Monday, January 09, 2017

பொங்கலுக்கு அண்ணியோட வர்றோம்

தலைவரே! தீபாவளி சனிக்கிழமை வந்தப்போ விடுமுறை தின வாழ்த்து சொன்னீங்க?


ஆமா.பகுத்தறிவு.
ஆனா கிறிஸ்மஸ் சண்டேவந்தும் அப்டி சொல்லல?


=============
2 மேடம்,நீங்க பேசும்போது எப்பவும் தலையை ரொம்ப ஆட்டி ஆட்டிப் பேசறீங்களாமே? ஏன்?


அரசியல்ல பெரிய ஆள் ஆகனும்னா தலையாட்டி பொம்மையா இருக்கனுமாம்


=============

3 ஆட்சி எனக்குப்புதிதல்ல. நான் சாப்பிட்டுட்டுப்போட்ட எச்சில் இலை
தலைவரே!நீங்களும், உங்க குடும்பமும் எவ்ளோ சாப்ட்டீங்க?கணக்கை கரெக்டா சொல்லுங்க

=============
4 லயன் டேட்ஸ் எங்க குல டேட்ஸ்னு பாடறீங்களே ஏன்?

கோமாதா எங்கள் குல மாதான்னு பாடுனா ஜட்ஜ் அய்யாவுக்குப்பிடிக்காதே?=================

5 அன்னதானக்குஷ்பூ என அழைக்கப்படுபவர் யார்?

கண்ணம்மா

எப்டி?

அன்னதானப்பிரபு = ஐயப்பா (EYEஅப்பா)
அன்னதானக்குஷ்பூ= EYE அம்மா (கண்ணம்மா)

================


6 சார், உங்க பட ரிலீசுக்கு முன்பே இவ்ளோ ஸ்டில்ஸ் வெளியிடறீங்களே? ஏன்?

படம் ஹிட் ஆகலைன்னாலும் ஸ்டில்ஸ் ஹிட் ஆகுமில்ல?


=================


7  சார், ஹிந்தி தெரிஞ்சா வட மாநிலங்களில் வேலை கிடைக்குமா?


ஹிந்தி தெரிஞ்ச பலர் தென் மாநிலங்கள்ல வடை,பஜ்ஜி சுட்டுட்டு இருக்காங்க


==============


8  மேடம்,இவ்ளோ வலியைத்தாங்கிட்டு டாட்டு குத்திக்கிட்டதுல என்ன யூஸ்?

FB ல ஸ்டேட்டஸ் போடலாமில்ல?நோ பெயின் நோ லைக்ஸ்


====================


9 சார், சொல்லாம கொள்ளாம திடீர்னு ரெய்டு வந்திருக்கீங்க?

 சொல்லாம வந்தாதாதான் இன் கம் டாக்ஸ் ரெய்டு, சொல்லிட்டே வந்தா கபடி ரைடு


=======================


10 குருவே! காது மடலில் முத்தமிட்டு விட்டு தூக்கத்தைத் தொடர்வது இல்லற அழகியல்னு சொல்றாங்களே? நிஜமா?

இது கும்பகர்ணனுக்கே அடுக்”காது”


====================


11 மிஸ்! கோவைல தானே உங்க வீடு? எதுக்கு மெஸ்-க்கு வந்திருக்கீங்க?

சும்மா ஒரு ஃபோட்டோ எடுத்துட்டுப்போக. FB ல அப்டேட்டனும் இல்ல?


=====================


12 மேடம், இந்த சீன்ல டூ பீஸ் டிரஸ்.

யோவ். மரியாதையா பேசு.

இந்தாங்க 10 லட்சம் ரூபா.எக்ஸ்ட்ரா பேமண்ட்.

சிங்கிள் பீசே போதும்


===================

13 யுவர் ஆனர் ,டைரக்டர் என்னை கவர்ச்சி காட்டச்சொல்லிட்டார்

ஏம்மா, இதுக்கு முன்னே , பின்னே , சைடுல கிளாமர் காட்னதே இல்லையா?


===============


14   கிறிஸ்துமஸ்க்கு

கேக் ஏன்டி தரலன்னு கேட்டேன்
நீயே கேக் மாதிரி இருக்க னு
சொல்லிட்டு பொய்டுச்சி


பேக்குனு சொல்லி இருக்கும்


====================

15 வழக்கமா தடங்கலுக்கு வருந்துகிறோம்னு தானே சொல்வாங்க? நீங்க உல்டாவா மகிழ்கிறோம்கறீங்க?

அமீர்கானின் த”டங்கல்”க்கு மகிழ்கிறோம்


==========================

16  நான் யாரையுமே அவ்ளோ சீக்கிரம் பாலோ பண்ணமாட்டேன்

ஓஹோ, இப்போ எங்கே கிளம்பிட்டீங்க?

எதிர் வீட்டு ஏஞ்சல் கோவிலுக்கு போகுது. ஃபாலோ பண்ணனும்


====================

17   சிந்து சமவெளி புகழ் இயக்குநர் சாமி யோட உயிர் படத்தில் ஜிவி பிரகாஷ் நடிச்சிருந்தா அதுக்கு கேப்ஷன் என்னவா இருக்கும்?

பொங்கலுக்கு அண்ணியோட வர்றோம்


=======================


18 ஜட்ஜ் = கோடிக்கணக்காக பணம் திருடி இருக்கே, தப்பு தானே?

கைதி = என் வீட்டை அனுமதி இல்லாம போலீஸ் சோதனை போட்டது தப்புதானே?


====================


19 டாக்டர். 10 கிலோ வெயிட் ஏத்தறது ஈசியா? குறைப்பது ஈசியா?


எது சாப்ட்டாலும் அனிரூத் மாதிரி இருப்பவர்கள், எதுவுமே சாப்பிடலைன்னாலும் பிரபு போல் இருப்பவங்க உண்டு


===================

20 டாக்டர்,  கீரை டெய்லி சாப்பிட்டா பார்வை தெளிவாகுமாமே? நிஜமா?

 ஆமா, ஆனா டாக்டர் இங்கே இருக்கேன், நர்சைப்பார்த்தபடி பேசுவது ஏன்?


==================

0 comments: