Monday, January 23, 2017

தடை அதை உடை, புதிய சரித்திரம் படை

/தமிழத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறிய ரஜினி பேச்சுக்கு சரத் குமார் எதிர்ப்பு # நாட்டுக்கு ஒரு நல்லவன் VS நாட்டாமை================
2 தமிழ் படங்களில் இனி நடிக்க மாட்டேன்-திரிசா. சூழல் வந்தா அப்டி நான் சொல்லவே இல்லை.ஹேக் பண்ணிட்டாங்கனு சமாளிப்பீங்க=============3 அ.தி.மு.க.வை அழிக்க முடியாது-திவாகரன் # வெளி ஆட்கள் யாராலும் அழிக்க முடியாது என பொருள் கொள்க=============4 ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக எதிர்ப்பேன்: சரத்குமார் # நீங்க அரசியலுக்கு வந்தப்போ அவர் அதை கண்டுக்கவே இல்ல============5 அதிமுகவில் எங்கள் பங்கு அதிகம்- திவாகரன் # எவ்ளோ பங்கு எடுத்துக்கிட்டீங்க?கணக்கு காட்டவும்==============6 அதிமுகவை உடைக்க மோடி சதி.. சசிகலா கணவர் நடராஜன் # துக்கம் விசாரிக்க வந்தப்ப சசி தலை மேல கை.வெச்சாரே அது குறியீடு?===========7 தமிழகத்தில் முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.. சசிகலா கணவர் நடராஜன் # தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஷோ ரூமிலிருந்து அறிக்கை விடுறார் போல============8 தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும்


- சரத்குமார்

# புதுசா இதுவரை யாரும் சொல்லாத டயலாக்/பஞ்ச் சொல்லுங்க நாட்டாமை.இது புளிச்சுப்போனது


============

9 எனக்கு பிடித்த படம் ஒன்றை எடுக்க சொன்னால் சின்னம்மாவை பற்றி படம் எடுப்பேன் - லிங்குசாமி அஞ்சாள்?


===============

10 தீபா விரைவில் அதிமுகவில் இணைவார்: நடராஜன் நம்பிக்கை # பேரம் பேசிக்கொண்டிருக்கிறார் என அறிக

===========

11  பா.ஜ., மூன்றாவது இடத்திற்கு வந்து விட்டால், காங்., தொண்டன் ஒவ்வொருவனும், துாக்கில் தொங்க வேண்டியது தான்-EVKS #அப்போக்கூட நைசா தலைவர்கள் தப்பிச்சிடுவாங்க?

================

12  அ.தி.மு.க.,வில், ஜெ வை உருவாக்கிய ஹீரோ நான்; நடராஜன் தான் வெறும் ஜீரோ.-திருநாவுக்கரசர் # அரசியல்வாதிகளுக்கு நாக்கில் தான் சனி

=================

13   கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பிட்டா, நான் சந்தோஷப்படுவேன்;  'பீட்டா' அமைப்பை வீட்டுக்கு அனுப்பிட்டா, தமிழகம்சந்தோஷப்படும்.-விஜய் # வரலாம் வரலாம் வா காளை

====================

14    தடை பற்றி கவலைப்படாமல், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்என்பதற்கு அடையாளமாக, ஜல்லிக்கட்டுநடத்திய அத்தனை இளைஞர்களுக்கும், என் பாராட்டுகள்.- இல கணேசன் # வேண்டாம் அரசியல்வாதிகள் பாராட்டு , வேண்டும் மீண்டும் ஜல்லிக்கட்டு

================

15  உணவுப் பொருளில் கலப்படமா: ஆயுள் தண்டனை விதிக்க பரிந்துரை  # குற்றவாளிக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி இருந்தா?
==================

16 மாணவர்கள் போரட்டம் பின்புலம் யாரோ ஒருவர் இருக்கிறார் : திருமாவளவன்
# குயுக்தியா சிந்திக்க அரசியல்வாதிக்கு மட்டும் தான் தெரியும்

==============

17 அனைத்து பிரச்சனைக்கும் போராட மாணவர்கள் முடிவு..# அரசியல்வாதிகளுக்கு எல்லாம் வயித்துல புளியை கரைச்சது போல் இருக்குமே?

==============

18  ஜல்லிக்கட்டு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்காத நிலையில், அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதிக்கும் சூழ்நிலை வரலாம்.-பொன்.ராதா # தடை அதை உடை, புதிய சரித்திரம் படைனு கோஷம் போட்டாங்களே, கேட்கல?


===================


19 கறுப்பு பண முதலைகள் தப்புவதை தடுக்க...வியூகம்: வங்கிகளுக்கு நேரடி வரிகள் வாரியம் உத்தரவு # அக்கவுண்ட்ல பணம் போடும்போதே டேக்ஸ் கழிச்சுக்குவாங்க போல


====================

20 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் போராட்டம் 'காகித கப்பல்' போன்றது; அது, பயணம் செய்ய பயன்படாது,'-கிருஷ்ணசாமி # அரசியல்வாதி போராட்டம் டைட்டானிக் கப்பல் போல மூழ்கிடும்
==========================

0 comments: