Thursday, January 05, 2017

பாம்பு 🐍 2 வாரத்துக்கு ஒரு முறை சட்டைய கழட்டுமா?

மிஸ்,ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பிரைஸ் லிஸ்ட்டை எதுக்கு சாப்ட்டீங்க?

?

ரேட் தான் காஸ்ட்லி,ஆனா டேஸ்ட் அபாரம்னீங்களே?

=============

2 டியர்.உங்க கிட்டே கோபப்பட்டா பிடிக்குமா?சந்தோஷப்பட்டா பிடிக்குமா?


கிட்டே வந்து பட்டா பிடிக்கும்


===================

3 குருவே!பரஜோதியைக்காண 500,ரூ கட்டணமா?ஜாஸ்தியா இருக்கே?


சிஷ்யா!டென்ட் கொட்டாய் பரங்கிமலை ஜோதிக்கே 50 ரூ செலவுபண்றே.இதுக்கு செய்யமாட்டியா?====================

4 வர்தா வின் பர்தாவு ஆர் கே செல்வமணி னு எப்டி சொல்றே?அவருக்கும் புயலுக்கும் என்ன சம்பந்தம்?


பாகிஸ்தானிய மொழியில் வர்தா ன்னா ரோஜா ன்னு அர்த்தமாம்


===================

5

நேத்து லண்டன் போய் இருந்தேன்


ஓஹோ, எப்போ திரும்புனீங்க?

 2 1/2 மணி நேரத்தில் லண்டன் படம் முடிஞ்சிடுச்சு,  அப்பவே வீடு திரும்பிட்டேன்


=====================


6  மிஸ்.உங்களுக்கு சமைக்கத்தெரியுமா?


வெற்றி விழா கமல் ரசிகை = சமைக்கத்தெரியுமா?தெரியாதா?என்பதே எனக்குத்தெரியாதே?


=================

7 டியர்.உன்னை உயர்ந்த இடத்தில் வெச்சு அழகு பார்க்கனும்


யோவ்.அதுக்காக.10 வது மாடில குடி வெச்சா எப்டி?===================

8 உங்களை.விட வயசில் குறைந்த பூங்கொடி ,அன்னக்கொடி ,மலர்க்கொடி,சுடர்க்கொடி இவங்களுக்கு எதுக்கு வணக்கம் வைக்கறீங்க?


கொடி நாள் மரியாதை

=================

9 சசிகலாஅஞ்சாங்கிளாஸ்ல பாஸ் ஆன சர்ட்டிபிகேட்டை எதுக்கு இப்போ காட்றீங்க?SASI FAILSனு நெட்ல டேக் ஓடிட்டிருக்கு.அதுக்கு பதிலடி.எப்பூடி?

==============

10 சார்.அடிக்கடி எதுக்கு பாத்ரூம் போறீங்க?சுகர் பேஷண்ட்டா?


ஏடிஎம் ல கிடைக்காத பணம் பணக்காரன் பாத்ரூம்ல கிடைக்குதாம்


=================

11 சார்.அவர் படமா?இவர் படமா?இந்த வருசத்துல 2 எது பரவால்ல?


அவர் படத்தால 40கோடி நட்டம்.இவர் படத்தால41,கோடி நட்டம்

===============12 பைரவா ,சிங்கம் 3 மோதுனா எது ஜெயிக்கும்?
கால பைரவனுக்கே வெளிச்சம்


=================


13 குருவே!புயல் காற்றே அடிச்சாலும் அரசு (அரச மரம்) வீழாதாமே?நிஜமா?


புயலின் தாக்கம் ,உண்மையின் தாக்கம் அரசு வீழும்


===================


14 தலைவரே! ஏன் மஞ்சத் துண்டு போட்ருக்கீங்க? அதுக்கு பின்னால எதும் ரகசியம் இருக்கு?
மங்களம் உண்டாகட்டும்னுதான்


====================

15

சார்.உங்க கடைல நயன்தாரா போட்டிருந்த அந்த மஞ்சள் சுடிதார் கிடைக்குமா?
மஞ்ச மாக்கான் மாதிரி பேசாதீங்க.லாண்டரிலதான் கிடைக்கும்===============16 சார்.பயங்கரமான க்ரைம் த்ரில்லர் படம் எடுக்கறோம்.90 கோடி ரூ பட்ஜெட்.என்ன டைட்டில் வைக்கலாம்?அப்போல்லோ ஹாஸ்பிடல் னு வைங்க

===========

17 ராஜ் டிஜிட்டல் + சேனல் பார்த்ததும் அதிமுக +பாஜக கூட்டணி உருவாகும்னு எப்டி சொல்றே?


ராஜா ராஜாதான் படம் ஓடுது.ராமராஜன் +கவுதமி

==============


18 DR.பாம்பு 🐍 2 வாரத்துக்கு ஒரு முறை சட்டைய கழட்டுமாமே?
3மாசமா "நாகினி" சீரியல்ல கழட்டவே இல்ல.?
3 வருசம் ஆனாலும் கழட்டாதும்மா

============


19 நள்ளிரவில் ஜெயலலிதா சமாதி எப்படி இருக்கிறது?ன்னு ஒரு ஆர்ட்டிகிள் ரெடி பண்ணனும்
ஓக்கே எடிட்டர் சார்.இருட்டா இருக்கிறதுன்னு எழுதவா?

================

20 டாக்டர்.பயங்கரமான தூக்கம் பயங்கரமான கனவு.

அப்டியா?5000ரூபா FEES. மேடம்
அய்யய்யோ.FEESம் பயங்கரமா இருக்கே?

====================
0 comments: