Monday, January 02, 2017

பரமேஷ்வரி , லோகேஷ்வரி, மகேஷ்வரி,ராஜேஷ்வரி

நகை வாங்கும்போது வரி கட்னீங்களா?


யெஸ் யுவர் ஆனர்.ராஜேஷ்வரி யை கண்ணாலம் கட்டும்போது நகை வாங்குனேன்.2ம்.1,தானே?


==============

2 FB விட்டு போக வேண்டிய நேரம் நெருங்கிட்டு


ஓ.நிரந்தரமாவா?
இல்ல.டே ஷிப்ட் முடியுது.அடுத்து நைட் ஷிப்ட்=================


3 மோசடி பண்றவங்க இப்போ பயப்படறது யாரைப்பார்த்து?


மோடி VS மோ(ச)டி


===============

4 நைட் டின்னருக்கு டிபன் கிடையாதா?


யோவ்.அன்னதானம்னாலே சோறு தான்.அன்னம் = சாப்பாடு===============

5 மேடம், கவிதாயினி-ங்கறது உங்க அம்மா அப்பா வெச்ச பேரா? யாராவது தந்த பட்டமா?


2ம் இல்ல. என் பேரு இனி கவிதா, அதான் கவிதா யினி


=================

6 சார்,ரஜினியை நீங்க பின்னுக்கு தள்ளீட்டீங்களாமே?
பேங்க்ல க்யூல முன்னால நின்னுட்டிருந்தாரு, அர்ஜெண்ட்னு அவரை நான் பின்னே தள்ளி முன்னேறிட்டேன்


===============

7 நெல்லைல ஷூட்டிங் வெச்சோம், கூட்டம் கூடுனதால சென்னைக்கு ஷிஃப்ட் பண்ணிட்டோம்

சார், இருட்டுக்கடை அல்வா கடைக்கு பக்கம் வெச்சிருப்பீங்க, அது கடைக்கு வந்த கூட்டமுங்கோவ்


===================

8   ஆன்மீக பக்தரா இருந்தாலும் அரசாங்கத்துக்கு சபரி மலை அய்யப்பனை பிடிக்காதா? எப்டி?

 அய்யப்ப சீசனால டாஸ்மாக் வருமானம் குறைஞ்சிருக்குமில்ல?


=====================

கண்டிப்பா ஈகோ இல்லை .
வேற என்னதான் உன் பிரச்சினை ??

ஈ, கோ 2ம் ஹிட் ஆன அளவு கவலை வேண்டாம் ஹிட் ஆகல,அதான் என் கவலை

====================

10  நான் FB வர முன்னாடி புத்திசாலிக மட்டும் தான் அமெரிக்கா போக முடியும்னு நினைச்சேன்.

ஓஹோ, அமெரிக்காவில் இருக்கறவங்க புத்திசாலிகளா?

================

11 சார், ட்விட்டர்ல தினத்தந்தியை விட மாலைமலருக்கு ஃபாலோயர்ஸ் அதிகம், ஏன்?எதற்கு?எப்படி?

சிம்ப்பிள், கருணை மலர், பனிமலர் மாதிரி இதுவும் பொண்ணுனு நினைச்சிருப்பாங்க

=============

12 ஸ்போர்ட்டிவ் டைப் அப்டிங்கறதால போலீஸ்ல அரெஸ்ட் பண்ணீட்டாங்களா? புரியல

பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடி இருக்காரு

================

13  கல்யாணமாலை  பிரமிட் நடராஜனுக்குப்போட்டியா ஒரு ஹீரோ டிவி புரோக்ராம் பண்ணப்போறாராம்

ஓ, டைட்டில்?

டைவர்ஸ் மாலை


=======================

 சார், உங்க பட பட்ஜெட்ல   50 கோடி  அதிகம் பண்ணீட்டீங்களே? ஏன்?

புரொடியூசர் இ வா வா இருந்தா  நாம எது வேணா எவ்ளோ வேணா சுருட்டலாம்
14 


==================


15  இதுதான் என்னோட ஃப்ர்ஸ்ட் அட்டெம்ப்ட். பிரியாணி எப்டி இருக்கு?

ஓ, நீங்களே சமைச்சதா?

 இல்ல, அம்மா சமைச்சது, ஃபோட்டோ எடுத்து அப்டேட்டுனது நான்


===================

16 மிஸ், உங்க ஃபோன் நெம்பர் வேணும்

தர்றேன், நீங்க தான் என் காதலன் கூட என்னை சேர்த்து வைக்கனும்

உங்க ஃபோன் நெம்பரும் வேணாம், பொங்கச்சோறும் வேணாம்

===============

17 கோல்கேட் விளம்பரத்துல பல் டாக்டர் கழுத்துல ஸ்டெதஸ்கோப் இருக்கே? எதுக்கு?

ஸ்டெதஸ்கோப் இருந்தாதான் டாக்டர்னு நாம நம்புவோம்னு அவங்க நம்பறாங்கனு நான் நம்பறேன்


====================

18  ஜட்ஜ் = எதுக்காக தலைவரை கடல்ல தள்ளி விட்டே?

 அடிக்கடி பஸ், ரயில்  மறியல் பண்ணி ஊரை ஏமாத்திட்டு இருக்கார், இப்போ நீர் மூழ்கிக்கப்பல் மறியல் பண்ணட்டும்


===================

19   சென்னை 26 அப்டினு தப்பா  விளம்பரம் பண்ணி இருக்கீங்களே?

 சென்னை 28-2-னு AD  குடுத்தீங்க? 28 - 2 =26 தானே?

 யோவ், ,அது 2 ம் பாகம்


=====================


20  எல்லாரையும் ஒரே தராசில்  எடை பார்ப்பது தப்பு 

ஏன்?

 ஒரு தராசு ஒரு ஆளைத்தானே தாங்கும்?

========================

0 comments: