Monday, January 30, 2017

மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு கசப்பான செய்தி

1 தமிழக கலாச்சாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : மோடி # பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்றாராம் , அரசியல் சாணக்கியத்தனம் காட்றாராம்

===================
2 ரூ.49 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்டதாக நடிகை ரதி மீது வழக்குப்பதிவு # வீட்டில் மீட்டரை செக் பண்ணதில் ஏகப்பட்ட “புதிய வார்ப்புகள்” இருந்ததாம்

=================

3 அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: வாடிவாசலை பார்வையிட்டார், கலெக்டர் # புதிய எழுச்சிக்கான தலை வாசல் அலங்காநல்லூர் வாடி வாசல்

====================

4 ‘வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம்’- டிரம்ப் # வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் முன் உலக நாடுகள் பாடம் கத்துக்கனும்

==============

5 ராணுவக்கட்டுப்பாட்டுடன் ஜல்லிக்கட்டு போராட்டம் தெலுங்கு நடிகர்கள் ஆச்சரியம், ஆதரவு # கடமை கண்ணியம் கட்டுப்பாடு அரசியல்வாதிகளிடம்தான் தட்டுப்பாடு

===========

6  தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் 'மாணவர் எழுச்சி' # 52 = 5+2= கூட்டுத்தொகை ஏழு, அரசியல்வாதிகளுக்கு இனி ஏழரை

=================

7

கோவையில் ரூ.100 கோடியில் புதிய உணவுப் பூங்கா: மத்திய அமைச்சர் தகவல் # இதுல இடைத்தரகர்கள் எதுவும் சாப்பிடாம பார்த்துக்கனும்


=================


====================

 அ.தி.மு.க.,வை உடைக்க, மத்திய அரசு சதித்திட்டம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை, உடனடியாக வெளிப்படுத்த இயலாது.- நடராஜன் # ஏன்? வெளிப்படுத்தித்தான் பாரேன் மொமெண்ட்==================


10  'நாங்கள் கை சுத்தமானவர்கள்' என, பா.ஜ., இனி கூறக்கூடாது.-உத்தவ் தாக்கரே # “கை” சுத்தம்னு காங்கிரஸ்காரரே சொல்ல முடியாதே?


==================11 மெரினா போராட்டத்திற்கு வித்திட்டது தி.மு.க., : ஸ்டாலின் #  1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்ததே கலைஞர்தான்னு சொல்லலை, நல்ல வேளை===============
12 பிரதமர் மோடி மீதும் வழக்கு போடுவோம் - பீட்டா # சேம் சைடு கோலா?ஷேம் ஷேம்===============13 மாணவர்களின் போராட்டத்திற்கு, முதன் முதலில் வித்திட்டது தி.மு.க., தான் -ஸ்டாலின் # ஓஹோ, அப்போ கைது செய்யனும்னா திமுக காரங்களை கைது செஞ்சா போதும்கறீங்களா?=================14  பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கட்டுமானப் பணி தீவிரம்  @கேரளம் # திரும்பின பக்கம் எல்லாம் தமிழனுக்கு  எதிராவே காரியங்கள் நடப்பது ஏனோ?
==================15 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும் # இனிப்பான செய்திதான், மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு கசப்பான செய்தி
==================
16  

எதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் நோக்கி திரும்புங்கள்: தமிழிசை வேண்டுகோள் # தமிழகத்தில் பாஜக வின் எதிர் காலம் குறித்தும் யோசிச்சுக்குங்க================


17 ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் போராட்டம் ஒழுங்குடன் நடந்தது: சென்னை காவல்துறை ஆணையர் போலீஸ் ஏன் ஒழுங்கில்லாம நடந்துக்கிட்டாங்க


===============


18 வாகனங்களுக்கு போலீஸ் தீவைத்தது போல் வெளியான காட்சி ஆய்வு செய்யப்படும்:காவல்துறை ஆணையர் ஜார்ஜ் சப்பைக்கட்டு கட்டாம இருந்தா சரி

=============

19 சமூக விரோதிகள் கூட்டத்திற்குள் ஊடுருவியதே பிரச்னைக்குக் காரணம்: சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் போலீஸ்தான் சமூக விரோதி போல

============

20 அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி # புத்தி சார்ஜ் ஏறலை.லத்தி சார்ஜ் ஏறிடுச்சு

=============
0 comments: