Tuesday, January 31, 2017

ஏக் ஹாஸ்பிடல் மே ஏக் பேஷண்ட் ரகுத்தா த்தா

காவல்துறையினர் தீ வைத்தது உறுதியானால் கடும் நடவடிக்கை: சட்டசபையில் ஓபிஎஸ் உறுதி # 500 ரூபா அபராதம் + சனி ,ஞாயிறு சஸ்பெண்ட் அதானே?

=============

2 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததில் பா.ஜ.க.விற்கு முக்கிய பங்கு - தமிழிசை # கலைஞர் மாதிரியே பேச ஆரம்பிச்ட்டாரே?திமுக +பாஜக வருமோ?

================

3 முதலமைச்சர் விளக்கத்தில் திருப்தியில்லை: திமுக வெளிநடப்பு # க்ளாஸ் கட் அடிக்கனும்னே காலேஜ் கிளம்பற மாதிரி

===============

4 போராட்டத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது எப்படி? - பொன்.ராதா # முஸ்லிம்கள் தினசரி 5 முறை தொழுவாங்கனு தெரியாதா?

=============

5 தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது சாதாரண விஷயமல்ல: வைகோ
# அதுக்கு பல சதி வேலைகள் எல்லாம் செய்ய வேண்டி இருக்குங்கறாரா?

===============

6 காங்கிரஸ் மூழ்கும் கப்பல்.அதில் மக்கள் பயணிப்பார்களா? -மோடி கிண்டல்# குண்டா தண்ணி சுடுதுன்னு அடுப்பு நெருப்பில் குதிச்ச கதை ஆச்சு

================

7 உங்கள் மதம் என்ன?நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியன்என பதில் அளித்த சல்மான்கான் படம் நிறைய பாத்திருப்பார் போல


===============

8 சட்டசபையில் சின்னம்மா என்று அழைப்பதற்கு துரைமுருகன் ஆட்சேபம் # மினிமம் மினி மம் என்றாவது அழைக்கலாமா?என கேட்கலாமா?

================

9 தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பீட்டாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு;# இந்தியா பூரா பீட்டாவுக்கு டாட்டா.விதை தமிழன் போட்டது

=============

10 வன்முறையில் காயமடைந்த போலீசாருக்கு ரூ.10,000 நிவாரணம்: ஜார்ஜ். # வன்முறைல ஈடுபட்டதுக்கு இன்சென்ட்டிவ் மாதிரி தோணுது

===============

11 ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம் பாஜக தமிழகத்தில் விரைவில் காலூன்றும் -தமிழிசை # அபாய அறிவிப்பு மாதிரி இருக்கே?

==================

12 வண்டியை எரித்த காவலரை அடையாளம் காட்டினால் நடவடிக்கை உண்டு --ஜார்ஜ் #
அடையாளம் காட்டினவர் மேல்?

===============

13 ஜல்லிக்கட்டு நடத்த காளைகளிடம் அனுமதி வாங்கினீர்களா ---ராதாராஜன்#காளை(சிம்பு),முரட்டுக்காளை(ரஜினி) கோயில் காளை (விஜயகாந்த்) 3பேரும் சப்போர்ட்

=================

14 ஏப்ரல் 20ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு. # அராஜக அதிமுக,2ஜி ஊழல் திமுக ,காங் தவிர்த்து சுயேச்சைகளை தேர்ந்தெடுப்பீர்

=============

15 காங்கிரஸ் மூழ்கும் கப்பல் - அதில் பயணித்தால் கரை சேர முடியாது: மோடி # கப்பல்,கட்டு மரம்,தாமரை எல்லாமே ஆபத்துதான் போல

=================

16 ஜல்லிக்கட்டுக்காக மோடியிடம் பல மணிநேரம் போனில் பேசிய சசிகலா # ஏக் ஹாஸ்பிடல் மே ஏக் பேஷண்ட் ரகுத்தா த்தா

=============

17 வன்முறையில் காயப்பட்டதே நாங்கள் தான்..! காவல்துறை விளக்கம் # சரி சரி இனிமேலாவது வன்முறை யில் இறங்காம மனசாட்சியோட நடந்துக்குங்க


================

18 நிதி பற்றாக்குறை- எனக்கு சம்பளமே வரவில்லை.தி.மு.க MLA குற்றச்சாட்டு: # ஆளுங்கட்சிக்கு மட்டும்தான் சம்பளமோ ?

================

19 ஆசிரியர்தகுதித்தேர்வு ஏப்-30 நடத்தப்படும்-அமைச்சர் பாண்டியராஜன் அமைச்சர்களுக்கும் ஒரு டெஸ்ட் வைங்க.ஒரு ஆள் பாஸ் ஆகாது

==============

20 நான் சுடவில்லை, மான் அதுவா செத்துப்போச்சு: கோர்ட்டை அதிர வைத்த சல்மான் கான் # தானே முன் வந்து உயிர் தியாகம் செய்த மான் கறாரா சல்மான்?

===============

0 comments: