Wednesday, January 04, 2017

பதவிக்கு மட்டும் பங்கு போடத்தெரியுது, செஞ்ச தப்புக்கு தண்டனைக்கும் பங்கு ஏத்துக்கனுமில்ல?

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் -னை அரெஸ்ட் பண்ணினீங்களா?


எஸ் சார்

என்ன கிடைச்சது?
100 டிவிடி தான் கிடைச்சது, , மாமூல் 10 பைசா தர்லை


=================

2  விஜய் படமும் , அப்போலோ ஹாஸ்பிடல் பில்லும் 1

 எப்டி?

 2மே 100 கோடி


=====================


3  ஹார்ட் அட்டாக்னு அட்மிட் ஆன பேஷண்ட்டுக்கு ஹாஸ்பிடல் பில் 90 கோடியாம்

ஓ,சரி ஆகிடுச்சா?


சொத்து தானே? க்ளீன் ஆகிடுச்


==================


குருவே! வேடிக்கை பார்ப்பவராக இருந்துவிட்டால் தலை வலிகள் மிச்சமா?

சிஷ்யா! வேடிக்கை பார்த்தால் நீ சாப்பிடுவது மிக்சரா? என சமூகம் கேட்குமே?


====================

5 கூடவே இருந்ததால ஜனகராஜ் அடுத்த பாட்ஷா ஆகிட முடியுமா?

முதல்ல அது மலையூர் மம்பட்டியான் கூட இருந்த செந்தில் கேரக்டரா?னு பாருங்க

===============

6 கூடவே இருந்ததால ஜனகராஜ் அடுத்த பாட்ஷா ஆகிட முடியுமா?

முதல்ல அது மலையூர் மம்பட்டியான் கூட இருந்த செந்தில் கேரக்டரா?னு பாருங்க

================

7 சார், அதிமுக வின் அடுத்த பொதுச்செயலாளர்  சசிகலா? ஒரு வரி கமெண்ட்?

 சகிக்கல


====================


சசிதரூர்

சசிகலா

2 பேருக்கும் 2 ஒற்றுமை இருக்கு.2 பேருக்கும் முதல் 2,எழுத்து 1
இன்னொரு ஒற்றுமை ஊருக்கே தெரியும்

===============

9 சசிகலா ,

சசிகலா புஷ்பா
என்ன.வித்யாசம்?

துரோகிக்கும்
விரோதிக்கும் கூடவா வித்யாசம் தெரியாது?

================

10 கவுதமி ,சசிகலா 2 பேரில் யார் ஜெயிப்பாங்க?யார் வெயிட் பார்ட்டி?


சசிகலா.ஏன்னா கவுதமி ஒல்லி.சசிகலா கில்லி வில்லி===================

11 யாருடைய வற்புறுத்தலும் இல்லாம நானாதான் இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கேன்

ஓஹோ.இப்டி சொல்லச்சொன்னது யாரு?
குஷ்பூதான் வற்புறுத்துனாரு


=================

12 கவுதமிக்கு   சசிகலாவை ஏன் பிடிக்காது?

    1989 லேயே வெற்றி விழாவில் சசிகலா வுடன் ஜோடியாக நடிச்சாரு கமல்.அப்ப இருந்தே சசிகலா பேரைக்கேட்டாலே ஆகாதாம்


=================

13 ஜட்ஜ் = எதுக்காக இப்போ திடீர்னு சசி டிவி னு ஒரு சேனல் ஆரம்பிச்சீங்க?


கைதி=,சிசி டிவி /சிசி கேமரா வில் பதிவானதை டெலிகாஸ்ட் பண்ணச்சொன்னாக


==================

14 குருவே! மரணம் நிகழ்ந்த வீட்டில் துக்கம் அனுஷ்டிக்க கால நிர்ணயம் எவ்ளோ?


ஏழை எனில் 15 நாட்கள் .ஏய்ப்பவர் எனில் ஏழு நாட்கள்


==================


15 தமிழ் மிஸ் தன்யா=   ஈறுகெட்ட எதிர்மறை(கழண்ட) பெயரெச்சம் உதாரணம் தருக

லொள் மாணவன் = சசிகலா


=====================

 16  '  சின்னம்மா வுக்கு இங்க்லீஷ்ல என்ன?

"SIN"NAMMAA


======================

17 என்னது? சசிகலாவுக்கு பாரத ரத்னா விருது தரனுமா? எதுக்கு?

 ஜெ வுக்கு தரனும்னு போராடுனா 10 பைசாவுக்கு பிரயோஜனம்   இனி இல்லை


=====================

18 

 டைரக்டர் சார், உங்க படத்துல மழைல ஹீரோ நனையறார், ஹீரோயின் மட்டும் நனையறதில்ல ஏன்?

ஒரு டைம் மேக்கப் கலைஞ்சா மறுபடி ரெடி ஆக 2 மணி நேரம் ஆகுது


===================


19 சென்னையை மிரட்டும் ’வர்தா’ புயலின் வழித்தடம் இதுதான்

ஓஹோ.நோ என்ட்ரி போர்டு போட்டுடுவோம்.ஏமாந்து திரும்பிப்போய்டும்.எப்பூடி?

===============

20 ஜட்ஜ் = சொத்துக்குவிப்பு வழக்கில் 10+10 =20 வருச தண்டனை

 கைதி = அய்யய்யோ, எப்டி?

பதவிக்கு மட்டும் பங்கு போடத்தெரியுது, செஞ்ச தப்புக்கு தண்டனைக்கும் பங்கு ஏத்துக்கனுமில்ல?

======================

0 comments: