Saturday, January 07, 2017

வரலாம் வரலாம் வா பைரவா

1  அமைச்சர்களை மையமா வெச்சு சினிமா எடுக்கறேன்

 என்ன டைட்டில் வெச்சிருக்கீங்க?

 பலே ,அல்லக்கை தேவா

=================


குருவே! நான் ஒருத்தருக்கு துரோகம் பண்ணிட்டேன்.பாவம் சேர்த்துட்டேன்.சரி பண்ண என்ன வழி?


குழந்தைங்களுக்கு அவர் பேர் வெச்சிடு


=================


3 டியர்.நீங்க தொட முடியாத தூரத்தில் ,உயரத்தில் இருக்கேன்


ஓ.எங்கே?
"தொட்ட"பெட்டா வில்


====================

4 மிஸ்! ஒரு தலையா உங்களை லவ்வறேன்


சாரி
ஒரு தளபதியா லவ்வறேன்
அப்ப ஓக்கே.ஐ டூ லவ் யூ==================

5 சார். வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி ன்னு சொல்றாங்களே?நிஜமா?


ஆமா.ரிக்சாக்காரன்,வேட்டைக்காரன் 2 மே எம்ஜிஆர் ஹிஸ்டரில ஹிட் பிலிம்ஸ்

================


6 சார்.நம்ம படத்துலயும் ஒரு பைக் சீன் வைக்கறோம்.


சரி.பஞ்சர் ஆன பைக்கை மெக்கானிக் ஷாப்க்கு தள்ளிட்டுப்போறீங்க.எப்பூடி?


===========

7 சார்.பைக் ல போகும் ஸ்டில்லில் முகத்தில் லைட்டிங் எபக்ட் எதுக்கு?


டூப் னு சொல்லிட்டுகிளம்பும் ஆட்களுக்கு பல்பு கொடுக்கனும்ல ?

================

8 சார்.மாரி2 படத்தோட கதை என்ன?


மாரி 1 ஒரு கேப்மாரியின் கதை.மாரி2 ஒரு மொள்ளமாரியின் கதை===============

9 நான் மேக்அப் போடாம கூட பல நாட்கள் தெருவில் நடந்ததுண்டு


அடடே! அப்போ நாய் எல்லாம் துரத்தி இருக்குமே? எப்டி தப்பிச்சீங்க?

===============

10 சார்.அதிகாலைல திருப்பாவை ,திருவெம்பாவை பாடற டைம்ல பொண்ணுங்களைப்பத்தி பேசறது ஏன்?


அதுவும் பாவை தானே?=================

11 மேடம்.பேட்டி தரும்போது கண்.சிமிட்டறீங்களே? குறியீடா?


கண்.சிமிட்டும் நேரம் போதும்.அரசியலில் ஒரு மாற்றம் வர===================

12 ஷூமேக்கரின் தம்பி பேர் என்ன?


ஜூஜூபி கொஸ்டின்.செப்பல் மேக்கர்================13 அம்பிகா வை விட ராதா தான் பெட்டர்னு எப்டி  சொல்றீங்க?

 கார்த்திகா , துளசியை வெச்சுத்தான்


=================

14  Username மாத்தலாமான்னு திங்கிங்

வெரிகுட் மிஸ், எதுவுமே திங்க் பண்றதில்லைனு ஒரு பய இனி உங்களை சொல்ல முடியாது


===================

15 டாக்டர்.அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுதே!!

தினமும் வீட்ல சாப்பிடுறது உடம்புக்கு ஒத்துக்கலையோ!!?
கொஞ்ச நாள் வாசல் திண்ணைல உக்காந்து சாப்பிடுறது?

================

16 தலைவரே! கங்கையைப்போல் புனிதமானவர்னு உங்களைப்பாராட்றாங்களே ?


கலாய்ப்பவரா?கங்கை நதியை இது வரை காணாதவரா? காணாதது தவறா?தெரில


=================


17 தலைவரே! வரலாம் வரலாம் வா பைரவா. பாட்டைக்கேட்டுட்டே இருந்தீங்களே?தளபதி வந்தாரா?


ரெய்டு தான் வந்தது


=================

18 இனி நம்மகிட்ட மட்டும்பேசுறவங்க கூட மட்டும் பேசிட்டு போய்டலாம்னு இருக்கேன்


மேடம், அப்போ உங்க புருசன் கிட்டே கூட நீங்க பேச முடியாதே?

=================

9 மேடம்,நீங்க பேசும்போது எப்பவும் தலையை ரொம்ப ஆட்டி ஆட்டிப் பேசறீங்களாமே? ஏன்?

அரசியல்ல பெரிய ஆள் ஆகனும்னா தலையாட்டி பொம்மையா இருக்கனுமாம்

=============================


20 ஆட்சி எனக்குப்புதிதல்ல. நான் சாப்பிட்டுட்டுப்போட்ட எச்சில் இலைதான் அது ( 1977)

தலைவரே!நீங்களும், உங்க குடும்பமும் எவ்ளோ சாப்ட்டீங்க?கணக்கை கரெக்டா சொல்லுங்க

=======================
1

0 comments: