Monday, January 09, 2017

அடங்காத காளைகளும் , அடி மாடுகளும்

1

 ஒரு தாய் பிள்ளைகளாக, ஒன்றுபட்டு உழைத்திடுவோம்.,உள்பகை இருப்பின், அதை உடனே ஒழிப்போம் -ஸ்டாலின்:# அண்ணே, நாம அழகிரியை சொல்லலையே?

==================

ஜெ., - சசி வாங்கி குவித்த நிலங்கள் : திரும்ப கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கம் # முதலை வாயில் போனதலையும், பண முதலை விழுங்கின நிலமும் ஏஏவ் தான்

===============
3


'கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை சாத்தியம் இல்லை' என, பா.ஜ., தலைவர்களே கூறியுள்ளனர்-திருநாவுக்கரசர்   # அசாத்தியம்   என்பதை சாத்தியம் ஆக்கிக்காட்டுவேன், இது சத்தியம் என்பரோ மோடி?

===================

ரொக்கமற்ற பரிவர்த்தனையை அனைவரும் பயன்படுத்துமாறு, இளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.-பிரகாஷ் ஜாவடேகர் #  ஆல்ரெடி ஜனங்க கடுப்பில் இருக்காங்க,இப்போப்போய் எப்டி?


==================அத்வானி பிரதமராக வேண்டும் : மம்தா விருப்பம் # மொத்தத்துல இந்த கட்சி உருப்படாம போகனும், அதான் இவரு லட்சியம் போல


===========================

6  52 வயதுக்காரர் இளைஞரணி செயலரானார் 63 வயது ஸ்டாலின் விட்டுக் கொடுத்தார் #  ஆனா  93 வயசாகியும் இன்னும் விட்டுக்கொடுக்காம அடம் பிடிக்கறாங்க சில

==================================

நத்தத்தில் 'அம்மா ஜெ.தீபா' பேரவை துவக்கம் : நிர்வாகிகள் ஆதரவு # உண்மையான ரத்தத்தின் ரத்தம் @ நத்தம், பொதுமக்கள் சித்தம் எதுவோ?


===================

போக்குவரத்துத் துறையில் வாகன உரிமம் உள்ளிட்ட கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன # இனிமே எட்டு போட்டு காட்றதுக்குப்பதிலா 88 போட்டுக்காட்டனுமாம்

=================

10 6 ஆண்டு வங்கி கணக்குகளை
சோதனையிட அரசு முடிவு # திருடன் என்னைக்கு பேங்க்ல ட்ரான்செக்சன் வெச்சு திருடுனான்?

========================

11  காங்கிரஸ் கட்சியினர், வெளியில் யாருடனாவது சண்டை போடுவர். அதற்கு நேரமில்லாத போது, தங்கள் கட்சிக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்வர்.-துரைமுருகன் # திமுக வில் அழகிரி ஸ்டாலின் போல?

================

12 கடுமையாக விமர்சனம் செய்த பிறகும் சசிகலா என்னை சந்திக்க நினைத்ததே நான் பெற்ற பேறு: நாஞ்சில் சம்பத் நெகிழ்ச்சி# குரைக்கற நாய்க்கு திருடன் பிஸ்கெட் போட்டு டைவர்ட் பண்ணுவான்


=================

13 முட்டாள்களின் சொர்க்கத்தில், பா.ஜ., வாழ்கிறது.- சிவசேனா # அறிவாளிகளின் நரகத்துக்கு இது தேவலைங்கோ

===================

14 மோடி, எதிர்க்கட்சிகளை அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்.-மம்தா பானர்ஜி # நாம எப்டி? மண்டபத்துல எதிரிக்கு விருந்து வெச்சு வெத்தலை பாக்கு தருவோமா?

===================

15 ஓட்டுனர் உரிமக் கட்டணம் 5 மடங்கு அதிகரிப்பு: செய்தி # அப்போ டிரைவிங் லைசன்ஸ் இல்லைன்னா போலீஸ் மாமூலும் 5 மடங்கு அதிகமா கேட்குமோ?

==================
16 பாடநூல் கழக நிறுவனத் தலைவராக வளர்மதி நியமனம்: # இதன் மூலம் தெரிய வரும் அரசியல் பாடம் நாம முன்னேறனும்னா ஜிங் சக் அடிக்கனும், இல்ல கால்ல விழனும்

================

17 ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: சசிகலா # நம்ம ஆட்சில மட்டும்தான் அடங்காத காளைகள் எல்லாம் அடிமாடா போய்டுதே?

===============

18 வறட்சியால் உழவர்கள் இறக்கவில்லை; முதுமையால் தான் இறந்தனர்: அமைச்சர்கள்-# யார் எதனால யாரால எப்படி செத்தாங்க?ன்னு காலம் பதில் சொல்லும்

================

19  புதிய தமிழகத்தை உருவாக்க திமுகவால் மட்டுமே முடியும்:ஸ்டாலின் # முரசொலி யை தொடர்ந்து அடுத்த பத்திரிக்கை “புதிய தமிழகம்’?

===================

20 அதிமுகவில் இப்பொழுது மிகுந்த சுதந்திரத்தை உணர்கிறேன் -நாஞ்சிலார் # முதல்ல எல்லாம் கால்ல விழனும்னா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கனும், இப்போ ஃப்ரீயா எப்போ வேணா விழலாமாம்

====================

0 comments: