிக்கு ஆபத்துன்னா கலைஞர் டெல்லி போய்டற மாதிரி?
===========


 3 கடந்த, 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று மோடியும், பா.ஜ.,வினரும் கேட்கின்றனர்.-ராகுல்:  # 2 ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், போபர்ஸ் ஊழல் பட்டியல் எடுத்து விடுங்க

==============

திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாள் மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும்” -மு.க ஸ்டாலின் # அது.வர்றப்போ பார்ப்போம்

==============

5 திரையரங்குகளில் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்க கூடாது: உயர்நீதிமன்றம்.# கவுன்ட்டர்லயே பிளாங்க் டோக்கன் தான் தர்றாங்க


================

6 "ஜல்லிக்கட்டுக்கு நான் எதிரானவன் அல்ல, நமது கலாச்சாரத்திற்கு ஜல்லிகட்டு தேவை-,ஆர்யா # கலைஞர்,ராமதாஸ் மாதிரி மாத்தி மாத்திப்பேசாதீங்க

=================


7 என்னை காலில் விழ சொன்னவர்கள் மேல் தான் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்-OPS விழ மாட்டேன்னு தன்மானத்துடன் சொல்லி இருக்கலாமே?

=============

8 ஜல்லிக்கட்டு நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன்-பொன் ராதா # ஓட்டு கேட்டு ஜென்மத்துக்கும் தமிழ்நாடு சைடு வந்திடாதீக

===============

9 டுவிட்டரில் இருந்து வெளியேறினார் திரிஷா..! இருந்தால் கிடைக்கும் மூக்குடைப்பு.எனவே தான் இந்த வெளிநடப்பு

==============

10 திராவிட இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது: மு.க.ஸ்டாலின்-அதோட மதிப்புதான் அதல பாதாளத்துக்கு போய்டுச்சே.எப்டி எட்டும்?


===================

11 ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்ட ரூ.500தாள்களால் அதிர்ச்சி:செய்தி # அதை ஏன் வேஸ்ட் பண்ணனும்?250 ரூ க்கு செல்லும்னு சொல்லிடுங்க


=================

12 ஜல்லிகட்டை ஏறுதழுவுதல் என நடத்தலாம்
இல.கணேசன் # தன்தேவைக்கு ஏற்றபடி பேரை/ கூட்டணியை மாத்துவது அரசியல்வாதிக்குத்தானே பழக்கம்?

=================

13 திருக்குறள்படி ஜெ. ஆட்சி நடத்தினார் -OPS # அதிகார மயமா ,அதிகார மய்யமா இருந்தது


=================

14 100 வயது வரை வாழ்வேன்..மக்களுக்கு நல்லது செய்துவிட்டுதான் என் கட்டை போகும்: விஜயகாந்த் # ம ந கூ வை விட்டு வெளியேறுனதுதான் பெரிய நல்லது

==================

15 மான் வேட்டை.. நடிகர் சல்மான் கான், நடிகை தபு ஆஜராக ஜோத்பூர் ஹைகோர்ட் உத்தரவு # பீட்டா கண்ணுக்கு இது எல்லாம் தட்டுப்படாதே?

=============

16 அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக்கழகம்உதயமானது - நாமக்கல்லில் தீபா ஆதரவாளர்கள் துவக்கம் பிறந்தால் சசிகலா வுக்கு தலை வலி பிறக்கும்?


=================

17 ஒரு பெண்ணை தவறாக பேசுவது பண்பாடல்ல-குஷ்பூ! நிகழ்ச்சில நாம எத்தனை லேடீசை கேவலப்படுத்துனோம் ?அதுக்கு சம்பளமும் வாங்கிட்டோம்!

===============

18

பாஜகவின் எடுபிடிதான் அதிமுக அரசு: ஸ்டாலின் சரமாரி தாக்கு # ஒரு காலத்தில் 2ஜி கோலத்தில் நாம காங்கிரசுக்கு எடுபிடியா இருந்தமே?திகார் புகார்


=================

19 

முதல்வரின் அரசு நிகழ்ச்சிகள் திடீர் ரத்து: தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பு # திடீர்னு ஒரு நாள் முதல்வரையே ரத்து பண்ணிட்டு சுதாகரன், தினகரன், சசிகலா இப்டி ஒரு முதல்வர் வரப்போறார்


====================

20 

கோவை மாநகராட்சி திறந்தவெளி கழிப்பிடமில்லா நகரமாக அறிவிப்பு # சபாஷ், கொங்கு மண்டலம் , எங்கேயும் எப்போதும் முதல் இடம்=================


0 comments: